கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் ஈழத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் பலர் எழுந்து முழக்கமிடுவதைப் பார்க்க முடிகிறது. ஊடகங்கள் பலவும் கூட இன்று ஈழ ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்நிலை நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்றது. எனினும் இது ஒரு காலம் கடந்த எழுச்சி என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்போ இந்த எழுச்சி ஏற்பட்டிருக்குமானால் ஈழ வரலாற்றில் நல்ல மாற்றங்கள் உருவாகி இருக்கக் கூடும். இன்று ஈழம் குறித்த நல்ல தகவல்களை எல்லாம் தரும் பல ஊடகங்கள் அன்று ஈழம், புலி ஆகிய சொற்களையே பயங்கரவாதம் என உரைத்தன. எவ்வாறாயினும் நல்ல மாற்றங்களை நாம் வரவேற்கிறோம். அதே வேளையில், புதிய எழுச்சியில் பல பழைய வரலாறுகள் திரித்தும் மாற்றியும் சொல்லப்படுகின்றன. உண்மைகள் பல திட்டமிட்டு மறைக்கப் படுகின்றன.
எனவே இத்தொடர் இரண்டு நோக்கங்களுடன் தொடங்கப்படுகின்றது.
என் அனுபவத்திலும், என் பார்வையிலும் ஈழம் தொடர்பாக இங்கே நடந்த நிகழ்வுகள் பலவற்றை அப்படியே பதிவு செய்வது முதல் நோக்கம். வெறும் பழங்கதை பேசுவதாக இல்லாமல், இனி இக்காலகட்டத்தில் நாம் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் யாவை என்பது குறித்து உரையாடுவது இரண்டாவது நோக்கம்.
இத்தொடர் பற்றிய என் எண்ணத்தை நண்பர்களிடம் வெளியிட்டபோது அவர்களிடம் மகிழ்ச்சி, தயக்கம் இரண்டுமே தெரிந்தன. நல்லது, கண்டிப்பாக எழதுங்கள் என்று சிலர் கூறினார். வேண்டாம், நீங்கள் என்ன எழுதினாலும் அதனைக் குறை கூறுவோர்தான் இன்று மிகுதியாக உள்ளனர், ஈழ மக்களில் பலரே இன்று உங்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில், ஏன் இந்தத் தொடர் என்று கேட்டவர்களும் உண்டு.
அவர்கள் சொல்வது உண்மைதான். தமிழ் நாட்டில் சிலர் என்னைத் துரோகி என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை நம்பும் புலம் பெயர் ஈழ மக்களும் இன்று பெரிய எண்ணிக்கையில் இருக்கவே செய்கின்றனர். என் எழுத்து பெரிதாக இன்று எடுபடாது என்பதை நானும் அறிந்தே இருக்கிறேன். அறிந்தும் கூட இதனை எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது. இன்றில்லா விட்டாலும் நாளை அல்லது என்றேனும் ஒருநாள் உண்மையை உலகம் அறியும். அன்று இந்த எழுத்து அதற்கான ரத்த சாட்சியாய் அமையும்.
அவர்கள் சொல்வது உண்மைதான். தமிழ் நாட்டில் சிலர் என்னைத் துரோகி என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை நம்பும் புலம் பெயர் ஈழ மக்களும் இன்று பெரிய எண்ணிக்கையில் இருக்கவே செய்கின்றனர். என் எழுத்து பெரிதாக இன்று எடுபடாது என்பதை நானும் அறிந்தே இருக்கிறேன். அறிந்தும் கூட இதனை எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது. இன்றில்லா விட்டாலும் நாளை அல்லது என்றேனும் ஒருநாள் உண்மையை உலகம் அறியும். அன்று இந்த எழுத்து அதற்கான ரத்த சாட்சியாய் அமையும்.
நான் கலைஞரை ஆதரிக்கிறேன் என்னும் ஒரே காரணத்திற்காகவேபலரும் இன்று என்னை எதிர்க்கின்றனர். ஈழத்திற்கு அவர் துரோகம் செய்துவிட்டார் என்றும், அதனால் அவரை ஆதரிக்கும் ஆசிரியர் வீரமணி, நண்பர்தொல் திருமாவளவன், நான் அனைவரும் துரோகிகள் என்றும் சிலர் கூறித்திரிகின்றனர். கலைஞரை நம்பியா ஈழப் போராட்டம் தொடங்கப்பட்டது,என்ன நம்பிக்கைத் துரோகத்தை அவர் செய்து விட்டார், சர்வ தேசச் சிக்கலைஒரு மாநில முதல் அமைச்சரால் தீர்க்க முடியுமா என்பன போன்றவினாக்களை நாம் எழுப்பினால், அவற்றிற்கு விடை தராமல், நம் மீது வசைமாறிப் பொழிகின்றனர்.
எல்லோரும் ஒரே திசையில் நின்று, ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவும், இன்னும் அங்கே வாடிக்கொண்டிருக்கும் ஈழ மக்களின் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுக்கவும்முன்வராமல், கலைஞரைக் குறை சொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகமட்டுமே இதனைக் கருதுவது எவ்வளவு பெரிய மோசடி!
இச் சூழலில்தான் உண்மைகள் பலவற்றை விளக்கி ஒரு தொடர்எழதும் எண்ணத்திற்கு நான் வந்தேன்.
ஈழ மக்களுக்காக நான் பெரிய தியாகம் எதையும்செய்துவிடவில்லை. துப்பாக்கி எடுத்து அவர்களுக்காக நான்போரிடவில்லை. உயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம் எதையும்செய்யவில்லை. பணம், நகையை அள்ளிக் கொடுத்திடவில்லை. நான்செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பக்கம் இருந்தநியாயத்தை எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும்கருத்துப் பரப்புரை மட்டுமே என்னால் செய்ய இயன்ற செயல். அதனைஅன்று தொடங்கி இன்று வரை ஓயாமலும், தயங்காமலும் செய்துவருகின்றேன். அதற்கான விளைவுகளை எதிர் கொண்டும் வருகின்றேன்.குறிப்பாக 1991-95 கால கட்டத்தில் புலிகளை ஆதரிப்பது ஒரு பக்கம்இருக்கட்டும், ஈழத்தை ஆதரிப்பதே தேசத் துரோகமாகவும்,பயங்கரவாதமாகவும் கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் எந்தத்தயக்கமும் இன்றி, மேடைக்கு மேடை, எழுத்துக்கு எழுத்து புலிகளைஆதரித்தவன் என்ற உரிமையில் இத்தொடரைத் தொடங்குகின்றேன்.
போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்.
No comments:
Post a Comment