கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

வியர்வை தொட்டு எழுதிய விடியல்! - கலைஞர் கவிதை


வியர்வை தொட்டு எழுதிய விடியல்!

மார்கழி  உச்சியில்  மலர்ந்தது பொங்கல் என்று  நமது
மனங் கவர்  மகாகவி  பாரதிதாசன்  பாடினார் -  மற்றும்
மரபு வழிக் கவிஞர் பல்லோர் தொடர்ந்து  சொன்னதும்  -  தமிழ்
மண் மீது  உழைக்கும்  மாந்தர்தம் வியர்வை தொட்டு எழுதியதும் தான்
“தை பிறந்தால்  வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை விடியலாகும்;  அந்தத்
தகத்தகாய விடியலிலே  தமிழரெல்லாம்  கண் மலர்ந்து  - 
அகத்திலொரு  அஞ்சாமைக் குணம்   மலர்ந்து
அய்நூறு  தமிழறிஞர்  அய்யன் மறைமலையார் தலைமையிலே
“ஆண்டுக் கணக்கு  தமிழர்க்கு  ஆரம்பமாவது
அட்டியின்றி  சொல்வோம்;  தை முதல் நாள் தான்” என்று;
அறிவித்த  தேதியாம்;  அறிவு சேர்  வரலாற்றை
அன்னையை  மறப்பது போல்  அருந்தமிழர் மறக்கலாமோ?
மறவாதிருக்கத் தான்  மாண்புகொள்
மாத்தமிழ் மழலையர் கூட்டம்  முதல்
மங்கையர்  மணாளர் ஆடிப்பாடும் தோட்டம் வரை
மார்கழி உச்சியில்  மலர்ந்திடும்  தைப் பொங்கல் நாளை
மறவாமல்  தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என  -  தமிழ்
மானமுள்ளோர்  நாமென்று  மாநிலம்  அறிவதற்குப்
பறை சாற்றிப் பகுத்தறிவு வழி நடப்போம்!
துறைதோறும் செம்மொழிப் பயிர் வளர்ப்போம்!

- மு.க.

No comments:

Post a Comment