கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

கொட்டு முரசே! - -கவிச்சுடர் கவிதைப்பித்தன்


கொட்டு முரசே!

'கொற்றம்’அது கிட்டுமென்று கொட்டு முரசே!
கோட்டையில்நம் கொடிபறக்கக் கொட்டு முரசே!
இற்றது தடைகளென்று கொட்டு முரசே!
இருட்திரை விலகுமென்று கொட்டு முரசே!
அற்றது பகைமையென்று கொட்டு முரசே!
ஆரியர்க்கோ நாடிதென்று கொட்டு முரசே!
நற்றமிழ்மேல் ஆணையென்று கொட்டு முரசே!
நாம்பிறந்த மண்ணிதென்று கொட்டு முரசே!
வெற்றுரை, கவர்ச்சிவிழக் கொட்டு முரசே!
வீழ்ந்தஇனம் மீட்சிபெறக் கொட்டு முரசே!
பற்றுமொழிப் பற்றுவரக் கொட்டு முரசே!
பண்டுவளர் தொண்டுயரக் கொட்டு முரசே!
சுற்றம்,நட்பு சூழும்என்று கொட்டு முரசே!
சூரியனே ஆளும்என்று கொட்டு முரசே!
சற்றும்ஐயம் இல்லையென்று கொட்டு முரசே!
தர்மம்வெல்லும் வெல்லும்என்று கொட்டு முரசே!
'முத்தமிழ் அறிஞர்’என்று கொட்டு முரசே!
'மொய்ம்புறு தலைவர்’என்று கொட்டு முரசே!
'சத்தியப் புதல்வன்’என்று கொட்டு முரசே!
'தளபதி’ உழைப்புவெல்லக் கொட்டு முரசே!
கத்துகடல் தோற்றதென்று கொட்டு முரசே!
'கலைஞர்படை’ ஆர்த்ததென்று கொட்டு முரசே!
எத்திசையும் அதிர்ந்ததென்று கொட்டு முரசே!
'இளைஞர்படை’ கிளர்ந்ததென்று கொட்டு முரசே!
நித்திரை கலைந்ததென்று கொட்டு முரசே!
நெஞ்சில்உரம் உள்ளதென்று கொட்டு முரசே!
புத்துணர்வு வந்ததென்று கொட்டு முரசே!
போயொழிக சோம்பல்என்று கொட்டு முரசே!
'சித்திரை’ மறந்ததென்று கொட்டு முரசே!
செந்தமிழ்த்Ôதை’ வென்றதென்று கொட்டு முரசே!
'முத்திரை பதிக்கும்’என்று கொட்டு முரசே!
'முன்னேற்றக் கழகம்’என்று கொட்டு முரசே!
பெண்ணுரிமை ஓங்கிடவே கொட்டு முரசே!
பேதமெல்லாம் நீங்கிடவே கொட்டு முரசே!
தண்மலர்கள் பூக்கவென்று கொட்டு முரசே!
'சமத்துவம்’ மணக்கவென்று கொட்டு முரசே!
மண்ணதிர விண்ணதிரக் கொட்டு முரசே!
'மானுடம்’ தழைக்கவென்று கொட்டு முரசே!
'அண்ணன்’வழி செல்கவென்று கொட்டு முரசே!
அன்னைமொழ்த்Ôதை’ வென்றதென்று கொட்டு முரசே!
பெண்ணுரிமை ஓங்கிடவே கொட்டு முரசே!
பேதமெல்லாம் நீங்கிடவே கொட்டு முரசே!
தண்மலர்கள் பூக்கவென்று கொட்டு முரசே!
'சமத்துவம்’ மணக்கவென்று கொட்டு முரசே!
மண்ணதிர விண்ணதிரக் கொட்டு முரசே!
'மானுடம்’ தழைக்கவென்று கொட்டு முரசே!
'அண்ணன்’வழி செல்கவென்று கொட்டு முரசே!
அன்னைமொழி வெல்க!வென்று கொட்டு முரசே!
எங்கும் ஒளி சூழ்கவென்று கொட்டு முரசே!
ஏருழவன் வாழ்க!வென்று கொட்டு முரசே!
மங்குகவே ஏழ்மையென்று கொட்டு முரசே!
மக்கள்துயர் தீர்கவென்று கொட்டு முரசே!
தங்குகவே இன்பம்என்று கொட்டு முரசே!
'தாயகம்’ செழிக்கவென்று கொட்டு முரசே!
“பொங்குகவே பொங்கல்”என்று கொட்டு முரசே!
“புத்தாண்டுத் தை”சிறக்கக் கொட்டு முரசே!!!

-கவிச்சுடர் கவிதைப்பித்தன்

No comments:

Post a Comment