கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.50 லட்சத்தை நிவாரண நிதியாக தி.மு.க. தலைவர் கலைஞர் வழங்கினார்


புய லால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூ.50 லட் சத்தை நிவாரண நிதி யாக தி.மு.க. தலைவர் கலைஞர் வழங்கினார்.
தி.மு.க. தலைவர் கலை ஞர், ``தானே'' புயலால் பாதிப்புக்குள்ளான புதுச்சேரி மாநிலம் மற் றும் கடலூர், விழுப் புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பகுதிகளை நேரில் பார் வையிட்டு, பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறு தல் தெரிவித்ததுடன், ``புயலால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு செய்யப்படுகின்ற உதவி யாக தி.மு.க. அறக்கட் டளை சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண நிதி யாக வழங்கப்படும். அதனை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கழக அமைப்புகளின் நிர்வாகி கள் தகுந்த முறையில் உரியவர்களுக்கு வழங் குகின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள் கிறேன்'' என அறிவித்தார்.
அதற்கிணங்க, புய லால் பாதிப்புக்குள்ளான பகுதிகளான, கடலூர் மாவட்டத்திற்கென ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை மாவட் டக் கழக நிருவாகிகள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், து.தங்கராசு, பெ.கணே சன், குரு.சரஸ்வதி ஆகி யோரிடமும்; விழுப்புரம் மாவட்டத்திற்கென ரூ.10 லட்சத்திற்கான காசோ லையினை மாவட்டக் கழகச் செயலாளர் க. பொன்முடியிடமும்; திருவாரூர் மாவட்டத் திற்கென ரூ.10 லட்சத் திற்கான காசோலையினை மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த உ.மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, கோட்டூர் அ.ராஜசேக ரன், எம்.எஸ்.கார்த்திக், ஜோதிராமன் ஆகியோரி டமும் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத் திற்கென ரூ.10 லட்சத் திற்கான காசோலையினை புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.வி.ஜானகிரா மன், எஸ்.பி.சிவகுமார், எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம், கென்னடி, சந்திரேஷ் குமார், ஆர்விஜே. சர வணன், வழக்கறிஞர்கள், செந்தில்குமார், பா. நம்பி செல்வன், குமாரசுப்பிர மணி, பா.காந்தி ஆகி யோரிடம் தி.மு.க. அறக் கட்டளை சார்பில் வழங்கினார்.
அப்போது துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப் புச் செயலாளர் டி.கே. எஸ்.இளங்கோவன் மற் றும் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment