தி.மு.க. தலைவர் கலைஞர், பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் அளித்தவர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என்றும் தி.மு.க. வக்கீல் அணி சார்பில் டி.ஜி.பி.யிடம் மனு அளிக் கப்பட்டது.
தி.மு.க. தலைவர் கலை ஞர் மீதும் - பொருளா ளர் மு.க.ஸ்டாலின் மீதும் பொய்ப் புகார் அளித் துள்ளதாக மாயவரம் என்.எஸ்.ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. சட்டத் துறைச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி காவல் துறை டி.ஜி.பி.யை சந் தித்து மனு ஒன்றை கொடுத்தார்.
தி.மு.க. வழக்குரைஞர் அணி சார்பில் அளிக்கப் பட்டுள்ள அந்த மனு வில் கூறப்பட்டிருப்ப தாவது:-
தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர 79 பேருக்கு எதி ராக என்.எஸ்.ஏ. குரூப் நிறுவனங்களின் நிரு வாக இயக்குநர் என்.எஸ். ஆறுமுகம் 1.1.2012 அன்று பொய் புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ளார்.
பொய்யான, பொரு ளற்ற, எரிச்சலூட்டும் புகார்களின் அடிப் படையில் ஏராளமான தி.மு.க.வினர் சிறைகளில் அடைக்கப்படுவதைக் கட்சி கண்டுள்ளது. பொய் யான புகார்களைப் பெற்று வழக்குப் பதிவுசெய்வ தால் தற்போது பல நில அபகரிப்பு பிரிவுகள் சிவில் புகார்களைத் தீர்க்க தவறாகவும், துஷ்பிர யோகமாகவும் பயன் படுத்தப் படுவதால் பொது மக்கள் அலைக்கழிக்கப் பட்டு காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள அதி காரங்களால் தங்களது சட்டபூர்வமான சொத் துகளை இழந்து வரு கின்றனர்.
தோற்றத்திலேயே அந்தப் புகார் அதுவும் 81 பேருக்கு எதிரானது பொருளற்றது என்று தெரிகிறது. மாநில அர சின் மிகவும் வருத்தத்திற் குரிய செயல் என்ன வென்றால், மேற்கூறிய புகாரைக் காவல் துறை பெற்றது மட்டுமின்றி அதை பத்திரிகைகளுக் கும் கொடுத்து அந்த 2 நாள்களாக அந்தப் பொய்யான புகாரைப் பற்றிய செய்திகளை வெளி யிட வைத்து அதன் மூலம் எங்களது தி.மு.க. தலை வர் மற்றும் பொருளா ளரின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாகும்.
மேற்கூறிய புகாரில் தற்போதுள்ள சட்ட மன்ற உறுப்பினர், முன் னாள் சட்டமன்ற உறுப் பினர் உள்பட பலரின் பெயர்கள் உள்ளன. புகார் மீது கருத்து சொல் வது எங்கள் வேலை அல்ல; உடனடியாக நிராகரிக்கப்பட்ட இத்தகைய பொருளற்ற புகார்களை பெறுதல், புகார்கள் மற்றும் எரிச் சலூட்டும் புகார் பற்றி காவல் நிலையங்களில் மலிவான விளம்பரம் செய்வது எங்களது தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளரின் நற் பெயருக்கு ஊறு விளைப் பது ஆகியவை பற்றி நாங்கள் கவலைப்படு கிறோம்.
பார்த்த மாத்திரத்தி லேயே இந்தப் புகார் பொய்யானது, ஆதார மற்றது என்று தெரிந் திருந்தும், காவல் துறை அதிகாரிகள் மேற்கூறிய புகாரைப் பெற்றிருக்கக் கூடாது. இருப்பினும் அவ்வப்போது உச்சநீதி மன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் வழங்கியுள்ள வழிகாட் டும் நெறிமுறைகளை மீறி என்.எஸ். ஆறுமுகம் என்பவர் 4.1.2012 அன்று அளித்த புகாரைப் பெற் றதுடன் எங்களது தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயரைக் கெடுப்பதற்காக பத்திரி கைகளுக்கும் கொடுக் கப்பட்டுள்ளன.
இதுபோன்ற புகார் களை எதிர் காலத்தில் கொடுக்காமல் இருக்க, இத்தகைய புகார்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து தண்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment