28.11.2008 அன்று தலைமைக் கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் - அவர்கள் மறைந்திருப் பினும் அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பினும் - அவர்கள் பெயரால் மன்றங்கள், படிப்பகங்கள் போன்ற சார்பு அமைப்புகளை உருவாக்குவதாக இருந்தால்; தலைமைக் கழகத்தின் ஒப்புதல் பெற்று, அந்தச் சார்பு அமைப்பு, அந்த ஊர் அல்லது அந்தப் பகுதியைப் பொறுத்த ஒன்றாக இருந்து கழகத்தின் சார்பு மன்றமாக இயக்க வேண்டுமே தவிர, அதற்கு வட்டம், ஒன்றியம், மாவட்டம் போன்ற அளவிலே அமைப்புகளை உருவாக்கிடக் கூடாதென்று ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பே தலைமைக் கழகம் அறிவித்து, அதன்படி கழகத்தினர் நடந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சார்பு மன்றங்களைப் பற்றிய அறிவிப்புக்கு மாறாக, கழக முன்னோடிகள் யார் பெயராலும் அமைப்புகளோ, பேரவைகளோ, மன்றங்களோ உருவாகக் கூடுமானால், அவற்றுக்கும் தலைமைக் கழகத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அத்தகைய அமைப்புகளோடு கழகத் தோழர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை மீறுவோர் யாராயினும் அவர்கள் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனினும் அண்மைக் காலத்தில் இத்தகைய சார்பு மன்றங்கள் ஒருசிலர் பெயரில் ஆங்காங்கு அமைக்கப்படுவதாக தலைமைக் கழகத்திற்கு புகார்கள் வருவதால் அவற்றை உடனடியாக திருத்திக் கொள்ளுமாறு மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் எச்சரிக்கப்படுகிறது.
“அண்ணா அறிவாலயம்”
சென்னை - 10.1.2012
க.அன்பழகன்
பொதுச் செயலாளர்,
தி.மு.க.
No comments:
Post a Comment