கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

உள் நோக்கத்துடன் வேண்டுமென்றே பொய்ச் செய்தி வெளியிட்ட 'தினமலர்’ நாளேட்டிற்கு தலைவர் கலைஞர் நோட்டீஸ்!


மதிப்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது! உள் நோக்கத்துடன் வேண்டுமென்றே பொய்ச் செய்தி வெளியிட்ட 'தினமலர்’ நாளேட்டிற்கு  தலைவர் கலைஞர் நோட்டீஸ்!

"நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோராவிடில்  வழக்கு தொடரப்படும்’’

தன்னுடைய மதிப்பையும் மரியாதையையும்   குறைக்கும் வகையில் நில அபகரிப்பு புகார் ஒன்று என்.எஸ்.ஆறுமுகம் என்பவரால் காவல் துறை ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது. எந்தவித  அடிப்படையும்  ஆதாரமுமற்ற   அந்தப் பொய்ப் புகாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள் நோக்கத்துடன்  செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மற்றும் அதன் வெளியீட்டாளருக்கு தலைவர் கலைஞர் அவர்கள்  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்  இந்த மறுப்புக் குறித்து உரிய முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அத் துடன் அவ்வாறு செய்தி வெளியிட்டதற்காக நிபந்தனையற்றத்துவம் கொடுத்து உள்நோக்கத் துடன்  செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மற்றும் அதன் வெளியீட்டாளருக்கு தலைவர் கலைஞர் அவர்கள்  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்  இந்த மறுப்புக் குறித்து உரிய முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அத் துடன் அவ்வாறு செய்தி வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் . இல்லாவிடில் நஷ்ட ஈடுகேட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி வித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-

தலைவர் கலைஞர் அவர்களின் மீது காவல் துறையிடம் தவறான  - பொய்ப் புகார் அளித்த என்.எஸ்.ஏ. குழும நிறுவன நிர்வாக இயக்குனர் என்.எஸ்.ஆறுமுகத்திற்கும், அதுகுறித்து அவரது பேட்டி மற்றும் அதுதொடர்பான செய்தியை அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்நோக்கத்துடன் வெளியிட்டதற்காக 'தினமலர்’ ஆசிரியர் டாக்டர் ஆர்.கிருஷ்ண மூர்த்திக்கும் 'தினமலர்’ வெளி யீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கும் தலைவர் கலைஞர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், இதுதொடர்பாக வெளிப்படையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றத்தில்  உரிய முறையில் நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்  என்றும், வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் நோட்டீஸ்

தலைவர் கலைஞர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அனுப்பியுள்ள நோட்டீஸ் வருமாறு :-
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. காவல் துறை ஆணையரிடம் என்.எஸ்.ஆறுமுகம் என்பவர் அளித்த புகார் பற்றி 'தினமலர்’ நாளேட்டில் இம்மாதம் ஐந்து மற்றும் ஆறாம் தேதி களில், “கருணாநிதி, ஸ்டாலின் மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூறப்பட்ட புகார் பற்றியோ, அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டது குறித்தோ எனது கட்சிக்காரருக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. இதுதவிர, என்.எஸ்.ஆறுமுகம் என்பவர் அளித்த பேட்டி ஒன்றும் 'தினமலர்’ ஐந்தாம் தேதி நாளேட்டில் வெளியாகியுள்ளது.

விவேகம் அற்ற முறையிலான அந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து  உள்நோக்கத் துடன் வெளியிட்டுள்ளது 'தினமலர்’. வேண்டுமென்றே அடிப்படை ஆதாரமற்ற இந்தச் செய்தி யை வெளியிட்டிருப்பது என்பது தலைவர் கலைஞருக்கு உள்ள செல்வாக்கை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான். பொது மக்களிடையே அவருக்குள்ள மதிப்பையும், மரியாதையையும்  குறைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும், உண்மைக்கு மாறான தகவலை ஒரு உயர்ந்த நிலையில் இருப்பவருக்கு எதிராக அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்  என். எஸ்.ஆறுமுகம் கொடுத்த புகாருக்கு Ôதினமலர்’ நாளேடு முக்கியத்துவம் அளித்து செய்தி வெயி ட்டுள்ளது. 'தினமலர்’ ஆசிரியர் மற்றும் அதன் வெளியீட்டா ளர் என்கிற முறையில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பத்திரிகா தர்மத்திற்கு எதிராக மரியாதை யையும், மதிப்பையும் குறைக்கும் வகையில் வேண்டும் என்றே இட்டுக்கட்டி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் உங்க ளின் எண்ணம் வெளிப்படையாகவே தெரிகிறது.

75 ஆண்டிற்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவரும், ஐந்து முறை தமிழக முதலமைச்ச ராக இருந்தவருமான தலைவர் கலைஞர் அவர் கள் தமிழக மக்களுக்கு  மட்டுமின்றி  இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நல்ல மரியாதைக் குரியவராகவும்  இருந்து வருகிறார். அப்படிப் பட்ட தலைவர் கலைஞர் அவர்கள்  இதுபோன்ற நில அபகரிப்புப் பிரச்சினையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.

வெறுமட்டவரும், ஐந்து முறை தமிழக முதலமைச்ச ராக இருந்தவருமான தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக மக்களுக்கு  மட்டுமின்றி  இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நல்ல மரியாதைக் குரியவராகவும்  இருந்து வருகிறார். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள்  இதுபோன்ற நில அபகரிப்புப் பிரச்சினையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.

வெறுமனே, காவல் நிலையத்திற்குச் சென்று அடிப்படையற்ற, உண்மைக்கு மாறான ஒரு புகாரை ஒருவர் அளித்துவிடுவதாலேயே அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக வெளியிட வேண்டும் என்கிற வெளிப்படையான உரிமை யாருக்கும் கிடையாது.  அவ்வாறு வெளியிடுவ தென்பது ஒரு தவறான நோக் கத்தையே காட்டுவதாகும்.

தலைவர் கலைஞரின் புகழைக் கெடுக்க தினமலர் அவதூறு செய்தி!

அவ்வாறு செய்தியாக 'தினமலர்’ வெளி யிட்டிருப்பது எந்தவித தார்மீக நெறிகளுக்கு உட்பட்டும் இல்லாமல்,  பத்திரிகை சுதந்திரத்தை வெகுவாக மீறியும் இருக்கிறது. ஒரு அடிப்படை யற்ற புகார் தனிப்பட்ட ஒருவரை குற்றவாளியாக காட்டுவதற்கு  இயலாது. அப்படிப்பட்ட நிலையில் 'தினமலர்’ செய்தி வெளியிட்டிருப்பது வேண்டு மென்றே தலைவர் கலைஞர் அவர்களின் புகழை குறைக்க வேண்டும் என்பதற்காக என்று வெளியிடப்பட்டதாகும்.

என்.எஸ்.ஆறுமுகம் தனது புகாரில்  குறிப்பிட்டுள்ள சென்னை, பெங்களூர், கொடைக் கானல் ஆகிய இடங்களில் நிலஅபகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தலைவர் கலைஞர் அவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டு  முழுக்க முழுக்க கற்பனை யானது. உண்மைக்கு மாறானது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டால் அதை யாரும் நம்ப மாட்டார்கள்!

75 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தலைவர் கலைஞர் அவர்கள் பெருந்தன்மையும், தயாள குணமும் உடையவர். தன்னுடைய வீட்டையே  மருத்துவமனையாக மாற்ற  அனுமதித்தவர் என்பதை இந்த நாடே அறியும். அவர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உள்ளவர்களுக்கும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும்  தொடர்ந்து உதவி வருபவர். அது மட்டுமின்றி,  கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை, கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக் கட்டளை உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, அருந்ததியர் இன ஏழை மாணவர்களும், மாற்றுத் திறனாளி களும் தலைவர் கலைஞர் அவர்களால் பயன் அடைந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட நிலையில்  தன் வாழ்நாள் முழுவதும் தனது சிந்தையாலும், தாராளமான மனப் பான்மையாலும், ஏழைகளுக்கு உதவி வரும் தலைவர் கலைஞர் அவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை - உண்மைக்கு மாறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்படுமேயா னால் அதில் உண்மையிருப்பதாக யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இதுபோன்ற, தவறான குற்றச்சாட்டுகளைச் சந்திக்க தலைவர் கலைஞர் அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை என்றாலும், ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு அதன் மூலம் தனது புகழுக்கும், செல்வாக்கிற் கும் ஊறு நேருமேயானால் அதை அவர் ஒருபோதும் தாங்கிக் கொள்ள மாட்டார்.  அதன் காரணமாகத்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

'தினமலர்’ ஆசிரியரும், அதன் வெளி யீட்டாளரும் இந்தச் செய்திக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்ததாலேயே புகார்தாரரின் படத்துடன் வெளியிட்டிருப்பதாகவும்  தனக்கு களங்கம் கற்பிப் பதையே முக்கியமாகவும்  கருதி  அந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதாக தலைவர் கலைஞர்  அவர்கள்  கருதுகின்றார்.  அந்தப் புகார் தொடர்பான   செய்தியில் மற்ற 79 நபர்கள் யார் என்பது பற்றி  எதுவும் குறிப்பிடவில்லை.

அது குறித்து விளக்கமாகவும்  விரிவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தால் ஒரு சாதாரண நபர் கூட குற்றம் சாட்டிய அந்த நபர் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருப்பார்கள்.

தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்த முறையிலும் இந்த நடவடிக்கைகளைப் பார்த்தால் இந்திய குற்றவியல் சட்டம் 499, 500, 501 மற்றும் 502 ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கத் தக்கதாக இருக்கிறது. எனவே, தலைவர் கலைஞர் அவர்கள் தன் மீதான மதிப்பையும், மரியாதையையும் குலைக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக சிவில் நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கையும், நஷ்ட ஈடு வழக்கையும் மேற்கொள்ள நினைக்கிறார்.

மறுப்பு தெரிவித்தும் முக்கியத்துவம் கொடுத்தும்  செய்தி வெளியிட வேண்டும்

எனவே, இந்த நோட்டீஸின் மூலம் 'தினமலர்’ ஆசிரியரும், வெளியீட்டாளரும் வெளிப்படை யான நிபந்தனையற்ற  மன்னிப்பு கோர வேண்டும் என்பதோடு, Ôதினமலரின்’ அடுத்த இதழில் இந்த நோட்டீஸ் குறித்து அதிக முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட வேண்டும் என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவிக்கிறார்.  அவ்வாறு இயலாத பட்சத்தில் உரிய நீதி மன்றத்தில் 'தினமலர்’ ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது செய்தி வெளியிட்டதற்காக சட்டரீதியான குற்ற நடவடிக்கையும், நஷ்டஈடு வழக்கும் மேற்கொள்ள இருக்கிறார். அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டால் அதற்குரிய செலவினங்கள் அனைத்தையும் ஏற்க வேண்டி யிருக்கும்.

இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment