About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Friday, April 30, 2010
கலைஞருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றும் தி.மு.க. தென் மண்டல செய லாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வெளிப்படையாக பேச... அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று துணை முதல்வர் ஸ்டாலின் நக்கீரனிடம் சொன்ன கருத்தும் உன்னிப்பாக கவனிக் கப்படுகிறது. இந்த சூழலில் கலைஞர் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராகவும், தி.மு.க.வின் டெல்லி முகமாகவும் இருக் கின்ற எம்.பி.கனிமொழியின் நிலை என்ன என்பதை அறிய அவரிடம் பேசி னோம். கேள்விகளை முழுமையாக உள் வாங்கி பிறகு தன் பதிலை பதிவு செய்த கனிமொழியின் பேட்டியிலிருந்து...
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான முட்டுக் கட்டைகள் தொடர்கின்றனவே? மசோதா நிறைவேற தி.மு.க. எடுக்கும் முயற்சி என்ன?
கனிமொழி எம்.பி. : பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா லோக்சபாவில் நிறைவேறுவதற்கு முன் நிறைய சவால் களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ப தாகத்தான் தெரிகிறது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறை வேற்றப்பட்ட போது காண் பித்த முனைப் பை இப்போதும் காட்டவேண்டி யது அவசிய மாகிறது. இந்த மசோதா நிறை வேற வேண்டும் என்று தொ டர்ந்து குரல் கொடுத்துவருகிறார் தலைவர் கலைஞர். இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று தன்னை அணுகி பேசுபவர் களிடம் பெண்கள் இடஒதுக்கீடு என்பது எங்களின் கொள்கை ரீதியான முடிவு. இதில் இருந்து நாங்கள் விலக முடியாது என்பதோடு அவர் களிடமும் மசோதா நிறைவேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். மசோதா தொடர்பான கூட் டத்தில் தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு தலைவரின் கருத்துக்களை வலியுறுத்தி பேசியதோடு மற்ற தலைவர்களிடமும் ஒத்த கருத்தினை உரு வாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். தொடர் முயற்சிகளின் மூலம் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்தானே பெண்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. அரசியலுக்கு வரும் பெண்கள் இதை எப்படி எதிர்கொள்வது?
கனிமொழி எம்.பி. : இந்த பிரச்சனை அரசியலுக்கு வரும் பெண் களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. வீட்டு வாசலை விட்டு வெளியே வேலைக்கு போகின்ற அத்தனை பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. பொதுவெளியில் செயல்படக்கூடிய அத்தனை பெண்களுக்கு எதிராகவும் இந்த சமூகம் அல்லது ஆணாதிக்கம் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் இந்த தனிமனித தாக்குதல்தான். இதை ஒதுக்கித் தள்ளிட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே தவிர இதற்கு பதில் கூறிக்கொண்டோ அல்லது இதற்காக பயந்து முடங்கிப்போவதோ கூடாது. எல்லா பெரிய அரசியல் தலைவிகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதம்தான் இது. அதனால் பெண்கள் குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பெண்கள் இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதலைத்தான் முதல் ஆயுதமாகவும், முடிவான ஆயுதமாகவும், முழுமையான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஏசுநாதர் சொன்னது போலத்தான்... கல்லெறியும் தகுதி இருப்பவர்கள் எறியலாம். பெண்களுக்கு எதிராக இந்த கல்லை எறியும் யாருக்கும் அந்த கல்லை எறியும் தகுதி இல்லை. எனவே பெண்கள் இதை எல்லாம் புறம் தள்ள வேண்டும்.
செம்மொழி மாநாட்டிற்கு உலகத்தமிழறிஞர்களின் ஆதரவு... குறிப்பாக ஈழத்தமிழ் அறிஞர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?
கனிமொழி எம்.பி. : ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தம்பிதான் ஆய் வரங்கத்தின் தலைவராக செயல்படுகிறார். அவரை விட ஈழத்தமிழர்கள் மீது அக்கறையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றித்தான் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கமே நடைபெற இருக்கிறது. கிட்டதட்ட 85 தமிழறிஞர்களுக்கு மேல் சிறப்பு விருந்தினர்களாக தலைவர் அழைப்பை ஏற்று வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். 6 ஆயிரத்துக்கும் மேல் கட்டுரைகள் வந்திருக்கிறது. எந்த மாநாட்டுக்கும் வராத அளவிற்கு கட்டுரைகள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஆய்வாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதில் இருந்தே கோவை செம்மொழி மாநாட்டிற்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் உறுதியான கட்சியாக இருக்கின்றது தி.மு.க. ஆனால் சமீபகாலமாக நடக்கின்ற நிகழ்வுகள் இந்த உறுதித் தன்மையை குலைத்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள் தொண்டர்கள். அவர்களின் கவலையைத் தலைவர்கள் புரிந்துகொண்டிருக் கிறார்களா? கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிப்படையாகவே அறிவித் திருக்கிறாரே?
கனிமொழி எம்.பி. : சொல் லப்படக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக் கும் நாம் ஒரு அர்த்தம், பரபரப்பு எல்லாம் உருவாக்கிக் கொண்டோம் என்றால் எல்லாமே குழப்பமாகவே நம் கண்களுக்குத் தெரியும். சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்களை சாதா ரணமாகவே புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து, சொல்லப்பட்ட வார்த் தையை, சூழலை விட்டு தனியே எடுத்து அர்த்தம் கற்பித்தால் அது பத்திரிகை களுக்கு பரபரப்பு தீனியாக அமையுமே தவிர... உண்மையின் பிரதிபலிப்பாக இருக்காது.
அழகிரி - ஸ்டாலின் இரு வருக்கும் இடையிலான உரசல்கள் பற்றி கலைஞரே வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?
கனிமொழி எம்.பி.: கட்சிக்கு எது முக்கியம், நான் எதை முக்கியமாக நினைப்பேன் என்பதை இரண்டு பேருமே புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அதனால் அதன்படி செயல்படுவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையைத்தான் தெரிவித்திருக்கிறார்.
அழகிரியும், ஸ்டாலினும் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்று நக்கீரனில் சொன்னார் கலைஞர். அவரின் வலியை இரண்டு அண்ணன்களும் உணர்ந்திருக்கிறார்கள் என நம்புகிறீர்களா? கனிமொழி எம்.பி.: எனக்கான வலியை அறியாதவர்கள் அல்ல என்றுதான் தலைவர் சொல்லியிருக்கிறார். அறிந்துகொள்ள வேண்டும் என்ற சொல்லவில்லை. அறிந்தவர்கள் என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார். தலைவருக்கு இருக்கின்ற நம்பிக்கை தி.மு.க.வில் இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது.
இரண்டு அண்ணன்களில் உங்க ளிடம் பாசத்தை வெளிப்படுத்துவதில் முதன்மையானவர் யார் என்று நினைக் கிறீர்கள்?
கனிமொழி எம்.பி.: வெளிப்படுத்து வது என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். இதில் முதன்மையானது, இரண்டாவது என்றெல்லாம் எப்படி வரிசைப் படுத்த முடியும்.
சரி...நீங்கள் விரும்புவது அதிரடி அரசியலையா? அமைதி அரசியலையா?
கனிமொழி எம்.பி.: தலைவர் பல நேரங்களில் அமைதியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். பல நேரங்களில் அதிரடியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். நான் இரண்டையுமே ரசிக்கிறேன். அவரைப் போலவே இரண்டுவித மாகவும் இருக்கவே விரும்புகிறேன்.
தி.மு.க.வின் டெல்லி முகமாக நீங்கள் அனுப்பி வைக்கப்பட்டீர்கள். உங்களுடைய பணி யை நீங்கள் எந்த அளவு சரியாக செய்திருப்ப தாக நினைக்கி றீர்கள்? நீங்கள் பரபரப்பாக செயல்படுவ தில்லை என் கிற கருத்து உள்ளதே?
கனிமொழி எம்.பி.: எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை, ஒவ்வொரு முறையும் நான் சரியாகவே செய்திருக்கிறேன். இக்கட்டான சூழல்களிலும், தலைவரின் கருத்துக்களை சரியாக செய்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதேநேரத்தில் தலைவருக்கும் அது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பதை மீடியாவில் வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கொள்ள விரும்பியது இல்லை. ஏனென்றால் பல காரியங்கள் மிகுந்த சென்சிட்டிவானதாகவும் இருந்திருக்கிறது. இப்போதும் பெட்ரோல் உயர்வாகட்டும், பெண்கள் இடஒதுக்கீடு ஆகட்டும் எல்லாவற்றிலும் நான் என் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். கட்சிக் கான சந்திப்புகளையும், கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்புகளையும் வெளிச்சம்போட்டு நான்தான் செய்தேன் என்று ஒவ்வொரு முறையும் பறை சாற்றிக்கொள்வது அவசியம் அல்ல என்பது என்னுடைய எண்ணம்.
குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தனக்கு லாபமாக நினைப்பார் முதல்வர் என்கிறாரே சோ?
கனிமொழி எம்.பி. : குழப்பம் தலைவருக்கு லாபமாக போவது என்பது தமிழ்நாட்டிற்கு லாபம்தான். அது சோ போன்றவர்களுக்கு லாபமாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் இவரைப் போன்றவர்கள், கலைஞர் குடும்பத்தில் ஏதாவது குழப்பம் வராதா? தி.மு.க.வில் குழப்பம் வராதா? அந்தக் குழப்பத்தை வைத்து குளிர் காயலாமா என்று காத் திருப்பவர்கள். இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த குழப்பத்தை வைத்து தனக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்காதா என நினைப்பவர்கள் சரியான நேரத் தில் மக்களால் ஒதுக்கப்படுவார்கள். தலைவருக்கும், கட்சிக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்பதை புரிந்தவர் களாகவே மக்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர், அழகிரிக்கு மத்திய அமைச்சர், தயாநிதிக்கு கேபினட் என பதவிகள் கொடுத்த கலைஞர் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் கொடுக்காதது பற்றி வருத்தப்படு கிறீர்களா? விரைவில் ஓய்வு பெறப்போகிறேன் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் உங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டிருக்கிறதா?
கனிமொழி எம்.பி.: தலைவர் கலைஞர்தான் முழுநேர அரசியலுக்கு வரவேண்டும் என என்னை அழைத்து வந்தார். ராஜ்யசபா எம்.பி. ஆக்கியதும் அவர்தான். எத்தனையோ பேரின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய தலைவரே என்னுடைய எதிர் காலத்தையும் முடிவு செய்வார். அதனால் என் அரசியல் எதிர்காலம் பற்றி நான் எந்தக் கவலையும் படவில்லை.
சந்திப்பு: ச.கார்த்திகைச்செல்வன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment