கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 28, 2010

பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்! - கி. வீரமணி


ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற மாபெரும் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை_பெரியார் திடலில் நேற்று (25.4.2010) இரவு 7.25 மணிக்குத் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:

மிகுந்த வேதனையான கூட்டம்

மிகுந்த வேதனையோடு நடைபெறக்கூடிய கூட்டம் இது. எனக்கு முன்னாலே பேசிய எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்-செயலாளர் சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்-களும் விளக்கமாகப் பல செய்திகளைச் சொன்-னார்கள்.

நான் நீண்ட நேரம் பேசப் போவதில்லை. என்னு-டைய உரை ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் இருக்க-லாம், அவ்வளவுதான்.

பிரபாகரனின் தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்

பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்று சொல்லு-வார்கள். பாவத்தில், புண்ணியத்தில் நாங்கள் நம்-பிக்கை இல்லாதவர்கள்.

பிரபாகரனின் தாயார் செய்த குற்றமென்ன? ஒரு தமிழச்சியாகப் பிறந்ததுதான் குற்றமா? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறவர். பாதி நினைவோடு இருப்-பார்கள்; மீதி பாதி நினைவில்லாமல் இருப்பார்கள். அத்தகைய சங்கடமான சூழ்நிலையிலே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசுகூட...

இலங்கை அரசுகூட அவருக்குக் கருணை காட்டி மலேசியாவிற்கு அனுப்பியிருக்கிறது. மலேசிய அரசும் உதவியிருக்கிறது. இந்திய அரசு தூதரகத்தில் விசா பெற்று சிகிச்சைக்காக பார்வதி அம்மையார் சென்னை வந்திருக்கிறார்.

நான் செய்தித்தாளைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்

அவர்கள் வருகின்ற செய்தி மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எங்களுக்கு அவர்கள் யாரும் சொல்ல-வில்லை. பார்வதி அம்மையார் திருப்பி அனுப்-பப்பட்டார் என்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் நான் செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்து-கொண்டேன்.

நம்முடைய கோபதாபங்களை வெளிப்படுத்திட ஒரு நீண்ட கண்டன அறிக்கையை மனிதநேயத்துடன் எழுதினேன். மற்ற ஏடுகளுக்கும் உடனடியாக அனுப்பி வைத்தோம்.

கலைஞர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திட

இது முழுக்க முழுக்க ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகும். மனிதாபிமானமற்ற முறையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவர்-களை மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்-கள். அவர்களை திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?

கலைஞர் அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயர் ஏற்படுத்தவேண்டும் என்கிற பின்னணி இருந்திருக்-கலாம்.

பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி இவர்கள் திருச்சியிலிருந்தார்கள். பிறகு, யாழ்ப்-பாணத்திற்குச் சென்றார்கள்.

இங்கே இருந்த ஜெயலலிதா அன்றைக்கு வாஜ்-பேயி அரசுக்கு ஒரு கடிதமே எழுதினார் தமிழக அரசின் சார்பில்!

பூனைக்குட்டி வெளியே வந்தது!

இந்த செய்திதான் பூனைக்குட்டி வெளியே வந்தது என்பதைக் காட்டியது. இந்தச் செய்தி இந்து ஏட்டில் வெளிவந்தது.

ஜெயலலிதா வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம்

2003 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களையும், அவருடைய தாயார் பார்வதி அம்மையாரையும் இந்தியா வர _ தமிழகத்-திற்கு வர அனுமதிக்கப்படக் கூடாதவர்கள் என்று அன்றைய வாஜ்பேயி அரசுக்குக் கடிதம் எழுதினார்.

பாலசிங்கத்தையும் தடுத்தார்

இதே அம்மையார் ஆண்டன் பாலசிங்கம் நீரிழிவு நோயினால் வெளிநாட்டில் லண்டனில் அவதிப்-பட்டு சென்னைக்கு வந்து சிகிச்சை பெற முயன்ற-போது பாலசிங்கம் இங்கு வரவே கூடாது என்று தடுத்தவர் இதே ஜெயலலிதா அம்மையார்தான்.

ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய-வுடன் அவர்களுடைய பாஸ்போர்ட்டை வைத்து விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கணினி-மூலம் பார்ப்பார்கள். இவர்கள் வரக்கூடாதவர்கள் பட்டியலில் (ஙிறீணீநீளீ லிவீ) இருக்கிறார்களா? என்பதை சரி பார்ப்பார்கள். அது அவர்களுடைய கடமை. அப்படி இருந்தால் திருப்பி அனுப்புவார்கள். அது மத்திய அரசு அதிகாரிகளுடைய கடமை. இது ஒரு நடைமுறை.

பார்வதி அம்மையார் வருவது முதல்வர் கலைஞர் அவர்களுக்குத் தெரியாது. சொல்லப்படவில்லை.

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

அருமைச் சகோதரர் வைகோ அவர்களும், நெடு-மாறன் அவர்களும் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்களே.

2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெய-லலிதா, வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்-மையார் அவர்களையும் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியவராயிற்றே.

சட்ட ரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ...

அதுமட்டுமல்ல, இந்து பத்திரிகையில் இவர் எழுதிய செய்தி அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது.

Legally or illegally சட்ட ரீதியாகவோ அல்லது சட்டத்திற்கு விரோதமாகவோ எப்படியோ இவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் எழுதியவர் ஜெயலலிதா அவர்கள்-தானே.

ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே!

சகோதரர் வைகோ அவர்களுக்கும், நெடுமாறன் அவர்களுக்கும் உண்மையிலேயே அந்த உணர்வு இருந்திருந்தால், ஜெயலலிதா வீட்டு போயஸ் தோட்-டத்-திற்கு முன் அல்லவா உண்ணாவிரதம் இருந்-திருக்கவேண்டும்?

இதில் கலைஞரை சாடுவதற்கு என்ன இருக்கிறது?

இவ்வளவு மோசமான பின்னணி இருக்கிறது. இதை அவர்கள் மறைக்கலாமா? இந்த லட்சணத்தில் தமிழக முதல்வர் கலைஞரை சாடுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்லவா? இதில் போய் அரசியல் நடத்தலாமா?

நம்முடைய நோக்கம் எப்படியும் பார்வதி அம்மையாரை சிகிச்சைக்காக மீண்டும் அவர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதில் போய் மலிவான அரசியலை புகுத்தக்கூடாது.

பிரச்சினையே இவர்களால்தான்!

வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்திற்குச் சென்ற பிறகுதான் பிரச்சினையே உருவாகியிருக்கிறது.

உடனடியாக முதலமைச்சரைத் தொடர்பு-கொண்டு இதுபற்றித் தெரிவித்தார்களா?

யாரும் எளிதில் அணுகக்கூடிய முதல்வர் ஆயிற்றே!

பார்வதி அம்மையார் வருகை தடுக்கப்பட்டால், இதன்மூலம் உலகத் தமிழர்கள் மீது கலைஞர் அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த பழி சுமத்தக்-கூடிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா இவர்கள் உருவாக்கிவிட்டார்கள்?

அதற்கு இதை ஒரு வாய்ப்பாக அல்லவா வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்?

சட்டமன்றத்தில்
முதல்வர் பேச்சைக் கேட்காத அ.தி.மு.க.

சட்டமன்றத்திலே இந்த சம்பவம்பற்றி பேசி-யிருக்கிறார்கள். இடதுசாரிகள், பா.ம.க.வினர், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எல்லாம் பேசினார்கள். அதற்குப் பதில் சொல்ல முதல்வர் கலைஞர் எழுந்தவுடன் ஒவ்வொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வாக வெளியேறுவதா? இந்து பத்திரிகை-யில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி கலைஞர் அவர்கள் பேச முற்பட்டார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களையும் அவையில் அமர்ந்து அவர் சொல்-லப் போகின்ற கருத்துகளைக் கேட்குமாறு கேட்டுக்-கொண்டார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பி-னர்கள் ஒவ்வொருவராக நழுவி வெளியேறிவிட்-டார்களே. கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கிறார். இதில் நாம் அனைவரும் ஒரே குரல் எழுப்பி செயல்படவேண்டிய செயலாயிற்றே.

இவர்கள் எல்லாம் வெட்கப்படவேண்டாமா? போர்க் களத்தில் முதலில் கள பலியாவது வீரர்கள் அல்ல. உண்மைதான். அதைத்தான் நாங்கள் இங்கே எடுத்துச் சொல்கின்றோம்.

பார்வதி அம்மையார் சிகிச்சை பெறவேண்டிய மனிதாபிமான செயலில் இருந்து நழுவிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

ஜெயலலிதாவிடம் வைகோ பேசினாரா?

சகோதரர் வைகோ போன்றவர்கள் ஏப். 27 ஆம்தேதி கடை அடைப்புக்காக ஜெயலலிதா அம்மை-யாரை சந்தித்திருக்கின்றன. படமெல்லாம் பத்திரி-கையில் வந்திருக்கிறது.

பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகுதான் அந்த அம்மையார் மற்றவர்களை உட்கார வைத்தே பேசுகிறார் (சிரிப்பு, கைதட்டல்).

பார்வதி அம்மையார் பிரச்சினைபற்றி உண்மை-யிலேயே உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால், இதைப்பற்றி அந்த அம்மையாரிடம் பேசினீர்களா?

நெடுமாறன்- சுப.வீக்கு வாய்ப்பூட்டு

சகோதரர் நெடுமாறன் அவர்களுக்கும், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் எங்கும் பேசக்கூடாது என்று நீதிமன்றத்தின்மூலம் உத்தரவு பெற்று பழிவாங்கியவர்தானே இந்த அம்மையார்.

நாங்கள்தான் பேசினோம்; கோயில் பூட்டையே அகற்றியவர் நமது முதல்வர் கலைஞர். எனவே, இவர்களுடைய வாய்ப்பூட்டையும் அகற்ற வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தோம்.

விடுதலையைப் படித்தார் கலைஞர். மறுநாள் அவரை நான் சந்தித்தேன். இப்படி நீங்கள் பேசி-யிருப்பது விடுதலையில் வந்திருக்கிறது. இதில்நாம் என்ன செய்ய முடியும் என்று கலைஞர் கேட்டார். ஒன்றுமில்லிங்க, நாம் அரசு வழக்கறிஞர் மூலமாக அந்த வாய்ப்பூட்டுத் தடையை நீக்கலாம் என்று சொன்னேன்.

முதலமைச்சர் உடனே பேசினார்

உடனே அவரே தொலைபேசியை எடுத்துச் சுழற்றி அரசு வழக்கறிஞரிடம் பேசினார்.

என்ன இப்படிச் சொல்லுகிறார்களே! அதற்கு உடனே ஏற்பாடு செய்து அந்தத் தடையை நீதிமன்றத்தின் மூலம் நீக்கிவிட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று சொன்னார்.

அப்பொழுது சகோதரர் நெடுமாறன் அவர்களுடைய நிலையும், சுப. வீரபாண்டியன் அவர்களுடைய நிலையும் என்ன?

பொம்மலாட்ட சைகைதான்!

எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேச மாட்டார்கள். பொம்மலாட்ட சைகைமூலம் காட்டிவிட்டு, நீதி-மன்றத் தடை இருக்கிறது. எங்களால் பேச முடியாது என்று உட்கார்ந்து விடுவார்கள். இதுதானே ஜெயலலிதா செய்தது. அந்த வாய்ப்பூட்டை அகற்றியதற்காகத்தான் சுப.வீ. அவர்கள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வைகோவுக்கு ஜெ. கொடுத்த 13 மாத சிறை

வைகோ அவர்கள் 13 மாதம் இந்த அம்மையாரால் சிறையில் இருந்ததை மறந்துவிட்டாரா? நாடாளுமன்றத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீதிபதியிடம் வைகோ அவர்கள் அனுமதி பெற்றது தெரிந்தவுடன் இரவில் தலைமை நீதிபதியிடம் இந்த அம்மையார் ஆட்சியில் உத்தரவு பெற்று இவரை ஒரு நாள் டில்லி செல்ல அனுமதிக்காதவர்தானே இந்த அம்மையார்.

பார்வதி அம்மையாருக்கு வேண்டுகோள்

பார்வதி அம்மையாருக்கு தமிழர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். தமிழகத்தில் சிகிச்சை பெற தமிழக முதல்வருக்குக் கடிதம் எழு-துங்கள். இதுதான் அரசியல் ரீதியான அலுவலக முறை.

ஏற்கெனவே கலைஞர் அவர்களும், சட்டமன்றத்-தில் சிகிச்சை பெற மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

டி.ஆர். பாலு கேட்டாரே!

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலே டி.ஆர். பாலு அவர்களை கேள்வி கேட்க வைத்தார் கலைஞர். தமிழக அரசுக்குத் தெரியாமல் எப்படி மத்திய அரசு பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது என்று கேள்வி கேட்க வைத்திருக்-கின்றார்.

எனவே, பார்வதி அம்மையாரை தமிழகத்தில் சிகிச்சை பெற வைத்து, அவரைக் காப்பாற்ற-வேண்டியது நம்முடைய கடமையாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் இதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்வார்.

சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கின்றார். முதல் கட்டமாக இதை சட்டப்படி நாம் செய்தாக-வேண்டும்.

பலத்த கரவொலி எழுப்பி ஆதரியுங்கள்!

எனவே, இங்குக் கூடியிருக்கின்ற அனைத்துக் கட்சித் தோழர்களும் பலத்த கரவொலி எழுப்பி இதை ஆதரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்-கின்றேன்.

_ இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment