ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற மாபெரும் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை_பெரியார் திடலில் நேற்று (25.4.2010) இரவு 7.25 மணிக்குத் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.-திருமாவளவன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
தமிழர் தலைவர் விடுத்த முதல் அறிக்கை
மேதகு பிரபாகரனின் தாயார் அன்னை பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதை முதலில் நம்முடைய தமிழர் தலைவர்தான். கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய-வர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வன்மை-யாகக் கண்டிக்கின்றோம்.
இந்திய தூதரகம் எப்படி அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு ஏன் அவரை கருப்புப் பட்டியலில் வைத்துத் திருப்பி அனுப்புவானேன்.
கையறு நிலை
நள்ளிரவு 12 மணிக்கு எனக்கு தொலைபேசி வந்தது. கையறு நிலையிலே இருந்தோம். வன்னிபெரும்பகுதியிலே ஈழத்தமிழர்கள் குடியேற்ற வாய்ப்பில்லாமல் முற்றாக இராணுவப் பிடியில் இருக்கிறது. அவர்கள் எங்கு செல்வது என்று அறியாமல் திகைக்கிறார்கள்.
படகில் தப்பிச்சென்ற ஈழத்தமிழர்களை மலேசிய அரசு சிறைப் பிடித்து அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க இருந்த நிலை. எனக்குத் தொடர்ந்து தொலைபேசிகள். அண்ணா, எங்களைக் காப்-பாற்றுங்கள் இல்லையேல் தீயிட்டு மடிவோம் என்று கதறுகிறார்கள்.
கலைஞரும்-தமிழர் தலைவரும்
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் நம்முடைய தமிழக முதல்வர் கலைஞரும், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களும்தான். 2003ஆம் ஆண்டு warning Circular யார்? ஜெய-லலிதா அவர்கள்தானே. பி.ஜே.பி. அரசுக்கு அனுப்பியவரும் இந்த அம்மையார்தானே.
பார்வதி அம்மையார் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை எப்படியாவது கலைஞர் அரசு மீது பழி சுமத்தலாம் என்று பார்த்தார்கள். வைகோவும், நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்திற்குச் சென்று வந்திருப்பவர் இன்னார் என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்திய காரணத்தால்-தான் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்டார். பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி கிடைப்பது அவர்களுக்கு முக்கியமல்ல. எப்படியாவது கலைஞர் அரசை சாடுவதுதான் முக்கியம். தி.க.வே பொறுப்பேற்கட்டும்!
பார்வதி அம்மையாரை திரும்ப சென்னைக்கு அழைத்து வந்து திராவிடர் கழகத்தின் பாதுகாப்பிலேயே வைத்து அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள். நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு சிகிச்சை தரவில்லை என்றால் தமிழ் சமூகம் நம்மை மன்னிக்காது.
நெடுமாறனும், வைகோவும் பார்வதி அம்மையார் விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் இவ்வாறு பேசினார் தொல்.திருமாவளவன்.
No comments:
Post a Comment