சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (25.04.2010)நடந்த மோதல் சம்பவம் குறித்து, சட்டசபையில் இருந்த கட்சிகள், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அவர்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் கலைஞர் பேசியதாவது: அம்பேத்கருடைய சிலையை உயர்நீதிமன்ற வளாகத்திலே வைப்பதில் இந்த அரசோ அல்லது நானோ, யாராவது குறுக்கீடு செய்து, அந்த சிலையை அங்கு வைக்கக்கூடாது என்று அடம் பிடித்து இருந்-தாலோ அல்லது தடுத்து இருந்தாலோ, கறுப்புக்-கொடி காட்ட உணர்ச்சி உள்ளவர்கள் கூடினால், அது முறையானதும், நியாயமானதாகக் கூட இருக்கும். 1972_76ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு கலைக்-கல்லூரிக்-கும், அதன் பிறகு தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்-கும் அம்பேத்கர் பெயரை வைத்தவன் என்ற முறையில், சட்டக்கல்லூரிக்கு பிறகு சட்டப்பல்-கலைக்கழகமே இங்கே உருவாக்க வேண்டும் என்று ஒரு முயற்சி எடுத்தபோது, அதற்கான இடவசதி இல்லாமல் இருந்தது. சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், கிரீன்-வேஸ் சாலையில் முதலமைச்சர் என்ற முறையில் நான் வசிப்பதற்காக வீடு ஒன்றை, ஒரு பெரிய மாளிகையை ஏற்பாடு செய்திருந்தார். நாளைக்கு அங்கே குடிபோக வேண்டுமென்று நாள் குறித்-திருந்தார். அதை பார்வையிட என்னை அழைக்க வந்தபோது, நான் சொன்னேன், சட்டப்-பல்-கலைக்கழகம் அம்பேத்கர் பெயரில் உருவாக இடம் இல்லை என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிரீன்வேஸ் சாலையிலே உள்ள அந்த வீட்டை, அந்த பல்கலைக்-கழகத்தின் அலுவலகமாக ஆக்குங்கள் என்று சொன்னேன். அதன்பின்னர், மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதாக மராட்டிய சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வந்து பல ஆண்டுகளாகின்றன. ஆனால் தீர்மானம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்ற செய்தியை ஒரு பத்திரிகையிலே மூலையிலே வந்ததை படித்துவிட்டு, அப்படியா என்று மிகுந்த வருத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள தி.மு.க. கிளைகள் சார்பில் கிளைச்-செயலா-ளர்கள் லட்சக்கணக்கில், மராட்டிய மண்டலத்தில் மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்பதற்காக தந்திகள் கொடுக்க சொல்லி, அங்கிருந்த கவர்னர் அலெக்-சாண்டர் என்னோடு தொடர்பு கொண்டு, இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் தந்திக்கு பதிலாக இங்கே சட்டம் இயற்றப்படும் என்று உறுதியளித்து, அங்கே அம்பேத்கர் பல்கலைக்கழகம் உருவானது. இவைகளுக்கு காரணமாக இருந்தது கருணாநிதி என்பது தவறு என்று என் மீது குற்றம்சாட்டி, ஆகவே உயர்நீதிமன்றத்திற்ககுள்ளே இவனை நுழைய விடக்கூடாது, அனுமதியோம் என்று சொல்லி இருந்தால் அது நியாயம். இதற்கெல்லாம் காரணமாக இருந்தது தவறு என்று என் மீது குற்றம்சாட்டி சில பேர் கறுப்புக்கொடியோடு வந்தார்கள் என்று சொல்ல மாட்டேன். வந்த பிறகு சட்டப்பையிலே இருந்த கறுப்புக்-கொடியை எடுத்து வீசினார்கள் என்றால், இங்கே இந்த சட்டமன்றத்திலே அதைப்பற்றிய பிரச்சினை வந்த பிறகு அது நாட்டிற்கே தெரிகிறது. யாருக்கும் அதுவரையில் தெரியவில்லை. அங்கே அந்த பந்தலில் கூடியிருந்த கூட்டம் ஆயிரம் பேர் இருக்கலாம். அந்த ஆயிரம் பேருக்கிடையே நான்கு, அய்ந்து பேர் இருந்து, வழக்கறிஞர்கள் சங்கமோ, அல்லது பால் கனகராஜ் போன்ற நண்பர்களுடைய தலைமையிலே உள்ள அங்கீகாரம் பெற்ற சங்கங்களோ, யாரும் ஈடுபடாத நிலையில், ஒரு சில கட்சிகளின் பெயர்களை சொல்லிக்கொண்டு, எந்தக்கட்சியின் பெயரை சொன்னால் பயப்படுவார்கள் என்று அந்த கட்சி-களின் பெயர்களை சொல்லிக்கொண்டு, அம்பேத்கர் பெயரையே அங்கே வீணாக களங்கப்-படுத்தி, இந்த கொடியை நாங்கள் பிடிக்கிறோம் என்று சொல்லி, அதனால் விளைவிக்கப்பட்ட கலகத்தை நான் ஏற்றுக்-கொள்ளவும் இல்லை, வரவேற்கவும் இல்லை. மற்ற உறுப்பினர்களைப்போல் அவர்களுடைய கவலையில் நானும் பங்கேற்கிறேன். அந்த கலவரத்தில் பத்திரிகையாளர்கள், செய்தி-யாளர்கள், செய்தி நிறுவனங்களின் கருவிகள் தாக்கப்-பட்டன என்ற செய்திக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பேன் என்ற உறுதியையும் அளிக்-கிறேன். ஆனால் ஏன், எதற்காக திடீரென்று அங்கே கறுப்புக்-கொடி? கறுப்புக்கொடிக்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல தி.மு.க. ஏனென்றால் அது நடத்தாத கறுப்புக்-கொடி இயக்கம் ஒன்று தமிழ்நாட்டில் இல்லை. அவ்வளவு கறுப்புக்கொடி இயக்கங்களை நாங்கள் நடத்தி இருக்கிறோம். ஜவஹர்லால் நேருவுக்கே கறுப்புக்கொடி காட்டி இருக்கிறோம். என்னுடைய தலைமையில் தஞ்சாவூரில் கறுப்புக்-கொடி காட்டப்பட்டது. ஆனால் எப்படி? அதற்கு ஒருமுறை கிடையாதா? முன்கூட்டியே போலீசாரிடத்-திலேயே அனுமதி கேட்டு, அவர்கள் எந்த இடத்திலேயிருந்து கறுப்புக்கொடி காட்டலாம் என்று வரையறுத்து சொல்கிறார்களோ, அந்த இடத்திலே-யிருந்து தான் தி.மு.க. சார்பாக எந்தத் தலைவர்-களுக்கும் கறுப்புக் கொடி காட்டப்பட்டிருக்கிறது. இது நம்முடைய எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் அவரும் எங்களோடு இருந்தவர்தானே? இங்கிருந்து போனவர்களுக்கெல்லாம் தெரியும். ஜனநாயக ரீதியிலேதான் கறுப்புக்கொடி இயக்கத்தை தி.மு.க., திராவிட இயக்கம் காட்டியிருக்கின்றது. ஆனால் திடீரென்று ஒரு தாக்குதல், ஒரு எதிர்ப்பு அதற்கு நாங்கள் பயப்பட வேண்டுமென்றால் அது இயலாது. அன்று பெரியார்மீது செருப்பு வீச்சு கடலூரில் ஒரு பாலம் உள்ளது. அதோடு கூடிய ஒரு சாலை இருக்கிறது. அந்த பாலத்தின் மூலையில் பெரியார் சிலை நான்தான் திறந்து வைத்தேன். பெரி-யா-ரின் தலைமையில் அதனை நான் திறந்து வைத்-தேன். அந்த சிலைக்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை அந்த இடத்திலே பெரியார் பேசும்போது அவர் மீது செருப்பு வீசினார்கள். அந்த செருப்பை பத்திரப்படுத்தி, அப்படி செருப்பு வீசியவனை கூப்பிட்டு, அவனுக்கு பரிசளித்தார் என்றெல்லாம் வரலாறு உண்டு. அந்த செருப்பை எந்த இடத்தில் வீசினார்களோ, அந்த இடத்திலே தான் பெரியாருக்கு சிலை வைக்க வேண்டுமென்று பெரியாருக்கு செருப்பு வீசிய இடத்திலே தான் இன்றைக்கு அங்கே அவருடைய சிலையை வைத்திருக்கிறோம். அதையெல்லாம் என்னுடைய 72 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் நினைத்துப்பார்க்க மாட்டேனா? அவர்கள் எல்லாம் பட்டபாடு, அவர்கள் எல்லாம் சந்தித்த அந்த சோதனைகள் இந்த வன்முறைகள் இவைகள் எல்லாம் எனக்கு ஞாபகத்திற்கு வராதா? அப்படி வந்த காரணத்தால்தான் நீதிமன்றத்திலே, உச்ச திமன்ற தலைமை நீதிபதிக்கு முன்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்பாக, எனக்கெதிரில் நான்கைந்து பேர் நான் பேச எழுந்ததும், கறுப்பு துணியைக்காட்டி அனுமதியோம், அனுமதியோம் என்று சொன்னார்கள். அதிலே வேடிக்கை என்னவென்றால், நான் உள்ளே போய் அமர்ந்து, பலரும் பேசி, நான் பேச ஆரம்பிக்கும் வரையில் நீதிமன்றத்திற்குள் அனுமதி-யோம் என்று அவர்கள் சொல்லவில்லை. நீதிமன்-றத்திற்குள் அனுமதிக்கப்பட்டுத்தான் உள்ளே போயிருக்கிறேன். மேடை வரை அனுமதிக்கப்-பட்டுத்-தானே உள்ளே போயிருக்கிறேன். இவ்வளவிற்கு பிறகும் அனுமதியோம், அனுமதியோம் என்றால் என்ன அர்த்தம் என்றே எனக்கு புரியவில்லை. ஆக எங்கிருந்தோ பின்னால் தூண்டப்பட்டு அனுப்பப்-பட்ட ஒரு கூட்டம் அது. அந்தக்கூட்டம் அய்ந்தாறு பேர் பஞ்ச பாண்டவர்களை போல அவர்கள் அங்கே வந்து இந்த கலாட்டாவை செய்தார்கள். நான் மிகுந்த அடக்கத்தோடு அப்படியொரு நிகழ்ச்சி நடைபெற்ற போது என்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு அது என்ன என்று கூட பார்க்காமல் அதுபற்றியே கவலைப்படவில்லை. எல்லா பத்திரிகைகளிலும் அதை எழுதியிருக்கிறார்கள். சம்பவத்தை பற்றி கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தார் என்று தொலைக்காட்சிகளிலே கூட சொன்னார்கள். ஜெயா தொலைக்காட்சியிலே கூட சொன்னார்களாம், கருணாநிதி அதைப்பற்றி கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தார் என்று. அதுதான் கருணாநிதி. இந்திராகாந்தியும், நானும் வ.உ.சி. சிலை திறப்பு விழா என்பதற்காக தூத்துக்குடிக்கு சென்றிருந்தோம். கோசல்ராம் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள். கல்வியாளர் ஏ.பி.சி. வீரபாகு என்பக்கத்தில் அமர்ந்திருந்தார். பெரிய கூட்டம். பத்தாயிரம் பேர் இருக்கும். அந்த கூட்டத்தில் இடையிடையே சில கூச்சல். இப்படித்தான் ஆனால் கூட்டம் நடந்து கொண்டே இருந்தது. திடீரென்று அந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் சொல்வார்கள்_சொட்டை விழுந்துப்-போன கூட்டம் என்று என் தலை மாதிரி, அந்த பெரிய கூட்டத்தில் வழுக்கை விழுந்து போச்சாம். தட் இஸ் கருணாநிதி வழுக்கை இருந்தால் அந்த கூட்டத்தில் அடர்த்தி இருக்காது அல்லவா? அதை சொட்டை விழுந்து போச்சுன்னு சொல்வார்கள். இந்திராகாந்திக்கு பக்கத்திலே இருந்த கோசல்ராமிடம் இந்திராகாந்தி, தட் இஸ் கருணாநிதி, அதாவது, அதுதான் கருணாநிதி என்று சொன்னார். அந்த கூட்டம் கலைந்து போன பிறகு அடங்கிய பிறகு அமைதியான பிறகு இந்த வார்த்தைகளை இந்திராகாந்தி, கோசல்ராமிடம் சொன்னார். அந்த வீரவாக்கியத்தை அந்த பாராட்டை நான் இழந்து விட முடியுமா? அதனால்தான் உயர்நீதி-மன்றத்திலே நடைபெற்ற அந்த சம்பவத்திலும் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே-யிருந்தேன். நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் பேசு-கின்ற இடத்திலே பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும், கல் எறியப்பட்டாலும் பேசிக்-கொண்டு தான் இருக்கிறேன். பேசிக்கொண்டே இருப்-பேன். என்னுடைய கடைசி மூச்சு அடங்குகின்ற வரையிலே _ இதயத்திலே கடைசித்துடிப்பு இருக்கின்ற வரையிலே பேசிக்கொண்டே இருப்பேன். அந்த சம்பவம் நடைபெற்ற போதும் நான் பேசிக்-கொண்டுதான் இருந்தேன். நடைபெறுவதை நான் கவனிக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னை பாராட்டி விட்டுச்சென்றார்கள். நன்றாக சமாளித்தீர்கள் என்று சொல்லி விட்டு சென்றார்கள். நேற்று மாலை பத்திரிகைகளில் இதைப்பற்றிய செய்திகளையே போடவில்லை. இன்று காலை பத்திரிகைகளிலே அந்த செய்தி வெளிவந்திருக்கின்றது. எனக்கு இதிலே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த செய்தி வராமல் போய் விடுமோ என்பதற்கு பதிலாக, இந்த செய்தியை வெளியிட்டு விளம்பரம் கொடுத்த பத்திரிகைகளுக்கும் வானொலி, தொலைக்காட்சி போன்ற நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தொலைக்காட்சி பெட்டிகள் சில நொறுக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் தாக்கப்-பட்டார்கள் என்ற சம்பவங்கள் எல்லாம் என் கவனத்-திற்கு நீங்கள் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்து உரிய நடவடிக்கைகள் அதற்காக எடுக்கப்படும் என்பதையும் எதிர்காலத்திலே அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிகையாளர்களை பொறுத்தவரையில் அவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியைப்பற்றி என் மீது குற்றம் கூற முடியாது. நான் தவறாக பேசினேன், அதனால் கறுப்புக்கொடி காட்டினார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. செய்தி நிறுவனங்களும் சொல்ல முடியாது. நான் அம்பேத்காருக்காக பட்ட பாடுகளை நான் செய்த சிறப்புகளை உலகம் அறியும். என் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்கள் அறிவார்கள். இங்கே இருக்கின்றவர்கள் யாரும் என் கட்சியிலே உள்ளவர்கள் உட்பட யாரும் சொல்வதற்காக வருத்தப்படக்கூடாது. சாதியை ஒழிப்பதற்காக ஆதிதிராவிட குலத்துப்பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தவன் நான். ஒரு வேளை அதற்காக கறுப்பு கொடி பிடித்தார்களோ என்னவோ தெரியாது. கறுப்புக்கொடி பிடித்துக்கொண்டே இருக்கட்டும். ஆனால் ஒரு காலத்தில் ஆயிரம் பேர், அய்நூறு பேர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அது மாறி இப்போது சுருங்கி அய்ந்து பேர், ஆறு பேர் என்ற அளவிற்கு வந்து விட்டது. அந்த நிகழ்ச்சியும் கூட என்னுடைய அருமை நண்பர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பால்கனகராஜ் அவர்களால் ஏற்றுக்-கொள்ளப்படவில்லை என்பதையும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதையும் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். வேல்முருகன் போன்றவர்கள் அவர்களிடம் பேசி பார்த்திருக்கலாம் என்றார்கள். எல்லோரிடமும் பேசியிருக்கிறார்கள். அங்கேயுள்ள வழக்கறிஞர் சங்க தலைவர்கள் மாத்திரமல்ல, இன்னும் சொல்லப்-போனால், உயர்நீதிமன்ற நீதிபதியே அவர்களை-யெல்லாம் அழைத்து பேசியிருக்கிறார். எந்த தகராறும் வேண்டாம் என்று பேசி அதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டுதான் போயிருக்கிறார்கள். எந்த தகராறும் செய்ய மாட்டோம் என்று சொல்லி-யிருக்-கிறார்கள். என்ன காரணம் சொல்கிறார்கள்?-காவல்-துறை-யினர் மேல் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் கூட, என்று சொல்-கிறார்களாம். நடவடிக்கை எடுத்தால், அவர்கள் சட்ட ரீதியாக அதனை அணுகும்போது எப்படி நட-வடிக்கை எடுக்க முடியும்? நடவடிக்கை எடுக்கப்-போகிறோம் என்பதற்காக அவர் கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி விடுவார்கள். இந்த நிலைமையிலே என்ன நடவடிக்கை எடுப்பது? இதையும் நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஆகவே உயர்நீதிமன்றத்தை இது போன்ற அமளி களமாக, கலவர பூமியாக ஆக்குகின்ற யாராக இருந்தாலும் பொதுமக்களால் அவர்கள் மன்னிக்-கப்பட மாட்டார்கள் என்பதையும், நேற்று நடந்த அந்த செய்தியை, நிகழ்ச்சியை நானும் மறந்து விடுகிறேன், நீங்களும் மறந்து விடுங்கள். வழக்-கறிஞர்களும் மறந்து விட்டு நல்ல வழியை மக்களுக்கு காட்டுங்கள் என்று தெரிவித்து அமைகின்றேன். இவ்வாறு அவர் பேசினார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Tuesday, April 27, 2010
கடைசி மூச்சு வரையில் பேசிக் கொண்டே இருப்பேன் - சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment