தி.மு.க. தலைவர் கருணாநிதி 14.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பரமக்குடியில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்து மருத்துவமகைளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் தி.மு.க. சார்பில் எம். எல்.ஏ.க்கள் குழு கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை (15.09.2011) செல்கின்றனர்.
துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங் கிடவும் அறிவிக்கப்பட்டு உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார் :
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகள், மருமகன், பேரன்கள் சென்றனர்.
ஸ்டாலின் அங்கு 10 நாட்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின் 14.09.2011 அன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார்.
No comments:
Post a Comment