
மனித தன்மைக்கு எதிரான மரண தண்டனையை ரத்து செய்யுங்கள் என்று டெல்லி மேலவையில் பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3பேரும் 20 ஆண்டு களுக்கும் மேலாக தண்டனை நிறை வேற்றப்படாமல் சிறைவாசம் செய்து வருகிறார்கள். அவர்கள் குடியரசுத் தலை வருக்கு அனுப்பிய கருணை மனு மீது 11 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படா மல் ஊறப்போட்டு விட்டு இப்போது அதை குடியரசுத் தலைவர் மாளிகை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் இந்நிலையில் அவர்களுடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் கள். தமிழக சட்டசபையும் மரண தண் டனை மீது மறுபரிசீலனை செய்யக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. டில்லி மேலவையில் இந்தப் பிரச் சினையை தி.மு.க. எம்.பி.சிவா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:- கவன ஈர்ப்பு தீர்மானம்
மரணதண்டனை மனிதத்தன்மைக்கு எதிரானது. கொடூரமானது. இது தண் டனை என்ற பெயரில் இன்னும் இந்திய சமூகத்தில் நீடித்து வருகிறது. இந்தியா சமூக மதிப்பீடுகளுக்கும், அமைதிக்கும் தார்மீக நடத்தைக்கும் பெயர் பெற்ற நாடு ஆகும். மரண தண்டனையை பல நாடுகள் ரத்து செய்து விட்ட நிலையில் அந்தத் தண்ட னையை நாம் இன்னும் ரத்து செய்யாமல் பாதுகாத்து வருகிறோம். மரணதண்ட னையை ரத்து செய்வதற்கு இதுவே தக்க தருணம். இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் நீண்ட காலமாக அவை நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்தத் தண்டனை பெற்ற கைதிகள் நீண்ட காலமாக மரணத்தின் எல்லையில் தவிப் போடு காத்து இருந்தனர். இது அவர்களின் மனநிலையையும் உடல் நிலையையும் பாதித்து இருக்கும். எனவே அவர்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். - இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.
No comments:
Post a Comment