தி.மு.க. தலைவர் கலைஞர் 14.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க. அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ; கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க. அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ; கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலைஞர் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment