நில அபகரிப்பு வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக மதுரை சிறைக்கு 12.09.2011 அன்று மதியம் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, நெப்போலியன், தி.மு.க. நிர்வாகிகள் கும்பலாக சென்றபோது மத்திய மந்திரிகள் மற்றும் சிலரை மட்டுமே ஜெயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியும் என ஜெயில் அதிகாரிகள் கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் ஜெயில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயிலுக்கு வந்த மத்திய மந்திரிகள் இருவரும் ஜெயிலின் பிராதான கதவை திறந்து தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரினர். ஆனால் இறுதியில் அதிகாரிகள் சிறிய கதவு வழியாகத்தான் அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி நெப்போலியன் நாங்கள் மத்திய மந்திரிகள், எங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஜெயில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவிக்க போவதாகவும், மத்திய மந்திரி நெப்போலியன் கூறிவிட்டு ஜெயிலுக்குள் இருக்கும் கருப்பசாமி பாண்டியனை பார்த்து விட்டு வெளியே திரும்பினர்.
No comments:
Post a Comment