கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 29, 2011

சமச்சீர் புத்தகம் வழங்க ஆகஸ்ட் 5ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம் : உச்சநீதிமன்றம்


சமச்சீர் கல்வி வழக்கு 28.07.2011 அன்று 3வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக வக்கீல்கள் அரிமா சுந்தரம், ராஜீவ் தவான் ஆகியோர் வாதாடினார்கள்.
பெற்றோர் சார்பாக மூத்த வக்கீல்கள் அந்திஅர்ஜூனா, ஏ.கே.கங்குலி, ரவிவர்மா, விடுதலை, கே.பாலு ஆகியோர் ஆஜரானார்கள். முதலில் மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா வாதத்தை தொடங்கினர்.
அவர் வாதாடியதாவது:

சமச்சீர் கல்வியில் குறைகள் இருந்தால், அதை சரிசெய்து பாடப் புத்தகத்தை வெளியிடலாம். இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததால் மாணவ மாணவிகள் 2 மாதமாக எந்த புத்தகத்தை படிப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சமச்சீர் கல்வி கேட்டு தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் அனுபவமிக்க கல்வியாளர்கள் இல்லை. அரசு நியமித்த குழுவின் கருத்தை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது சரியானதுதான். சட்டதிருத்தம் செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கூடாது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 200 கோடி ரூபாய் செலவில் சமச்சீர் பாடப்புத்தகம் தயாராக உள்ளது. எனவே இதை உடனே தர உத்தரவிட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தீர ஆராய்ந்து பார்த்து, மற்ற மாநிலங்களில் உள்ள நிலைகளை ஆராய்ந்து பார்த்து தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இதை தமிழக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு, சமச்சீர் கல்வியை தள்ளிவைத்து இதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது தமிழக அரசு வக்கீல் பி.பி.ராவ் குறுக்கிட்டு, “2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகத்தை தர வேண்டும் என்ற உத்தரவை தள்ளிவைக்க வேண்டும், தி.மு.க. நாளை நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை தர வேண்டும், தி.மு.க போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்க முடியாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸி66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு : பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆஜர்


சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா 27.07.2011 அன்று ஆஜராகவில்லை.
ஜெயலலிதா 1991 & 1996ல் முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஸி66 கோடி சொத்துகள் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் அவருடைய தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூலை 27ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார் கடந்த 25ம் தேதி நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் அவர், �தமிழக முதல்வர் ஜெயலலிதா, இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக இயலாது. அவரிடம் கேட்கப்பட உள்ள கேள்விகளுக்கான பதில்களை எழுத்து மூலம் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரிடம் பதில் பெற வேண்டும்� என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு 27.07.2011 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வரவில்லை. சசிகலா, இளவரசி மட்டும் ஆஜராகினர். கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், சுதாகரனால் ஆஜராக முடியவில்லை என்றும், அவருக்கு விலக்கு அளிக்கும்படியும் கோரி அவரது வக்கீல் சரவணக்குமார் மனு செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் வக்கீல் குமார் வாதாடியதாவது:
கடந்த 2009, டிசம்பர் 31ம் தேதி குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பிரிவு 313 (5) அமலுக்கு வந்தது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் கேள்வி & பதில் நடைமுறைக்காக நேரில் ஆஜராகத் தேவையில்லை. அரசுதரப்பு கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளிக்கலாம். எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக தேவையில்லை.

இவ்வாறு வக்கீல் குமார் வாதிட்டார்.
அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், சுதாகரனுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமச்சீர் கல்வியில் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது : தமிழக அரசு தகவல் - சுப்ரீம் கோர்ட்டில் சலசலப்பு


சமச்சீர் கல்வியில் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது என்று அரசு வக்கீல் அளித்த பதிலால் உச்ச நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சமச்சீர் கல்வி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் முன்பு 27.07.2011 அன்று 2 வது நாளாக விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
மூத்த வக்கீல் பி.பி.ராவ்:
சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் ஆராய்ந்து பார்க்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்த்து சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது. எனவே இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது. இதற்காக தான் அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
மூத்த வக்கீல் பி.பி.ராவ்:
சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் ஆராய்ந்து பார்க்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்த்து சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது. எனவே இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது. இதற்காக தான் அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் ,ஜனார்த்தனராஜா ஆகியோர் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை 2011 ம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு அமல்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். இதை பின்பற்றி சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய கடந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சடித்து விட்டனர். எனவே தான் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தீர்ப்பை பின்பற்றி வருகிறோம்.
நீதிபதிகள்:
சமச்சீர் கல்வியில் குறைபாடுகள் இருந்தால் அதை நீக்கி இருக்கலாம். அதை விட்டு விட்டு சமச்சீர் கல்வி திருத்த சட்டத்தை கொண்டு வந்தது ஏன்?
வக்கீல் ராவ்:
கல்வி மற்றும் சட்டத்துறையில் தமிழக அரசுக்கு சரியாக ஆலோசனை கூறும் நபர் யாரும் இல்லை, சட்ட திருத்தம் கொண்டு வந்தது தேவையற்றது. (அரசு வக்கீலே இப்படி பதில் கூறியதால் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.)
வக்கீல் ராவ்:
கல்வி மற்றும் சட்டத்துறையில் தமிழக அரசுக்கு சரியாக ஆலோசனை கூறும் நபர் யாரும் இல்லை, சட்ட திருத்தம் கொண்டு வந்தது தேவையற்றது. (அரசு வக்கீலே இப்படி பதில் கூறியதால் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.)
அரசு சார்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார்:
சமச்சீர் கல்வியினால் மாணவர்கள் தரம் குறைந்துவிடும். எனவே பழைய பாடத்திட்டத்தை வழங்குவது தான் சரியானது. பழைய பாடத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. உயர்நீதிமன்றம், 9 பேர் அடங்கிய குழு கொடுத்த அறிக்கையை சரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை. இந்த அறிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது தவறானது.
எனவே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
மெட்ரிக்குலேசன் தரப்பு வக்கீல்கள் அரிமாசுந்தரம், ராஜீவ்தவான்:
பழைய பாடப்புத்தகம் தான் தரமானது என்று பள்ளிகள் தரப்பில் கருத்துக்கள் தெரிவித் துள்ளன.
இதை கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 28.07.2011 அன்று தள்ளிவைத்தனர்.
ராவ் விளக்கம்:
உச்ச நீதிமன்றத்தில் 27.07.2011 அன்று மாலை விசாரணை முடிவடையும் நேரத்தில் வக்கீல் பி.பி.ராவ் கூறுகையில், ‘சமச்சீர் கல்வி சட்டத்தை தமிழக அரசு திருத்தியது தேவையற்றது என்று கூறியது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது தமிழக அரசின் கருத்து அல்ல’ என்றார்.

Thursday, July 28, 2011

நில மோசடி வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன்



நில அபகரிப்பு வழக்குகளில் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 27.07.2011 அன்று நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
சேலம் அங்கம்மாள் காலனி நிலம், 5 ரோடு பிரீமியர் மில் நில அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் மீது சேலம் நில அபகரிப்பு மீட்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 25ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 3 நாள் சேலம் குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், 27ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படியும் உத்தரவிட்டார். கடந்த 3 நாட்களாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 27.07.2011 அன்று மாலை 4.30 மணிக்கு சேலம் டவுன் குற்றப்பிரிவில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் நீதிமன்ற வளாகத்துக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்து வந்தனர். வளாகம் முழுவதும் திமுக தொண்டர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.
நீதிமன்றத்துக்குள் அழைத்து செல்லும்போது தொண்டர்களும், திமுக வக்கீல்களும் முண்டியடித்து முன்னே வந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நீதிமன்றத்தின் முன்பகுதியில் இருந்த கண்ணாடி கதவு உடைந்தது. 4.50 மணிக்கு ஜே.எம்.5 நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் சரத்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் அமைச்சருக்காக வக்கீல்கள் மூர்த்தி, துரைராஜ், சக்திவேல், மணிவாசகம் ஆகியோர் ஆஜராகினர்.
நீதித்துறை நடுவருக்கு வீரபாண்டி ஆறுமுகம் வணக்கம் தெரிவித்தார். அப்போது, அனைவரையும் அமைதியாக இருக்கும்படி நீதித்துறை நடுவர் அறிவுறுத்தினார். பின்னர், ஜாமீன் தொகை ஸீ25,000 கட்டப்பட்டது. தொடர்ந்து 2 வழக்குகளுக்கும் சவுந்தரராஜன், உமாசங்கர், பழனிச்சாமி, தங்கவேல் ஆகியோர் இருநபர் ஜாமீன் மனுவை வழங்கினர்.
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி நீதித்துறை நடுவர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தினமும் காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவு வழங்கப்பட்டது.
பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியே வந்தார். தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார். தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பினர். முன்னதாக நீதிமன்றத்துக்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலாவதி, மகன் பிரபு, ராமலிங்கம் எம்.பி, மேயர் ரேகாபிரியதர்ஷினி, துணை மேயர் பன்னீர்செல்வம் ஆகியோர் வந்திருந்தனர்.

உடைந்த கண்ணாடி உடனடியாக மாற்றம் :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த போது, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் கூடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் நீதிமன்ற நுழைவு வாயில் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர்கள் மூர்த்தி, துரைராஜ் ஆகியோர் மாவட்ட நீதிபதி பாஸ்கரனை நேரில் சந்தித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, கூட்ட நெரிசலில் நுழைவு வாயில் கண்ணாடி உடைந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர். உடைந்த கண்ணாடியை மாற்றித் தருவதாக கூறினர். அதற்கு நீதிபதியும் அனுமதி வழங்கினார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உடைந்து போன கண்ணாடி மாற்றிக் கொடுக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு கையெழுத்து - வக்கீல் பேட்டி :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் மூர்த்தி கூறியது:

அங்கம்மாள் காலனி, பிரிமியர் நிலப்பிரச்னை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த திங்கள்கிழமை ஆஜரானார். 3 நாட்கள் விசாரணையின் முடிவில் 27.07.2011 அன்று சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து முன்ஜாமீன் பெற்றோம். 28.07.2011 அன்று காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகி கையெழுத்திடுவார்.
இவ்வாறு மூர்த்தி கூறினார்.

அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து 1ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க அறப்போராட்டம்


அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் வரும் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் நடைபெறுகிறது. அதில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திமுக தலைமை கழகம் 28.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அறப்பேராட்டம் நடைபெறுகிறது. வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள் துணை முதல்வர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் தலைமை வகிக்கின்றனர்.
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார்.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார். இதேபோல மற்ற மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை தாங்குகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் பிடிவாதத்தை கண்டித்து போராட்டம்: அனைத்து தரப்பும் ஒத்துழைக்க கலைஞர் வேண்டுகோள்


சமச்சீர் கல்வி பிரச்சனையில் அதிமுக அரசின் பிடிவாத போக்கை கண்டித்து 29.07.2011 அன்று திமுக சார்பில் நடைபெறும் அறப்போராட்டம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திமுக தலைவர் கலைஞர் 28.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி அவசரமாக கொண்டுவரப்படவில்லை என்றும், கடந்த 2006ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர்
முத்துக்குமரன் குழு ஆய்வு செய்து அளித்த பரிந்துரையை, விஜயகுமார் குழு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கியது என்று கூறியுள்ளார்.


2008ஆம் ஆண்டு கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. இதன்படி 4 ஆண்டுகள் பரிசீலனை செய்தபிறகுதான் 2010ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது என்றும் கலைஞர் கூறியுள்ளார்.


சமச்சீர் கல்வி திட்டத்தினை தள்ளுபடி செய்யக்கோரி ஒரு சில தனியார் பள்ளிகளால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொரப்பட்ட வழக்குகளில் கடந்த 2010ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பணையில் தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லத்தக்கது என்றும், நிலைநிறுத்தம் செய்யப்பட்டதையும் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.


சமச்சீர் கல்விக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பின்னர் 2010-2011ஆம் கல்வியாண்டில் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்புக்கு 61 லட்சம் பாடப்புத்தகங்களும், 6ஆம் வகுப்புகளுக்கு 84 லட்சம் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக 2011-2012ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பாடப்புத்தங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில் அதிமுக அரசு சமச்சீர் கல்வி திட்டத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் சமச்சீர் பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து ஐந்து நாட்களாகியும், தமிழக அரசு அதனை மதித்து இதுவரை புத்தகங்களை விநியோகிக்கவில்லை.


இதற்கு மாறாக தமிழகத்தில் நடப்பு ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியிருக்கிறார் என்றால், தமிழக மாணவர்களின் நிலைமை பற்றி தமிழக அரசு கவலையே படவில்லை.


பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்கள் என்ன பாடப்புத்தகங்களை படிக்க உள்ளோம் என்பதே தெரியாத நிலையில் அதிமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால என பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறது.


அதனால்தான் 29ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவச் செல்வங்கள் வகுப்பினை புறக்கணித்து, எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் நினைத்தால், எதிலும் வெற்றிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அறப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அமைதி வழி, அறவழி, அதுவே அண்ணா வழி என்று கலைஞர் கூறியுள்ளார்.

சமச்சீர்க் கல்வி தரம் இல்லை என நிரூபிக்கத் தயாரா? - சவால்விடும் தங்கம் தென்னரசு


மச்சீர்க் கல்வி விவகாரத்தில், கல்வித் தரம் பற்றித்தான் அதிக​மான விமர்சனங்கள். இந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததில், முக்கியப் பங்கு வகித்த பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்தோம்.

''கருணாநிதியைத் துதிபாடியும் கனிமொழி தொடர்பாகவும் பாடங்கள் இருந்ததால்தான் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நிறுத்தியதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை வராமல் அப்போ​தைய தி.மு.க. அரசே தடுத்து இருக்கலாமே?''

''செம்மொழிபற்றி தலைவர் கலைஞர் எழுதி இருந்த பாடலில் அவரைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. பழந்தமிழ்ச் சான்றோர் பெயர்கள்தான் இருக்கின்றன. கலைஞர் எழுதி இருக்கிறாரே என்பதால், சிலருக்கு ஆற்றாமை, எரிச்சல். கோவை செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதித்த புலமையாளர் குழுதான், மாநாட்டின் மையநோக்குப் பாடலை, பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது என்று முடிவு செய்தனர். அதை, பாடத் திட்டக் குழு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். 6-வது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், நாட்டுப்புறக் கலைகள் பற்றிய பாடத்தில், 'சங்கமம் நிகழ்ச்சியில் எங்களைப் பார்த்து இருக்கிறீர்களா’ என்று ஒருவர் கேட்பதாக, ஒரே ஒரு வாசகம் மட்டுமே இடம்பெற்று உள்ளது. மற்றபடி, கலைஞரைப் புகழ்ந்தோ... கனிமொழியைப் புகழ்ந்தோ... எந்த வார்த்தைகளும் அதில் இல்லை.''

''அவசர அவசரமாக முடிவெடுத்து, தரம் இல்லாத சமச்சீர்க் கல்வித் திட்டத்​தை உருவாக்கி​விட்டீர்கள் என்று சொல்லப்​படுகிறதே?''

''நினைத்த நேரத்தில் இதைக் கொண்டுவந்து​விடவில்லை. மற்ற மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, தமிழகம் முழுவதும் கருத்துகளைக் கேட்ட பிறகே, சமச்சீர்க் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பாடத் திட்டத்தைப் பொறுத்த வரை, கிராமம், நகரம், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற வேறுபாடு இல்லாமல், எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இப்படி ஒரு திட்டத்தை அவ்வளவு எளிதில் கொண்டுவரவிடுவார்களா? உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் போட்டார்கள். சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, முதல் கட்டமாக 1 மற்றும் 6-வது வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினோம். இதில், அவசரம் என்பதற்கோ தரம் இல்லை என்ற பேச்சுக்கோ, இடமே இல்லை!''

''சமச்சீர் முறையில், உயர்நிலை வகுப்புப் பாடத்தை, மெட்ரிக் மாணவர்கள் தொடக்கப் பள்ளியிலேயே படித்துவிட்டார்கள் என்றும், மெட்ரிக்கின் முந்தைய தரத்தையும் கெடுத்து​விட்டார்கள் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளதே?''

''மாநிலக் கல்வித் திட்டத்தை அப்படியே தூக்கிவைத்து, இதுதான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என அறிவித்துவிடவில்லை. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை எந்த அடிப்படையில் தயாரிக்கிறார்களோ, அதே தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தேசியக் கலைத் திட்டத்தின்படிதான் சமச்சீர் பாடங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எனத் திறமை, தகுதி வாய்ந்தவர்கள்தான் இந்தப் பாடத் திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள். தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. 'ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்பப் பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ எனும் குழந்தை மன நல நிபுணர்களின் கருத்தையும் விட்டுவிடவில்லை. மாணவர்கள் படிப்படியாக, சீரான வளர்ச்சிப்போக்கில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் வகையில், புதிய முறையை உருவாக்கினோம். இதனால், அந்தந்த வயதுக்கு மீறிய பாடச் சுமை இல்லாமல் தடுக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், புதிய மதிப்பீட்டு முறை சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதாவது, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், கேள்விகளுக்குப் பதில் எழுதும் முறையை மாற்றி, படித்த பாடத்தில் உள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளைச் சொல்லக்கூடிய முறை சேர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாணவனின் ஆளுமைத் திறனையும் வளர்க்கக்கூடிய முறை இது. சமச்சீர்க் கல்வியைத் தரம் இல்லை என்று சொல்பவர்கள், இதை மறைத்து விடுகிறார்கள். சமச்சீர்க் கல்வியின் தரத்தைக் குறை கூறுபவர்கள், 2004-ம் ஆண்டு மெட்ரிக் பாடத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்தக் கடும் முயற்சி செய்கிறார்கள். சமச்சீர் பாடத் திட்டம் தரம் இல்லை என யாராவது நிரூபிக்கத் தயாரா? இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன்!''

- இரா. தமிழ்க்கனல்

நன்றி : ஜூனியர் விகடன்