கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 13, 2011

எந்தவொரு சர்வாதிகார ஆட்சியும் நீடித்ததாக வரலாறு இல்லை : தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

தி.மு.க. தலைவர் கலைஞர் 15.09.2011 அன்று  அண்ணா பிறந்தநாளையொட்டி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் எந்தவொரு சர்வாதிகார ஆட்சியும் நீடித்ததாக வரலாறு இல்லை என்று கூறினார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- அண்ணா பிறந்த நாளான இன்று கழகத் தோழர்களுக்கு  நீங்கள் தெரிவிக்கும் செய்தி? 

கலைஞர்  :- அண்ணா  அவர்கள் வாழ்நாள்  முழு வதும்  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு  என்பதிலே  உறுதியாக இருந்தார்.  ஜனநாயகம் தழைக்க வேண்டு மென்பதிலே  அக்கறை கொண்டவராக விளங்கினார்.   ஜனநாயகத்தின்  பெயரால்  சர்வாதிகாரம்  தலையெடுப் பதை அவர் என்றைக்கும் விரும்பிய வரல்ல.    அண்ணா வின் இந்த எண்ணத்தை எதிரொலிப்பவர்களாக  - அவரது  தம்பிமார்கள்  -  அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  செயல்பட வேண்டும்,  செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை  அண்ணாவின் நினைவு போற்றும் இந்நாளில் நான் உறுதிபடக் கூறுகிறேன்.

செய்தியாளர் :-   உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக் கிறீர்கள், அதற்கு என்ன காரணம்? எப்படி சொல் கிறீர்கள்?

கலைஞர்  :-  தனியாக நிற்க முடியும் என்ற தைரியத் தில் சொல்லியிருக்கிறோம்.   அதற்கான காரணங்களை யெல்லாம் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறேன்.

செய்தியாளர் :-  சட்டசபை தேர்தலின் போதே இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று சொல்கிறார்களே?

கலைஞர்  :-  சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கும்  உள்ள வேறுபாட்டினை அறிக் கையிலே சொல்லியிருக்கிறேன்.  இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

செய்தியாளர் :-   தேசிய  அளவில்  அந்த அறிக்கை முக்கியமாகப் பேசப்படுகிறதே?

கலைஞர்  :-  திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில்  நாடாளுமன்றத் தேர்தல்  -  சட்டப் பேரவைத் தேர்தல்  ஆகிய வற்றில்  கூட்டணியோ,  தொகுதி  உடன்பாடோ  மற்ற கட்சிகளோடு கொள் வதில் எந்தவிதமான  பின்வாங்கலும் இல்லை. 

உள் ளாட்சி மன்றத் தேர்தல் அரசியல் ரீதியான அடிப்படையில்  மக்களை அணுகக் கூடியவை அல்ல என்ற காரணத் தாலும்  -  பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை  முன்வைத்து பணிகள்  ஆற்ற வேண்டிய நிலைமைகளாலும்  -  இதில் அரசியலைக் கலக்கத் தேவையில்லை என்ற கருத்தின் அடிப்படையிலேதான்  திராவிட முன்னேற்றக் கழகம் இந்த முடிவினை அறிவித்திருக்கின்றது.

செய்தியாளர் :-  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டி என்று நீங்கள் அறிவித்திருப்பதால்,  காங்கிரஸ் கட்சியோடு தற்போதுள்ள உறவு பாதிக்குமா?

கலைஞர்  :-  காங்கிரசோடு  உறவு  நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போன்ற நேரங்களில்தான் தேவைப்படும்.  அப்போதெல்லாம்  எங்களுடைய உறவு முறியாது.  நீடிக்கும்.     மத்திய அரசோடு  நாங்கள் உற வோடு  இருக்கிறோம்.   

செய்தியாளர்:- அரசியலிலும்  நிர்வாகத்திலும்  ஒரு நல்ல நாகரிகம் இருக்க வேண்டு மென்று சொல்லிக் கொடுத்தவர்  பேரறிஞர் அண்ணா.   அவருடைய பிறந்த நாள் விழா வில் ஒரு கேள்வி.   மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொள்ளவிருந்த  கூட்டங்களுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வராமல் மத்திய அமைச்சரை அவமதித்தது குறித்து  ஒரு மூத்த தலைவர் என்ற முறையில் என்ன கூறுகிறீர்கள்?    

கலைஞர்  :-  ஒரு மூத்த தலைவர் என்ற முறையில்  -  அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்களுக்கு நேர்ந்த அவமானத்தை  யாராலும்  பொறுத்துக்கொள்ள முடியாது.  மக்களுக்கு  ஆற்ற வேண்டிய  பணியைத் தொடருவதற்காகத்தான்  - அவைகளைப் பற்றி  திட்டமிடுவதற்காகத்தான்  கலெக்டர்களோடு அவருடைய நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.   அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டிய கலெக்டர்களே  அந்த நிகழ்ச்சிகளை  புறக்கணிக்கின்ற அளவிற்கு  நடந்து கொண்டார்கள் என்பது  இங்கேயுள்ள மேலிடத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து நான் மிகவும் வருந்துகிறேன்.

செய்தியாளர் :-   மத்தியிலும், மாநிலத்தி லும் தணிக் கைத் துறை அதிகாரிகளின் அறிக்கைகள்  அவ்வப் போது வெளியிடப் படும்போது  அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர்கள் தெரிவிக்கிறார்களே?

கலைஞர்  :-     ஒவ்வொன்றைப் பற்றியும்  தனித் தனியாக தேவைப்பட்டால் விமர்சிக்க முடியுமே தவிர,  பொதுவான கருத்து எதையும் சொல்ல இயலாது.  தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கைகள் குறித்து  ஆரம்பத்தி லிருந்தே  சந்தேகமான  புள்ளிவிவரங் களைக் காட்டுகிறார்கள். தொடங்கியபோதே  எத்த னையோ கோடிகள்  என்று கோடிக் கணக்கில்  நட்டம் என்று வெளியிட்டார்கள்.  பிறகு அது யூகிக்கப்பட்ட தொகை என்றார்கள்.   இப்படி நட்டம்  என்பதையே  கேள்விக்குறியாகச் சொல்லியிருக்கிறார்கள்.  

செய்தியாளர்:- அலைக்கற்றை ஒதுக் கீட்டு பிரச்சினையில் டிராய்  தாக்கல் செய்த அறிக்கையிலும்,  சி.பி.அய். தாக்கல் செய்த அறிக்கையிலும்  குற்றச் சாட்டிற்கு  ஆதாரம் இல்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது.   அதற்குப் பிறகும்  கைது செய்யப்பட்ட வர்கள் எல்லாம் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார்களே?

கலைஞர்  :-  மாண்புமிகு  நிருபர்களுடைய  மனோ நிலையை  நானும் பகிர்ந்து கொள்கிறேன்.   



செய்தியாளர்:- அலைக்கற்றை ஒதுக் கீட்டில் குற்றச்சாட்டு  என்ற நிலையில் கனிமொழியை மாதக்கணக்கிலே சிறையில் வைத்திருக்கிறார்களே?

கலைஞர்  :-  கனிமொழிக்கும் அலைக் கற்றை ஒதுக் கீட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.   கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரர் மட்டுமே.   பொதுவாக  பங்குதாரர்களை  எந்தவொரு நிறுவனத்தின்  இதுபோன்ற  நடவடிக் கைகளில்  இணைத்து வழக்கு போடுவது வழக்கம் இல்லை.   இதை நம்முடைய வழக்கறிஞர்கள் சி.பி.அய். நீதி மன்றத்தில்  மிகத் தெளிவாக விளக்கியிருக் கிறார்கள்.  இருந்தாலும் வழக்கு தொடருகிறது.

செய்தியாளர் :-   தமிழகத்தில்  பலரைக் கைது செய்துவிட்டு காரணங்களைத் தேடி அலைகிறார்கள்.   எதற்காக கைது செய்கி றோம் என்பதையே காவல் துறையினர் சொல்வதில்லை.   சேலத்தில் சிறையிலே வைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கோவைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.   காவல் துறையினராலும் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை.  இதற்கெல்லாம் என்ன பதில் கூறுகிறீர்கள்?

கலைஞர்  :-   எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களை  அடக்குமுறை மூலமும், அவதூறு  செய்திகளை வெளியிட்டு களங்கப்படுத்துவதின்  மூலமும்  -  தனது சர்வாதி காரத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியு மென்று  ஜெயலலிதா  கருதுகிறார்.   இதுபோன்ற நடவடிக் கைகளால்  எந்தவொரு சர்வாதிகார ஆட்சியும் நீடித்த தாக  வரலாறே கிடையாது.

செய்தியாளர் :- டிராய்  நிறுவனம் கொடுத்த அறிக்கையில் அலைக் கற்றை ஒதுக்கீட்டில்  நட்டமே கிடையாது, லாபம் என்று சொல்கிறார்களே?

கலைஞர்  :- அதைத்தான் நானும் கேட்கிறேன்.

செய்தியாளர் :-   தனித்துப் போட்டி என்று நீங்கள் அறிவித்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமை யிலிருந்து யாராவது உங்களுடன் தொடர்பு கொண் டார்களா?

கலைஞர்  :-   பேசவில்லை.   அறிக்கையி லேயே தெளிவாகச் சொல்லி யிருக்கிறோம். 

காங்கிரசுடன் உறவு இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை.   உள்ளாட்சி மன்றத் தேர்தல் களில்  கூட்டணி இல்லை, நாங்கள் தனித்து நிற்கிறோம் என்பதுதான் நான் விடுத்துள்ள அறிக்கை. 

செய்தியாளர் :-   கூட்டணியில் சேர வேறு கட்சிகள் அவர்களாக வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

கலைஞர்  :-     உள்ளூர் விவகாரங்களைப் பொறுத்த வரையில்  யாராவது யோசனை  சொன்னால்  அதை ஏற்றுக் கொள் வோம்.  அதன்படி நடக்க நாங்கள் அவர்களோடு இணைந்து பாடுபடுவோம்.

செய்தியாளர் :-   நீங்கள் தற்போது எடுத்துள்ள முடிவின் காரணமாக  மக்கள் பெருவாரியான ஆதரவை உங்களுக்குத் தந்து வெற்றி பெறச் செய்தால், இந்த முடிவினை அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடருவீர்களா?

கலைஞர்  :-  நடந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது,  நடக்கும் போது  கேளுங்கள்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment