பரமக்குடியில் 11.09.2011 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் தி.மு.க. சார்பில் சட்டமன்ற குழு உறுப்பினர்களின் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 15.09.2011 அன்று பரமக்குடிக்கு சென்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருந்தார்.
அதன்படி வீரம்பல், கீழக் கொடுமலூர், மஞ்சூர், சடையனேரி, இளையான்குடி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார். முதுகுளத்தூரில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து சி.பி.அய். விசாரணை நடத்த வலியுறுத்துமாறு தி.மு.க. தலைவரிடம் கூறுவேன். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே நடந்த கோவை கலவரத்தில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்த சம்பவத்திலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment