கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 13, 2011

பெயர்கள்தான் மாறிஇருக்கிறது; சலுகைகளில் பெரிய வேறுபாடு இல்லை: கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் 14.09.2011 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கேள்வி: 10 9 2011 அன்று பேரவையில் 110 வது விதியின் கீழ் முதல் அமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் தமிழக விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறாரே?.

பதில்: இந்த திட்டம் புதிய திட்டம் அல்ல. புதிய திட்டம் என்று முதல் அமைச்சரும் அறிவிக்கவில்லை. அவருடைய அறிவிப்பிலேயே   அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்திலே 15 8 2005 அன்று முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும்; 2006 ம் ஆண்டு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு இந்த திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள்   விவசாயிகள் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது என்றும்; மெஜாரிட்டி அ.தி.மு.க. அரசின் சார்பில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

இதிலே ஜெயலலிதா மறைத்திருக்கின்ற உண்மை தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன் காக்க 2000 ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசால் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு விட்டது. அடுத்து வந்த ஜெயலலிதா அரசு, விவசாய தொழிலாளர் நல வாரியத்தை கலைத்து விட்டுத்தான் உழவர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்தது. எனவே 2006 ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. அரசு அமைந்தவுடன் 2 9 2006 அன்று சட்டப்பேரவையில் "தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல சட்டம்'' நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத்தைத்தான் ஜெயலலிதா அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் உழவர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்திருக்கிறார்கள். பெயர்கள்தான் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறதே தவிர, சலுகைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

கேள்வி: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியாக மானிய கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலபாரதி பேரவையில் நன்றி தெரிவித்துப்பேசியதாக செய்தி வந்துள்ளதே?.

பதில்: 1969 ல் நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன்தான் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலனுக்கு "தனி இயக்குநர் அலுவலகம்'' அமைக்கப்பட்டது. பின் ஆதிதிராவிடர் நலனிலும், பழங்குடியினர் நலனினும் தனித்தனியே சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக 2000 ஆண்டில், ஆதிதிராவிடர்   பழங்குடியினர் நல இயக்ககத்தை "ஆதிதிராவிடர் நல இயக்ககம்'', "பழங்குடியினர் நல இயக்ககம்'' என இரண்டு தனித்தனி இயக்குநர்களின் கீழ் செயல்பட வழிவகுக்கப்பட்டதும் என்னுடைய ஆட்சிக்காலத்திலே தான்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிபற்றியெல்லாம் அவையிலே அந்தத் துறையின் அமைச்சர் சில புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். 1991 1996 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 696 கோடியே 16 லட்சம் ரூபாய் மட்டுமே!. ஆனால், 1996 2001 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 170 கோடி ரூபாய்; 2001 2006 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசைவிட வெறும் 49 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கீடு செய்து; ஐந்து ஆண்டுகளிலும் மொத்தம் அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 2 ஆயிரத்து 219 கோடி ரூபாய் மட்டுமே!.

ஆனால், 2006 2011 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய்; இது, முந்தைய அ.தி.மு.க. அரசு ஐந்து ஆண்டுகளில் அனுமதித்த தொகையைவிட 8 ஆயிரத்து 847 கோடி ரூபாய் அதிகமாகும்.

அதிலும், தமிழகத்தில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர்   மலைவாழ் இன மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப 2010 2011 வரவு செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 19.7 சதவீதம் தொகையை ஆதிதிராவிடர், மலைவாழ் இன மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வரலாறு படைத்துள்ளதும் தி.மு.க. அரசே!. இந்த விவரங்கள் எல்லாம் பாலபாரதி படிக்க வேண்டிய பால பாடமாகி விட்டதே என்பதுதான் நமது கவலை!.

கேள்வி: முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சவுந்தரராசன் பேரவையில் கேட்டிருக்கிறாரே?.
பதில்: நான் முதலமைச்சராக இருந்த போதும் இப்படித்தான் அந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம் நேரில் என்னை சந்தித்து சிறுதாவூரில் ஜெயலலிதாவும், அவருக்கு வேண்டியவர்களும் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துள்ளார்கள், அதுபற்றி விசாரணை கமிஷனை உடனடியாக அமைக்க வேண்டுமென்று கேட்டார்கள்.

நானும் உடனடியாக விசாரணை கமிஷனை அறிவித்தேன். அந்த விசாரணை கமிஷனும் விசாரணை நடத்தி, தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டது உண்மை தான் என்று அறிக்கை கொடுத்தது.
ஆனால் மார்க்சிஸ்ட்கள் யார் மீது குற்றஞ் சாட்டினார்களோ, அவர்களையே உத்தமர்கள் என்று கூறி அவர்களோடு தோழமை கொள்ளச் சென்றதோடு, இப்போது எங்கள் மீது விசாரணை கமிஷன் எப்போது என்கிறார்கள்! இது காலத்தின் கோலமா? கம்யூனிஸ்டுகள்தான் கூற வேண்டும்.




இவ்வாறு அறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment