கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 13, 2011

அண்ணா சிலைக்கு கலைஞர் மரியாதைஅண்ணா பிறந்த நாளையொட்டி, 15.09.2011 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கலைஞர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.மக்களின் தேவையை கருத்தில்கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி -  கலைஞர் :

மக்களின் தேவையை கருத்தல் கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்றும் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறார் ஜெயலலிதா : கலைஞர் கண்டனம்

எதிர்க்கட்சியினரை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறார் ஜெயலலிதா. திமுகவினர் மீது அவதூறு பரப்பி களங்கம் ஏற்படுத்துகிறார். திமுகவினரை ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகாரத்தை நிலைப்படுத்த ஜெயலலிதா முயற்சி செய்கிறார். எந்த சர்வாதிகார ஆட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment