திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது ஆறுமுகநேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு இவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. 32 நாட்களாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று திருச்செந்தூர் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த 13.09.2011 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 3 வழக்குகளில் இருந்தும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அடுத்து அவர் திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் உத்தரவில் அனிதாராதாகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு செக்ஷன் மட்டும் இடம் பெறவில்லை என்று சிறை அதிகாரிகள் அவரை வெளியே விட மறுத்துவிட்டனர்.
இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறையில் இருந்து வெளியே செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய வக்கீல் கிருபா மீண்டும் திருச்செந்தூர் கோர்ட்டு சென்று, விடுபட்ட செக்ஷனை மீண்டும் ஜாமீன் உத்தரவில் இணைத்து 17.09.2011 அன்று காலை 8.30 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்தார்.
அப்போது சிறை அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை தனிநபர் கையில் எடுத்து வர கூடாது. தபாலில் தான் சிறைக்கு வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து அந்த உத்தரவு விரைவு தபாலில் உடனடியாக திருச்சி சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்பிறகு 17.09.2011 அன்று பகல் 1.45 மணிக்கு திருச்சி சிறையில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியே வந்தார். திருச்சி சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் இந்த சிறையில் 32 நாட்களில் விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 37 நாட்கள் இங்கு இருந்து உள்ளேன். 5 நாட்கள் கூடுதலாக என்னை உள்ளே வைத்து, ஜாமீனில் வர சிரமம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழக்கு பதிவு செய்து, பின்னர் அதற்கான ஜாமீன் உத்தரவில் ஒரு நம்பர் விட்டு போனதாக கூறி, இருக்கிறார்கள். இதற்காக ஜெயில் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment