கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, January 26, 2011

இலவசம் அன்றும் நேற்றும் இன்றும் - சோலை


பொங்கல் பண்டிகையின் பொழுது வழங்கப்படும் இலவச வேட்டி,சேலை பற்றி இன்று சிலர் ஏளனம் செய்கிறார்கள் .இது இன்று நேற்றா வழங்கபடுகிறது .இல்லை பல காலமாகவே இது நடை பெற்று வருகிறது .இடைப்பட்ட காலத்தில் சிலரால் நிறுத்தபட்டது. இந்த திட்டத்தை முதல் அறிமுகம் செய்தவர் முதல்வர் கருணாநிதி அவர்கள் .பின்னர் வந்த எம் ஜி ஆர் இதை தொடர்ந்து செய்துவந்தார் .அவருடைய காலத்தில் இந்த திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது .தன் மகனே பொங்கலுக்கு துணி அனுப்புவதை போல் எண்ணி மகிழ்ந்தனர்.அதுவே வாக்குகளாக மாறின .இரட்டை இல்லை சின்னம் இருந்தால் தான் ஓட்டு.கூட்டணி கட்சி சினத்திற்கு கூட கிடையாது .அந்த அளவுக்கு மக்களை கவர்ந்தது இந்த திட்டம் .அவர் மறைந்தார் .பின் கலைஞர் முதல்வர் ஆனார் .இந்த திட்டத்தை மேலும் வலுபடுத்தினார்.ஆனால் அப்பொழுது மக்களுக்கு அதன் அருமை புரியவில்லை .பின்னர் அம்மையார் ஆட்சிக்கு வந்தார் பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டம் நிறுத்த பட்டது .அப்பொழுதுதான் மக்களுக்கு புரிந்தது .ஏன் தவறு செய்தோம் என்று .

சரி கலைஞர் ஏன் இந்த திட்டத்தை சிரத்தை எடுத்து செய்கிறார் .வெறும் ஓட்டு பெறவேண்டும் என்பதற்கா ? .இந்த திட்டத்தின் மூலம் இரட்டை பயன் ஓன்று கைத்தறி நெசவாளர்களுக்கு இதன் மூலம் நல்ல வேலை கிடைத்து அதன் மூலம் வருமானம் பெருகும் .அனைத்தும் தமிழ்நாட்டில் தான் கொல்ல்முதல் செய்யப்படும் என்பது குறிபிடத்தக்கது.இரண்டு புத்தாடை வாங்க முடியாத ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் .

சரி யார் ஏழை எப்பிடி கணக்கு பார்ப்பது .ஏழைகள் அனைவருக்கும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது .சரி அனைவர்க்கும் வேட்டி சேலை .எந்த வித வருமான உச்சவரம்பும் கிடையாது சரி இலவசத்தின் தரம் எப்பிடி உள்ளது என பார்த்தால் தமிழ்நாட்டின் கைத்தறி ஆடைக்கு உலகம் முழுவதும் நல்ல பெயர் உண்டு அதே போல் தான் இதுவும் தரமானது தான் .வாங்கி பார்த்த ஏழைக்கு தெரியும் அது அது அரசு குடுத்த மாணிக்கம் என்று.

இலவசங்கள் மக்களை சோம்பேறி ஆக்கும் என எதிர் கட்சி தலைவர் கூறி உள்ளார்.அவர் ஆட்சியிலும் தேர்தல் ஆண்டில் ஒரு முறை வழங்க பட்டது .ஆனால் அவை தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவில்லை .மத்யபிரதேஷ் மாநிலத்தின் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது .அதன் தரம் என்ன தெரியுமா .காசியில் பிணத்தில் போடும் அந்த ரகம்

தான்.ஆனால் இன்று நல்ல தரமான சேலை .வெட்டி அதோடு மட்டுமா பொங்கல் அன்று சக்கரை பொங்கல் இட்டு கொண்டாட இலவச பொங்கல் பை .

அன்று எம்.ஜி ஆர் ஏழைகளின் ஏந்தல்.இன்று கலைஞர் அவர்களின் மவராசன் .இது தொடரபோகும் ஆட்சி .ஏழைகளின் ஆட்சி .குப்பாடு போடுபவர்கள் அடங்கிவிடுவர்.


நன்றி : நக்கீரன்.

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை மக்கள் நலனுக்கான திட்டங்கள் இழப்பாகுமா? - அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் முதலமைச்சர் கலைஞர் கடிதம்


மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான செலவை இழப்பு என்று கூற முடியுமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் கலைஞர்.

2 ஜி அலைக்கற்றை தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் முரசொலியில் 25.01.2011 அன்று எழுதியுள்ள கடிதத்தில் எழுதியுள்ளதாவது:

உடன்பிறப்பே,

ஸ்பெக்ட்ரம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க தலைவர் தலைமையிலே உள்ள பொதுக் கணக்குக் குழுவும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சிவராஜ் பட்டீல் தலைமையிலான குழுவும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றது.

மத்திய அரசின் சி.பி.அய். பிரிவும், அமலாக்கப் பிரிவும் உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பில் தனித்தனியாக இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றன. அதற் கிடையில் பலரும் அதைப்பற்றி கருத்துத் தெரி விக்கின்றார்கள். இந்த நிலையில் இதைப் பற்றி பெரிய அளவில் நான் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்காத நிலையில், சிலபேர் அதைப் பெரிது படுத்திக் கூறுகிறார்கள், எழுதுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வரும் நிலையில் - வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள சூழ்நிலையில் நாமாக வலிந்து எதையும் தெரி விப்பது நல்லதல்ல என்ற எண்ணத்தோடுதான் நான் இதிலே எதையும் சொல்லாமல் இருந்தேன்.

ஆனால் எதிர்க்கட்சிக்காரர்கள் இந்தப் பிரச் சினையை பூதாகரமாக்கி அரசியல் நடத்த விரும்பி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திப் பிரச்சாரமாகச் செய்ய நினைப்பதால், அதற்குப் பதில் சொல்ல நினைக்கிற கழக உடன்பிறப்புகள், இதிலே தெளிவாக இருக்கவேண்டுமென்பதற்காக சில வற்றை விளக்கிட விரும்புகிறேன்.

வெறும் அனுமானம்


தணிக்கைக் குழு அறிக்கையில் - 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சொல்லும்போதே -அனுமானத்தின் அடிப்படையில்தான் அந்த அளவிற்கு இழப்பு என்றுதான் presumptive என்ற வார்த்தையையே சொல்லியிருக்கின்றது.

ஆனால் உடனே எதிர்க் கட்சிக்காரர்கள் அந்தத் தொகை யையே லஞ்சம் என்றும், ஊழல் என்றும் பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள். இப்படி நடந்திருந்தால், அரசாங்கத்திற்கு இவ்வளவு வருவாய் வந்திருக்கக் கூடும் என்று - சில மேற்கோள்களைக் காட்டி, ஊழல் என்கிறார்கள். ஓர் உதாரணம் கூறுகிறேன்.

24-1-2011 அன்று சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர், அறநிலையத் துறை அமைச்சர் தம்பி பெரியகருப்பன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

திருமணம் நடந்த இடம், பெருந் தலைவர் காமராஜர் பெயரால் உள்ள காமராஜர் அரங்கம். அந்த விழாவில் நம்முடைய முன்னாள் அமைச்சர் தம்பி செ.மாதவன் மணமக்களை வாழ்த்தும்போது,

பெரியகருப்பனுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இதோ, இந்த மண்டபத்தில் லட்சோப லட்சம் மக்கள் கூடியிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது நான் என்னருகே அமர்ந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

இப்படித்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையிலும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்றெல்லாம் சொல் கிறார்கள். உலகமறிந்த, படித்துத் தெளிந்த முன்னாள் அமைச்சர் நண்பர் மாதவனே இந்த அரங்கத்திலே மக்களை அடைத்து வைத்தாலும் பத்தாயிரம் பேருக்கு மேல் நிற்க முடியாது என்பது தெரிந்திருந்தும் கூட - பேசும்போது லட்சோப லட்சம் பேர் என்று இங்கே கூறுகிறார். இப்படித் தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையிலும் லட்சம், ஆயிரம், கோடி ஊழல் என்று உத்தேசமாக எண்ணிக்கையைப் பெருக்கிக் கூறுகிறார்கள் போலும் என்று சொன்னேன்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்கள் திட்ட வட்டமாக 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்த அளவிற்கு இழப்பே இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் கூறும்போது, 1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது,

பா.ஜ.க. ஆட்சியில் அவர்கள் கொண்டு வந்த தொலைத் தொடர்புக் கொள்கையால், ஏலம் விடாமல், உரிமம் வழங்கியதால் அரசுக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது என்றார். இதே கருத்தைத்தான் திட்டக் குழுவின் துணைத் தலைவராக உள்ள திரு.மாண்டேக்சிங் அலுவாலியா அவர்களும் தெரிவித்திருக்கிறார்.


ஏலத்தில் விட்டிருந்தால், இந்த அளவிற்கு வருவாய் வந்திருக்கும் என்று அனுமானித்து குற்றச்சாற்று சொல்லப்படுகிறது. ஏலத்தில் ஏன் விடப்படவில்லை என்பதற்கான விளக்கமும் பலராலும் தரப்பட்டுவிட்டது. தொலைத் தொடர்புத் துறையிலே மக்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டாம் என்று கருதியிருந்தால் - யாராவது ஏலம் எடுத்து மக்களிடமிருந்து அதிகத் தொகையை வசூலிக்கட்டும் என்று நினைத்திருந்தால் - அலைக் கற்றை ஒதுக்கீட்டின் வாயிலாக இந்த இழப்பு வந்திருக்காது. மாறாக லாபம் கூட வந்திருக்கும்!

மக்கள் நல அரசின் செயல்பாடுகள்


மக்கள் நல அரசு என்கிறபோது அந்த அரசு வணிக நோக்கத்தோடு, லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெறாது. சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு அரசு நடைபெற வேண்டுமே தவிர; நிதி இழப்பு - மிச்சம் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நடைபெறுவது நல்லதல்ல. உதாரணமாக ஆறாவது ஊதியக் குழுவினை மத்திய அரசு அறிவித்தபோது அதை முதன்முதலாக தமிழ்நாட்டில் நடை முறைப்படுத்தினோம். அதற்கான செலவு மட்டும் 5500 கோடி ரூபாய்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் போன்ற திட்டத்திற்காக உணவு மானியமாக 4000 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக 2250 கோடி ரூபாய் செலவிடுகிறது. மின் வாரியத்திற்காக 1674 கோடி ரூபாய் மானியமாக செலவிடுகிறது. முதியோர் உதவித் தொகைக்காக 1419 கோடி ரூபாய் செலவிடுகிறது.

சத்துணவுத் திட்டத்திற்காக 1185 கோடி ரூபாயும் - கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக 765 கோடி ரூபாயும் - கர்ப்பிணிகளுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிப்பதற்காக 360 கோடி ரூபாயும் - திருமண உதவித் திட்டத்திற்காக 302 கோடி ரூபாயும் - பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக 240 கோடி ரூபாயும் - பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க பயிற்சித் திட்டத்திற்காக 276 கோடி ரூபாயும் அரசின் சார்பில் மக்களுக்கு வழங்கிட வேண்டுமென்ற எண்ணத்தோடு செலவிடப்படுகிறது.

இவற்றையெல்லாம் சேர்த்தால் ஓர் ஆண்டிற்கு 17,921 கோடி ரூபாய் அரசின் சார்பில் செலவழிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களையெல்லாம் அரசு நடை முறைப்படுத்தாமல் - மக்கள் எப்படி வாழ்ந்தால் என்ன என்று இருந்தால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவே ஏற்பட்டிருக்காது. இந்த 17 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என்று யாராவது கூற முடியுமா?

மத்திய அரசை எடுத்துக் கொண்டால் 2010-2011ஆம் ஆண்டில் உணவு மானியமாக 55 ஆயிரத்து 578 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. உர மானியத்திற்காக மத்திய அரசு தரக்கூடிய தொகை 49 ஆயிரத்து 980 கோடி ரூபாய். கல்வி வளர்ச்சிக்காக 29 ஆயிரத்து 483 கோடி ரூபாய். இவைகள் எல்லாம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு களா?

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரான தலைமை தணிக்கை அதிகாரி ஆதாரம் ஏதுமின்றி அனு மானத்தின் அடிப்படையிலேயேதான் இந்த இழப்பைச் சொல்லியிருப்பதாக உறுதிப் படுத்தினார்.

வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்றுதான் கணக்குப் போட்டுப் பார்த்ததாகவும்-அதிலே ஒரு கோணத்தில்-வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்தது என்றும் தணிக்கை அதிகாரி கூறியிருக்கிறார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி அவர்கள், வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் சொல்கிறார்.

(Arun Shourie, Former Union Minister for Communications advised the media not to run after the “hypothetical figure of loss (Rs. 1.76 lakh crore) to the exchequer” mentioned by the CAG. Te realistic figure, he said, could be around Rs.30,000 crores- The Hindu dated 19.12.2010)

இந்த இழப்பினை எப்படி வெவ்வேறு வித மாக ஒவ்வொருவரும் கணக்கிடுகிறார்கள்? 2 ஜி அலைக்கற்றை வரிசையை - தற்போது 3 ஜி அலைக் கற்றை வரிசையை ஏலம் விட்டது போல, ஏலம் விட்டிருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்று கணக்கிட்டு - அந்த அடிப்படையில் கூறுவதுதான் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது ஒரு வாதம்! இந்த உரிமத்தை 1650 கோடி ரூபாய் வீதம் கொடுத்ததற்கு மாறாக, எனக்குக் கொடுத் திருந்தால் நான் 6 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத் திருப்பேன் என்று ஒருவர் சொல்கிறார்.

அதைக் கணக்கிலே கொண்டு பார்த்தால், அப்போது 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். இப்படி வெவ்வேறு முறைப்படி கணக்கிட்டுப் பார்த்துத்தான் இழப்புத் தொகை வெவ்வேறாகச் சொல்லப்படுகிறது!

அதனால்தான் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யின் இறுதியில் - இழப்பு எவ்வளவு என்பது It can be debated என்று அதாவது இது விவாதத்திற்குரியது என்று கூறப்பட்டுள்ளது.

3 ஜி அலைக்கற்றை வரிசையைப் போல - 2 ஜி அலைக்கற்றை வரிசையிலும் ஒரே அளவிற்கு வருவாய் கிடைத்திருக்கும் என்று அனுமானம் செய்கிறார்களே, இரண்டு அலைக்கற்றை வரிசைகளும் ஒரே மாதிரியானதா என்றால் இல்லை. 2 ஜி அலைக்கற்றை வரிசையில் செல் தொலை பேசியில் பேசும்போது ஒலி மட்டும்தான் கேட்கிறோம்.

ஆனால் 3 ஜி அலைக்கற்றை வரிசை செல்போனை உபயோகிக்கும் போது நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ அவர்களின் முகங்களே நேரில் தெரியும். அதிலே வீடியோ பார்ப்பது போல பார்க்கலாம். 2 ஜி அலைக்கற்றை 4.2 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது; ஆனால் 3 ஜி.யோ 6.4 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டதாகும். 2 ஜி அலைக் கற்றை வரிசையைவிட உயர்வானது 3 ஜி அலைக்கற்றை என்பதையும் மறந்துவிடக் கூடாது, மறைத்துவிடக் கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர் குழுவால் பலன் உண்டா?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றுதான் முடிவு என்று பா.ஜ.க.வும், ஜெயலலிதாவும் கூறுகிறார்கள். 1992ஆம் ஆண்டு ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்கியது பற்றிய ஊழல் - 1992ஆம் ஆண்டு சவப்பெட்டி வாங்கியது - 2001ஆம் ஆண்டு நடந்த பங்கு மார்க்கெட் ஊழல்- 2003ஆம் ஆண்டு கோகோ கோலாவில் பூச்சி மருந்து தொடர்பான குற்றச்சாற்று போன்றவைகளுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழு தான் விசாரணை நடத்தியது. எந்தப் பலனும் அப்போது ஏற்படவில்லை.

தற்போது பொதுக் கணக்குக் குழு ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றது. பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். கூட்டுக் குழுவின் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப் பினர்கள்தான். பொதுக் கணக்குக் குழுவிற்குத் தலைவர் எதிர்க் கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். கூட்டுக் குழு அமைக்கப்பட்டால் அதற்குத் தலைவ ராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான் இருப்பார்.

ஆனால் பா.ஜ.க.வும், ஜெயலலிதாவும் கூட்டுக் குழுதான் விசாரிக்க வேண்டும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் தலைவராக உள்ள பொதுக் கணக்குக் குழு விசாரணை தேவையில்லை என்கிறார்கள். மேலும் இதுவரை தணிக்கைக் குழு அறிக்கையின் மீதான விசாரணையை பொதுக் கணக்குக் குழுதான் விசாரிக்கும். அந்த நடைமுறையை மீறி தற்போது வேண்டுமென்றே தனியாகக் கூட்டுக் குழு வேண்டுமென்று கோருகிறார்கள்.

ஒரு காலத்தில் இந்தச் செல்போன் அறிமுகப் படுத்தப்பட்டபோது இந்தக் கருவியின் விலை 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது. இப்போது முனியன், முத்தன் என்று சாதாரணமானவர்கள் கூட செல்போன் வைத்திருக்கிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கே செல் போன்கள் கிடைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் தம்பி ராஜா பதவியேற்ற போது செல்போன்களைப் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 30 கோடி பேர். தற்போது பயன்படுத்துவோர் எண்ணிக்கை 73 கோடி பேர். தொடக்கத்தில் செல்போன்களை ஒருவர் பயன்படுத்தினால் அதாவது முன்பு ஒரு முறை பேசினால் - அழைப்பவர் 16 ரூபாய் கட்ட வேண்டும் - அழைக்கப்பட்டவர் 8 ரூபாய் செலுத்த வேண்டும். இப்போது ஒரு நிமிடம் பேசினால் 40 காசு, 30 காசு என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது மேலும் குறையக் கூடும் என்று சொல் கிறார்கள்.பொதுமக்கள்தானே பயன் அடை கிறார்கள். உதாரணமாக செல்போன் உபயோ கிக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் செல்போன் நிறுவனங்கள் பெறும் வருவாய் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 340 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 120 ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக செல்போனை உபயோகிக்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 220 ரூபாய் அளவிற்கு சேமிப்பு கிடைக்கின்றது. அதாவது பொது மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மட்டும் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 720 கோடி ரூபாய் சேமிப்பாகும். இதுவும் ஒரு அனுமானம்தான்!

தொலைத் தொடர்புத் துறை சார்பாக எடுக் கப்பட்ட முடிவு 2011ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் மக்களுக்கு இந்தத் தொலைத் தொடர்பு பயன் சென்றாக வேண்டும் என்பதாகும். ஆனால் இதற்குள் தொலைத் தொடர்பு பயன் கிடைத் திருக்கும் மக்களின் எண்ணிக்கை 720 மில்லியன் என்பதாகும்.

ஏலம் ஏன் விடவில்லை என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ஏன் ஏலம் விடப்படவில்லை என்றால் ஏலம்விடத் தேவையில்லை என்று தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அதிகாரத்தில் உள்ள டிராய் என்ற அமைப்பு சொல்லியிருக்கிறது.

பா.ஜ.க ஆட்சியில்...

1994ஆம் ஆண்டு, இந்திய அரசு ஒரு புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வகுத்தது. அதன்படி ஏல முறையில்தான் இந்த உரிமம் வழங்கப்பட்டது. அதிகத் தொகைக்கு சிலர் ஏலம் எடுத்தார்கள். ஆனால் அவர்களால் அதனை நடத்த முடியவில்லை. மக்களுக்கு தொலைத் தொடர்பு வசதியும் சரியாகக் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. ஆட்சியில், 1998ஆம் ஆண்டு அமைச் சர்கள் குழு ஒன்றை அமைத்து புதிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றை வகுத்தார்கள்.

அந்தக் கொள்கையில், இனி இது மாதிரி ஏலம் விட வேண்டாம், மக்களுக்கு தொலைத் தொடர்புச் சேவை கிடைக்க வேண்டும், எனவே முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமம் வழங்கலாம் என்ற முடிவினை எடுத்தார்கள். எனவே இந்த முடிவினை தம்பி ராஜாவே தன்னிச்சையாக எடுத்துச் செயல் படுத்தினார் என்பது தவறான வாதமாகும். 2001-க்குப் பின்பு, ராஜா பதவியேற்ற மே 2007 வரை ஏல முறை எந்த அமைச்சராலும் பின்பற்றப் படவில்லை.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் ராஜா உரிமங்களைக் கொடுத்து விட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை பா.ஜ.க. ஆட்சியில் வகுக்கப்பட்ட தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதாகும். அப்போது அமைச்சராக இருந்தவர் பிரமோத் மகாஜன் அவர்கள். அவரைத் தொடர்ந்து அருண்ஷோரி அவர்கள். அவர்கள் எல்லாம் எந்த முறையைப் பின்பற்றி இந்த உரிமங்களை வழங்கினார்களோ, அதே நடைமுறைதான் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டது.

பொதுமக்களை ஏமாற்றும் வேலை

உடன்பிறப்பே, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு ஸ்பெக்ட்ரம், ஒரு லட்சத்து 76 ஆயிரம்கோடி ரூபாய் ஊழல் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்ற நினைக் கின்றார்கள். இதிலே இந்தத் துறையின் அமைச்ச ராக இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தம்பி ராஜா மீது பழியைப் போடுகிறார்கள்.

இந்தப் பிரச்சினை எழுந்தபோதே செய்தியாளர்கள் 8-12-2010 அன்றே அதைப் பற்றி என்னிடம் கேட்ட போது, ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால், அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறேன். இந்த அளவிற்கு தி.மு.கழகம் உறுதியாக இருக்கும்போது, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் தி.மு. கழகத்தின் மீது சாற்று வதற்கு இல்லாத காரணத்தால் இதை ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். மக்களை எப்படியாவது குழப்பத்தில் ஆழ்த்த முடியாதா என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது.

அன்புள்ள,
மு.க.

நியாயவிலைக் கடைகளில் துவரம், உளுந்தம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ.பத்து குறைப்பு - முதலமைச்சர் கலைஞர் உத்தரவு



நியாயவிலைக் கடை களில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக் கள் மிகவும் அவதிப் பட்டு வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உண வுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத் தும் வகையில் முதல மைச்சர் கலைஞர் கடந்த வாரம் உயர் அதிகாரி களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதைத்தொடர்ந்து விலைவாசியைக் கட்டுப் படுத்த 9 அம்ச நட வடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கூடுதல் உழ வர் சந்தைகள் தொடங் குவது, கூட்டுறவு அமைப் புகள் மூலமாக காய்கறி கள் விற்பனை செய்வது, நியாய கடைகளில் துவ ரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் மற் றும் மளிகை பொருள் களை தேவையான அளவு இருப்புவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்வது, முன்பேர வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது, விவசாய சாகு படியை அதிகரித்து உற் பத்தியைக் கூட்டுவது என பல்வேறு யோசனை கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், நியா யவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந் தம் பருப்பு விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளது.

விலைவாசி தாக்கத் திலிருந்து ஏழை-எளிய பாமர மக்களைக் காத் திட கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் முதல் மானிய விலையில் துவ ரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகிய வற்றை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங் கப்படும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தை அரசு தொடங்கி செயல் படுத்தி வருகின்றது.

இந்த விலையை மேலும் குறைக்கும் நோக்கத்து டன், நியாயவிலைக் கடை கள் மூலமாக தற்போது விற்கப்படும் துவரம் பருப்பு மற்றும் உளுந் தம் பருப்பு இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 என்று விற்கப்படுவ தில் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்று குறைத்தும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதிலிருந்து ரூ.25 என்று குறைத்தும், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தி எதிர்ப்புக்கு முதற்பலி!


வீரன் நடராஜன் இறுதிச் சடங்கு 5-12-1938இல் இந்தி எதிர்ப்பில் கலந்து இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் மறியல் செய்து நீதிபதி கனம் அப்பாஸ் அலியால் தண்டிக்கப்பட்ட (தண்டனை காலம் 6-மாதம். அபராதம் ரூ.50 கட்டத்தவறினால் ஆறுவாரம்) சென்னை 11ஆம் டிவிஷன் பண்ணைக் கார ஆண்டியப்பன் தெரு 2/2 நெ. இல்லத்தில் இருக்கும் ஆதிதிராவிட தோழர் லட்சுமணன் அவர்களின் ஒரே குமாரனாகிய தமிழ் வீர இளங்காளை எல். நடராஜன் சென்னைச் சிறையில் பலநாள் நோய்வாய்ப்பட்டிருந்து, சிறை ஆஸ்பத்திரி யில் குணம் காணாமல் 30-12-1938இல் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு நேற்று 15-01-1939 தேதி பகல் சுமார் 2.45 மணிக்கு உயிர் நீத்தார்.

உடல்நிலை, தன் குடும்ப நிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரனின் பிரேதத்தை மாலை 5 மணிக்குச் செட்டிநாட்டு குமாரராஜா முத் தையா செட்டியார் அவர்களின் விருப்பப் படி ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து காரில் வைத்து கருப்புக்கொடிகளுடன் ஒரு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

இன்று (16-1-1939) காலை 9 மணிக்குப் பிரேதம் புட்பப்பல்லக்கில் வைக்கப்பட்டு தங்கசாலை வீதி வழியாகப் புறப்பட்ட சமயத்தில் பத்தாயிரம் நபர் களுக்கு மேல் சவஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தெருவின் இருமருங்கிலும், மாடிகளின் மேலும் ஆண்கள், பெண்கள் கூடி ஊர்வலக் காட்சியைக் கவனித்தனர். பிரேத ஊர்வலம் புறப்படும்போது போலீசா ரால் நல்லவிதமான பந்தோபஸ்துகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பத்தாயிரம் பேர்களில் அய்ந்தாயிரம் பேர்களுக்கு மேலிட்ட மக்கள் ஒவ்வொரு வரும் கையில் கருப்புக் கொடிகள் தாங்கிச் சென்றனர். தாய்மார்களும், தலைவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பலர் வழிநெடுக ஊர்வலத்தை நிறுத்தி, பிரேதத்திற்கு மலர்மாலைகள் சூட்டினர். ஊர்வலம் அரைமைல் நீளத்திற்கு மேல் அமைதியாகவும், இந்தி எதிர்ப்பு வாக் கியங்களை முழங்கிக்கொண்டும் பகல் 11.30 மணிக்கு மயானத்தை அடைந்தது. வழிநெடுக இருமருங்கிலும் நின்ற மக்கள் கண்ணீர் வடித்தனர்.

பிரேத ஊர்வலம் மயானம் அடைந்ததும் கார்ப்பரேஷன் அங்கத்தினர் தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசன் தலைமையில் அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. தொண் டரின் மன உறுதியைக் குறித்தும், காங் கிரஸ்காரர்கள் போக்கைக் கண்டித்தும் தோழர்கள் அண்ணாதுரை, பொன்னம் பலனார், காஞ்சி பரவஸ்து ராஜகோபா லாச்சாரியார், வேலூர் அண்ணல் தங்கோ, டாக்டர் தர்மாம்பாள், நாராயணி யம்மை முதலியவர்கள் பேசினார்கள்.

- குடிஅரசு, 22.1.1939

சிதம்பரம் கோயிலை அரசுக்குச் சொந்தமாக்கியது தி.மு.க.அரசு! - அமைச்சர் பெரியகருப்பன் இல்ல மணவிழாவில் முதல்வர் கலைஞர் விளக்கம்



சிதம்பரம் கோயில் யாரோ சிலருக்குச் சொந் தம் என்ற நிலையை மாற்றி அரசுக்கு சொந் தம் என்று ஆக்கியது தி.மு.க அரசு என்று கூறி விளக்கமளித்தார் முதல மைச்சர் கலைஞர். 24.01.2011 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இல்ல மணவிழாவில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு :-

சிவகங்கை மாவட்டக் கழகத்தின் செயலாள ரும், அறநிலையத் துறை அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் அன்பு மகன் டாக்டர் பி.ஆர். கருத்தான் என்கிற கோகு லகிருஷ்ணனுக்கும், மதுரை க.ப. நவநீத கிருஷ்ணன் அவர்களின் அன்பு மகள் டாக்டர் ந. பாரு பிரியதர்ஷினிக்கும் இந்த மணவிழா இன் றைக்கு இனிதே நடை பெற்றுள்ளது. நம்மு டைய மத்திய உள் துறை அமைச்சர் அவர்கள் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக் கொண் டார்.

ஆகவே, நான் இயல்பாக பெண் வீட்டுக் காரனாக என்னை ஆக்கிக் கொண்டு (கைதட்டல்) இந்த இல்லறக் கூட்ட ணியின் சார்பாக (பலத்த கைதட்டல்) இருவரும் இணைந்து மணமக் களை வாழ்த்தி - மண மக்களை வாழ்த்த வந்தி ருக்கின்ற தமிழ்ச் சமு தாயத்தின் பெருமக்க ளையும், வாழ்வதற்கு வகை கண்டு நம்முடைய கடமையை ஆற்ற வேண் டியவர்களாக இருக் கின்றோம் என்பதை எடுத்துச் சொல்ல விரும் புகிறேன்.

நான் அணிந்திருக்கின்ற இந்தக் கண்ணாடி வழியாகத்தான்!

தம்பி பெரிய கருப் பன் அவர்கள் அற நிலையத் துறை அமைச் சராகப் பொறுப்பேற்று ஆற்றி வருகின்ற பணி கள் என்னை மாத்தி ரமல்ல - ஆன்மீகப் பெரு மக்களை மிகமிக பெரு மையிலே, மகிழ்ச்சியிலே ஆழ்த்தக்கூடியவையாக இருக்கின்றன. இவரை எப்படி நான் - எந்தப் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து, அற நிலையத் துறை அமைச் சராக ஆக்கினேன் என்று நம்முடைய மத்திய உள் துறை அமைச்சர் அவர் கள் வியப்பு தெரிவித் தார்கள். நான் எந்தப் பூதக் கண்ணாடி யைக் கொண்டும் பார்க்க வில்லை.

நான் அணிந் திருக்கின்ற இந்தக் கண் ணாடி வழியாகத்தான் அவரைப் பார்த்தேன். (கைதட்டல்) ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிக மாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து - இவர்தான் சரியான ஆள்-அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன். (கைதட்டல்)
பெரியகருப்பன் அவர்கள், பெயரால் கொஞ்சம் அச்சுறுத்தல் தரக்கூடியவர் (கைதட் டல்)-மீசையால் கொஞ்சம் அச்சுறுத்தக் கூடியவர். ஆனால், இரண்டுக்கும் மாறு பாடாக உள்ளத்தால் நம்முடைய அன்பை யெல்லாம் கவர்ந்தவர். (கைதட்டல்) அப்படிப் பட்ட நல்ல தம்பி - அன்புத் தம்பி - அருமை யான தம்பி - எனக்கு வாய்த்த தம்பிகளில் ஒருவர். அவர் கொண் டிருக்கின்ற தெய்வீக நம்பிக்கையைக் கூட - என்பால் கொண்டிருக் கின்ற மரியாதையின் காரணமாக, கொஞ்சம் மறைத்துக்கொண்டு (கைதட்டல்) அந்தப் பணியைத் திறம்பட ஆற்றிக் கொண்டிருப் பவர்.

ஒருநாள் சட்ட மன்றத்தில் கேள்வி நேரத்தில் - எதிர்க்கட்சி யிலே இருந்தவர்கள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தபோது, என் பின்னால் அமர்ந் திருந்த தம்பி பெரிய கருப்பனை நான் திரும் பிப் பார்த்துக் கேட் டேன். எத்தனை கோயில் களில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடத்தியி ருக்கிறோம் என்று கணக்கு இருக்கிறதா? என்று கேட்டேன்.

இருக்கிறது என்று என் னிடத்திலே அவர் எடுத்துக்காட்டினார். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் தமிழகத்திலே உள்ள கோயில்களில் குட முழுக்கு நடைபெறு வதும், அந்த ஆலயங் களுக்குத் தேவையான - எல்லாவகையான பூஜை களும் நடத்தப்படுவதை யும் பட்டியலிட்டு என் னிடத்திலே அவர் காட் டினார்.

தமிழர் தலைவர் வீரமணி

இதை நான் சொல் வதற்குக் காரணம் - நம் முடைய தமிழர் தலை வர் வீரமணி அவர்கள் இதை நான் பெருமை யாகக் கருதுகிறேன் என்று எடுத்துக் கொள்ள மாட் டார் என்று கருது கிறேன். அவர் குறிப் பிட்ட தமிழகத்தினு டைய அந்நாள் பிரிமி யர் பனகல் அரசர் ஆட்சிபுரிந்த அந்தக் காலத்திலேயே நிறுவப் பட்டதுதான் இந்த அற நிலையத் துறை. பனகல் அரசர் இயற்றிய சட்டம்.

துணைப்பாடம்- பனகல் அரசர் பற்றி

நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. இப் போது கூட நான் நம் முடைய மத்திய அமைச் சரிடத்திலே சொன் னேன். 1937 ஆம் ஆண்டு திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் நான் அய்ந் தாம் வகுப்பிலே சேர்ந்த போது, எனக்குத் தரப் பட்ட மிக முக்கியமான பாடப் புத்தகம் - துணைப் பாடம் (நான் டீடெயில்) - பனகல் அர சரைப் பற்றியதுதான்.

அந்தப் புத்தகத்தை இப் போது தேடினேன். எத் தனை ஆண்டுகளுக்குப் பிறகு? 1937-லே நான் படித்த புத்தகத்தை - திருவாரூர் பள்ளிக் கூடத்திலே தேடிப் பார்த்துக் கிடைக்காமல் - நீதிக் கட்சிக் காலத் திலே இருந்த பெரியவர் கள், மாவட்ட அதிகாரி கள் -இவர்களை யெல் லாம் விசாரித்துக் கிடைக்காமல், இறுதி யாக மன்னார்குடியிலே ஒரு நூல் நிலையத்திலே பனகல் அரசரைப் பற் றிய அந்தத் துணைப் பாடப்புத்தகம் எனக்குக் கிடைத்து - அதைப் படித்துப் பார்த்தேன். அதிலே இருக்கின்ற மிக முக்கியமான பக்கம் தான், தமிழ்நாட்டிலே கோயில்களில், மடால யங்களில், அறநிலையம் என்ற பெயரால் அக் கிரமங்கள் நடைபெறு கின்றன.

அவைகளை யெல்லாம் கண் காணித்து, ஆலயங்க ளுக்கு வருகின்ற பொருள்கள் ஒழுங் காகச் செலவிடப்படு கின்றனவா? திருவிழா என்றும், தெப்ப உற் சவம் என்றும் நடத்தப் படுகின்ற விழாக்களில் செலவழிக்கப்படுகின்ற பணத்திற்கு ஒழுங்கான கணக்கு இருக்கிறதா? தினம் தினம் ஆலயத் திற்கு ஆகின்ற செலவிற்கு - ஆலயத்திலே பணி யாற்று கின்றவர்களுக் குத் தரப்படுகின்ற ஊதி யங்களுக்குக் கணக்கு இருக்கிறதா என்ற இவைகளையெல்லாம் ஆராய்ந்து, அறிந்து - அதிலே சிறு ஓட்டை உடைசல் வராமல், ஊழல் வராமல் பார்த்துக் கொள்கின்ற அந்தப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது தான் - அந்தச் சட்டத் தின்மூலம் கிடைத்த வெற்றியாகும்.


அந்த வெற்றியினு டைய ஒரு கட்டத் தைத்தான் அண்மை யிலே சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்திலே நாம் அனுபவித்தோம். சிதம்பரத்திலே உள்ள அந்தக் கோயில் ஆதிக் கம், இதுவரையிலே தீட்சிதர்களுடைய கையிலேதான் இருந்தது. அதை அறநிலையத் துறைக்கு மாற்ற வேண்டு மென்பதற்காக வழக் காடி, போராடி - அந்த வழக்கிலே நம்முடைய அரசு, வழக்காடிய வர்கள் பக்கம் நின்று, அதிலே வெற்றி பெற்று - சிதம்பரம் கோயில் யாரோ சில பேருக்குச் சொந்தம் என்ற நிலை மாறி - இன்றைக்கு அரசு டைமையாக ஆக்கப் பட்டிருக்கிறது என்றால், இது நீதிக் கட்சி - அத னுடைய தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், பனகல் அரசர் போன்ற வர்கள் ஆற்றிய பெரும் பணியின் காரணமாகத் தான் இது முடிந்தது என்பதையும் - அப் படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, புகழ் வாய்ந்த, மேன்மை வாய்ந்த - ஆன்மீகத்திற்கும் நாம் விரோதி அல்ல;

அவர் களில் நல்லவர்கள் இருந் தால், அவர்களையும் வாழ வைக்கவேண்டும் - அவர்கள் மூலமாக அருந் தொண்டாற்ற, அறத் தொண்டுகளை ஆற்றிட வேண்டும் என்பதற்காக எடுக்கப் பட்ட அந்த முயற்சியின் விளைவுதான் இன் றைக்கு இந்த அறநிலை யத்துறை. அந்தத் துறை யில் நல்லவர்கள் அமைச்சர்களாக ஆக வேண்டும்-அந்தத் துறையில் அமைச்சர் களாக இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் மக் கள் பணியாற்ற வேண் டும். மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும். ஆன்மீகத்திற்கும் அவர்கள் அன்பர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மனி தாபிமானத்திற்கும் அவர்கள் அரும்பணி ஆற்ற வேண்டும்.

அப் படிப்பட்டவர் யார் என்று பார்த்தால், நமக்குக் கிடைத்தவர் - தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் - நம்முடைய பெரியகருப்பன் என்று சொன்னால் அது மிகை யாகாது. பெரியகருப் பன் அவர்களைப் பற்றி தம்பி வைரமுத்து அவர் கள் இங்கே சொன்ன போது, அவர் மீசையைப் பற்றிக் குறிப் பிட்டுச் சொன்னார். மீசை மாத்திரமல்ல; மீசை முகத்திலே இருக் கலாம்.

எனக்குக் கூட அப்படியொரு ஆசை

ஆனால், அகத்திலே உள்ள ஆசை எனக்குத் தெரியும். அவருடைய அகத்திலே உள்ள ஆசை, மீசையை விடப் பெரி யது. அந்த ஆசை என்ன வென்றால், தமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும்; தமிழ கத்தில் இன்னும் பல திட்டங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்; தமிழகத்திலே இந்த ஆட்சி தொடர்ந்து இருந்து மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டுமென்கின்ற அந்த ஆசை பெரிய கருப்பன் அவர்களுக்கு உண்டு (கைதட்டல்) என்பதை நான் நன்றாக அறிவேன்.

அதனால் தான் இங்கே அவரு டைய பெயரைச் சொல் லும்போது, நீங்கள் காட்டிய ஆர்வம் - அவரை அமைச்சர் என்று விளித்தபோது, காட்டப்பட்ட ஆர் வத்தைவிட - மாவட்டச் செயலாளர் என்று சொன்னபோது,

அதிக ஆர்வத்தை நீங்கள் காட் டினீர்கள். எனக்குக் கூட அப்படியொரு ஆசை இருக்கிறது. (கைதட் டல்) முதலமைச்சர் என்று சொல்லும் போது, நீங்கள் இவ் வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா? அல் லது திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் என்று சொல்லுகிற நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், (கைதட்டல்-பலத்த ஆரவாரம்) - தலைவர் என்று சொல் வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.

ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்பதை உங் களுக்குத் தெரிவித்து, மணமக்கள் வாழ்க! வாழ்க!! என்று கூறி விடைபெறுகிறேன். -

இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றி னார்.

உலகமயமான பெரியார்!


திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், விஜய வாடா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத் திய 8ஆவது உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியைக் கலக் கியது.

ஆந்திரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப், டில்லி, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், மலேசியா, பின்லாந்து என பல பகுதி களிலிருந்தும் 430 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந் தனர். அவரவரின் உணவு முறைகளை முன்கூட்டியே கேட்டறிந்து, அதற்கேற்ப உணவுவகைகள் தயாரிக் கப்பட்டிருந்தாலும் வெளிநாட்டவர் பலரும் இந்திய உணவுகளையே விரும்பிச் சாப்பிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகள் பலவற்றையும் தி.க.வின் தலைமை நிலையச் செயலாளரான வீ. அன்புராஜ் கவனமாகச் செய்திருந்தார்.

தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தியுடன் முதல்நாள் மாநாடு தொடங்கியது. திராவிட இயக்கம், பெரியாரின் பெரும் பணி, பெண் ணுரிமை, ஆரிய - திராவிட யுத்தம் உள்ளிட்ட ஆங்கில - தமிழ் நூல்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனத்தில் பயில்பவர்களின் கலை நிகழ்ச்சிகள், பகுத்தறிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், 3 வயது யாழினியின் பெரியார் பேச்சு, வெற்றிச்செல்வனின் நாத்திக உரை ஆகியவை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இரண்டாம் நாள் நிகழ்வின்போது வல்லம் பெரியார் மணியம்மை வளாகத்தின் பெரியார் தாவர கருவூலத்தில் உள்ள டார்வின் பூங்காவில் 25 வகைகளுக்கு மேலான 500 மரங்களை 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு அறிவாளர்கள் நட் டனர். அங்குள்ள மூங்கில் பண்ணையைப் பார்வையிட்டு மகிழ்ந்தவர்கள் அங்கேயே சிற்றுண்டியும் சாப்பிட்டனர். மூடநம்பிக் கையில் செய்யப்படும் காரியங்களை, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் விளக்கும் தீச்சட்டி ஏந்துதல், தீமிதித்தல் போன்றவற்றை தி.க. தோழர்களுடன் வெளிநாட்டு அறிஞர்களும் செய்தது பலரையும் வியக்க வைத்தது. சர். ஏர்க் சர் ஏர்க்.. என்றபடியே நார்வே லூயிஸ் ரோஸ்டு, ஆந்திரா சாரய்யா, கேரளா ஜேம்ஸ் ஆகியோர் தீ மிதித்தனர். நாத்திகர் பேரணியில் 4 வயது குழந்தை முதல் 80 வயது பெரியவர் வரை கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டே தீச்சட்டி ஏந்தியதையும் தீ மிதித்ததையும் அலகு குத்தி கார் இழுத்ததையும் திருச்சி மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே நின்றிருந்த அய்யப்ப பக்தர்கள் 300 பேர் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை முழுமையாகப் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினார்கள். பேரணியை புத்தூரில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து பார்வையிட்ட வீரமணி, கனிமொழி, சுப.வீர பாண்டியன் ஆகியோர் தி.க. தொண்டர்கள் அளித்த தீச்சட்டியை ஏந்தியபோது பலத்த கைதட்டல்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வு, வெளிநாட்டு நாத்திக - பகுத்தறிவு அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்குகளை மதச் சார்பின்மை, மனிதநேயம், மக்கள் உரிமை, அறிவியல், ஊடகம், நாத்திகம் உள்ளிட்டவை தொடர்பான 9 கருத்தரங் குகள் நடைபெற்றன. அனைத்திலுமே கேள்வி - பதில் பாணியிலான உரையாடல் களும் இருந்ததால் தேவையான விளக்கங்களைப் பங்கேற்பாளர்களாலும் பார்வையாளர்களாலும் உடனுக்குடன் பெற முடிந்தது. நாத்திக அறிஞர்கள் சிலரின் உரைகள் கவனிக்கத்தக்க வகையில் இருந்தன.

நார்வே மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளர் கிருஷ்டி மெலி - பிற நாடுகளைக் காட்டிலும் நார்வேயில் பெண்கள் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கான பல்கலைக் கழகங்கள் நிறைய உள்ளன. மதங்கள் எப்போதுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு அனுமதிப்பதில்லை. நார்வே நாட்டு கிறிஸ்தவ சபைகள் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆந்திர மாநில நாத்திகப்போராளி கோராவின் மகன் விஜயன் - நாத்திகம் என்பதை இங்கு எதிர்மறையான கண் ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல் நேர்மறையாக நோக்க வேண் டும். தமிழ்நாட்டில் பதிவுத் திருமணங் களையும் கலப்புத் திருமணங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம், நாத்திகத்தின் பங்களிப்பு. ஆனால் வட இந்தியாவில் வேறுவிதமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஜாதி என்ற இடத்தில் வெற்று என்று எழுதும் பழக்கம் உள்ளது. இங்கும் அது வர வேண்டும்

நிறைவுநாளில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன் -இங்கே இருப்பது 2 வழிகள்தான். ஒன்று, கேள்வியே கேட்கக் கூடாது என்கிறது பக்தி மார்க்கம். மற்றொன்று, கேள்விகளை எழுப்பும் பகுத்தறிவு மார்க்கம். பகுத்தறிவுதான் மாற்று வாழ்வியல் பண்பாடு என்பதை மக்கள் உணர வேண்டும்.

கவிஞர் கனிமொழி எம்.பி., - என்னை நாத்திக வாரிசு என்று அழைத்ததை பெருமை யாக நினைக்கிறேன். நானும் தீச்சட்டி ஏந்தினேன். சட்டியின் அடியில் தானியம் போடுவதால் அது சூடு இல்லாமல் இருக்கிறது. இதில் உள்ள தொழில்நுட்பம் இது. இதைச் சொல்லா மல் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் - நாட்டில் நடக்கிற நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் மானுடம் சந்திக்கும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் மதம்தான்

தி.க. தலைவர் கி. வீரமணி - மூட நம்பிக்கைகளைத் தகர்ப்பதற்காக நம்முடைய கருஞ்சட்டை வீரர்கள் அலகு குத்துவது, கார் இழுப்பது என்று தங்களை வருத்திக் கொள்வது எனக் கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அறிவியலைப் படிப்பது மட்டுமல்லாமல் அதனை மக்கள் உணர்ந்து கொள்ளவும் வேண்டும். உலகத்திலேயே நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்துவது தமிழகத்தில் தான். பல நாட்டு பகுத்தறிவாளர்கள் இங்கு வந்து தீச்சட்டி ஏந்துகிறார்கள். தீ குண்டம் மிதிக்கிறார்கள் என்றால் பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர் களும் தமிழகப் பகுத்தறிவாளர்களும் இணைந்து பானையில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டி, பொங்கலோ பொங்கல் என்று தமிழர் திருநாளைக் கொண்டாடினார்கள். நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு அல்ல, மனிதகுலத்தின் மீதான அக்கறை என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது 8ஆவது உலக நாத்திகர் மாநாடு.

நன்றி: நக்கீரன் 2011 ஜனவரி 15-18

Sunday, January 23, 2011

குழந்தைகளுக்குச் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் : முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்



போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கை, கால் களை நிரந்தரமாக செய லிழக்கச் செய்கின்றன. போலியோ நுண் கிருமி கள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருள் கள் மூலம் குழந்தை களிடையே பரவுகின்றன.

அனைத்து குழந்தை களுக்கும் ஒரே சமயத்தில் சொட்டு மருந்து கொடுப் பதன் மூலம் இந்தியா விலிருந்து இந்நோயை அறவே ஒழிக்க முடியும். அதற்காக 1995 ஆம் ஆண்டு முதல் பல்ஸ் போலியோ சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நடத்தப் பட்டு வருகின்றன. ஒவ் வொரு ஆண்டும் இந்தியா வில் 17 கோடி 5 வயதிற் குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந் துள்ளார்கள். போலியோ சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் கடந்த அய்ந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ வினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. அய்ந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தை களுக்கும் சொட்டுமருந்து கொடுக்க 23-1-2011 மற்றும் 27-2-2011 ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்படுகின்றன. அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழி பாட்டுத் தலங்கள், சுற்று லா மய்யங்கள் முதலான இடங்களில் 40 ஆயிரத்து 399 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலியோ நோய் பாதிப்பு உள்ள வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும், இலங் கை அகதிகள் குழந்தை களுக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுத் துறைகள், ரோட்டரி சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறு வனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாமில் ஈடுபடுகிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து உரிய குளிர்பதன நிலையில் பராமரிக்கப் பட்டு வீரியமுடன் வழங் கப்படுவதை VVM (Vaccine Vial Monitor) மூலம் உறுதி செய்யப்படுகிறது. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளின் இடதுகை சுண்டு விரலில் மார்க்கர் பேனா (ஆயசமநச ஞந) மூலம் அடையாள மை இடப் படும். விடுபடும் குழந்தை கள் இதன் மூலம் கண் டறியப்படுவர். போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப் பானது, பயனளிக்கக் கூடியது. முகாம் நாள் களில் 5 வயதுக்கு உள் பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி னால் மட்டுமே எல்லா குழந்தைகளுக்கும் போலி யோ நோயிலிருந்து பாது காப்பு கிடைக்கும்.

சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாடு முழு வதும் அவரவர் வசிப்பிட பகுதிகளுக்கு அருகா மையிலேயே அமைக்கப் பட்டுள்ளன. பொது மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் இத்திட் டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று (23-1-2011) அவரது இல்லத் தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, முதலமைச்சர் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாள், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம், சென்னை மாநக ராட்சி மேயர் மா.சுப்பிர மணியன், மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.ஆர்.டி. பொற்கை பாண்டியன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.வி. கனகசபை மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு. என். ராஜா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.