கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

88வது பிறந்த நாள் கொண்டாட்டம் : பெரியார், அண்ணா நினைவிடங்களில் திமுக தலைவர் கருணாநிதி மரியாதை




88வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார், அண்ணா நினைவிடங்களில் கருணாநிதி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு 03.06.2011 அன்று 88வது பிறந்த நாள். �பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை. எனவே, நேரில் வந்து வாழ்த்து கூறுவதை கட்சித் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்� என்று கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனாலும், அதிகாலையிலேயே ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்க, சால்வைகளுடன் கோபாலபுரம் வந்திருந்தனர். யாரையும் கருணாநிதி சந்திக்காததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
இந்நிலையில், 03.06.2011 அன்று அதிகாலையில் எழுந்த கருணாநிதி, குளித்துவிட்டு பெற்றோர் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை திமுக முன்னணியினர் வரவேற்றனர். அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, துரைமுருகன், நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, வி.எஸ்.பாபு, இ.ஏ.பி. சிவாஜி, கருப்பசாமி பாண்டியன், சி.சண்முகம், வி.விஸ்வநாதன், மேயர் மா.சுப்பிரமணியம், வின்சென்ட் சின்னதுரை, செல்லமுத்து, பொன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்தனர்.
அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு கருணாநிதியிடம், தொண்டர்களுக்கு பிறந்த நாள் செய்தியாக என்ன கூறுகிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, �சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், �கூடா நட்பு கேடாய் முடியும்� என்ற பொன்மொழியை மறந்து விடாமல் பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


கருணாநிதி பிறந்த நாளை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். திமுக கொடி ஏற்றி வைத்து இனிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கண் தானம், ரத்த தான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
திமுக மாணவர் அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் ரத்ததான முகாம் நடந்தது. 200 பேர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, வி.எஸ்.பாபு, மேயர் மா.சுப்பிரமணியம், துணைச் செயலாளர்கள் கணேஷ்குமார், பூவை ஜெரால்டு, மகிழன், அன்பழகன், பூச்சி முருகன், தாயகம் கவி, சதீஷ்குமார், எஸ்.எம்.கே.வெங்கடேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மகளிர் அணி சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்தில் அனாதை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சற்குண பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் கயல்விழி, சங்கரி நாராயணன், காயத்ரி சீனிவாசன், நூர்ஜகான் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருணாநிதிக்கு பர்னாலா வாழ்த்து :

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு கவர்னர் பர்னாலா நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துச் செய்தியும், பூங்கொத்தும் அதிகாரி மூலம் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.

கருணாநிதி பிறந்த நாள் - மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி :

கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. :

இதுகுறித்து, திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை:
1969 முதல் 2011 வரை கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் மாணவர் நலனுக்காக செய்த சாதனைகள், திராவிட& ஆரியப் போர், அன்றும் இன்றும், கருணாநிதியின் படைப்பாற்றல் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். அதை திமுக மாணவர் அணி, �கட்டுரைப் போட்டி�, அண்ணா அறிவாலயம், திமுக தலைமை நிலையம், தேனாம்பேட்டை, சென்னை& 600 018� என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர் நமது கலைஞர்! கி. வீரமணி


88ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவர் கலைஞருக்கு வாழ்த்துகள் கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இன்று (3.6.2011) நமது மானமிகு கலைஞர் அவர்களுக்கு 88ஆம் ஆண்டு பிறந்த நாள்!


உழைப்பதில் இவருக்கு இணை எவரும் உண்டோ என்று அவரிடம் மாறுபட்டவர்கள்கூட மாறுபட முடியாது கூறும் ஒருமித்த கருத்து இது!


இந்த 88 வயதில் அவரது பொதுவாழ்க்கை 75 ஆண்டுகள் என்பது வரலாற்றில் எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்று அல்லவா!


எதிர்நீச்சல் புதிதல்ல!


அறிவு ஆசான் தந்தை பெரியாரின் குருகுலமும், அய்யாவின் தலைமகன் அண்ணாவிடம் அவர் பெற்ற பக்குவங்களும் கலைஞரை, சோதனைகள், வேதனைகள் வந்தாலும் துணிந்து எதிர்கொள்ள வைக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளன!


எதிர்நீச்சல் அவருக்குப் புதிதல்ல பழக்கமானதொன்றுதான்!


இந்த 88 வயதிலும் எதிர்நீச்சல் என்ற போதிலும், தேர்தல் தோல்விகளோ, திட்டமிட்டு இன எதிரிகளும், அரசியல் கண்கொத்திப் பாம்புகளும் ஏற்படுத்திடும் அசாதாரண அவலங்களும் அவரை மேலும் உறுதிகொண்ட நெஞ்சினராக ஆக்கிடவேண்டும் என்பதே நம் விழைவு, வேண்டுகோள்!


அறிவுப்பூர்வமான ஆக்கச் செயல் அடுத்து சோர்ந்துள்ள தமது கழகப் படையினை எப்படிச் சொக்க செயல்வீரர்களாக, வீராங்கனைகளாக ஆக்குவது என்பதுபற்றிச் சிந்திக்கவேண்டும்!


மாலுமியின் கடமை!


புயல் கடலில் வீசும்போது கலத்தை சரியானபடிச் செலுத்துவது மாலுமியின் மகத்தான உறுதியிலும், சாதுரியத்திலும்தான் உள்ளது!


உணர்ச்சிகளை ஒதுங்க வைத்து, தளர்ச்சிகளுக்கு விடை கொடுத்து, புத்தாக்கம் காண புதிய அணுகுமுறைபற்றிச் சிந்தித்து, உடனடியாகச் செயல்படுத்தும் பொறுப்பு தலைமைக்கு மட்டுமே உள்ள மகத்தான கடமை என்பதை அறியாதவரல்ல மானமிகு சுயமரியாதைக்காரான நமது கலைஞர்.

கட்சி உறுதிமிக்க தொண்டர்களைக் கொண்ட தடை படாத ரத்த ஓட்டம் உடையது என்ற உண்மையை உலகுக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதால், இந்த 88 ஆம் வயதில் ஏற்பட்டுள்ள அறைகூவல்களை எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடிட, அவருக்குத் தாய்க்கழகம் தனது வாழ்த்தினை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறது!


திருப்பமான பயணமாக அமையட்டும் வாழ்த்துகள்!


பதற்றம் கொள்ளவேண்டிய தருணம் அல்ல இது. பரிகாரம் காணவேண்டிய முக்கிய கட்டம் இது என்பதை நன்கு உணர்ந்த அத்தலைவரின் பயணம், சீரிய செயல்திட்டத்தால் ஒரு திருப்பமாக அமையட்டும்!

வாழ்க கலைஞர்!


இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியிலேயே அரிசி இலவசமாக வழங்க ஆலோசித்தபோது அதிகாரிகள் தடுத்துவிட்டனர்: கலைஞர்


தி.மு.க. ஆட்சி காலத்திலேயே அரிசி இலவசமாக வழங்க ஆலோசித்தபோது அதிகாரிகள் தடுத்துவிட்டனர் என்று கலைஞர் கூறியுள்ளார்.


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தி.மு.க. சார்பில் கடந்த காலங்களில் பல இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்திய போது, அதன் காரணமாக மக்களின் வாழ்க்கையையே பாழாக்குகிறார் என்றும், மக்களை தாங்களாக முன்னேறவிடாமல் சோம்பேறியாக்குகிறார் என்றும் சில எதிர்க்கட்சியினரும், ஏடுகள் நடத்தும் சிலரும் கண்டன கணைகளை பொழிந்தார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இலவசமாக 20 கிலோ அரிசி வழங்குகின்ற திட்டத்தை தொடங்கும்போது அதைப்போற்றுகிறார்கள், பாராட்டுகிறார்கள்.


தேர்தலுக்கு முன்பு அப்போது முதலமைச்சராக இருந்த என்னிடம் கடந்த மார்ச் திங்கள் இறுதியில் ஒரு டி.வி. சார்பில் பேட்டி கண்டபோது, தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இலவச சலுகைகளை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது தான் என்று கூறப்படுவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டபோது நான், இலவச சலுகைகள் என்பது வாக்குகளை பெறுவதற்காக அல்ல ஏழை, எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க வேண்டும் என்ற குறிக்கோள் தி.மு.க. அரசுக்கு இன்று நேற்றல்ல இந்த இயக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழவைப்பதற்காகத்தான் ஏழைகளின் முகங்களிலே சிரிப்பை காண்பதற்காகத்தான்'' என்று கூறினேன்.


ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன் எதற்கெடுத்தாலும் தி.மு.க. அரசு ஒரு லட்சம் கோடி கடனை வைத்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் நிதித்துறை பொறுப்பிலே உள்ளவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசுகளுக்கும் உண்டு. வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளில் கூட இலவச கல்வி, முதியோர் பென்சன், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை, உணவு கூப்பன், தேசிய சுகாதார பாதுகாப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் ஏழைகளுக்கு நேரடியாகவே பணமாகவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிலும் தி.மு.க. அரசு உணவு பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வேட்டி சேலை, உணவு உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியம், ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி தொகை, ஏழைகளுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டம், குடிசையில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், தொழிற்கல்வி வரை இலவசம் போன்ற எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது.

தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தி வந்த ஒரு சில திட்டங்களை தான் தற்போது அ.தி.மு.க. அரசு சற்று விரிவாக்கம் செய்து நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது. குறிப்பாக தி.மு.க. அரசு 2006 ம் ஆண்டு ஏற்பட்ட போது தான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்டு, சில மாதங்களுக்கு பின் அந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி வந்தது. அந்த திட்டத்தையே தான் தற்போது ஜெயலலிதா அரசு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்கப்பட்டதற்கு மாறாக தற்போது அதே 20 கிலோ அரிசியை 20 ரூபாய் வாங்காமலே இலவசமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.


தி.மு.க. அரசு இருந்தபோது இதே முறையில் 20 கிலோ அரிசியினை இலவசமாக மக்களுக்கு வழங்கலாமா என்று அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த போது, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்கும்போதே, எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டித்து பேசுகின்ற நேரத்தில் இலவசமாகவே அரிசியை வழங்குவது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தார்கள் என்பதை மனசாட்சியுள்ள அந்த அதிகாரிகள் மறந்திருக்க மாட்டார்கள்.


ஏழை பெண்களுக்கான திருமண உதவி திட்டமும் தி.மு.க. அரசின் திட்டம் தான். அந்த திட்டத்தொகையை தான் அ.தி.மு.க. அரசு அதிகமாக்கி தற்போது அறிவித்திருக்கிறார்கள்.


இது தவிர, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களான இலவச சமையல் எரிவாயு திட்டம், வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களும் தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தன. இவையெல்லாம் இலவச திட்டங்கள் என்றும், இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடைழூறு விளைவிப்பவை என்றும் கண்டித்து பேசியவர்கள் எல்லாம் தற்போது இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வந்திருப்பதை பார்க்கும்போது, எப்படியோ தி.மு.க. அரசு செய்ய தொடங்கிய சாதனைகள் நல்லவேளை நிறுத்தப்பட்டு விடாமல் தொடருகிறதே என்று அந்த இலவச உதவிகளை பெறுவோர் எண்ணிப்பார்ப்பார்கள் என்று நம்பலாம்.


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடக்கத்திலேயே பயன்தந்துவிடும் என கருத முடியாது. பல்வேறு சமூகநல திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதால் தான் ஏழைகளுக்கும், மற்றவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தில் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டு ஏழைகளும், பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணமாக தி.மு.க. அரசு இலவச கல்வியை முதல் தலைமுறை மாணவர்களுக்கு தொழிற்கல்வி வரை நீட்டித்ததால் 2005 2006 ம் ஆண்டில் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக்குகளிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2.85 லட்சத்திலிருந்து 2010 11 ம் ஆண்டில் 6.9 லட்சமாக உயர்ந்தது. தி.மு.க. அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களுக்கு ரூ.4000 கோடி செலவிட்டதால் தான் ஏழை குடும்பங்கள் விலைவாசி உயர்வின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு உணவு பாதுகாப்பை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், பட்டினிச் சாவு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலே இல்லை என்ற நிலை உருவாகியிருந்தது.

சுமார் 2.62 லட்சம் ஏழைகள் உயர்சிகிச்சையை இலவசமாக பெற்றுள்ள காப்பீட்டு திட்டம், பல உயிர்களை காத்துவரும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. அரசு முன்பிருந்த அதே வேகத்தோடு நடத்தப்போகிறார்களா? அல்லது அதையும் தலைமை செயலகத்தை போல தமிழ் செம்மொழி மையத்தை போல சமச்சீர் கல்வி திட்டத்தை போல நிறுத்தப்போகிறார்களா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியும்.


இத்தகைய சமூக பாதுகாப்பு திட்டங்களை புறக்கணித்துவிட்டு வளர்ச்சி திட்டங்களை மட்டும் ஒரு அரசு செயல்படுத்தினால் ஏழை, எளிய மக்களின் நலனை புறக்கணிக்கும் அரசாகவே அந்த அரசு இருக்கும்.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் தான் அரசுக்கு கடன் சுமை ஏறியுள்ளது என்ற வாதமும் சரியல்ல. ஒரு அரசு அதன் வளர்ச்சி திட்டங்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் கடன் வாங்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் கூட கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்துகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களும் கடன் பெற்றுத்தான் வளர்ச்சி திட்டங்களையும், சமூகநல பாதுகாப்பு திட்டங்களையும் செயல்படுத்துகின்றன. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு உள்ள கடன் பொறுப்பு மிகக்குறைவானது என்பது பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த அளவுப்படி ஒரு மாநிலத்தின் கடன் பொறுப்பு அந்த மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் கடன் பொறுப்பு 19.58 சதவீதம் அளவிற்கே உள்ளது.


மேலும், அரசு பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை 2006 07 முதல் செயல்படுத்தி வந்தாலும் 2008 09 வரை மாநிலத்தின் வருவாய் வரவு வருவாய் செலவை விட அதிகமாகவே இருந்தது. 2009 10 ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட காரணம் வரி வருவாய் குறைந்ததும், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட திருத்திய சம்பள விகிதமும் தான். அதுவும் வரும் ஆண்டுகளில் மீண்டும் வருவாய் உபரியை எட்டும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை வலுவாகவே அமையும். எனவே, இலவச திட்டங்களால் தான் தமிழக அரசின் கடன் சுமை ஏறிவிட்டது என்று ஒரு பொய் பிரசாரம் ஏழை மக்களுக்கு இத்தகைய நலத்திட்ட உதவிகளை அரசு வழங்குவதற்கு ஒரு இடையூறு ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வர வேண்டாம்: கலைஞர் வேண்டுகோள்



தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’எனது 88-வது பிறந்த நாளினையொட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை.

நேரில் எனக்கு வாழ்த்து வழங்க வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க வேண்டுமென்று கட்சி உடன்பிறப்புகள் வற்புறுத்த வேண்டாம் என்றும் - வீட்டிற்கோ கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக என்னைக் கட்சி உடன்பிறப்புகளும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஜெயலலிதா மீதான வழக்குகள்


* சொத்து குவிப்பு வழக்கு: வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
* பிறந்தநாள் பரிசு வழக்கு: 1992ல் ஜெயலலிதா பிறந்தநாளின்போது அவருக்கு 2 கோடி பணம் வந்தது. இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
* வருமானவரி வழக்கு: 1995&96 மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கும், கார் உள்ளிட்ட சொத்துக்கள் மீதான செல்வ வரி தாக்கல் செய்யாத வழக்கும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
* எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்யாத வழக்குகளும் தனித்தனியாக நிலுவையில் உள்ளன.

கலைஞர் பிறந்த நாள்: தங்கபாலு வாழ்த்து



திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் 88ம் வயதில் அடியெடுத்து வைப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இளம்வயது முதலே அவர் தமிழாற்றல் பெற்று சிறந்து உயர்ந்தவர். தமிழகம், தமிழர்கள் முன்னேற்றம் என்ற கொள்கைகளை ஏற்று அதற்கெனவே உழைத்து வருபவர்.


ஐந்து முறை முதல்வர் என்றும், 12 முறை எம்எல்ஏ என்றும் வரலாற்றுப் பெருமை பெற்றவர் மட்டுமல்ல இலக்கியம், எழுத்து, பேச்சு, அரசியல், கலை, சமுதாயம் போன்று தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு முத்திரையைப் பதித்தவர் கலைஞர்.


வெற்றியில் வெறிகொண்டும், தோல்வியில் துவண்டும் போகிற பலவீனம் கொண்டவர் அல்ல அவர். எதையும் தாங்கி, செயல்பட்டு அடுத்த வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் ஆற்றல் மிகப் பெற்றவர்.

அத்தகைய புகழுக்குரியவர் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்ந்து தமிழ், தமிழகம், தமிழர்க்கு உழைத்திட அவரது 88 வது வயதில் மனமுவந்து வாழ்த்துவதாக தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து


88வது பிறந்த நாள் கொண்டாடும் திமுக தலைவர் கலைஞருக்கு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை (01.06.2011) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் முதல்வராகவும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் 87 ஆண்டுகளாக தமிழக முன்னேற்றத்திற்காக அயராது கலைஞர் உழைத்து வருகிறார். தற்போது இறைவன் அருளால் 88 வது வயதை அடைகிறார். எல்லாம் வல்ல அன்னை சக்தியின் அருளால் கலைஞரும் அவரது குடும்பத்தாரும் எல்லா நலமும் பெறுவதுடன், எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்ந்து சிறப்பிக்க அன்னை சக்தியை வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.