கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 28, 2011

மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு -


இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட சம்ப வம் குறித்து அறிந்ததும் அன்று தன்னை சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த சம் பவத்திற்கு முதலமைச்சர் கலைஞர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை சுட் டிக் காட்டி இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்குதல் செயல்கள் தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்தத் தாக்கு தலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் இறந்த ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அன்றே நிவாரண தொகை ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியி டம் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண நிதி வழங்கியதை தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரிக்கு அரசு வேலை வழங்க உத்தர விட்டுள்ளதாக ஏ.கே. எஸ்.விஜயன் எம்.பி. தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் அறிவித்தபடி ஜெயக் குமாரின் மனைவி முரு கேஸ்வரிக்கு ஆறுகாட் டுத்துறை அங்கன்வாடி மையத்தில் உதவியாள ராக பணிபுரிவதற்கான நியமன ஆணை (25.01.2011) அன்று இரவு வழங் கப்பட்டது. இதனை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் வழங்கினார்.

தேவேந்திர குல வேளாளர் பிரச்னை : நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதல்வர் உத்தரவு


குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள், தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும், அந்த உட்பிரிவுகள் அனைத் தையும் ஒன்றாக இணைத்து தேவேந் திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண் டும் என்றும், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம.தங்க ராஜ் அளித்த கோரிக்கை, கடைய நல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல் போன்ஸ் மூலம் தமிழக அரசின் கவ னத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தக் கோரிக்கை குறித்து ஜனவரி 26 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தா லோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் க.அன்பழகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி, தமிழரசி, மதிவாணன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், ஆதிதிராவி டர் நலத்துறை செயலாளர், ஆணை யர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கோரிக்கையை சட்ட ரீதியாக பரிசீலித்து நடைமுறைப்படுத் திட நீதிபதி ஜனார்த்தனத்தைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து பரிந்துரை பெறலாம் என்று முதல மைச்சர் கலைஞர் ஆணையிட்டுள் ளார்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் ஆலோசனை பெறாமல் பொது நுழைவுத்தேர்வு பற்றி முன்மொழிவு எடுக்கப்படாது - அமைச்சர் கபில் சிபல்


மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமல், பொது நுழைவுத் தேர்வு குறித்து முன்மொழிவு எடுக்கப்படாது என்று கபில் சிபல் உறுதியளித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேல்படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு அறிமுகம் தொடர்பாக, தாங்கள் அனுப்பிய கடிதத்தை ஜனவரி 3ம் தேதி பெற்றுக்கொண்டேன். மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களின் கடிதத்தை மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வழங்கியுள்ளேன். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் எந்த முன்மொழிவும் எடுக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

60வது பிறந்த நாள் : மு.க.அழகிரி அறிக்கை


மு.க.அழகிரி வெளியூர் சென்று இருப்பதால் வரும் 30ந் தேதி தனது 60வது பிறந்த நாளன்று வாழ்த்துவதற்கு நேரில் சந்திப்பதை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
எனது 60&வது பிறந்த நாளான ஜனவரி 30ந் தேதி, நான் பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்வதாலும், அன்றைய தினம் நான் மதுரையில் இல்லை என்பதாலும் என்னை வாழ்த்த வருகை தரும் அனைவரும் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்திட கேட்டுக் கொள்கிறேன்.
பிறந்த நாள் விழாவின் நலத்திட்டங்கள், அன்னதானம், ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்ட கழகத்தின் சார்பாக பகுதிகள், ஒன்றியங்கள் வாரியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தியாகிகளுக்கு கவர்னர் தேநீர் விருந்து : முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு


குடியரசு தினத்தை முன் னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கவர்னர் பர்னாலா தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தை முன் னிட்டு கவர்னர் பர்னாலா (26.01.2011) அன்று சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின அணிவகுப்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், அணிவகுப்பு ஊர்திகளுக்கும் கவர்னர் பர்னாலா பரிசுகள் வழங்கினார்.

நல திட்டம், கட்டமைப்பு வசதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது - ஆளுநர் பர்னாலா குடியரசு தின உரை


நல திட்டங்கள் நிறைவேற்றுவதிலும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று ஆளுநர் பர்னாலா கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பர்னாலா வானொலி, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். 1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. காந்தி, நேரு போன்ற தலைவர்கள் கண்ட கனவின்படி இந்தியா இன்று தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அபரிமித வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டை வறுமை, கல்வியறிவு இன்மையிலிருந்து விடுவிக்கும் கடமை அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உள்ளது. உணவு உற்பத்தியிலும், அறிவியல் துறையிலும் நம் நாடு உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.
இதில் தமிழகத்தின் வளர்ச்சி வரலாற்று சிறப்புக்குரியது. நலத்திட்டங்கள் நிறைவேற்றுவதிலும் கட்டமைப்பு வசதிகளை செய்வதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தகவல் தொழில் நுட்பம், மோட்டார் வாகன தொழில், மருத்துவ துறையின் முக்கிய கேந்திரமாக தமிழகம் விளங்குகிறது. உலகின் புகழ் பெற்ற 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. கணினிப் பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. 57 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.
இலவச கல்லூரி கல்வி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இதன் மூலம் 3.75 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். திருவாரூரில் மத்திய பல்கலை கழகமும், திருச்சியில் ஐ.ஐ.டியும் நிறுவப்பட்டுள்ளன. கிராமங்கள் பயன் பெறும் வகையில் 11 புதிய பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இலவச வண்ண தொலைக்காட்சி, இலவச எரிவாயு இணைப்புடன் அடுப்பு, நிலமற்ற விவசாயிகளுக்கு இலவசமாக நிலம், பெண்கள் நல திட்டங்கள் போன்ற சமூக நல கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவு உற்பத்தியிலும் முன்னணி பெற்று தமிழ்நாட்டில் 95.6 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தியாகி உள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அரசு வருமுன் காப்போம், நலமான தமிழகம், குழந்தைகள் இதய பாதுகாப்பு திட்டம், உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனை வரும் பாடுபடுவோம். இந்த நாளில் சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளை நினைவு கூருவோம்.

இவ்வாறு பர்னாலா பேசினார்.

Wednesday, January 26, 2011

குடியரசு தின விழா





சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா இன்று (26.01.2011) நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி காலை 7.48 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். 7.52 மணிக்கு கவர்னர் பர்னாலா விழா மேடைக்கு வந்தார். அவரை முதலமைச்சர் கருணாநிதி வரவேற்றார்.

கவர்னருக்கு முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். காலை 8 மணிக்கு கவர்னர் தேசிய கொடியேற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மலர் தூவியது.

கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அணி வகுப்பு நடந்தது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும், புதுடெல்லியில் நடந்த 19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்கள்-வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் கருணாநிதி ஊக்கத்தொகையும் பதக்கங்களும் வழங்கினார்.

வீர தீரச்செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.


சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடந்தது.

அரசு துறையை சார்ந்த 24 அலங்கார வண்டிகள் இதில் அணிவகுத்து வந்தன. அரசு திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

பரிசு பெற்றவர்கள் விவரம்:
விளையாட்டு துறையில், தடகள பிரிவில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற எஸ்.சத்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சி.ஸ்ரீதர்(வில் வித்தை) ரூ.15 லட்சம், அ.சரத்கமல் (டேபிள் டென்னிஸ்) ரூ.40 லட்சம், அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்) ரூ.10 லட்சம், ஆர்.அபிஷேக் (டேபிள் டென்னிஸ்) ரூ.10 லட்சம், கே.ஷாமினி (டேபிள் டென்னிஸ்) ரூ.15 லட்சம், ருஷ்மி சக்ரவர்த்தி (டென்னிஸ்) ரூ.10 லட்சம், கவிதா (கபடி) ரூ.20 லட்சம், சவுரவ் கோஷல் (ஸ்குவாஷ்) ரூ.20 லட்சம், ஹரிந்தர் பால்சிங் (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், தீபிகா பலிகால் (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், அனகா அலங்காமணி (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், அன்வஷா ரெட்டி (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், அதிபன் (சதுரங்கம்) ரூ.10 லட்சம், சசிகிரன் (சதுரங்கம்) ரூ.10 லட்சம்.
வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் பெற்றவர்கள்:

ரயிலில் அடிபட இருந்த சிறுவனை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் ரே.விவேகானந்தன், மதம் கொண்ட யானையிடம் இருந்து 7 பேரின் உயிரை காப்பாற்றிய கோவையைச் சேர்ந்த வனத்துறை ஓட்டுனர் ஜெ.ரவி, பயணிகளுடன் சென்ற பஸ்சை விபத்திலிருந்து காப்பாற்றிய டெப்போ ஓட்டுனர் கன்னியாகுமரியை சேர்ந்த செ.ராஜகோபால், கடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீயை அணைத்து நோயாளிகளை காப்பாற்றிய கடலூர் தா.ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அண்ணா பதக்கத்தையும், ரூ.25 ஆயிரம் காசோலையையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
திருவண்ணாமலையை சேர்ந்த எம்.இ.ஜமாலுதீனுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கமும், ரூ.25 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கம்:

கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதில் சீரிய பணியாற்றும் காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ப.சரவணன், சென்னை மாவட்ட உதவி ஆணையர் ஆர்.கஜேந்திரகுமார், தர்மபுரி மாவட்ட காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை வாகனங்கள் காண்போரை கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

செம்மொழி பூங்கா, வனத்துறை, தோட்டக்கலை சார்பில் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த யானை, சுகா தாரத்துறை சார்பில் வந்த படகு போன்ற வாகனங்கள் வித்தியாசமாக இருந்தன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் இரண்டு அலங்கார வண்டிகள் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், அண்ணா மறு மலர்ச்சி திட்டம் போன்றவற்றை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முதல் பரிசு கிடைத்தது. தமிழக பண்பாட்டை விளக்கிய செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்துக்கு 2 வது பரிசு அறி விக்கப்பட்டது. கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்களை விளக்கும் மக்கள் நல்வாழ்வு துறை வாகனம் 3 வது பரிசுக்கு தேர்வு பெற்றது.

விழாவில் இடம்பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கும், பரிசுகள் அறிவிக்கப்பட்டன. கிராமிய நடனம் ஆடிய சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றனர். தமிழ் கலாச்சார நடனத்துக்காக நுங்கம்பாக்கம் சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2 வது பரிசும், பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனத்துக்காக முருக தனுஷ்கோடி மகளிர் பள்ளிக்கு 3 வது பரிசும் கிடைத்தது.

சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றது. நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு நடனம் ஆடிய பாரதி மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றனர். ஒயிலாட்டம் ஆடிய செல்லம் மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 2 வது பரிசு கிடைத்தது.

தமிழக பாரம்பரிய நடனம் ஆடிய எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டது.