1-1-2012 தேதியிட்ட “மாலைமுரசு” - “மாலைமலர்” - “தமிழ் முரசு” ஆகிய மாலை ஏடுகளிலும், 2-1-2012 தேதியிட்ட “தினமலர்” - “தினத்தந்தி” - “தினகரன்” - “தினமணி” ஆகிய காலை ஏடுகளிலும் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக வெளி வந்திருப்பது “அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்” வழங்கப்படும் செய்தியாகும்.ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்று “தினத்தந்தி”யும் - “அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 லட்சம் பேருக்கு பொங்கல் போனஸ் - யார் யாருக்கு போனஸ் கிடைக்கும்” என்று “தினகரன்” இதழும் - “264 கோடி ரூபாயை அள்ளித் தந்தார் முதல்வர்” என்று “தினமலர்” நாளிதழும் இந்தச் செய்திக்கு தலைப்பிட்டுள்ளன.
இந்த ஏடுகள் எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கின்றனவே என்று கடந்த ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலே இந்த பொங்கல் போனஸ் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லையோ என்று நமக்கு சந்தேகம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு “முரசொலி” பத்திரிகையை தேடிப் பார்த்தோம். “264 கோடியை அள்ளித் தந்தார் முதல்வர்” என்று “தினமலர்” செய்தி வெளியிட்டிருக்கிறதே, தி.மு. கழக ஆட்சியில் “கிள்ளியாவது” அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் கொடுக்கப்பட்டதா என்று பார்த்த போது - கடந்த ஆண்டு 2011இல் பொங்கலுக்காக 277 கோடி ரூபாய் அளவிற்கு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக கொடுக்கப்பட்டுள்ளது.
4-1-2011 தேதிய நாளேடுகளில் அந்தச் செய்தி வந்துள்ளது, ஆனால் இன்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்திருக்கிறதே அதைப் போல அல்ல - “முரசொலி” இதழின் 12வது பக்கத்தில் அந்தச் செய்தி வெளி வந்திருக்கிறது. அந்தச் செய்திக் குறிப்பு வருமாறு :-“2009-2010ஆம் ஆண்டிற்கு “சி” மற்றும் “டி” தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ. 3000/- உச்சவரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கிடவும், “ஏ” மற்றும் “பி” தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1000/- சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு ரூ. 500/- பொங்கல் பரிசு வழங்கிடவும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ. 277 கோடி செலவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதிலிருந்து இந்த ஆண்டு அ.தி.மு.க. அரசு ஏதோ புதிதாக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிடவில்லை என்பதையும், கடந்த தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டதை விட கூடுதலாக தொகை எதையும் வழங்கிட வில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு பொங்கல் போனஸ் வழங்கியிருப்பதை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்ட “தினகரன்”, “அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல் படுத்தப்படுவதற்கு, உதவிகரமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் (போனஸ்) வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.ட “தினகரன்”, “அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல் படுத்தப்படுவதற்கு, உதவிகரமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் (போனஸ்) வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 2010-2011ஆம் ஆண்டுக்கு “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ. 3000 உச்ச வரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், “ஏ” மற்றும் “பி” பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1000 சிறப்பு போனஸ் வழங்கவும், ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கவும் முதல்வர் உத்தர விட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பொங்கல் போனஸ் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டுமே யானால், 2006ஆம் ஆண்டு தி.மு. கழக அரசு பொறுப்பேற்று, பேரவையில் வைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையிலேயே, “2000-2001ஆம் ஆண்டு வரை, (அதாவது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த வரை) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் “சி” மற்றும் ”டி” அலுவலர்களுக்கு மிகை ஊதியமும், “ஏ” மற்றும் “பி” அலுவலர்களுக்கு சிறப்பு மிகை ஊதியமும் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப் பட்டு வந்தன. 2001-2002ஆம் ஆண்டு முதல் (அதாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு) வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள இந்தச் சலுகை யினை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், இந்நிதி யாண்டில் வரும் பொங்கல் பண்டிகையின் போது மேற்கூறிய மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு ஆகியன மீண்டும் வழங்கப் படும்” என்று 22-7-2006 அன்று அறிவித்தோம்.
அறிவித்ததோடு விட்டு விடாமல், அதற்கு பிறகு அரசு அலுவலர் களுக்கெல்லாம் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று 28-12-2006 அன்றே அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு, அதன் காரணமாக அந்த ஆண்டு 248 கோடியே 68 லட்ச ரூபாய் அரசுக்குச் செலவாகும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
அதாவது அ.தி.மு.க. ஆட்சி கடந்த முறை நடைபெற்ற போது அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பொங்கல் போனசை தி.மு. கழக அரசு தான் 2006ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தவுடன் மீண்டும் அறிவித்து வழங்கியது. ஆனால் தற்போது ஏதோ ஜெயலலிதா தி.மு. கழக ஆட்சி வழங்காததை, அவர் வழங்குவதைப் போல ஏடுகள் எல்லாம் பெரிது படுத்தி வெளியிட்டுள்ளன. ஒருவேளை அந்த ஏடுகள் “என்றைக்கும் போடாத மகராசி இன்றைக்கு புதிதாக போட்டிருக்கிறாரே, அது வியப்பில்லையா” என்ற எண்ணத்தோடு அந்தச் செய்திக்கு இவ்வாறு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் போலும்!
அ.தி.மு.க. அரசு குறிப்பாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அரசு ஊழியர்களை எந்த அளவிற்கு மதித்தார் என்பதும், அரசுக்கு வருகின்ற மொத்த வருவாயில் 95 சதவிகிதம் அரசு அலுவலர்களின் ஊதியத்திற்காகவே செலவழிக்கப்படுகின்றது என்றெல்லாம் சொன்னவர் ஜெயலலிதா தான் என்பதும், அரசு அலுவலர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவே “எஸ்மா”, “டெஸ்மா” சட்டங்களைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் என்பதையும், ஏன் அரசு அதிகாரி களை யெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று பேரவை யிலேயே அறிவித்தவரும் அவர் தான் எம், அரசு அலுவலர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவே “எஸ்மா”, “டெஸ்மா” சட்டங்களைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் என்பதையும், ஏன் அரசு அதிகாரி களை யெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று பேரவை யிலேயே அறிவித்தவரும் அவர் தான் என்பதையும் தமிழ்நாட்டிலே உள்ள அரசு அலுவலர்கள் அறிய மாட்டா£களா என்ன? இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள ஒருசில நாளேடுகள் (நமது ஏடுகள் உட்பட) அம்மையாருக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த விளக்கங்களைத் தந்துள்ளேன்.
இதிலே இன்னும் ஒரு ஏடு ஒரு படி மேலே போய், கடந்த ஆண்டு ஊழியர்களுக்கான போனஸ் ஜனவரி 5ஆம் தேதி கிடைத்தது. இந்த ஆண்டு போனஸ் தொகை இன்று முதல் அவர்களுக்குக் கிடைக்கும் என்று முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது. அரசாணை தான் இன்று வெளி வந்திருக்கிறதே தவிர, போனஸ் தொகையே இன்று கிடைத்து விடாது. மேலும் ஜனவரி 2ஆம் தேதியோ, 5ஆம் தேதியோ பொங்கல் போனஸ் ஒரு முறை தான் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இந்த ஏடுகள் இந்தச் செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதைப் பார்ப்பவர்கள், தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்படாத ஒரு சலுகையை தற்போது வழங்கியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொள்கின்ற அளவிற்கு வெளியிட்டிருக்கிறார்கள் என்பதால், இந்தப் பொங்கல் போனஸ் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவது நல்லது என்பதால் தான் இந்த விளக்கம்!£ர்கள் என்பதால், இந்தப் பொங்கல் போனஸ் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவது நல்லது என்பதால் தான் இந்த விளக்கம்!
No comments:
Post a Comment