2012 புத்தாண்டையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்நிலையில் ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் போக்குகள் மாறிட வேண்டும்; ஏழை எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும்; மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்; அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும் இன்று தொடங்கும் 2012 ஆங்கில புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தமிழக மக்கள் வளம்பெற தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றிகண்ட மனநிறைவுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த வேளையில் ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக தந்துவிட்டு; பால் விலையை உயர்த்தி; பேருந்து கட்டணத்தை ஏற்றி; ஏழை எளிய மக்கள் பயனடைந்த பல்வேறு திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தி; அறநெறிகளுக்கெல்லாம் அல்லல் விளைத்த இழைத்த 2011 ம் ஆண்டு மறைகிறது.
இந்நிலையில் ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் போக்குகள் மாறிட வேண்டும்; ஏழை எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும்; மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்; அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும் இன்று தொடங்கும் 2012 ஆங்கில புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment