கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 20, 2012

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. ரூ. 50 லட்சம் உதவி : கலைஞர் அறிவிப்பு


புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் உள் ளிட்ட பகுதிகளைப் பார்வை யிட்ட திமுக தலைவர் கலை ஞர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவா ரண உதவிகளை வழங்க ரூ.50 லட்சம் நிதியை திமுக சார்பில் ஒதுக்குவதாக கூறினார்.
தானே புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை திமுக தலைவர் கலைஞர் நேரில் பார்வையிட்டார். இதற்காக அவர் 04.01.2011 அன்று காலை சென் னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன் னாள் அமைச்சர்களான துரை முருகன், பொன்முடி, ஏ.வ. வேலு ஆகியோரும் புறப் பட்டுச் சென்றனர்.

அப்போது, தி.மு.க. தலைவர் கலைஞர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வரு மாறு:-

கேள்வி:- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கப் புறப்படுகிறீர்கள். வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

பதில்:- தமிழக அரசின் செயல்பாடு கள் பற்றி மக்கள் அதிருப்தியாக இருக் கிறார்கள். அந்த மக்களை நேரில் சந்திக் கத்தான் போகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்தபிறகு கூறுகிறேன்.
கேள்வி:- மத்திய அரசிடம் கூடுதல் நிதி வேண்டுமென்று கேட்பீர்களா?

பதில்:- நான் தற்போது மாநில அரசின் தலைவன் அல்ல, மத்திய அரசிடமிருந்து என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும் என்று இப்போது சொல்ல முடியாது.
கேள்வி:- உங்களுடைய கூட்டணி கட்சியின் ஆட்சி என்ற முறையில் மத்திய அரசிடம் உங்கள் அமைச்சர்களை என் னென்ன உதவிகளை கேட்கச் சொல் வீர்கள்?

பதில்:- நம்முடைய மாநிலத்தில் வெள்ள நிவாரணத்திற்கு தேவையான உதவிகளை எல்லாம் மத்திய அரசு, மாநில அரசுக்கு செய்யவேண்டும் என்பதை தொடர்ந்து வற்புறுத்துவேன்.
- இவ்வாறு கலைஞர் கூறினார்.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற திமுக தலைவர் கலைஞர் பாலவாக்கம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் மரக்காணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கீழ்புத்துப்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி சென்ற கலைஞரை, அம்மாநில திமுகவினர் வரவேற்றதுடன், அம்மாநிலத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தெரிவித்தனர். 

அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். 

மத்திய, மாநில திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் என்றபோதும், அது காலதாமதமாகும் என்பதால், அதுவரைக்கும் திமுக சார்பில் வழங்கப்படும் உதவிகள் இடைக்கால நிவாரணமாக அமையும் என்ற நோக்கத்தோடு, உடனடியாக இந்த நிதிகள் ஒதுக்கப்படுகிறது என்றும், அதுதவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் திமுகவினர் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

கலைஞரின் காரை வழிமறித்த போலீசார் : கடலூர் பரபரப்பு

தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளை தி.மு.க தலைவர் கலைஞர்  பார்வையிட்டார். 

கடலூரில் ரெட்டிச்சாவடி, கங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், உள்ளிட்ட பல பகுதிகளை பார்க்கும் திட்டமும் அதற்கான வழிகளும் முன்கூட்டியே காவல் துறையிடம் வழங்கப் பட்டிருந்தது. 

இந்நிலையில் அவர் ரெட்டிச்சாவடி, பாகூர், சோரியாங்குப்பம் வழியாக கடலூர் கங்கனாங்குப்பத்திற்கு வந்தார். 
அங்கு புயலில் இடிந்து கிடந்த குடிசை வீடுகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் செல்ல ஆல்பேட்டை செக்போஸ்ட் வழியாக சென்றார்.

முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மற்றும் பாதுகாப்பு போலீசாரின் கார்கள் அவரின் காரை பின் தொடர்ந்தன. கமாண்டோ போலீசாரின் கார் முன்னால் சென்றது. அப்போது கடலூர் செக்போஸ்ட்டில் சாலையின் குறுக்கே இருக்கும் தடுப்புகளை அகற்றப்படாமல் இருந்தது.

சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த போலீசார் கார்களை மறித்தனர். நேராக செல்ல அனுமதியில்லை என்றும் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறும் கூறினார்கள். குண்டும் குழியுமாக இருக்கும் 5 கி.மீ புறவழிச்சாலையை சுற்றிக்கொண்டு போகுமாறு கூறினார்கள். 

இதனால் கலைஞரின் கார் உள்பட அனைத்து வாகனங்களும் அங்கு நிற்க நேரிட்டது. திமுகவினரும் அங்கிருந்த பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.முன்னாள் முதல்வரின் காரினையே மறிப்பதா என ஆவேசம் அடைந்த மாநில மாணவரணி செயலாளர் புகழேந்தி தலைமையில் திமுக நிர்வாகிகள் போலீசாரிடம் சென்று வாக்கு வாதம் செய்தனர்.

உடனடியாக தடைகளை அகற்றாவிட்டால் நாங்களே அகற்றுவோம் எனக்கூறினார்கள். திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தடை களை அகற்றி கலைஞரின் காருக்கு வழிவிட்டனர். அதன் பின்னர் அவர் மஞ்சக்குப்பம் வழியாக கடலூர் சென்றார்.




No comments:

Post a Comment