கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, January 19, 2012

தா.பாண்டியன் சொன்னது சரிதானா?


20.07.2011 ஜுனியர் விகடனில்...
இதுவரை ஜெயலலிதா எடுத்துவரும் அத்தனை வேகமான நடவடிக்கைகளிலும் நான் விவேகத்தைக் காண்கிறேன்... ஒன்று மட்டும் சொல்கிறேன், 100 கருணாநிதிகள் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஜெயலலிதா ஆக முடியாது!
- தா.பாண்டியன்
புல்லறுக்கும் கதிர்அரிவாள்
ஆயிரம் ஒளிக்கர
ஆதவன் எப்படி
பேயிருட்டுக்குச் சமமென
பேச்சுக்குக் கூடச் சொல்ல முடியும்
முன்னாள் நட்சத்திரமோ
இன்னாள் நட்சத்திரமோ
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
அணிவகுத்து வந்தாலும்
உறுதியாய் விடிவு என்பது
உதயசூரியனால் மட்டும்தான்
கதிர் அறுக்க வேண்டிய
கம்யூனிஸ்ட் அரிவாள் ‡ இப்படிப்
போயஸ் தோட்டப்
புல்லறுத்துக் கொண்டிருப்பது
புரியாத ஒன்று
தன் நிழல்கூட
தன் காலில் விழக்கூடாது என்ற
தன்மானத்
தஞ்சைக் கோபுரத்தை ‡
சிதைந்துபோன
சின்ன வீட்டோடு
ஒப்பிடுவதா
சாக்கடையைச்
சலவை செய்ய முயலும் சோப்பா
வாயைக் கழிவாயாக்கும்
வார்த்தைக்கா தா. பா ?
- பேரா. அப்துல்காதர், பொதுச்செயலாளர், தேசிய லீக்
------------------------------------------------------
கலைஞரால் முடியாதுதான்!
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை ‡ 964
இந்தக் குறட்பாவை இந்திய பொது வுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
' வானில் செங்கொடி உயரட்டும்; வர்க்கப் புரட்சி தொடரட்டும் ' என்று தொழிலாளர் வர்க்கத்தின் நாடி நரம்புகளில் எழுச்சியூட்டு கின்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இப்படியும் ஒருவர் மாநிலச் செயலாளராக இருப்பது வெட்கத் திற்கும் வேதனைக்கும் உரியது. எந்த ஒரு மனிதன் தன் நிலையில் இருந்து ஒரு படி கீழே இறங்கி தனது சுயநலத்திற்காகச் செயல் படவோ, பேசவோ செய்கின்றானோ, அந்த மனிதன், தலையில் இருந்து உதிர்ந்து போன மயிருக்குச் சமம் என்றார் வள்ளுவர்.
இவர் ஜெயலலிதாவை அங்காளபர மேஸ்வரி, ஆயிரம் கண்ணுடையாள் என்று எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து தள்ளி இவருடைய காரியங்களைச் சாதித்துக் கொள் ளட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை.
அதைவிடுத்து, எத்தனை கருணாநிதி வந்தாலும் ஜெயலலிதாவிற்கு இணையாகாது என்பது போன்ற நகைச்சுவையை வெளிப் படுத்திக் கொண்டிருப்பதுதான் வேதனை.
இவரது வார்த்தைப் படியே பார்த்தாலும், ஜெயலலிதாவைப் போலக் கலைஞரால் தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ற முடியாது தான்.
ஜெயலலிதாவைப் போன்று ஆதிக்க எண்ணத்தோடு சமச்சீர்க் கல்வியைத் தடுக்க முடியாதுதான்.
ஜெயலலிதாவைப் போலத் தமிழக அரசுக்குச் சொந்தமான தலைமைச் செயலகம் இருந்தாலும் பழைய கட்டிடத்தில்தான் இருப்பேன் என்று தலைக்கனத்தோடு சொல்ல முடியாதுதான்.
ஜெயலலிதாவைப் போல நான் பாப் பாத்தி, என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என பட்டவர்த்தனமாகச் சட்ட மன்றத்தில் அறிவிக்க முடியாதுதான்.
ஜெயலலிதாவைப் போல ஈழத்தில் போர் என்று வந்தால் அங்கு மக்கள் இறக்கத்தான் நேரும் என்று இரக்கமின்றி சொல்ல முடியாது தான்.
ஜெயலலிதாவைப் போல நாடே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை என, கொடநாடு ஓடிப்போய் ஓய்வெடுக்கத் தெரியாதுதான்.
பெரியாரையும், அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக வந்திருப்பேன் என்று சொன்ன தலைவர் கலைஞர் எங்கே! தகரம் கண்டுபிடிக்கும் காலத்திற்கும் முன்பே, உண்டியல் கண்டுபிடித் தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று கேலி பேசிய ஜெயலலிதா எங்கே!
எதிரியையும் மதித்து, அவர்கள் வீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மரியாதை செய்பவர் கலைஞர்.
யாராக இருந்தாலும் எடுத்தெறிந்து மரியாதை இல்லாமல் நடப்பவர் ஜெயலலிதா என்பதைத் தா. பா தனது வீட்டு நிகழ்ச்சியை ஜெயா புறக்கணித்ததன் மூலமே தெரிந்திருப் பார்.
மனச்சாட்சி உள்ளவர்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் எளிதில் புரியும். தா.பாவிற்குப் புரிய வாய்ப்பில்லை.
சிற்பி செல்வராசு
துணைப் பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்.

No comments:

Post a Comment