கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 27, 2011

திகாரில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு


திமுக தலைவர் கலைஞர் 23.05.2011 அன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழியனுப்பு வைத்தனர்.

கலைஞருடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் சென்றனர்.

மாலையில் கருணாநிதி, அவரது மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா மற்றும் திமுக எம்.பி.க்கள் திகார் சிறைக்கு சென்றனர். கனிமொழியை கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். சிறையின் துணை கண்காணிப்பாளர் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு பற்றி திகார் சிறை டைரக்டர் ஜெனரல் நீரஜ் குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘கனிமொழியுடன் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பை நாங்கள் கண்காணிக்கவில்லை’ என்றார்.
பின்னர், அங்கிருந்து கருணாநிதி, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
முன்னதாக, டெல்லியில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் கனிமொழியை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் கனிமொழியை சந்தித்து பேசினர்.

காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.

எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார்.

இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அவரது பேரன் ஆதித்யாவுடன் அமர்ந்திருந்தார்.

பின்னர் கனிமொழிக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் இடையே காந்தி அமர்ந்தார். சிறிதுநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் 23.05.2011 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக உறவில் பாதிப்பு இல்லை - காங். :

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி 23.05.2011 அன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

‘’காங்கிரசுக்கும், தி.மு.கழகத்துக்கும் இருந்து வரும் உறவில் பாதிப்பு ஏதும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால்,

அவர் சோனியா காந்தியை சந்திக்க வில்லை, காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கருணாநிதி சந்திக்க வில்லை என்பதை பெரிது படுத்த தேவை இல்லை. இதனால் தி.மு.க-காங்கிரஸ் உறவு பாதிக்கபடும் என்று கூறுவதும் தவறு’’ என்று கூறினார்.



அவதூறான பொய்ச் செய்தி வெளியிட்ட இந்து நாளிதழுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்


இந்து நாளிதழில் தன்னை பற்றி வெளியிடப்பட்ட செய்தி அவதூறானது, உண்மைக்கு மாறானது எனக்கூறி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்து 23.05.2011 அன்றைய இதழின் முதல் மற்றும் 11ம் பக்கங்களில் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து 2008ம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் சில கருத்துக்களை கூறியதாக கற்பனை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தி வரும் ரகசிய கேபிள்களில் இருந்து இந்த தகவலை திரட்டி பிரசுரிப்பதாக இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது, அவதூறானது, கற்பனையானது, தவறான உள்நோக்கம் கொண்டது என தயாநிதி மாறன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். சுய லாப நோக்கங்களுக்காக தனக்கு எதிராக செயல்படும் ஒரு லாபியின் அங்கமாகிவிட்ட இந்து நாளிதழ், சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையையும் நல்ல பெயரையும் கெடுப்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது என்றும் தயாநிதி கூறியுள்ளார். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், அது உண்மையானதுதானா என்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து அதன் பின்னர் பிரசுரிப்பதுதான் பத்திரிகை தர்மம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் கண்ணியமான எந்த பத்திரிகையும் அதைத்தான் செய்யும். இந்து நாளிதழ் அந்த குறைந்தபட்ச கடமையைக்கூட செய்யத் தவறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என தயாநிதி மாறன் கண்டித்துள்ளார்.
விற்பனை சரிந்து வருவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் சமீபகாலமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ரகசியங்கள் என்ற பெயரில் ஆதாரமற்ற செய்திகளை மலிவான விளம்பரம் தேடுவதற்காக இந்து நாளிதழ் வெளியிட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. அதிகம் விற்பதற்காக ஒழுக்க நியதிகளில் இருந்து இந்து நாளிதழ் தடம் புரண்டு செல்கிறது என்று தயாநிதி மாறன் மேலும் கூறியுள்ளார்.
மேற்கண்ட செய்திகளை உடனடியாக திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிப்பதுடன் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடாக தரவும் இந்து முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவ்வாறு செய்யத் தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்.

உளமாற என உறுதி கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்


சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கு புதுப்பிக்கப்பட்ட பின்னர் முதல் நிகழ்ச்சியாக 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 23.05.2011 அன்று பகல் 12.30 மணிக்கு துவங்கியது.

பகல் 12.25 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர். உட்கார இடம் இன்றி தவித்த அவர்கள் 5 நிமிடம் கழித்து 6ம் வரிசை இருக்கையில் அமர்ந்தனர். சுப தங்கவேலன், மைதீன்கான் ஆகியோர் இருக்கை கிடைக்காமல் நீண்ட நேரம் தவித்தனர்.

தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 23.05.2011 அன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாகயர் செ.கு.தமிழரசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர், 23.05.2011 அன்று மதியம் 1.10 மணிக்கு பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்கும் முன்பு, வெற்றி சான்றிதழை பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் கொடுத்தார். பின்னர், “உளமாற” என்று கூறி பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்தார்.
பேரவை உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசனுடன் கை குலுக்கி மரியாதை செலுத்தினார். இருக்கைக்கு செல்லும் போது விஜயகாந்த் உள்பட பேரவையில் இருந்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். ஸ்டாலின் இருக்கைக்கு இடது பக்கம் எ.வ.வேலு, வலது பக்கம் ஐ.பெரியசாமி அமர்ந்திருந்தனர்.

Thursday, May 26, 2011

ஐ.மு.கூட்டணி அரசு அறிக்கை வெளியீடு


ஊழலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2 ஆண்டுகளை முடித்து, 3வது ஆண்டில் 22.05.2011 அன்று அடியெடுத்து வைத்தது.
இதை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மன்மோகன் இல்லத்தில் ஐ.மு கூட்டணி தலைவர்கள் கூட்டம் 22.05.2011 அன்று நடந்தது. அப்போது, கடந்த 2 ஆண்டு ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள், அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் ஐ.மு.கூட்டணியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மன்மோகன், சோனியா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஊழலால் ஐ.மு கூட்டணி அரசுக்கு களங்கம் ஏற்பட்டது. இதை நிச்சயம் தடுப்போம். ஊழல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். ஊழலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த பிரச்னையை சரியான முறையில் கையாண்டு குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
ஊழலை தடுத்து நிர்வாகத்தை மேம்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை ஐ.மு.கூட்டணி அரசு எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகளுக்கு விரைவில் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். தூய்மையான, பலனுள்ள நிர்வாகத்துக்கு குறுக்கே எந்த தடை வந்தாலும், அதை பொறுத்து கொள்ள மாட்டோம். அரசு பணியில் உள்ளவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்போம்.
ஊழல் புகார் கூறுபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வகை செய்யும் மசோதா ஏற்கனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விரைவில் ஒப்புதல் கிடைக்க முயற்சி எடுப்போம்.

இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு திமுக சார்பில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கனிமொழி, ராசாவை பார்க்க கருணாநிதி டெல்லி பயணம்


திமுக தலைவர் கருணாநிதி 23.05.2011 அன்று டெல்லி செல்கிறார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி 22.05.2011 அன்று பேட்டி அளித்தார்.
மத்தியில் ஐ.மு. கூட்டணி அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் இன்று அளிக்கும் விருந்தில் திமுக சார்பில் யார் கலந்து கொள்கிறார்கள்?
நாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார். பிரதமர் அளிக்கும் விருந்தில் திமுக சார்பில் அவர் கலந்து கொள்வார்.
நீங்கள் மே 23ம் தேதி டெல்லி போவதாக செய்தி வந்துள்ளதே?
திகார் சிறையில் இருக்கும் என் மகள் கனிமொழி, சரத்குமார், ராசா ஆகிய 3 பேரையும் பார்க்க நாளை டெல்லி செல்கிறேன்.
டெல்லி செல்லும்போது, சோனியா காந்தியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?
நாளைய தினம் வாய்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன்.
உங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உறவு தற்போது எப்படி இருக்கிறது?
(இருவருக்கும் இடையே உறவு இருக்கக் கூடாது என்று) நீங்கள் விரும்புவதை போல அப்படி எதுவும் இல்லை.
இவ்வாறு கருணாநிதி பேட்டி அளித்தார்.

சின்னக்குத்தூசி மறைவு: கலைஞர் இரங்கல்










அக்ரஹாரத்து அதிசய மனிதராம் வ.ரா.வைப் போல்
''அவாள்களை அய்யர் என்ற காலமும் போச்சே''
என்று பாடிய பாரதி வழியில் -
எம்மொழி செம்மொழி என
நம்மொழியாம் தமிழ் மொழியின் தலை உயர்த்திய
பரிதிமாற் கலைஞனின் பாதையில்
எழுபத்தேழு ஆண்டுக்கு மேலாக வாழ்ந்து
எழுச்சிமிகு தமிழால்
இன உணர்வு முரசம் ஒலித்தவர்!
என்பால் என்றைக்கும்
உலராத அன்பின் ஈரம் காத்தவர்!
காற்றில் மிதக்கும் தூசு ஒன்று
என் மீது பட்டாலே
ஆற்றொணா துயர் கொண்டு
அதனை விரட்டுவதில் அன்னையாய் வாய்த்தவர்!
குத்தூசி குருசாமிக்குப் பிறகு
கன்னல் தமிழில்
கடும் புயல் தமிழில்
எண்ண எண்ண இனிக்கின்ற
வண்ணத் தமிழில் இந்த
சின்னக்குத்தூசி படைத்திட்ட
எழுத்துச் செல்வமெல்லாம்
எடுக்கக் குறையாத
அடுக்கி மாளாத
அத்தனை பெரும் செல்வமென்பேன்.

மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசி காலமானார்


திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த திரு.சின்னகுத்தூசி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் 22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.


கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். தன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தபோதிலும் தன்னை சந்தித்திட வருகை தந்த பத்திரிகை நண்பர்கள், அரசியல் நண்பர்களிடம் நாட்டுநிலைமை, அரசியல் நிலைமை, பற்றியெல்லாம் மணிக்கணக்கில் அழுத்தம் திருத்தமாக விவாதித்து வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

(முதல்வர்) கலைஞர் அவர்கள் தனது அரசாங்க நிகழ்வுகள், சட்டமன்ற நிகழ்வுகள், தேர்தல் நிகழ்வுகள் என்று பல்வேறு அயராதப் பணிகளுக்கு மத்தியிலும பில்ராத் மருத்துவமனைக்கு பலமுறை நேரில் வருகைதந்து திரு. குத்தூசி அவர்களுடன் கலந்துரையாடி அவரது உடல்நலனில் அக்கறை காட்டியதன் மூலம் அவர்கள் இருவரிடையே இருந்த நட்பு எத்தகைய வலிமை மிக்கது என்பதை உணரமுடியும்.

இதேபோல் (துணை முதல்வர்) மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆட்சிப்பணி, கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையிலும் பல முறை நேரில் வருகைதந்து சின்னகுத்தூசியின் உடல்நலனை அக்கறையுடன் விசாரித்தார். அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், தி.மு.கழக முன்னணியினரிடம் குத்தூசியின் எழுத்துப்பணியை பாராட்டிப் புகழ்ந்து புளகாங்கிதம் கொள்வார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் தி.மு.கழக மத்திய-மாநில அமைச்சர்கள் கழக முன்னணியினர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகை தந்து சின்னக்குத்தூசியின் உடல் நலத்தில் அக்கறை காட்டினர்.

நக்கீரன் குடும்பத்தினர், சின்னகுத்தூசியைப் பிதாமகனாகப் தந்தெடுத்துக்கொண்டதுடன், திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இரவு பகல் பார்க்காமல் கண்துஞ்சாமல்-ஒரு தந்தைககு மகன் என்னென்ன கடமைகளைச் செய்வாரோ அத்தனை கடமைகளையும் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததோடு, கடந்த ஓராண்டு காலம் பில்ராத் மருத்துவமனையில் அரண்மனை வைத்தியத்தை திரு.சின்னகுத்தூசிக்கு வழங்கினார்.

மறைந்த திரு.சின்னக்குத்தூசியின் உடல் இராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. தி.மு.க. கழகத் தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர்.

மே 22 மாலை 4 மணியளவில் மயிலாப்பூரில் அன்னாரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சின்னகுத்தூசியின் வாழ்க்கை நிகழ்வுகள் வருமாறு:

சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.

திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.

இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

சின்னக்குத்தூரி மரணம் - ராமதாஸ் இரங்கல் :

திரு,சின்னக்குத்துர்சி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் மறைவையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

சின்னக்குத்தூசி பத்திரிகை உலகில் பல்வேறு முத்திரைகளை பதித்தவர். அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் படைத்தவர். ஒரு பத்திரிகையாளர் பொதுவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுராதரணமாய் திகழ்ந்தவர். திமுக தலைவர் கலைஞருக்கு உற்ற துணையாய் இருந்தவர்.

அவரது திடீர் மறைவு கலைஞர் அவர்களுக்கும், பத்திரிகை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

சின்னக்குத்தூசி மறைவு - கி.வீரமணி இரங்கல் :

திரு,சின்னக்குத்துர்சி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் மறைவையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மூத்தப் பத்திரிகையாளரும், திராவிட இயக்கச் சிந்தனையாளருமான திருவாரூர் இரா. தியாகராசன் (சின்னக்குத்தூசி வயது 80) அவர்கள் இன்று காலை மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அக்கிராகாரத்து அதிசய மனிதர் இவரும்!

திருச்சி பெரியார் ஆசிரியர் பள்ளியின் தொடக்க முதல் ஆண்டில் படித்த மாணவர் இவர். சிறிது காலம் ஆசிரியர் பணியில் இருந்து, அதிலிருந்து விடுபட்டுப் பொதுப் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்; திருமணம் செய்து கொள்ளவில்லை.

தோழர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களிடம், தனிச் செயலாளராகப் பணியாற்றி, அவர் மறைவுக்குப்பின் பத்திரிகைத் துறையில், எழுத்துத் துறையில் தம் கவனத்தைச் செலுத்தினார்.

“முரசொலி'யில் தமது கடைசி மூச்சு அடங்கும் வரை தன் எழுத்துப் பணி கடமையை ஆற்றினார். ‘எதிரொலி’ ஏட்டின் முழுப் பொறுப்பையும் ஏற்று அன்றாடம் பல புனைப் பெயர்களில் எழுதி மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

‘நக்கீரனில்’ அவர் எழுதிய கட்டுரைகள் நூல்களாக வெளி வந்துள்ளன. “உண்மை' இதழில் பல முக்கிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

பழைய ஆதாரங்களைக் கொடுப்பதிலும், எந்தப் பிரச்சினையானாலும் அதன் முழுப் பரிமாணத்தை அப்படியே படிப்பவர்களின் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே!

பழைய நூல்களைத் தேடிப் பிடித்து நம்மிடம் கொடுத்து அதுபற்றி எல்லாம் அளவளாவக் கூடியவர். நீண்டகாலமாக அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணியில் உள்ள அறை நூல்களின், ஏடுகளின் அடைக்கலமாகவே இருக்கும்; அதற்குள் அவரும் இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாலை நேரங்களில் பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். மாலை நேர அரசியல், பகுத்தறிவு, திராவிடர் இயக்க வகுப்பாகவே அது காட்சியளிக்கும்.

ஒரு முக்கியமான கால கட்டத்தில் அவரின் மறைவு தமிழ்நாட்டுக்கும், திராவிடர் இயக்கத்துக்கும் பேரிழப்பாகும்.

ஓராண்டு காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மறைவுற்றார். பத்து நாள்களுக்குமுன்பு கலைஞர் அவர்களுடன் நேரில் சென்று அவரைப் பார்த்து உடல் நலம் விசாரித்து வந்தோம்.

அவர் பிரிவால் வருந்தும் முரசொலி, நக்கீரன் குழுமத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கு நாமே ஆறுதலைச் சொல்லிக் கொள்ளும் நிலையில்தான் விடுதலை குழுமம் தனது வேதனைக் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறது.

இவ்வாறு கி.வீரமணி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சின்னக்குத்தூசி மறைவு - வைகோ இரங்கல் :

மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:


அரசியல் எழுத்து வித்தகர் சின்னகுத்தூசி மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், தாங்க முடியாத மனவேதனையும் அடைந்தேன். மலைப்பாறையைப் பிளந்து அற்புதச் சிற்பம் வடிக்கும் சிற்றுளியைப் போல, கலை அழகு மிளிறும் சித்திரப் பூக்களை ஆடைகளில் தைத்திடும் குத்தூசியைப் போல, வாதப் பிரதிவாதங்களை நிரல்படுத்தி, எதிர்க்கருத்துக் கொண்டோரையும் திகைப்பில் ஆழ்த்தும் ஆய்வுக் கட்டுரைகளைத் தீட்டி வந்த சின்னகுத்தூசி எனும் எழுத்தாளர் தியாகராசன் அவர்கள், திராவிட இயக்கத்துக்கும் தமிழகப் பொது வாழ்வுக்கும் தன் எழுத்தால் ஆற்றி வந்த தொண்டு ஈடு இணையற்றது; மங்காப் புகழ் பெற்றது.


எந்தவொரு கருத்தை முன்வைத்தாலும் அழகிய தோரண வாயிலில் நுழைந்து, எழில்மிக்க மாளிகையில் உலவுவது போல, மணம் வீசும் நந்தவனத்தில் நடப்பது போல, வாசகர்களைத் தன்வயப்படுத்தும் தனித்துவமான ஆற்றல் சின்னகுத்தூசி அவர்களுக்கே உரியதாகும்.


அரசியல் நிகழ்வுகளை, நூறாண்டு காலப் பொதுவாழ்வுச் செய்திகளை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட வரலாற்று நாயகர்களின் சிந்தனைகளை, கருத்துகளைப் பசுமரத்து ஆணிபோல மனதில் பதிய வைக்கும் அந்த உன்னதப் பணியை அவர்போலச் செய்வதற்கு இனி எவர் இருக்கிறார்?


பொடா கைதியாக வேலூர் மத்திய சிறையில் நான் இருந்தபோது என்னைச் சந்தித்து, தந்தை பெரியார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. இருவர் குறித்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி என்னை நெஞ்சாரப் பாராட்டியதை எப்படி மறப்பேன்?


மறுமலர்ச்சி நடைப்பயணத்தின் நிறைவுநாளில் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நான் இருந்தபோது, என்னை ஆரத்தழுவி உதிர்த்த அமுதச் சொற்களை எப்படி மறப்பேன்?


முன்பு உடல்நலம் கெட்டு அவர் சிகிச்சை பெற்றபோது அவரைச் சந்தித்தேன். அவருக்கு உடல்நலக் குறைவு என்று அறிந்தபோது சென்னை சென்றவுடன் பார்க்க அவாவுற்றேன்.

அவர் விமர்சித்தால்கூட அந்த எழுத்தில் ஒரு சுகம் இருக்கும். மிக மிக எளிமையானவர். தன்னலமற்ற கொள்கையாளர்.

அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கும், தமிழக எழுத்து உலகத்திற்கும் ஈடு செய்யவே முடியாத பேரிழப்பு ஆகும்.
அவருக்கு துக்கம் நிறைந்த கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்தார் சின்னக்குத்தூசி கரைந்தார் காலப் பெருவெளியில் - சுப.வீரபாண்டியன்:

நீ அணிந்திருந்தது
வெள்ளை வண்ணத்தில்
ஒரு கறுப்புச் சட்டை

நீ அக்கிரகாரத்தில் பிறந்த
பெரியார் திடல்

திருமணமே செய்துகொள்ளாத
உனக்குத்
தமிழகத்திலேயே பெரிய குடும்பம்

உன் பேனா
உரிமம் இல்லாமல்
நீ வைத்திருந்த ஆயுதம்

கலைஞர் உனக்கு
இரங்கற்பா எழுதவேண்டும்
என்பதற்காகவே
இறந்துபோனாயோ!