கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 28, 2010

உலகதமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை உறுப்பினர்கள் நியமனம்


தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அரசாணை:
தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம், ‘உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை‘ என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது. பேரவை 14 உறுப்பினர்களை கொண்டதாகும். பேரவையின் தலைவராக முதல்வரும், பேரவையின் கவுரவ செயலராக முனைவர் ராஜேந்திரனும்(தமிழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்) செயல்படுவர். உறுப்பினர்கள் விவரம்:
தமிழ்நாட்டு தமிழறிஞர்கள் வகைப்பாட்டில்:
முனைவர் பொன் கோதண்டராமன்(பொற்கோ), முனைவர் ராம.பெரியகருப்பன்(தமிழண்ணல்).
பிறமாநில தமிழறிஞர்கள் வகைப்பாட்டில்:
முனைவர் கி.நாச்சிமுத்து(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி), முனைவர் குளோரியா சுந்தரமதி(திருவனந்தபுரம்).
தமிழாய்வு நிறுவனங்கள் வகைப்பாட்டில்:
தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசு செயலர், முனைவர் ழான்&லா செவிலார்டு பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வு பள்ளி(புதுச்சேரி)
வெளிநாட்டு தமிழறிஞர்கள் வகைப்பாட்டில்:
முனைவர் ஜார்ஜ் ஹார்ட்(கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்கா),முனைவர் உல்ரிக்நிக்லாஸ் (ஜெர்மனி).
திராவிடவியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் தமிழரல்லாத வெளிநாட்டவர் வகைப்பாட்டில்: முனைவர் அஸ்கோ பர்ப்போலா(பின்லாந்து).
இந்திய தமிழ்ச்சங்க வகைப்பாட்டில்:
புலவர் பி.விருதாச்சலம், தமிழறிஞர், கரந்தை தமிழ்ச்சங்கம்.
வெளிநாட்டு தமிழ்ச்சங்க அமைப்பு வகைப்பாட்டில்:
முனைவர் தசரதன், தலைவர் பாரிசு தமிழ்ச்சங்கம்.
பேரவையின் இயக்குநர்:
முனைவர் மு.ராமசாமி, பேராசிரியர் நாடகத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
சிறப்பு உறுப்பினர்கள்:
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்.
நிர்வாகக்குழு 7 உறுப்பினர்களை கொண்டதாகும். இதில் நிர்வாக குழு தலைவர் மு.ராஜேந்திரன் (தமிழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர்), நிர்வாக குழு செயலர் மு.ராமசாமி தமிழ் பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர், பேரவை உறுப்பினர்களின் சார்பில் முனைவர் பொன் கோதண்டராமன், அரசு செயலர் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் தமிழியற்புலம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர் ஈசுவரப்பிள்ளை (பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை), செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்.
உலக தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவையின் அலுவலகம் தற்காலிகமாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை பார்வையிட்டார் முதல்வர் கருணாநிதி


சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி 24.10.2010 அன்று பார்வையிட்டார். அருகில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி

அரசின் திட்டபயன்களால் தி.மு.க மீது நம்பிக்கை


திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி திருவண்ணாமலையில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். உடன் அமைச்சர் வேலு, சுகவனம் எம்பி, நகராட்சி தலைவர் திருமகன் மற்றும் நிர்வாகிகள்

அரசு திட்டங்களின் பயன் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளதால், தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலையில் 24.10.2010 அன்று மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. எம்.பி. வேணுகோபால், எம்.எல்.ஏக்கள், கு.பிச்சாண்டி, ஆர். சிவானந்தம், கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், தி.மு.க முன்னோடிகள் 87 பேருக்கு பொற்கிழி, 87 பேருக்கு பைக், 870 பேருக்கு சைக்கிள், 8,700 பேருக்கு இலவச வேட்டி சேலைகள் ஆகியவற்றை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க வரலாற்றில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முக்கிய இடம் உண்டு. 1957ம் ஆண்டு தி.மு.க சந்தித்த முதல் தேர்தலில் இங்கிருந்து 4 எம்.எல்.ஏ.,க்களும் 1 எம்பியும் கிடைத்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தி.மு.க அணி சார்பில் நிறுத்தப்படுகிறவர்கள் வெற்றி பெற உறுதியேற்கும் நிகழ்ச்சியாகவே இது நடக்கிறது.
தி.மு.க. முன்னோடிகளுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் அது அவர்களின் உழைப்புக்கு ஈடாகாது. கட்சிக்காக பாடுபட்டவர்களை ஊக்கப்படுத்த, அவர்கள் இளைஞர்களை உற்சாகப்படுத்தி வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்று பொற்கிழி வழங்கப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக, முறையாக சேர்கிறது. ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை சந்திக்க பயப்படும் நிலை இப்போது இல்லை. தி.மு.க ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. அதன் பயனை மக்கள் அனுபவித்து கொண்டுள்ளனர். எனவேதான், தெம்போடு, தைரியத்தோடு மக்களை சந்திக்க முடிகிறது.
சில குறைகள் இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையை தி.மு.க. மீது மக்கள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை உள்ளவர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக் கும் பணியை கட்சியினர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

Sunday, October 24, 2010

டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்


அவதூறு செய்தி பரப்பிய ஜெயா டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்க வேண்டும், தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் அனுராதா, துணைத்தலைவர் சுனில், சீனியர் நிருபர் ரமணி, செய்தி ஆசிரியர் தில்லை மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அதன் முதன்மை ஆசிரியர் ஆதித்ய சின்ஹா, வெளியீட்டாளர் ஜூகுஜூன்வாலா ஆகியோருக்கு மு.க.அழகிரி சார்பில் அவரது வக்கீல் பிரேம்ராஜ் அம்புரோஸ் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. இவரது உழைப்பு, சேவைக்கு கிடைத்த பரிசுதான் மத்திய கேபினட் அமைச்சர் பதவி. இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது இவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக, பொய்யான வதந்திகளை திரும்பத் திரும்ப பரப்பி வருகிறது. அக்.22ம் தேதி பிரசுரமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதல்பக்கத்தில் டெல்லி ஏர்போர்ட்டில் ராஜாவை அவமானப்படுத்திய அழகிரி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. உள்நோக்கம் கொண்டது. ஜெயா டிவியில் ஒளிபரப்பிய செய்தியை தீரவிசாரிக்காமல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பலர் அழகிரியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இருந்து வரும் நன்மதிப்பிற்கு பாதிப்பையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உழைப்பு, ஒற்றுமை இருந்தால் வெற்றி உறுதி - முதல்வர் கருணாநிதி


உழைப்பு, ஒற்றுமை இருந்தால் நம் அணிக்கு வெற்றி உறுதி என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (23.10.2010) வெளியிட்ட அறிக்கை:
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிகள், எதிர்க் கட்சிகளாவதும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளாவதும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருவிகளாக விளங்குவதைப் புறந்தள்ளிவிட முடியாது. ஆளுங்கட்சி என்ற ஆணவப் போக்குடன் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதும், எதிர்க் கட்சியாகவே இருக்க வேண்டுமா என்ற எரிச்சலில், எதையும் பேசுவது, எதற்காகவும் போராடுவது, ஏனோதானோவென்று ஆளுங்கட்சியை விமர்சிப்பது, இவையெல்லாம் ஜனநாயகத்தில் ஏற்புடையது என்று எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த அடிப்படைக் கருத்தை அடியோடு மறந்துவிட்டு, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும், அதனுடன் தோழமை கொண்டு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற தி.மு.க. அணியையும் கடுமையான தாக்குதலை நடத்தியே, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு அணியைத் திரட்டுவதற்கான ஆயத்தங்கள் அனைத்திந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்றுள்ள அரசியல் நிலையை மாத்திரம் அளந்து பார்த்தோ, எடை போட்டுப் பார்த்தோ எந்த முடிவையும் எடுக்க விரும்பாமல், சாதி, மத வேறுபாடுகள், மனித நேயத்திற்கு மாறான செயல்கள், மூட நம்பிக்கைகள் என்ற அடிப்படையில் நடைபெறும் முயற்சிகள் எதுவாயினும் அது இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடியதாகவும், மத நல்லிணக்கத்திற்கு மாறுபட்டதாகவும், திராவிட இன உணர்வுகளைச் சிதைக்கக் கூடியதாகவும், அன்னைத் தமிழின்பால் கொண்டுள்ள பற்றினை அசைக்கக் கூடியதாகவும் அமையுமேயானால் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் வாய்மூடி மவுனியாக திமுக இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை.
திமுகவின் இந்த உணர்வுகளை அவற்றின் அடிப்படையிலான லட்சிய முழக்கங்களை, குறைந்தபட்ச பொதுத் திட்டங்களாக கொண்டுதான் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தேர்தல் அல்லாத நேரங்களிலே கூட தோழமை அணிகள் உருவாகியிருக்கின்றன. அந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வீறுநடை போட்டு வருவது தான் திமுக.
நேற்று முன்தினம் கோவை மாவட்ட தி.மு.க. ஆய்வுக்கூட்டத்தில் நான் எடுத்துரைத்தவாறு, கொள்கையும், லட்சியமும் முன்வைக்கப் பெற்று அவற்றை வென்றெடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் பயன்பட வேண்டும். அல்லாமல் தேர்தல் வெற்றிதான் தி.மு.கழகத்தின் மூல நோக்கம் என்று என்றைக்கும் கூறியதுமில்லை, கருதியதுமில்லை.
ஆனால், தமிழகத்தில் உள்ள சில ஏடுகள், ஒரு கட்சியைப் பொறுத்தவரை தேர்தலுக்காக எடுத்து வைக்கும் திட்டங்கள், கொள்கைகள், அவற்றை நிறைவேற்றும் பாங்குகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு அந்தக் கட்சியின் பிரச்சாரத்துக்காகக் கூடுகிற அல்லது கூட்டப்படுகிற கூட்டத்தையே அளவாக வைத்துக்கொண்டு எது நல்ல கட்சி அல்லது எது பெரிய கட்சி என்ற தீர்ப்பு வழங்க இப்போதே எழுதுகோல்களைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றன.
1971ம் ஆண்டு அண்ணா இல்லாத காலம். பெரியாரின் துணையோடு, அன்றைக்கு நம்முடன் நட்பு கொண்டிருந்த சில கட்சிகளின் தோழமையோடு, இ.காங்கிரஸ் கட்சியுடன் அணிவகுத்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டம். காமராசரும், ராஜாஜியும் ஓரணியிலிருந்து நம்மை எதிர்க்கிற நேரம்.
அப்போதுதான், சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் காமராசரும், ராஜாஜியும் ஒரே மேடையில் ஏறி திமுக அணியை எதிர்த்து முழங்குகிறார்கள். அந்த மேடையிலே தான் ராஜாஜி, காமராசர் நெற்றியிலே வெற்றித் திலகம் இட்டு, ஆசி வழங்கினார்.
எமது அணியின் தலைவியாக இருந்த இந்திரா காந்தி, அந்தக் கூட்டத்தின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, நாம் வெற்றி பெறுவோமா என்பது போல, விழிகளை அகல விரித்துப் பார்த்தார். ''கவலைப்படாதீர்கள். இந்த அரசு புரிந்துள்ள சாதனைகளையும், அடுத்து நாம் புரியவிருக்கும் சாதனைகளையும் நம்பிக்கையோடு ஏற்றுள்ள மக்கள் ஏமாற்ற மாட்டார்கள்'' என்று நான் இந்திராவுக்கு விளக்கமளித்தேன்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்தத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து காமராசரும், ராஜாஜியும் பரமாத்மாவே பாஞ்ச சன்யம் முழங்கியது போல் முழங்கிய அந்தத் தேர்தல் போரில் திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய அந்தக் கூட்டம் கணித்த ஆரூடத்தையும் மிஞ்சி, தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பே வென்று காட்டியது.
கூட்டத்தை வைத்து வெற்றி தோல்வியை எடைபோட்டு விடக்கூடாது என்பதற்காக அல்ல; கூட்டமும் தேவைதான் நாம் கூறுகிற கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் தீர்ப்பளிப்பதற்கு என்பதில் எனக்கு இருவேறு எண்ணமும் இல்லை.
ஆனால், கூட்டம் மாத்திரமே அளவுகோல் எனக் கணிப்போருக்கு, அதுவே அளவுகோல் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக, அந்த நாள் திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தை நினைவுபடுத்தினேன். 1962 பொதுத் தேர்தலில், காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அண்ணா பேச்சைக் கேட்க லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். ஆனால், அந்தத் தேர்தல் முடிவு என்ன?
பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்கிறார்கள். கட்சியின் தேவையை உணர்கிறார்கள். அவர்களை அழைத்து, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு என்று சொல்வதற்கு அல்லும் பகலும் உழைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள், ஆர்வம் படைத்தவர்கள், அக்கறையுடன் பணியாற்றக் கூடியவர்கள் தொண்டர்கள்.
தொண்டர்கள், தொண்டுள்ளம் படைத்த தூயவர்கள் இடைவிடாது உழைத்து இணையற்ற வெற்றியைத் தேட வேண்டும் என்று செயல்படுகிற சிங்க ஏறுகள், கொள்கை வேங்கைகள். இன்று உழைத்தது போதும் என்றெண்ணாமல் இன்னும் எண்ணற்ற பணிகள் இருக்கின்றன என்றெண்ணி, காஞ்சியில் மட்டுமல்ல திமுக தேர்தலில் நின்ற எல்லா இடங்களிலும் செயல்பட்டிருந்தால், அண்ணா தலைமையில் 1967ல் அமைந்த ஆட்சி, அதற்கு முன்பே 1962லேயே அமைந்திருக்கும் என்பதை யார் தான் மறுத்திட இயலும்?
இதிலிருந்து என்ன புரிகிறது? உழைப்பு, உழைப்பு, உழைக்கும் மாமணிகளாம் தொண்ட்களிடையே ஒற்றுமை, ஒற்றுமை இருப்பின் எவர் அணி வகுத்து நின்றாலும், திமுக அணிக்கு வெற்றி உறுதி
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியை நேற்று (23.10.2010) அவரது இல்லத்தில் தமிழக ஆயர் பேரவையின் துணைத் தலைவர் ஆயர் பீட்டர் ரெமிஜீயுஸ் சந்தித்து பேசினார். உடன் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை மற்றும் தமிழக கத்தோலிக்க கழக முன்னாள் செயலாளர் சார்லஸ் பொரோமியோ.

திமுக இளைஞர் அணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


திமுக இளைஞர் அணி சார்பில் திருவண்ணாமலையில் நேற்று (23.10.2010) மாநில அளவில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
திமுக இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டது. அதில், முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான இறுதிச் சுற்று போட்டி நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 216 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். நேற்று காலை 9 மணிக்கு போட்டிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாலை 4 மணி வரை அரங்கத்தில் அமர்ந்து, போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை துணை முதல்வர் உற்சாகப்படுத்தினார். அரங்கத்துக்கு அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் மாணவர்களுடன் துணை முதல்வர் கலந்துகொண்டார்.
ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?, திராவிடத்தின் நிலை உயர்த்திய தலைவர்கள் எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும், புறநானூற்று தாய், இதயத்தை தந்திடு அண்ணா என்ற தலைப்பில் கவிதை ஒப்புவித்தல் போட்டியும், அறிஞர் அண்ணா வழியில் கலைஞர், மொழிப்போர் களத்தில் ஐயா, அண்ணா, கலைஞர் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களை தனித்தனியே அழைத்து ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். போட்டிகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நடக்கிறது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் இன்று (24.10.2010) பரிசுகளை வழங்குகிறார்.

ரஜினி -கமலுக்கு அழகிரி நேரில் அழைப்பு


மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று தனது மகன் தயாநிதி அழகிரி திருமண அழைப்பிதழை வழங்கினார்.