கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 20, 2012

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. ரூ. 50 லட்சம் உதவி : கலைஞர் அறிவிப்பு


புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் உள் ளிட்ட பகுதிகளைப் பார்வை யிட்ட திமுக தலைவர் கலை ஞர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவா ரண உதவிகளை வழங்க ரூ.50 லட்சம் நிதியை திமுக சார்பில் ஒதுக்குவதாக கூறினார்.
தானே புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை திமுக தலைவர் கலைஞர் நேரில் பார்வையிட்டார். இதற்காக அவர் 04.01.2011 அன்று காலை சென் னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன் னாள் அமைச்சர்களான துரை முருகன், பொன்முடி, ஏ.வ. வேலு ஆகியோரும் புறப் பட்டுச் சென்றனர்.

அப்போது, தி.மு.க. தலைவர் கலைஞர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வரு மாறு:-

கேள்வி:- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கப் புறப்படுகிறீர்கள். வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

பதில்:- தமிழக அரசின் செயல்பாடு கள் பற்றி மக்கள் அதிருப்தியாக இருக் கிறார்கள். அந்த மக்களை நேரில் சந்திக் கத்தான் போகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்தபிறகு கூறுகிறேன்.
கேள்வி:- மத்திய அரசிடம் கூடுதல் நிதி வேண்டுமென்று கேட்பீர்களா?

பதில்:- நான் தற்போது மாநில அரசின் தலைவன் அல்ல, மத்திய அரசிடமிருந்து என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும் என்று இப்போது சொல்ல முடியாது.
கேள்வி:- உங்களுடைய கூட்டணி கட்சியின் ஆட்சி என்ற முறையில் மத்திய அரசிடம் உங்கள் அமைச்சர்களை என் னென்ன உதவிகளை கேட்கச் சொல் வீர்கள்?

பதில்:- நம்முடைய மாநிலத்தில் வெள்ள நிவாரணத்திற்கு தேவையான உதவிகளை எல்லாம் மத்திய அரசு, மாநில அரசுக்கு செய்யவேண்டும் என்பதை தொடர்ந்து வற்புறுத்துவேன்.
- இவ்வாறு கலைஞர் கூறினார்.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற திமுக தலைவர் கலைஞர் பாலவாக்கம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் மரக்காணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கீழ்புத்துப்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி சென்ற கலைஞரை, அம்மாநில திமுகவினர் வரவேற்றதுடன், அம்மாநிலத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தெரிவித்தனர். 

அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். 

மத்திய, மாநில திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் என்றபோதும், அது காலதாமதமாகும் என்பதால், அதுவரைக்கும் திமுக சார்பில் வழங்கப்படும் உதவிகள் இடைக்கால நிவாரணமாக அமையும் என்ற நோக்கத்தோடு, உடனடியாக இந்த நிதிகள் ஒதுக்கப்படுகிறது என்றும், அதுதவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் திமுகவினர் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

கலைஞரின் காரை வழிமறித்த போலீசார் : கடலூர் பரபரப்பு

தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளை தி.மு.க தலைவர் கலைஞர்  பார்வையிட்டார். 

கடலூரில் ரெட்டிச்சாவடி, கங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், உள்ளிட்ட பல பகுதிகளை பார்க்கும் திட்டமும் அதற்கான வழிகளும் முன்கூட்டியே காவல் துறையிடம் வழங்கப் பட்டிருந்தது. 

இந்நிலையில் அவர் ரெட்டிச்சாவடி, பாகூர், சோரியாங்குப்பம் வழியாக கடலூர் கங்கனாங்குப்பத்திற்கு வந்தார். 
அங்கு புயலில் இடிந்து கிடந்த குடிசை வீடுகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் செல்ல ஆல்பேட்டை செக்போஸ்ட் வழியாக சென்றார்.

முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மற்றும் பாதுகாப்பு போலீசாரின் கார்கள் அவரின் காரை பின் தொடர்ந்தன. கமாண்டோ போலீசாரின் கார் முன்னால் சென்றது. அப்போது கடலூர் செக்போஸ்ட்டில் சாலையின் குறுக்கே இருக்கும் தடுப்புகளை அகற்றப்படாமல் இருந்தது.

சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த போலீசார் கார்களை மறித்தனர். நேராக செல்ல அனுமதியில்லை என்றும் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறும் கூறினார்கள். குண்டும் குழியுமாக இருக்கும் 5 கி.மீ புறவழிச்சாலையை சுற்றிக்கொண்டு போகுமாறு கூறினார்கள். 

இதனால் கலைஞரின் கார் உள்பட அனைத்து வாகனங்களும் அங்கு நிற்க நேரிட்டது. திமுகவினரும் அங்கிருந்த பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.முன்னாள் முதல்வரின் காரினையே மறிப்பதா என ஆவேசம் அடைந்த மாநில மாணவரணி செயலாளர் புகழேந்தி தலைமையில் திமுக நிர்வாகிகள் போலீசாரிடம் சென்று வாக்கு வாதம் செய்தனர்.

உடனடியாக தடைகளை அகற்றாவிட்டால் நாங்களே அகற்றுவோம் எனக்கூறினார்கள். திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தடை களை அகற்றி கலைஞரின் காருக்கு வழிவிட்டனர். அதன் பின்னர் அவர் மஞ்சக்குப்பம் வழியாக கடலூர் சென்றார்.




முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்: மு.க.அழகிரி

புத்தாண்டையொட்டி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுக தொண்டர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். பட்டு வேட்டி பட்டு சட்டையில் 01.01.2012 அன்று காலை  8 மணி முதல் தொண்டர்களை சந்தித்து வந்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான குழுவோடு சேர்ந்து நானும், பிரதமரிடம் முறையிட்டோம். தலைவர் கலைஞர் வேண்டுகோளுக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், நல்ல முடிவு எடுக்கப்பதாகவும் உத்தரவாதமும், உறுதியும் கொடுத்தார் பிரதமர். 

இன்று புத்தாண்டு தினத்தையொட்டி நானும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக ஆட்சியிலும், நானும் மக்களுக்கு நல்லது செய்துள்ளோம். ஆனால் மக்கள் மறந்து விட்டார்கள்
என்றார்.

புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்: கலைஞர்

2012 புத்தாண்டையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:


தமிழக மக்கள் வளம்பெற தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றிகண்ட மனநிறைவுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த வேளையில் ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக தந்துவிட்டு; பால் விலையை உயர்த்தி; பேருந்து கட்டணத்தை ஏற்றி; ஏழை எளிய மக்கள் பயனடைந்த பல்வேறு திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தி; அறநெறிகளுக்கெல்லாம் அல்லல் விளைத்த இழைத்த 2011 ம் ஆண்டு மறைகிறது.

இந்நிலையில் ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் போக்குகள் மாறிட வேண்டும்; ஏழை எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும்; மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்; அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்   இன்று தொடங்கும் 2012 ஆங்கில புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

மறைமலையார் கருத்தை மறைப்பதோ? : கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,
கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது முதல், மக்களுக்குத் தேவையான நன்மை களைச் செய்கிறார்களோ  இல்லையோ, தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய திட்டங்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திசை திருப்பும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். அது எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டமன்ற அலுவலகம், நாடாளுமன்ற அலுவலகம் என்பதைக் கூட மீண்டும் கைப்பற்றக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறது. வாழ்க அவர்களு டைய பரந்த சிறந்த உள்ளம்!
அந்த வரிசையில் ஒன்றாக நேற்றையதினம் (30.12.2011) நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுவிலே சிறப்புக்குரிய ஒரு தீர்மானமாக, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்திலே சட்டம் இயற்றியதை மாற்றி விட்டு, சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை அறநிலையத் துறை அமைச்சர் மூலமாக தாக்கல் செய்து குரல் வாக்கின் மூலம்  நிறைவேற்றிய தற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நிறை வேற்றியிருக்கிறார்கள்.   அதன் மூலமாக  தி.மு. கழ கத்திற்கோ அது நடத்திய  ஆட்சிக்கோ அவமானமா என்றால் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்,  23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும் புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில்  ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள்,  1921ஆம் ஆண்டு  சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி,  தமிழர்களுக் கென்று  ஒரு  தனி ஆண்டு  தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வ தென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்.  அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு,  1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப் பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப் பித்தார். திருவள்ளுவர் ஆண்டு  பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்தது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு  மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்,  வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி;  வண்ண வண்ணக் கோலங்களிட்டு;  வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட;  புத்தாடை புனைந்து  தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப் பியும்;  தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால்  அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்ட லுக்கிடையில் அறிவித்தார். எனவே அந்த அறிவிப் பினைக் கூட கழக அரசின் அறிவிப் பாக ஆளுநர் அவர்கள்தான் தன் உரையிலே தெரிவித்தார்.
மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார்,  தமிழ்க் காவலர்  கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப் பெரியார்  சச்சிதானந்தப் பிள்ளை,  நாவலர் ந.மு.  வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :
1. திருவள்ளுவர் பெயரில்  தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;
2. அதனையே தமிழாண்டு எனக் கொண் டாடுவது;
3. வழக்கத்தில்  திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது  என்பனவாகும்.
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார்  தலைமையில் கூடியது.  அதில்,  தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,  திரு.வி.க., மறைமலை அடிகளார்,  பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார்,  புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்,  பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர்.  அந்த மாநாடும்  தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்,  பொங்கல் திருநாளே  தமிழர் திருநாள் என்றும் தீர்மானித்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்;
நித்திரையில் இருக்கும்  தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு!
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணியாண்ட  தமிழருக்கு
தைம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்
டு
என்று எழுதியிருக்கிறார் என்றால், தற்போது  அ.தி.மு.க. பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட  தீர்மானம், தமிழகத்திலே உலவிய அந்தத் தமிழறிஞர் களுக்கெல்லாம் இழைக்கப்படுகின்ற அவமானம்  என்பதை  தமிழர்கள் உணர்ந்து கொண்டால் அதுவே போதும்! ஆளுநரின் அறிவிப்பு பேரவையில் படிக்கப்பட்ட  மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும்  விவசாய வாழ்வு சார்ந்தும்  தைத்திங்கள் முதல் திருநாளே  தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும்.    மறைமலை அடிகளார்  போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ  தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு  வெற்றி கிடைத்து உள்ளது.   தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில்  புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது.  பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்  என்று  கூறினார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின்  தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித் திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள்.  எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு.  தமிழர் களுக்கு  நில அடையாளம் இருக்கிறது; இன அடை யாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும்  குழப்பத்தில் இருந்தது.  அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துல கத்தின் அளவுகோலாய்க் காட்டியது  திராவிட இயக்கம். இன்று காலத்தின்  அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திர மாகும்  என்று  குறிப்பிட்டிருந்தார்.
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங் களுக்கு தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட் டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே  தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே  வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற  எதிர் மறையானதொரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.   அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக் கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள். இதோ ஒரு கதை!  நான் ஏற்கனவே எழுதிய கதை தான்; இருந்தாலும் மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன்.
நக்கீரன் காலத்திலே  குயக்கொண்டான் என்று  ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டி மன்றத்திலே ஆரியம் நன்று,  தமிழ் தீது என்று  சொல்ல - உடனே  நக்கீரனுக்கு கோபம் வந்து, தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும்  சொன்ன நீ, சாகக் கடவாய் என்று அறம் பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார்.   உடனே அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து குயக் கொண்டாரைப் பிழைக்க வைக்க கேட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட நக்கீரன், ஆரியம் நன்று தமிழ் தீ தென் றுரைத்த காரியத்தால்  காலன் கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணை யினால்  செந்தமிழே  தீர்க்க சுவாகா! என்று பாட, குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம். இப்படி ஒரு கற்பனைக் கதை!  பழங்காலத்தில்  உலவிய கதை!
தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே  மிகச் சிறந்த தமிழ் ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன் அவர்கள்,  இன்றைய  பஞ்சாங்கங் களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகிய வற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட் டத்துடன் - ஆராய்ந்துத் திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய  பொங்கல்  திருவிழாவைப் புத்தாண்டு என்று  கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று  ரீதியில்  பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடை முறையில் உள்ள  பல புத்தாண்டுகளில்  இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.  ஆளுநர் உரை யிலே செய்யப்பட்ட அறிவிப் பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று  தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு  சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்து, 1-2-2008 அன்று  இச்சட்ட மசோதா  மீதான விவாதம் நடைபெற்று  அது நிறைவேறியது. இப்போது மலேசியா நாட்டில்  தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.  டாக்டர் மு. வரதரா சனார் அவர்கள், முன் காலத்தில்  வருடப் பிறப்பு  சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள்.  அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள்.  தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார் கள்.  ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள்.   இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங் கல் கொண்டாடுகிறார்கள்  என்று விளக்கியுள்ளார்.
தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது இருக்கலாமா  என்று  அதற்கு முடிவு கட்ட    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவை யிலே அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அதற்காகவும் தற்போது அ.தி.மு.க. பொதுக் குழுவிலே நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள்.   பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்  விடுத்த  அறிக்கையில்; அ.தி. மு.க. அரசின் இந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும்  திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை  மீண் டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது  மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.  மேலும் ஜெயலலிதா தனது பேரவை உரையிலே  கழக ஆட்சி நிறைவேற்றிய சட்டம் யாருக்கும் பயன் அளிக்காத ஒன்று என்றும், அந்தச் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கருணாநிதியின் துதிபாடிகள் அனை வரும் அதனைப் போற்றினர் என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற் காகத்தான் தமிழ்ப்  புத்தாண்டு தை முதல் நாள் என்று அறிவிக்கப் பட்டதென்றும் பேசியிருக்கிறார்.   துதிபாடிகள் என்று அம்மையாரால் வர்ணிக் கப்படும் பேறு பெற்றவர்கள் யார் யார் தெரியுமா? நமது பேராசிரியர் அன்பழகனார்,  அண்ணா பல்கலைக் கழகத்திலும்,  இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் துணை வேந்தராக இருந்து பெரும்புகழ் பெற்ற வா.செ. குழந்தைசாமி, முனைவர்  தமிழண்ணல், முனைவர் வ.அய். சுப்பிர மணியம்,  முனைவர் அகத்திய லிங்கம், முனைவர் அவ்வை நடராசன்,  முனைவர் இரா. நாகசாமி,  தவத்திரு ஊரன் அடிகள்,  பேராசிரியர் கண. சிற்சபேசன்,  முனைவர் அ. அறிவொளி, முனைவர் சுதா சேஷையன்,  இலங்கை இ. ஜெயராஜ்,  முனைவர் சரசுவதி ராமநாதன், வழக்கறிஞர் த. ராமலிங்கம்,  பேராசிரியர் தி. ராசகோபாலன்,  முனைவர் இராம. சவுந்தரவல்லி,  முனைவர் இரா. செல்வ கணபதி,  புலவர் கோ. சாரங்கபாணி ஆகியோர்தான்!  அவர் கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில் தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்தான். அதே நேரத்தில் சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் வேண் டாமென்று தடுக்கவும் இல்லையென்று அப்போதே அறிவித்துள்ளோம். நம்மைப் பொறுத்த வரையில்  நாம் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிடுவோம்.
அன்புள்ள,
மு.க.
நன்றி: முரசொலி, 1.1.2012

Thursday, January 19, 2012

தா.பாண்டியன் சொன்னது சரிதானா?


20.07.2011 ஜுனியர் விகடனில்...
இதுவரை ஜெயலலிதா எடுத்துவரும் அத்தனை வேகமான நடவடிக்கைகளிலும் நான் விவேகத்தைக் காண்கிறேன்... ஒன்று மட்டும் சொல்கிறேன், 100 கருணாநிதிகள் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஜெயலலிதா ஆக முடியாது!
- தா.பாண்டியன்
புல்லறுக்கும் கதிர்அரிவாள்
ஆயிரம் ஒளிக்கர
ஆதவன் எப்படி
பேயிருட்டுக்குச் சமமென
பேச்சுக்குக் கூடச் சொல்ல முடியும்
முன்னாள் நட்சத்திரமோ
இன்னாள் நட்சத்திரமோ
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
அணிவகுத்து வந்தாலும்
உறுதியாய் விடிவு என்பது
உதயசூரியனால் மட்டும்தான்
கதிர் அறுக்க வேண்டிய
கம்யூனிஸ்ட் அரிவாள் ‡ இப்படிப்
போயஸ் தோட்டப்
புல்லறுத்துக் கொண்டிருப்பது
புரியாத ஒன்று
தன் நிழல்கூட
தன் காலில் விழக்கூடாது என்ற
தன்மானத்
தஞ்சைக் கோபுரத்தை ‡
சிதைந்துபோன
சின்ன வீட்டோடு
ஒப்பிடுவதா
சாக்கடையைச்
சலவை செய்ய முயலும் சோப்பா
வாயைக் கழிவாயாக்கும்
வார்த்தைக்கா தா. பா ?
- பேரா. அப்துல்காதர், பொதுச்செயலாளர், தேசிய லீக்
------------------------------------------------------
கலைஞரால் முடியாதுதான்!
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை ‡ 964
இந்தக் குறட்பாவை இந்திய பொது வுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
' வானில் செங்கொடி உயரட்டும்; வர்க்கப் புரட்சி தொடரட்டும் ' என்று தொழிலாளர் வர்க்கத்தின் நாடி நரம்புகளில் எழுச்சியூட்டு கின்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இப்படியும் ஒருவர் மாநிலச் செயலாளராக இருப்பது வெட்கத் திற்கும் வேதனைக்கும் உரியது. எந்த ஒரு மனிதன் தன் நிலையில் இருந்து ஒரு படி கீழே இறங்கி தனது சுயநலத்திற்காகச் செயல் படவோ, பேசவோ செய்கின்றானோ, அந்த மனிதன், தலையில் இருந்து உதிர்ந்து போன மயிருக்குச் சமம் என்றார் வள்ளுவர்.
இவர் ஜெயலலிதாவை அங்காளபர மேஸ்வரி, ஆயிரம் கண்ணுடையாள் என்று எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து தள்ளி இவருடைய காரியங்களைச் சாதித்துக் கொள் ளட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை.
அதைவிடுத்து, எத்தனை கருணாநிதி வந்தாலும் ஜெயலலிதாவிற்கு இணையாகாது என்பது போன்ற நகைச்சுவையை வெளிப் படுத்திக் கொண்டிருப்பதுதான் வேதனை.
இவரது வார்த்தைப் படியே பார்த்தாலும், ஜெயலலிதாவைப் போலக் கலைஞரால் தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ற முடியாது தான்.
ஜெயலலிதாவைப் போன்று ஆதிக்க எண்ணத்தோடு சமச்சீர்க் கல்வியைத் தடுக்க முடியாதுதான்.
ஜெயலலிதாவைப் போலத் தமிழக அரசுக்குச் சொந்தமான தலைமைச் செயலகம் இருந்தாலும் பழைய கட்டிடத்தில்தான் இருப்பேன் என்று தலைக்கனத்தோடு சொல்ல முடியாதுதான்.
ஜெயலலிதாவைப் போல நான் பாப் பாத்தி, என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என பட்டவர்த்தனமாகச் சட்ட மன்றத்தில் அறிவிக்க முடியாதுதான்.
ஜெயலலிதாவைப் போல ஈழத்தில் போர் என்று வந்தால் அங்கு மக்கள் இறக்கத்தான் நேரும் என்று இரக்கமின்றி சொல்ல முடியாது தான்.
ஜெயலலிதாவைப் போல நாடே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை என, கொடநாடு ஓடிப்போய் ஓய்வெடுக்கத் தெரியாதுதான்.
பெரியாரையும், அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக வந்திருப்பேன் என்று சொன்ன தலைவர் கலைஞர் எங்கே! தகரம் கண்டுபிடிக்கும் காலத்திற்கும் முன்பே, உண்டியல் கண்டுபிடித் தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று கேலி பேசிய ஜெயலலிதா எங்கே!
எதிரியையும் மதித்து, அவர்கள் வீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மரியாதை செய்பவர் கலைஞர்.
யாராக இருந்தாலும் எடுத்தெறிந்து மரியாதை இல்லாமல் நடப்பவர் ஜெயலலிதா என்பதைத் தா. பா தனது வீட்டு நிகழ்ச்சியை ஜெயா புறக்கணித்ததன் மூலமே தெரிந்திருப் பார்.
மனச்சாட்சி உள்ளவர்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் எளிதில் புரியும். தா.பாவிற்குப் புரிய வாய்ப்பில்லை.
சிற்பி செல்வராசு
துணைப் பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்.

தமிழ் புத்தாண்டு முதல் புதுப் பொலிவுடன்

இணையதள தி.மு.க மதுரை சந்திப்பு தொடர்பான பணிகள் நவம்பர் மாதத்திலும் எனது சட்டப் படிப்பு பருவத் தேர்வுகள் டிசம்பர் மாதத்திலும் இருந்த காரணத்தால் கழகச் செய்திகளை வலையேற்ற இயல வில்லை. மன்னிக்கவும். தமிழ் புத்தாண்டு முதல் புதுப் பொலிவுடன் இந்த வலைப்பூவில் வழக்கம் போல் கழக செய்திகள் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும்.  இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிக்க வேண்டுகிறோம்...

Tuesday, December 13, 2011

ஜெயில் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன் - அனிதா ராதாகிருஷ்ணன்


திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது ஆறுமுகநேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு இவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. 32 நாட்களாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று திருச்செந்தூர் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கடந்த 13.09.2011 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 3 வழக்குகளில் இருந்தும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அடுத்து அவர் திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் உத்தரவில் அனிதாராதாகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு செக்ஷன் மட்டும் இடம் பெறவில்லை என்று சிறை அதிகாரிகள் அவரை வெளியே விட மறுத்துவிட்டனர்.

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறையில் இருந்து வெளியே செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய வக்கீல் கிருபா மீண்டும் திருச்செந்தூர் கோர்ட்டு சென்று, விடுபட்ட செக்ஷனை மீண்டும் ஜாமீன் உத்தரவில் இணைத்து 17.09.2011 அன்று  காலை 8.30 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்தார்.

அப்போது சிறை அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை தனிநபர் கையில் எடுத்து வர கூடாது. தபாலில் தான் சிறைக்கு வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து அந்த உத்தரவு விரைவு தபாலில் உடனடியாக திருச்சி சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதன்பிறகு 17.09.2011 அன்று பகல் 1.45 மணிக்கு திருச்சி சிறையில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியே வந்தார். திருச்சி சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

நான் இந்த சிறையில் 32 நாட்களில் விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 37 நாட்கள் இங்கு இருந்து உள்ளேன். 5 நாட்கள் கூடுதலாக என்னை உள்ளே வைத்து, ஜாமீனில் வர சிரமம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழக்கு பதிவு செய்து, பின்னர் அதற்கான ஜாமீன் உத்தரவில் ஒரு நம்பர் விட்டு போனதாக கூறி, இருக்கிறார்கள். இதற்காக ஜெயில் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.