கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 29, 2011

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின் பிரசாரம்


மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 28.03.2011 அன்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காரில் வந்த அவருக்கு, மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
களியக்காவிளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜயதரணி, ஜான் ஜேக்கப் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:
தமிழகத்தில் 6வது முறையாக முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய உங்களை நாடி வந்திருக்கிறோம். ஓட்டுக்காக மட்டும் உங்களை தேடி வரவில்லை. எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருந்து பணியாற்றி வருகிறோம் என்ற உணர்வோடு, வந்திருக்கிறோம்.
திமுக தலைவர் கருணாநிதி 2006 தேர்தல் அறிக்கையின் போது என்னென்ன திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தாரோ, அத்தனையையும் 100க்கு 100 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார் என்ற உரிமையோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் எத்தனையோ கட்சி தலைவர்கள் வரலாம். உறுதி மொழிகள் தரலாம். வானத்தை கிழித்து விடுவோம். வைகுண்டத்தை காட்டுவோம் என்றெல்லாம் கூறலாம். ஓய்வுக்கு கொடநாட்டுக்கு செல்லும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
திமுக தலைவர் கருணாநிதி சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி உள்ளார். 2006 தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொன்னது 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது தான். ஆனால் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி மாபெரும் அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார். கலர் டிவி யார், யாருக்கு இல்லையோ அவர்களுக்கு எல்லாம் வழங்கப்படும் என்று கூறி அதையும் நிறைவேற்றினார்.
திருமண உதவி தொகையாக பெண்களுக்கு, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் திருமண உதவி தொகை வழங்கும் திட்டத்தை 1989ல் ஸீ5 ஆயிரத்துடன் தொடங்கினார். 96ல் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது அதனை ஸீ10 ஆயிரமாக உயர்த்தினார். அதன்பின்னர் வந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்தியது. 2006 தேர்தலின் போது அதிமுக நிறுத்திய இந்த திட்டத்தை திமுக ஆட்சி வந்தால் மீண்டும் தொடரப்படும். உதவி தொகை ஸீ15 ஆயிரமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். ஆனால், உதவித் தொகை உயர்த்தப்பட்டு ஸீ20,000 ஆனது. பின்னர் ஸீ25,000 ஆனது. தேர்தல் நேரத்தில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் செய்து முடித்துள்ளவர் கருணாநிதி. முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் கலைஞர் பெயரால் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 108 அவசர கால ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 21 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலத் திட்டங்கள் தொடர மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதேபோல், தக்கலையில் பத்மநாபபுரம் திமுக வேட்பாளர் புஷ்பலீலா ஆல்பனை ஆதரித்தும், குமரியிலும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Monday, March 28, 2011

அருந்ததியர், வாணியர் சங்கத்தினர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு


முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், வாணியர் முன்னேற்ற பேரவையினர் சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் ஏ.சி.கணேசன், பொதுச் செயலாளர் இளஞ்செழியன், பொருளாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் 28.03.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உடனிருந்தார்.
தமிழ்நாடு வாணியர் முன்னேற்ற பேரவை தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகளும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கிறிஸ்தவ அமைப்புகள் அறிவிப்பு :

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் கிறிஸ்தவர் கட்சி மற்றும் தமிழ்நாடு கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ் கிறிஸ்தவர் கட்சியின் தலைவர் ஜான் சுவார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1994 முதல் எங்கள் கட்சி திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கே எங்கள் ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களில் சிறுபான்மையினருக்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். சட்ட மேலவையில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும். கல்லறையில்லா ஊர்களில் அரசு இடம் ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் பி.டி.ஆப்ரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியம் பிரசாரத்தில் ஈடுபடும் என்று எங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கிறிஸ்தவ மக்கள் கட்சியின் நிறுவனர் ஆர்.கே.ஜெயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலித் கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெற வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவோம் போன்ற ஏராளமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையை கிறிஸ்தவ கட்சி வரவேற்கிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்துள்ளோம். மீண்டும் கருணாநிதியை முதல்வராக்க பாடுபடுவோம். இதற்காக கிறிஸ்தவ மக்கள் கட்சி ஒத்துழைப்பு வழங்கும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி எழுதிய நூல் ‘தொடரட்டும் நல்லாட்சி’ - முதல்வர் வெளியிட்டார் :

காங்கிரஸ் நிர்வாகி கோபண்ணா எழுதிய நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா, ‘தொடரட்டும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் பேச்சாளர்களுக்கு தேவையான குறிப்புகள் கொண்ட நூல் எழுதியுள்ளார். அதை முதல்வர் கருணாநிதி 28.03.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். நிதியமைச்சர் அன்பழகன் உடன் இருந்தார்.
பின்னர் கோபண்ணா கூறுகையில், “2006 தேர்தலின்போது இதேபோல ‘அராஜக ஆட்சியை வெளியேற்றுவோம்’ என்று நான் எழுதிய நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் ‘வெல்லட்டும் சாதனை கூட்டணி’ என்ற நூல் எழுதினேன். இப்போது இந்த நூல் எழுதி உள்ளேன்” என்றார்.


திமுக கூட்டணியின் வெற்றி தொடரும் - முதல்வரை சந்தித்த பின் ஜி.கே.வாசன் பேட்டி



முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 28.03.2011 அன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் 10.10 மணி முதல் 10.40 மணி வரை சந்தித்தார். அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
கடந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி முழுமையாக நிறை வேற்றினார். மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த முறையும் தேர்தல் அறிக்கையை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்பட பல தேர்தல்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. மக்களின் நம்பிக்கையை பெற்ற அணி இது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த அணி பணியாற்றி வருகிறது. எனவே சட்டசபை தேர்தலிலும் இது வெற்றி கூட்டணியாக அமையும்.
நாளை மறுதினம் தொடங்கி 11 நாட்கள் நான் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்காக முதல்வரை சந்தித்து பேசினேன். கூட்டணியின் வெற்றிக்கான பல்வேறு விஷயங்களை பற்றி விவாதித்தோம். தேர்தல் பிர சாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி பேசுவேன். திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித் தரும். மீண்டும் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் பற்றி தேர்தல் அறிக்கையாக முதல்வர் தந்துள்ளார். அதை மக்கள் முழுமையாக ஏற்றிருக்கிறார்கள். எனவே இந்த அணியை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்வார்கள். மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
காங்கிரசில் போட்டி வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கூட்டணி வெற்றிக்காக காங்கிரசார் அனைவரும் பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு


தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜ்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் கட்சி பணியாற்றி வருகிறோம். பல்வேறு இன்னல்களை சந்தித்தும் கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களின் பிரச்னைகளுக்காக பலமுறை சிறைக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை மதிக்காமல் தேர்தலில் போட்டியிட தளி தொகுதி எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழு, ஓசூர் வட்ட குழு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முறையும் தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி கொடுத்தது மிகுந்த மனவேதனைக்குரிய விஷயம். எனவே, நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் தளி மற்றும் ஓசூர் தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம்.
பாத்திர உற்பத்தியாளர் திமுகவுக்கு ஆதரவு :

தமிழ்நாடு எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்தது.
மாநில தலைவர் பூபதி ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.ஜி.பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ‘சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவது’ என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தி செய்யும் தொழிலில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று பூபதி ராஜா தெரிவித்தார்.

முதுகுளத்தூர் தொகுதிக்கு மு.க.அழகிரி திடீர் விசிட்


முதுகுளத்தூர் தொகுதிக்கு திடீரென வருகை தந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக வேட்பாளர் வெற்றிக்கு சுறுசுறுப்பாக பாடுபட கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மத்திய அமைச்சரும் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி 27.03.2011 அன்று காலை முதுகுளத்தூர் தொகுதிக்கு திடீரென வந்தார். தொகுதிக்கு உட்பட்ட கமுதி, முதுகுளத்தூர், பேரையூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியின் வெற்றிக்கு அயராது உழைக்க நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். வீடு வீடாக மக்களை சந்தித்து, ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.
அவருடன் மதுரை துணை மேயர் மன்னன், ரித்திஷ் எம்பி., முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா(எ)வெள்ளைச்சாமி, பேரூராட்சி துணைத்தலைவர் ஷாஜகான், ஒன்றிய கவுன்சிலர் திருமூர்த்தி, இளைஞர் அணி சக்திமோகன், போகர் துரைச்சிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் வந்தனர். மு.க.அழகிரியின் திடீர் விசிட், திமுக கூட்டணி கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

விஜயகாந்த் கூட்டணி: பாக்கியராஜ் கிண்டல்


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகர் பாக்கியராஜ் பேசிய திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ்,

நல்ல விஷயத்தை யாரும் சொல்ல வேண்டியது, இல்லை. அது தானாகவே விளம்பரமாகிவிடும். அதேபோல் தான் கலைஞர் அறிவித்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பூவின் வாசம் காற்றடிக்கும் திசையை நோக்க வீசும். எதிர் திசையில் வீசாது. ஆனால் ஒரே ஒரு பூவின் வாசம் மட்டும் நான்கு திசைகளிலும் வீசும். அது தான் மனிதனின் நற்பண்பு. அந்த பண்பு கலைஞரிடம் உள்ளது. விஜயகாந்த், கட்சி தொடங்கும் போது, தான் மக்களிடமும், ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று கூறினார். ஆனால் இப்போது மக்கள் கூட்டணியும் இல்லை, ஆண்டவன் கூட்டணியும் இல்லை. அவரை கடுமையாக விமர்சனம் செய்த ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து உள்ளார்.
இன்று தேசிய ஒற்றுமைக்கும், ஒருமை பாட்டுக்கும் கலைஞர் கொடுத்த சமத்துவபுரம் உதாரணமாக திகழ்கிறது. தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையை வேறு வழியின்றி, காப்பிஅடித்து அப்படியே செல்லி இருக்கிறார், ஜெயலலிதா. இப்போது கலைஞர் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்து உள்ளனர். அவரின் திட்டங்கள் எந்தளவு மக்களை சென்றடையும் என்று மக்களுக்கு தெரியும் என்றார்.

அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணை கட்டுது :வடிவேலு


அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’ நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு.

விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டுஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க.

இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு... நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும்விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு.

என்ன கணக்கு? ஒண்ணுமே புரியல? சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை
சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது.

இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க

.அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,

‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு...’’ன்னு சொல்லுறார். (
விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)

நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது.

கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.

அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.


ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.

விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.
நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும்
மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.


டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும்
குறிப்பா நான் விடமாட்டேன்.

ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே.

முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசித்தள்ளினார் வடிவேலு.