கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 30, 2010

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு - 30.05.2010


திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தல் உள்ள கூட்ட அரங்கில் தமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் 2 மணி நேரம் விவாதம் நடைப்பெற்று, 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 26.04.2010 மற்றும் 15.04.2010 ஆகிய தேதிகளில் இரண்டு கடிதங்களை திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பினார். இந்த கடிதங்கள் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பார்வைக்கு வைக்கப்பட்டன. ராமதாஸ் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை.


தோழமை கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஆதரவை விலக்கிக்கொண்டாலும், பாமக உறுதியாக இருந்தது.


இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம்.


முன்பு அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைக்கப்பட்ட சட்ட மேலவை கொண்டுவரப்படுவதற்கு, பாமக ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொண்டது. இந்த இணக்கம் தொடர பாமக விரும்புகிறது.


2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைய பாமக விரும்புகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்புகிறது.


2006ல் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட சிபிஐக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 2008ல் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.


அதேபோல் 2010ல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியிருந்தார்.


இதை பரீசிலித்த திமுக, தோழமை கட்சிகளோடு எப்போதும் நல்லுறவோடு செல்வதுதான் வழக்கம். 2011ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, சங்கரன் கோவில் தங்கவேல் ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்தார்.

பாமகவுடன் மீண்டும் நல்லுறவு ஏற்பட்டிருப்பதாகவும், 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பாமகவுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் தலைவர்களை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமி, திமுகவில் இணைவது குறித்து இதுவரை பேசவில்லை என்றும், சிறுதாவூர் நிலம் மீட்பு தொடர்பாக திமுக போராட்டம் நடத்த இருப்பதாகவும், விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இலங்கை தமிழர்களுக்கு உரிய நிவாரணம் போய் சேர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்போவதாக தெரிவித்தார்.


தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மக்களவையில் மகளிர் மசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.


விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.





No comments:

Post a Comment