கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 14, 2010

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி முன்னணியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணி அளவில் நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தார்.

நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், மகளிர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது கலைஞர், பேராசிரியர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்தார் குஷ்பு. இதையடுத்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை குஷ்புவிடம் கலைஞர் வழங்கினார்.

திமுகவில் இணைவது மிகவும் பெருமையாக இருக்கிறது. திமுக தலைவர் முன்னணியில் கட்சியில் இணைய வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறி இருக்கிறது. அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றவே திமுகவில் இணைகிறேன் என்று குஷ்பு கூறினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கலைஞர்,

கேள்வி: திமுகவில் இணைவதால் குஷ்புவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்.

பதில்: குஷ்பு முற்போக்கான கருத்துக்களை கொண்டவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர். திமுகவில் மகளிர் அணியில் இணைந்து திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்.

கேள்வி: திமுகவில் குஷ்புக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்?

பதில்: நானே திமுகவில் இணைந்தபோது எந்த பொறுப்பும் இல்லாமல்தான் இருந்தேன். பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் கட்சியில் சேர்ந்தபோது பொறுப்புகள் இல்லாமல்தான் இருந்தார்கள். கட்சியில் ஆர்வம், உழைப்பு, நேர்மை போன்றவைகளால் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் குஷ்புக்கு பொறுப்பு வழங்கப்படும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைவதாக செய்திகள் வெளியானதே?

பதில்: காங்கிரஸ் கட்சியுடன்தானே கூட்டணி வைத்திருக்கிறோம்.

கேள்வி: திமுகவில் திடீரென குஷ்வு இணைந்திருக்கிறாரே?

பதில்: உங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு இணைகிறார் என்று தெரியும். திடீரென இணைகிறார் என்று நினைக்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திமுவில் இணையப்போவதாக அவர் முடிவெடுத்துவிட்டார்.

கேள்வி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக நிறுத்தும் யோசனை உள்ளதா?

பதில்: அந்த மாதிரியான யோசனைகள் எல்லாம் இல்லை.

கேள்வி: திமுகவில் இணையும்படி குஷ்பு மிரட்டப்பட்டாரா?

பதில்: அதுபோன்ற கேவளமான நடைமுறைகள் எங்களுக்கு இருந்ததில்லை. குஷ்புவும் அப்படித்தான்.

கேள்வி: திமுகவில் சற்குணப்பாண்டியன் போன்ற மூத்த அனுபவம் மிக்கவர்கள் மகளிர் அணியில் இருக்கிறார்களே? அவர்களுக்கும் தற்போது வந்திருக்கும் குஷ்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாதா?

பதில்: ஏன் கலகத்தை மூட்டுகிறீர்கள் (சிரித்தபடியே)


No comments:

Post a Comment