கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 15, 2010

என்எல்சி விவகாரம்: பிரமருக்கு கலைஞர் கடிதம்


மின் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.


இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,


நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் என்எல்சி பிரதிநிதிகள் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிப்படையாது என தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிர்வாக இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தபோது, வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தால் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்தது.


பொதுநலம் கருதி திமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கடந்த ஓரிரு
நாட்களில் பணிக்குத் திரும்பியதால், இன்று 30 - 36 சதவீத ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பாத நிலை நீடித்தால் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

பண்டிகைக் காலம் நெருங்கி வருகின்ற நிலையில் தொழிலாளர் சமுதாயத்துக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment