கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

மேலவைக்கான தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


தமிழ்நாடு மேலவை தேர்தலுக்கு, உள்ளாட்சி, பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளுக்கான தொகுதிப் பட்டியலை, தமிழக தலை மைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 78 இடங்களில், பட்டதாரி களுக்கு ஏழு தொகுதிகள், ஆசிரியர் களுக்கு ஏழு தொகுதிகள், உள்ளாட்சித் தொகுதிகள் 26 என அறிவிக்கப்பட்டுள் ளன. மேலும், ஆளுநர் 12 பேரை நிய மிப்பதுடன், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 26 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் பிரவீன் குமார் தெரிவித் துள்ளார்.

இது குறித்து, பிரவீன் குமார் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு, தமிழ்நாடு மேலவை தொகுதிக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மேலவை தேர்தலுக்காக உள்ளாட்சி அமைப்புத் தொகுதிகள், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள் ளன. பட்டதாரிகள், ஆசிரியர்களுக்கான தலா 7 தொகுதிகள்: தொகுதி, தொகுதிக்குள் வரும் மாவட்டங்கள்

1. சென்னை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்

2. வட தமிழ்நாடு வேலூர், கிருஷ்ண கிரி, தருமபுரி, திருவண்ணாமலை

3. வட மத்திய தமிழகம் விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்

4. மேற்கு தமிழ்நாடு ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர்

5. கிழக்கு, மத்திய தமிழகம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர்

6. தென் மத்திய தமிழகம் திண் டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்

7. தென் தமிழகம் தேனி, விருது நகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

உள்ளாட்சித் தொகுதிகள் (26): சென்னை மாவட்டத்திற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் - அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் - கரூர், கோவை - நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் - தேனி, மதுரை, திருச்சி - பெரம்பலூர், நாகை - திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, சிவகங்கை - ராம நாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன் சென்னையும் சேர்த்து 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள் ளன. பட்டதாரிகள், ஆசிரியர் களுக்கு தலா ஏழு தொகுதிகள் வீதம் 14 தொகுதிகள், உள்ளாட்சி அமைப் புகளுக்கு 26 தொகுதிகள், ஆளுநர் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்கள் என 52 தொகுதிகளுக்கு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்படுவர். மொத்தம் உள்ள 78 தொகுதி களில், 52 தொகுதிகள் போக, மீதியுள்ள 26 உறுப்பினர்களை, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்வர்.

- இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment