கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 11, 2010

10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை : முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு



தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இலவச வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள் வழங்குவோம் என்று கடந்த சட்டசபை தேர்த லின்போது அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டு இருந்தது.

அதன்படி தி.மு.க. அரசு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடனேயே இலவச வண்ணத் தொ லைக்காட்சி திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 5 கட்டங்களாக வழங்கப் பட்டுள்ளது.

இப்போது இந்த திட்டத்திற்காக மேலும் 10 லட்சம் வண்ணத் தொலைக் காட்சிகளை கொள்முதல் செய்ய 07.10.2010 அன்று முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு 07.10.2010 அன்று வெளியிட்ட செய்தியில் கூறப் பட்டுஇருப்பதாவது: சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டம் 2006 சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இதுவரை அய்ந்து கட்டங்களில் 3492 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கள் கொள்முதல் செய்யப்பட்டு; 3396 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில்1 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 922 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங் கப்பட்டுள்ளன. எஞ்சிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில், சில மாவட்ட ஆட்சி யர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு கூடுதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தேவைப்படுவதாக கோரிக் கைகள் அளித்துள்ளதை தொடர்ந்து, அந்தக் கோரிக்கைகள் குறித்து முடிவு செய்திட முதல் அமைச்சர் கலைஞர் தலை மையிலான சட்டமன்றக் கட்சி களின் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் நேற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் நடை பெற்றது.

இதில், துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட மன்றக் கட்சிகளின் பிரதி நிதிகள் யசோதா (காங்கிரஸ்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு), எச்.அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), து.ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அய்ந்தாம் கட்ட மாக, நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி களைக் கொள்முதல் செய்திட பிறப்பிக் கப்பட்ட ஆணையின்படி, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே மறு ஒப்பந்தப்புள்ளி கோராமல் 25 சதவி கிதம் வரை, அதாவது 10 லட்சம் வண்ணத் தொலைக் காட்சி பெட்டி களை கூடுதலாக கொள்முதல் செய்வது என்றும், அவற்றின் விநியோகப் பணி களை 2011 ஜனவரி மாத இறுதிக்குள் பூர்த்தி செய்திட வேண்டுமென்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன என முதல் அமைச்சர் கலைஞர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment