கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 14, 2010

15 லட்சம் விவசாயிகளுக்குக் கூடுதல் தண்ணீர் தீர்வை ரத்து : தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


முதலமைச்சர் கலை ஞர் தலைமையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலக கூட்ட அரங்கில் தமிழக அமைச் சரவையின் 48 ஆவது கூட்டம் 12.10.2010 அன்று நடை பெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தி.மு.கழக ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட பத்து மாடி கட்டடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயர் சூட்டப்பட்டது.

அதைப்போலவே, பழைய சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக் கப்பட்டுள்ள செம் மொழி தமிழாய்வு மத் திய நிறுவனத்தின் நூல கத்திற்கு பாவேந்தர் செம் மொழி தமிழாய்வு நூல கம் எனப் பெயரிடுவ தென ஒருமனதாக தீர் மானிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்ச ரவைக் கூட்டத்தில்; உதக மண்டலம் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயா ரிப்பு நிறுவனத்தின் சீர மைப்புக்காக மதிப்புக் கூட்டு வரிச் சலுகை, மின் சார வரிவிலக்கு ஆகிய சலுகைகளை வழங்குவ தென்றும்;

திண்டுக்கல் மாவட் டம், கரிகாலி கிராமத்தில் அமையவுள்ள சிமெண்டு தொழிற்சாலை விரி வாக்க திட்டத்திற்காக செட்டிநாடு சிமென்டு நிறுவனத்திற்கு, மற்ற தொழில் நிறுவனங்க ளுக்கு வழங்கி வருவதைப் போலவே, மூலதன மானி யம், மதிப்புக்கூட்டு வரிச் சலுகை, மின்சார வரி விலக்கு ஆகிய சலுகை களை வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, வட சென்னைப் பகுதி வண் ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீட் டிக்க, கொள்கை அளவி லான அனுமதி வழங்க லாம் என்றும் அமைச் சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே, நிலவரி யாக புஞ்சை நிலங்க ளுக்கு சராசரியாக ஏக் கருக்கு 15 ரூபாய் என்ப தற்கு பதில் 2 ரூபாய் வீதமும், நஞ்சை நிலங்க ளுக்கு சராசரியாக ஏக்க ருக்கு 50 ரூபாய் என்று வசூலிக்கப்பட்டு வந் ததை, 5 ரூபாய் வீதமும் குறைத்து, கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, நிலவரியின் மீது வசூலிக் கப்பட்டு வந்த தலவரி மற்றும் தலமேல்வரி ஏற் கெனவே ரத்து செய்யப் பட்டதற்கு அமைச்ச ரவை பின்னேற்பு வழங் கியது.

அதிக தீர்வை, அதிக தண்ணீர் வரி மற்றும் மேம்பாட்டு வரிகளை ரத்து செய்யவும்; பாசன விவசாயிகள் சங்க உறுப் பினர்களிடமிருந்து ஏக் கர் ஒன்றுக்கு கூடுதல் தண்ணீர் தீர்வையாக 70 ரூபாய் வீதம் வசூலிக்கப் பட்டு வருவதை, 15 லட் சம் விவசாயிகள் பயன் அடையும் வகையில், ரத்து செய்து விடுவ தென்றும் அமைச்சரவை முடிவு செய்தது.

முறையற்ற பாசனம் செய்யும் விவசாயிகளி டம் தற்பொழுது வசூ லிக்கப்படும் தண்டத் தீர் வையான ஏக்கர் ஒன் றுக்கு 600 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுவதைக் குறைத்து, ஏக்கர் ஒன் றுக்கு 200 ரூபாய் வீதம் வசூலிக்கவும்; தற்பொ ழுது நடைமுறையில் உள்ள ஜமாபந்தி முறையை எளிமைப் படுத்தித் தொடரவும்; கிராமக் கணக்குகளில் தேவையற்ற வருவாய்க் கணக்குகளை நீக்கம் செய்யவும், எளிமைப் படுத்தவும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் தலைமை யில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment