கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 15, 2010

திமுக நிர்வாகிகளுடன் கலைஞர் ஆலோசனை


தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் 20ஆம் தேதி தொடங்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.


வருகிற 20ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், 22ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கும், 28 ந் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், மாலை 4 மணிக்கு கோவை மாவட்டத்திற்கும், அடுத்த மாதம் (நவம்பர்) 1ந் தேதி காலை 10 மணிக்கு தென் சென்னை மாவட்டத்திற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.


இக்கூட்டங்களில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதிக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். விடுபட்ட மற்ற மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் கூட்ட நாட்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment