கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 31, 2010

கலைஞர் காப்பீடு திட்டத்தில் 19 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன - கலைஞர்


கலைஞர் காப்பீடு திட்டத்தில் 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்,
கலைஞர் காப்பீடு திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி சேர அனுமதி வழங்கியதற்கு பாராட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செங்கல்பட்டில் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் தமிழ்நாடு கட்டுமான உயர் பயிலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் கருணாநிதி பேசியதாவது:
இந்த விழாவைக் காண மழையும் வந்து சாளரம் வழியாக எட் டிப் பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு உதவ என்று மழை வந்துள் ளது. அணைகள் நிரம்பி உள்ளன. தண்ணீர் விடமாட்டோம் என்று சொன்ன கர்நாடகம்கூட விட்டுத்தான் தீரவேண்டும் என்று எண் ணும் அளவுக்கு மழை பொழிந்துள்ளது. நீங்கள் எனக்கு நன்றி தெரிவித்தீர் கள். நான் தமிழர்கள், தமிழக மக்கள் சார்பில் உழவர்கள் சார்பில் மழைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மாமழை போற்றுதும் என்று கூறி நன்றி கூறுகிறேன். இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். தேவர் திரு மகன் குருபூஜை கமுதியில் நடக்கும் நாள். தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அங்கு அணிவகுத்துள்ளனர். நான் ஆண்டுதோறும் அங்கு தவறாமல் செல்பவன். இடையில் உடல் நலிவுற்றபோது ஒன்றிரண்டு ஆண்டுகள் செல்லாமல் இருந்திருப் பேன். எல்லோரும் அங்கு சென்று மரியாதை செலுத் தும் நினைவிடத்தை அமைத்து தந்தது, நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் தான். மதுரையில் தேவர் சிலை அமைத்து அதை அன்றைய ஜனாதிபதி கிரியை அழைத்து திறந்து வைத்தவனும் நான் தான். தேவர் சிலைகளிலேயே பெரிய சிலை அதுதான். மகத்தான புகழ்பெற்ற அந்த திருமகன் தேசபக்தர், விடுதலை வீரராக இருந்து தாம் ஏற்றுள்ள சூளுரையை நிறைவேற்ற பாடுபட்டார்.
இங்கு எனக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு நன்றி தெரிவித்தீர்கள். யார் வாழ்த்து பலிக்கிறதோ இல்லையோ பாட்டாளிகளான உங்கள் வாழ்த்து நிச்சயம் பலிக்கும்.
உயிர் காக்கும் கலைஞர் காப்பீடு திட்டம் 2009ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 33 அமைப்பு சார தொழிலாளர் வாரியங்களில் பதிவு பெற்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எந்த நிபந்தனையும் இன்றி வருமான வரம்பின்றி பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியங்களில் 2 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 41 ஆயிரத்து 653 பேருக்கு ரூ.108 கோடியே 42 லட்சத்து 322க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அப்படி காப்பாற்றப்பட்டவர்கள் இங்கே வந்து என் கையைப் பிடித்து நன்றி தெரிவித்தனர். குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 குடும்பங்களுக்கு ரூ.909 கோடி 40 லட்சத்து 98 ஆயிரத்து 848 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பேர் காப்பாற்றப்பட்ட பின்பும் அர சியல் காரணங்களுக்காக இது பயனுள்ள திட்டம் இல்லை என்று பேசுபவர்களும் நாட்டில் உள்ளனர். அவர்கள் நலம்பெற எந்த திட்டம் அறிவிப்பது? உடல் நலம் கெட்டால் காப்பாற்றலாம். மனநலம் கெட்டவர்களை எப்படி காப்பாற்ற முடியும்?
ஜனநாயகம் என்ற பெய ரால் சர்வாதிகாரம் கூடாது. சர்வாதிகார ஆட்சி நடத்தக்கூடாது. இங்கு பேசியவர் கள் 6வது முறையாக நான் முதல்வராக வர வேண்டும் என்றார்கள். அது உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நாட்டு மக்கள் கையில் தான் இருக்கிறது. இந்த மக்களுக்காக இப்படிப்பட்ட காரியங்களை நான் செய்வது எப்படி என்று பேசினார்கள். நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல. சாதாரண மனிதன். நான் எப்படி வளர்ந்தேன். எந்த சூழலில் வளர்ந்தேன் என் பதை எண்ணிப் பார்த்தேன். நான் வளர்ந்த சூழல் தான் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது.
என் பள்ளித் தோழன் ராமச்சந்திரன், முடிதிருத்தும் தொழிலாளி. அவரது முடிதிருத்தும் நிலையத்துக்கு நான் சென்றபோதுதான் பெரியாரின் கட்டுரைகளை படித்தேன். அதைப் படித்து சுயமரியாதை உணர்வுடன் ஜாதி, மதமற்ற கொள்கையை ஏற்றேன். அதை செயல்முறையில் காட்டுபவன் நான். கலப்பு மனத்தை என் வீட்டில் செய்து காட் டினேன். அழகிரிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேன். பெண்ணை எடுத்தாயே? பெண்ணை கொடுத்தாயா? என்று கேட்கலாம். எனது பேத்தி தேன்மொழியை நாமக்கலில் அருந்ததி வகுப்பில் பிறந்தவருக்கு கொடுத்துள்ளேன். ஜாதி, மத வித்தியாசத்தை என்றும் பார்த்தவன் இல்லை. என்னுடைய அந்தரங்க செயலாளரும் அருந்ததியர்தான். நான் மிக மிக பின் தங்கிய சமூகத்தில் இருந்து வந்தவன். எனவே, அந்த மக்களுக்கு உழைக்கும் உணர்வை பெற்றுள்ளேன். அந்த உள்ளம் தான் உங்கள் வாழ்த்தை பொன்போல போற்றிப் பெறுகிறது. நீங்கள் காலால் இடும் கட்டளையை தலையால் செய்து முடிக்கும் தொண் டன் நான். முதல்வர் என்ற ஆணவமோ கர்வமோ எனக்கு துளியும் கிடையாது. உங்களின் உடன் பிறப்பாகவே என்றும் இருப்பேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் நேரு, பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பனைமர தொழிலாளர் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment