கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 15, 2010

காணொலிக் காட்சி வாயிலாக மின் ஆளுமைத் திட்டம் தொடக்க விழாவில் முதலமைச்சரின் உரை


சட்ட மன்ற உறுப்பினர்க ளுக்கு அரசின் சார்பில் மின் ஆளுமைத் திட்டத் தினை இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டை யில் காணொலி காட்சி மூலம் முதல்வர் கலை ஞர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை, எளிய, சாமா னிய மக்களின் முன் னேற்றத்திற்குத் தேவை யான அனைத்து வசதி களையும் செய்து கொடுப் பதில் தமிழக அரசு மிகுந்த முனைப்புடனும், மற்ற மாநிலங்களுக்கெல் லாம் முன்னோடியாக வும் செயல்பட்டு வரு வதை அறிவீர்கள். பெருகி வரும் கணினிப் பயன் பாடு மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தி இந்த அரசு பல ஆண்டு களாக மக்களுக்குப் பல வகையிலும் தொண் டாற்றி வருகிறது. 2008 பிப்ரவரித் திங்கள் 26 ஆம் நாளன்று நடை பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத் திறப்பு விழாவின்போது கிருஷ் ணகிரி, கோவை, திருவா ரூர், அரியலூர், பெரம் பலூர் ஆகிய மாவட் டங்களில் மாவட்ட நிரு வாகம் முழுதும் கணினி மயமாக்கும் முன்னோ டித் திட்டம் செயல் படுத்தப்படும் என அறி விக்கப்பட்டது. அத்திட் டத்தை நடைமுறைப் படுத்திடும் நோக்கில், மக்களுக்கு நேரடியாகப் பல்வேறு நல உதவி களை வழங்கும் துறை களான பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, ஆதிதிராவிடர் பழங் குடியினர் நலத்துறை மற்றும் சமூகநலத் துறை யைச் சார்ந்த பல சேவை களும் இத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின் றன.

இத்தகைய பணி களைத் தொடர்ந்து, தற் போது வருவாய்த் துறை யைச் சார்ந்த பணி களான ஜாதிச் சான்றி தழ் வழங்குதல்,

வருமானச் சான்றிதழ் வழங்குதல்,

ஆதரவற்ற பெண் களுக்கான சான்றிதழ் வழங்குதல்,

இருப்பிடச் சான்றி தழ் வழங்குதல்,

பட்டதாரியில்லாக் குடும்பம் எனும் சான்றி தழ் வழங்குதல்

- போன்றவைகளை மக்கள் எளிதாகப் பெறு வதற்கு வழிவகுக்கும் சேவைத் திட்டத்தை காணொலி காட்சி வாயி லாக முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத் திலே இன்று தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வசதி அரிய லூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், நீல கிரி ஆகிய அய்ந்து மாவட் டங்களுக்கும் விரை வில் நீட்டிக்கப்படும் என்ப தையும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கி றேன்.

மக்களுக்குச் சிறப் பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினருக்கும் பிரத்தியேகமான மின் அஞ்சல் முகவரி ஏற் படுத்தித் தரப்படும் என 2010-2011ஆம் ஆண்டிற் கான, தகவல் தொழில் நுட்பவியல் துறையின் மானியக் கோரிக்கை யின்போது, தமிழக அர சின் சார்பில் அறிவிக் கப்பட்டது. அந்த அறி விப்பை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் களுக்கும், தேசிய தகவல் மய்யத்தால் தனி மின் அஞ்சல் முகவரிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சி களில் அழைப்பு மய் யங்கள் அமைப்பதை ஊக்குவித்திட ஒரு சிறப் புக் கொள்கை உருவாக் கப்பட்டுள்ளது. இக் கொள்கையின் பயனாக, கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கத்தக்க அழைப்பு மய்யங்கள் பல அமைக் கப்படும் அத்தகைய சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய மய்யங்களை அமைக்கக்கூடிய வணிக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் தமக்கி டையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இன்று பரிமாறிக் கொள்கின் றன. இதற்காக இங்கே வருகை தந்துள்ள நிறு வனங்களின் பிரதிநிதி களை மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, இந் நிகழ்ச்சியைச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய் துள்ள அதிகாரிகள், தொழில்நுட்பப் பணி யாளர்கள் அனைவருக் கும் என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரி வித்து உரையை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment