கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

சட்டமேலவை: பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்


தமிழக மேல்சபை தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


தமிழ்நாடு மேல்சபை தேர்தலுக்கு பட்டதாரி தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 1960 ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். 1.11.2010 ஐ தகுதி நாளாகக் கொண்டு பட்டதாரி தொகுதிக்கு படிவம் 18 ஐ, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19 ஐ பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும்.


விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் அளிக்கலாம். மாநகராட்சி பகுதிகளில் மண்டல உதவி ஆணையாளர்களும், இதர பகுதிகளில் தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வார்கள்.


தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்திலும் விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். வாக்காளர்களுக்கான தகுதிகள், தொகுதி பட்டியல் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்க்கக் கோரி கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மொத்தமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


எனினும், பட்டதாரி தொகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்து விண்ணப்பம் கொடுக்கலாம். இதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசல் கல்விச்சான்றிதழ் ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.


இதேபோல், ஆசிரியர் தொகுதியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர்த்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு அக்டோபர் 1 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி நாள் நவம்பர் 6 ந் தேதி ஆகும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22 ந் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு கடைசி நாள் டிசம்பர் 7 ந் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment