கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 15, 2010

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்:முதல்வர் உத்தரவு


நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்குமுதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக முதலமைச்சர் கருணாநிதி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் பல்வேறு அலகுகள் மூலமாக நடைபெறுகின்ற பணிகளை ஆய்வு செய்தார்.

இதில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு), நிதித்துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநர், நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர்கள், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மாநிலத் துறைமுக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆய்வின் தொடக்கத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 12 ஆயிரத்து 84 கோடி ரூபாய்ச் செலவில் 61 ஆயிரத்து 340 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டதையும், 1081 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5048 பாலம் மற்றும் சிறுபாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதையும்;

இதன் காரணமாக, 2006இல் இருவழித்தடமாக 4,284 கி.மீ. நீளமே இருந்த மாநில நெடுஞ்சாலைகள், தற்போது இருவழித்தடமாக 9,311 கி.மீ. நீளம் என்ற அளவிற்கு, இருமடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதையும் அறிந்த முதலமைச்சர் கலைஞர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

300 கோடி ரூபாய்ச் செலவில் நடைபெறுகின்ற ஒரகடம் தொழிற்பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறும்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 43 புறவழிச் சாலைப் பணிகள் கடந்த நான்கரை ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெற்றுவரும் 35 புறவழிச் சாலைப் பணிகளைக் குறித்த காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றி முடித்திடுமாறும்;


இரயில்வே கடவுகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள 1847 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 91 இரயில்வே மேம்பாலம் மற்றும் கீழ்ப் பாலம் அமைக்கின்ற பணிகளில் முடிக்கப்பட்டுள்ள 27 இரயில்வே பாலங்கள் போக, எஞ்சிய பாலங்களின் கட்டுமானப் பணிகளை விரைவில் கட்டி முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.


தமிழகத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக 6 ஆயிரத்து 49 கோடி ரூபாய்ச் செலவில் 1939 கிலோ மீட்டர் நீளமுள்ள 31 சாலைப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 7 ஆயிரத்து 367 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நடைபெறும் 852 கிலோ மீட்டர் நீளமுள்ள 14 சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவேண்டுமென்றும்;


சென்னை-எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காகக் கோரப்பட்டுள்ள புதிய ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான நடவடிக்கைகளை உரிய காலத்தில் முடித்து, பணிகளை விரைவாகத் தொடங்கி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

93 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டு வரும் கோயம்பேடு பல்வழிப் பாலப்பணிகளை அதிவிரைவில் முடித்து, அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை நீக்கிட நடவடிக்கை எடுக்குமாறும்;


452 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுவரும் சென்னை புறவழிச் சாலைப் பணிகளையும்; சென்னை துறைமுகம்-மதுரவாயல் சந்திப்பை இணைக்கும் உயர்மட்டச் சாலைத் திட்டத்தின் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டுமென்றும்;


2 ஆயிரத்து 442 கோடி ரூபாய்ச் செலவில் உலக வங்கிக் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும் 32 சாலைப் பணிகளில் முடிவடைந்த 24 பணிகள் போக மீதமுள்ள பணிகளை விரைவில் நிறைவேற்றி முடிக்குமாறும்;


கும்பகோணம் புறவழிச் சாலைப் பணி, கீழமணக்குடி, மேலமணக்குடி கிராமங்களில் நடைபெறுகின்ற உயர்மட்ட பாலப் பணிகள் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்றுமாறும் அறிவுறுத்தினார்.


இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலையின் எஞ்சிய சாலைப் பணிகளையும்; வேளச்சேரி - தரமணி இணைப்புச் சாலைப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென்றும்; 1081 கோடி ரூபாய்ச் செலவில் நடைபெறும் சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளை விரைவாக முடித்திட வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், நபார்டு வங்கியின் மூலம் 83 கிராமப்புறச் சாலைகள் அமைப்பதற்கு 136 கோடியே 80 இலட்சம் ரூபாய் அளவிலும், 121 பாலங்கள் கட்டுவதற்கு 250 கோடி ரூபாய் அளவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளை விரைவாக முடித்திடுமாறும் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது, கோவை, திருச்சி மாநகரங்களில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகங் களுக்கும், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகியவற்றில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கும் இந்திய தர நிர்ணய குழுவினால் வழங்கப்பட்டுள்ள பன்னாட்டுத் தரச் சான்றிதழ்களை முதலமைச்சர் கருணாநிதி நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் வழங்கிப் பாராட்டினார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் பணியில் இருக்கும்போதே இறந்துபோன ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்குக் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணைகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment