கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 15, 2010

2 லட்சம் விவசாய மின் இணைப்பு: தமிழக அரசு


விவசாய மின் இணைப்பு கோரி நிலுவையில் உள்ள 2 இலட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்குமாறு, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 40 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்படுகின்றன. தற்போது விவசாய இணைப்பு கோரி சுமார் 4 இலட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.


ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் வீதம் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணைப்பு வழங்க குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் ஆகும். விவசாயிகளின் நலன் கருதி, 10 வருடங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள சுமார் 2 இலட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமென்று முதல்வர் கருணாநிதி இன்று (15.10.2010) அறிவித்துள்ளார்.


அதன்படி, முதல் 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2010 டிசம்பர் மாதத்திற்குள்ளும்; அடுத்த 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 மார்ச் மாதத்திற்குள்ளும்; அதற்கடுத்த 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 ஜூன் மாதத்திற்குள்ளும்; எஞ்சிய 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 செப்டம்பர் மாதத்திற்குள்ளும் மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment