கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கு முதலமைச்சர் அலுவலகம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக இடமாற்றம்


புதிய சட்டப்பேரவை வளாகத் துக்கு முதலமைச்சர் அலு வலகம், நவம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக மாற் றப்படுகிறது. அன்றைய தினமே, துணை முதல மைச்சர், நிதியமைச்சர் அலுவலகமும் அங்கு செயல்படத் தொடங்கும்.

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசி னர் தோட்டத்தில் சட்டப் பேரவை வளாகம் (பிளாக் ஏ) மற்றும் தலைமைச் செயலக வளாகம் (பிளாக் பி) ஆகியவை கட்டப் பட்டு வருகின்றன. பணி கள் முழுவதுமான முடி யாத நிலையில், சட்டப் பேரவை கூடம் மட்டும் தயார் செய்யப்பட்டு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய் யப்பட்டது. அதன்பிறகு, முதலமைச்சர் அலுவல கம், அமைச்சர்கள் அலு வலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந் துள்ள பிளாக் ஏ கட்ட டத்தை முழுவதுமாக தயார் செய்யும் பணிகள் வேக மாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வரும் நவம்பர் 8 ஆம் தேதியன்று, சட்டமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் தேதியன்று அது முடிவடையும் எனத் தெரிகிறது. அதற்காக, முன்பைவிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த தாவது:

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் அலுவலகங்கள், புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, புதிய சட்டப் பேரவை வளாகத்துக்கு மாற்றப்படுகின்றன. வரும் 1 ஆம் தேதி முதல் அவை புதிய இடத்தில் இருந்து இயங்கும். இதற்காக அங்கு 6 ஆம் தளத்தில் அறைகள் தயாராக உள்ளன.

இதேபோல், உள்துறை, பொதுத்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த, பெரிய துறை களும் (இரு துறைகளின் கீழும் தலா 70 செக்ஷன்கள் செயல்படுகின்றன. மற்ற துறைகளில் சுமார் 20, 22 செக்ஷன்கள் மட்டுமே இருக்கும்) நவம்பர் 1 முதல் இடமாற்றம் செய்யப்படு கின்றன. இதில் உள்துறையின் அனைத்து அலுவலகங் களும் 6 ஆவது தளத்தில் அமைகின்றன. முதலமைச் சரின் செயலாளர்களின் அலுவலகங்களும், 6 ஆம் தளத்தில் நவம்பர் 1 முதல் செயல்படுகின்றன.

துணை முதலமைச்சரிடம் உள்ள துறைகளான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல், தொழில் துறை ஆகியவை, நவம்பர் 12ஆம் தேதி வாக்கில் புதிய சட்டப் பேரவை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படு கின்றன. பொதுப்பணித்துறை, 5 ஆம் தளத்துக்கு, சட்டப் பேரவை தொடர் நடை பெற்று வரும் நேரத்தில் மாற்றப்படும். அந்த தளத் திலும் சிறிய பூங்கா அமைகிறது.

5 ஆம் மாடியில் 6 அமைச்சர்கள், 4 ஆம் மாடியில் 12 அமைச்சர்கள், 3 ஆவது மாடியில் 9 அமைச்சர்கள் அலுவல கங்கள் இடம்பெறவுள் ளன. முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதி யமைச்சர் ஆகியோரின் அலுவலகங்களும், அவர்களது துறைகளும் முதல்கட்டமாக இடமாற் றம் செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகு, மற்ற அமைச்சர்கள், அவர் களது துறை அலுவல கங்கள் இடமாற்றம் செய் யப்படும்.

முதலமைச்சரின் துறையான மாற்றுத் திறனாளிகள் துறை, 3 ஆம் மாடியில் அமைகிறது. தலைமைச் செயலக ஊழியர்களுக்காக 3 ஆம் மாடியில் கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத் தில் அனைத்து ஊழியர் களுக்கும் ரூ.4.57 கோடி செலவில் புதிய இருக் கைகள் வாங்கப்பட் டுள்ளன. சட்டப்பேரவை கூடமும் முழுவதுமாக தயார் செய்யப்பட்டு விட்டது. சட்டப்பேரவை செய லர் மற்றும் அத்துறையின் முக்கிய பிரிவுகளும், நவம்பர் 1 முதல் இட மாற்றம் செய்யப்படுகிறது.

சட்டப்பேரவை வளாகத் தின் 6 ஆவது தளத்தில் மாடி பூங்கா (ரூப் கார்டன்) அமைக்க திட்டமிடப் பட்டிருந்தது. அதனை சற்று மாற்றி, வளைவு பூங்கா (ரிங் கார் டன்) அமைக் கப்பட்டு வருகிறது. அந்த பூங்கா வுக்குள்ளாக அமைச்ச ரவை கூட்ட அரங்கு அமைகிறது. நிதித்துறை யின் அனைத்து அலுவல கங்களும், தலைமைச் செயலக வளாகத்துக்கு (பிளாக் பி முதல் கட் டடம்) மாற்றப்படுகிறது. அந்த துறையின் செய லாளருக்கு, அங்கேயும், முதலமைச்சர் அலுவல கத்துக்கு அருகிலும் தலா ஒரு அறை ஒதுக்கப்படு கிறது.

சட்டத்துறையும் பிளாக் பி யின் 2 ஆவது கட்டிடத்துக்கு போகிறது. இந்த கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டு வரும் டூம் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடை கிறது. டிசம்பர் மாத இறுதிக்குள், சட்டப் பேரவை வளாக (பிளாக் ஏ) கட்டிடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு விடும். பிளாக் பி பணிகள் திட்டமிட்டபடி வரும் ஆண்டு மத்தியில் முடிவ டையும்.

இவ்வாறு அந்த அதி காரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment