கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

சட்டமேலவை தேர்தல்: திமுகவினருக்கு உத்தரவு


தமிழகத்தில் சட்டமேலவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் சேர்க்கும் பணியை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைமைக் கழகம் கூறியுள்ளது.

தமிழக சட்டமேலவை தேர்தலுக்கான ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளாக என மாவட்டங்களை பிரித்து 14 தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அந்தத் தொகுதிகளில் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவங்களைப் பூர்த்தி செய்து வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அத்தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்ய பட்டதாரிகள் விண்ணப்ப படிவம்&18, ஆசிரியர்கள் விண்ணப்ப படிவம்&19 ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து, நவம்பர் 6ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.
பட்டதாரி தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்பவர்கள், பட்டம் பெற்று வரும் நவம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி வாரியாக விண்ணப்பங்கள் கிடைக்கும். மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர், சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலக மேலாளர்கள், இதர மாநகராட்சிகளில் மண்டல அலுவல கங்களின் உதவி ஆணையாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
ஆசிரியர் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்பவர்கள், அவர்கள் பணிபுரியும் கல்வி நிறுவனத்திடம் இருந்து சான்றிதழை பெற்று விண்ணப்பத்துடன் இணைத்திட வேண்டும். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகள் விவரமும் வாக்காளர் சேர்த்தல் அட்டவணை யும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாக்காளர்கள் சேர்க்க மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் சேர்த்தல் அட்டவணை
1. விண்ணப்பங்கள் செலுத்திட தொடங்கும் நாள் 1.10.2010 முதல்.
2. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து செலுத்துவதற்கான 16.10.2010, 17.10.2010,
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் 30.10.2010, 31.10.2010.
3.விண்ணப்பங்கள் செலுத்த கடைசி நாள் 6.11.2010.
என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment