கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 31, 2010

தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி



மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி செல்லும் வழியில் மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரத்தில் காலை 9 30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனும், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனும் இந்த பிரமாண்ட வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர். வரவேற்பில் பேசிய மு.க.அழகிரி, இந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்தால் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் கைப்பற்றும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திமுகவின் கைவசம் வரும். தூத்துக்குடி திமுகவின் கோட்டை. இன்று இந்த வரவேற்பில் கலந்து கொண்ட திமுகவினர் அனைவரும், தேர்தல் வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.

விருந்தினர் மாளிகையில் தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மாலை 5 மணிக்கு காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் உடன்குடி, திருச்செந்தூர் உள்பட 12 புதிய வழித்தடங்களில் பஸ்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடங்கி வைத்தார் . 6 மணிக்கு திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் முதல் அமைச்சர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி நடைபெறும் கல்வி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாணவன் பாண்டியனுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 87 கிராம் தங்கசங்கிலி அணிவித்தார்

அவர் பேசியதாவது:
திமுக தலைவர் கருணா நிதி காயல் பட்டினத்தை எப்போதும் எனக்கு கவலை தீர்க்கும் பட்டினம் என்று கூறுவார். போக்குவரத்து துறைக்கு முன்பை விட அதிக முக்கியத்துவம் முதல்வர் கொடுத்துள்ளார். என்ன சொல்வரோ அதை தான் செய்வார். கடந்த இடைத் தேர்தலின் போது இங்கு வந்திருந்தேன். அப் போது காயல் பட்டினத்தில் இருந்து கோழிக்கோடு வரை பஸ் வசதி வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையும் சேர்த்து 13 புதிய வழித்தடங் களில் பஸ் சேவை துவக்கப் பட்டுள்ளது. எப் போதுமே சொன்னதை செய்து காட்டு அரசாகவே திமுக விளங்கும்.
அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுகொண்டதை ஏற்று, திருச்செந்தூருக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் ஆகியவற்றை பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில கோரிக்கைகள் எங்களிடம் வைக்கப் பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (செந்தூர் எக்ஸ்பிரஸ்) வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப் படுகிறது. இதனை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கேட்டு அதை நிறைவேற்றி தருவேன் என உறுதியளிக்கிறேன்.

எம்.ஜி.ஆரும், கலைஞ ரும் 40 ஆண்டு கால நண்பர்கள். அவர் ஒரு முறையாவது முதல்அமைச்சரை பெயரைக் கூறி அழைத்து இருப் பாரா? ஆனால் இந்த ஜெயலலிதா எப்போதும் கலைஞரை பெயரைக் கூறி அழைக்கிறார்.

ஆண்டிப்பட்டியில் மருத்துவ முகாம் நடத்தினோம். அந்த மருத்துவ முகாமில் 200 கிராம் எடை கொண்ட ஹார்லிக்ஸ் டப்பா கொடுத்தோம். அதனை சோழவந்தான் அருகே லாரியை நிறுத்தி பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை திருடி கொடுத்தோம் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். நாங்கள் தேனி யில் உள்ள பாலகிருஷ் ணன் என்பவருடைய கடையில் இருந்து 200 கிராம் டப்பா வாங்கித் தான் கொடுத்தோம். இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.

சொன்ன பொய்யை ஜெயலலிதா நிரூபிக்க முடியுமா? மேடையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா? ஜெயலலிதாவை கட்சியினரே சந்திக்க முடியாது. ஆனால் முதல மைச்சர் கலைஞர் தின மும் அறிவாலயத்துக்கு செல்கிறார். கட்சி நிருவா கிகளை சந்திக்கிறார். ஜெயலலிதா ஒரு நாளா வது தலைமை கழகத் துக்கு சென்று இருப் பாரா? அப்படி சென் றால் அதனை விளம்பரப் படுத்துகிறார்கள்.


கடந்த அதிமுக ஆட்சியின் போது எத்தனை கோரிக் கைகளை நீங்கள் கொடுத் திருப்பீர்கள். அவை ஏதாவது நிறைவேற்றப் பட்டுள்ளதா?. தலைவர் கருணாநிதி கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா நிறுத்தியிருக் கிறார். இதுதான் அவரது பெரும் சாதனை. கடந்த ஒரு வார காலமாக தெருவுக்கு தெரு அவர் வந்து கொண்டுள்ளார். அவருக்கு நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். கடந்த தேர்தலில் இத்தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனை வரும் தேர்தலில் 57 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த முறை தென்மண்டலத் தில் உள்ள 59 இடங்களிலும் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். அதில் வாக்கு வித்தியாசத்தில் திருச்செந் தூரை முதலிடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

திருச்செந்தூர் சென்றுள்ள மத்திய அமைச்சர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்பிக் உரத் தொழிற்சாலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மீண்டும் செயல்பட துவங்கும் என்றும், இத்தகவலை ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா, தன்னை டெல்லியில் சந்தித்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும் என்றார்.

தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. மேலும் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தி.மு.க., கூட்டணி தயாராக இருக்கிறது என்றார்.


முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி



முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் 13 ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று தங்க பாண்டியன் மணிமண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை 8.30 மணிக்கு, அருப்புக்கோட்டை தொகுதியில் மல்லாங்கிணரில் உள்ள தங்கபாண்டியன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநிலச் செய லாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மதுரை துணை மேயர் மன்னன் கிழக்கு மண்டலத் தலை வர் வி.கே. குருசாமி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, துணைச் செயலாளர் உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, துணைச் செயலா ளர் எம்.எல்.ராஜ், முருக வேல் எம்.எல்.ஏ. முன் னாள் எம்.எல்.ஏ. காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, திமுக தலை மைச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மதுரை மாவட்ட ஊராட்சித் தலைவர் அசோக்குமார், அருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பிச்சைநாதன், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் சம்பத் (காரியாபட்டி), பொன்னுத்தம்பி (திருச்சுழி), கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் (அருப்புக்கோட்டை), மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.எம்.போஸ், ஒன்றிய திமுக செயலாளர் கள் சாகுல்ஹமீது (அருப்புக்கோட்டை) சண்முகசாமி (காரியாபட்டி), நக ரச் செயலாளர் செந்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆதவன் என்ற ஜலாலுதீன், மாவட்ட துணைச் செயலாளர் போஸ், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் செல் வம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.




தமிழ்நாட்டில் மக்கள் தொகை சீர்மைக்குக் காரணம் பெரியாரும் அவர் கண்ட இயக்கமும்தான்! இண்டியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை


30.7.2010 அன்று இண்டியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் பி.ச். ரெட்டி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:

உயர்ந்த பிறப்பு வீதம், மற்றும் உயர்ந்த இறப்பு வீதம் என்பதில் இருந்து, குறைந்த பிறப்பு வீதம் மற்றும் குறைந்த இறப்பு வீதம் எனும் நிலைக்குச் செல்வது மக்கள் தொகை யில் ஏற்படும் மாற்றமாகும். (டெமோ கிராஃபிக் டிரான்சிஷன்). ஓராண்டில் 1000 பேருக்குக் குறைந்த பட்சம் 21 பிறப்பாகவும், 9 இறப்பாகவும் குறை யும் பொழுது மக்கள் தொகையில் மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறலாம் என அத்துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்ட அனுபவத்தைக் கொண்டு, மக்கள் தொகை மாற்ற ஆய்வாளர் கள், 1940களில் மக்கள் தொகை மாற்றக்கோட்பாடு என்பதை முன் வைத்தனர். அக் கோட்பாட்டின்படி, தொழில் மயமாதல், நகர மயமாதல், உயர்ந்த தலைநபர் ஊதியம், உயர்ந்த படிப்பறிவு வீதம், குறிப்பாகப் பெண் களிடையே உயர்ந்த படிப்பறிவு வீதம், அதிக நாள் வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு ஆகிய சமூகப் பொரு ளாதார வளர்ச்சிகள் மக்கள் தொகை மாற்றத்தை உண்டாக்குகின்றன.

மக்கள் தொகை மாற்றத்திற்கான பாதை இது ஒன்றே எனக் கருதப்பட் டது. அந்த மாற்றம் மேற்கு நாடுகளில் நிகழ்ந்தபொழுது, உலகத்தில் எங் குமே அலுவலக முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இல்லை. பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பொழுது, சமுதாயப் பொருளா தார வளர்ச்சி நடைபெறா நிலையில், மக்கள் தொகை மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவை வெற்றி பெறுமா என மேல்நாட்டு வல்லுநர் கள் அய்யப்பட்டனர்.

தென்னிந்திய அனுபவம்

மக்கள் தொகை மாற்றத்தை உண் டாக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் உண்டு என்பதைத் தென் இந்திய மாநிலம் ஒன்றின் அனுபவம் காட்டியது. 1970களில் மக்கள் தொகை மாற்றத்தைச் சாதித்த முதல் மாநிலம் கேரளம். ஆனால் கேரளம், தொழில் மயம், மற்றும் நகர மயம் அடைந்திருக்கவில்லை. அதன் தலை நபர் ஊதியமும் குறைவு. ஆனால் பெண்கள் உள்ளிட்ட அம்மாநில மக்களின் படிப்பறிவு வீதம் மிக அதிகம். அதைப் போலவே வாழ்நாள் எதிர்பார்ப்பும் அதிகம்; அதாவது உடல் நலமும் சிறப்பாக இருந்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு, (பொருளாதார வளர்ச்சியில்லாவிடி னும்) சமூக வளர்ச்சியின் மூலம் மக்கள் தொகை மாற்றத்தை அடைய முடியும் என அறியப்பட்டது.

கேரளாவின் சமூக வளர்ச்சிப் பாதையைப் பற்றி உலகம் முழுதும் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது, 1990களின் தொடக்கத்தில், மக்கள் தொகை மாற்றங்காண மற் றொரு பாதை உண்டு என்பதைத் தமிழ்நாடு காட்டியது. ஆனால் தமிழ் நாட்டில் சமூக வளர்ச்சிக்கு அடை யாளமான படிப்பறிவு வீதமோ, வாழ்நாள் எதிர்பார்ப்போ கேரளா வைப் போல் அவ்வளவு உயர்ந்த வீதத்தில் இல்லை. அதன் தொழில் வளர்ச்சியும் (அந்தக் காலகட்டத்தில்) உயர்ந்த வீதத்தில் இல்லை.

காரணம் பெரியார்

தமிழ்நாட்டில் மக்கள் தொகை மாற்றம் ஏற்படக் காரணம், ஒரு பெரிய சமூக சீர்திருத்தக்காரரான பெரியார் ராமசாமி உண்டாக்கிய வலுவான சமூக இயக்கத்தின் தாக்கம் ஆகும். கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்திப் பெண்கள் அடுத்தடுத் துக் கருத்தரிப்பதைத் தடுத்து, அவர் களின் சுதந்திரத்தை மேம்படுத்த வற்புறுத்தினார்; பெண்கள் 22 வயதுக் குள் திருமணம் செய்யாமல் பார்த்துக் கொண்டால், மூன்று நான்கு பிள் ளைப் பேறுகளைத் தவிர்க்கலாம் எனவும் விளக்கினார். இந்திய அரசு நினைத்துப் பார்க்காத காலத்தி லேயே, இவ் வகையில், குடும்பக் கட்டுப்பாடு, மற்றும் திருமண வயது அதிகரிப்பு ஆகியவற்றைப் பெரியார் ஆதரித்தார்.

பெரியார் சீடர்களின் ஆட்சி!

இப்பொழுது கூட, இந்தியாவில் பெண்கள் திருமண வயது 18 ஆண்டு கள். பெரியாருடைய சீடர்கள் சிலர் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதல மைச்சர்கள் ஆனார்கள். ஆகையால், திருமண வயது உயர்ந்ததாலும், குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் பட்டதாலும், தமிழ்நாட்டில் மக்கள் தொகை மாற்றம் நிகழ்ந்தது.

கேரள முறையை விடத் தமிழ் நாட்டு முறையைப் பின்பற்றி, மக்கள் தொகை மாற்றத்தைக் காண்பது எளிதாக இருக்குமே என விவாதம் நடை பெற்ற பொழுது, 1990களின் பிற்பகுதியில் ஆந்திரப் பிரதேசம், மற்றொரு வியப்பை நிகழ்த்தியது. அரசியல் தலைவர்களும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட நிருவாகி களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, மக்கள் தொகை மாற்றத் தைக் கொண்டு வந்தனர். உடல்நலம் பேணுதல், மற்றும் அளவான குடும் பம் என்ற அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். ஆக, ஆந்திரப் பிரதேசம் மற்றொரு பாதையைக் காட்டியது.

2001 இல் ஒட்டு மொத்தம்படிப்பறிவு கருநாடகத்தில் 67 விழுக் காடாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 61 ஆகவும் இருந்தது. பெண்களின் படிப் பறிவு கருநாடகத்தில் 57.5 விழுக்காடாக வும், ஆந்திரப் பிரதேசத்தில் 51.2 விழுக் காடாகவும் இருந்தது. நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வீதம் கருநாடகத்தில் 34 விழுக்காடாகவும், ஆந்திரப் பிர தேசத்தில் 27 ஆகவும் இருந்தது. கரு நாடகத்தில் ஆண்களின் வாழ்நாள் எதிர் பார்ப்பு 61.7 ஆண்டுகள், பெண்களுக்கு 65.4 ஆண்டுகள். ஆந்திரப் பிரதேசத்தில் அந்த எண்களின் மதிப்பு 61.5 ஆண்டு களாகவும், 63.5 ஆண்டுகளாகவும் இருந் தது. 2006 இல், பெண்களின் சராசரித் திருமண வயது கருநாடகத்தில் 19.6 ஆண்டுகள்; ஆந்திரப் பிரதேசத்தில் 18.1 ஆண்டுகள்.

200102 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) கருநாடகத்தில் 27.1 விழுக்காடு, ஆந்திரப் பிரதேசத்தில் 24.8 விழுக்காடு. தலைநபர் வருமான அதி கரிப்புக் கருநாடகத்தில் 200506 இல் 7.8 விழுக்காடு, ஆந்திராவில் 4.5 விழுக்காடு.

இவ்வாறு, கருநாடக மாநிலத்தில், மக்கள் தொகை மாற்றம் நிகழ்வதற்கான எல்லா சமூகப் பொருளாதாரக் கூறு களும் சாதகமாக இருந்தன. இருப்பி னும், ஆந்திரப் பிரதேசத்தில் அது நிகழ்ந்து சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து, 2007 ஆம் ஆண்டில்தான் கருநாடகத்தில் மக்கள் தொகை மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அம் மாநிலத்தில் வாயளவில் போற்றினார் களேயன்றிச் செயலில் உறுதி காட்ட வில்லை. அரசியல்வாதிகள் மத்தியிலும் அதற்கான ஈடுபாடு குறைவு. வலிமை யான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட நடைமுறை இல்லாத நிலையில், சமூகப் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், மக்கள் தொகை மாற்றம் ஏற்படக் காலம் ஆகும் என்பதைக் கருநாடக அனுபவம் காட்டுகிறது.



Friday, July 30, 2010

தமிழக அரசு பரிசீலனை மீண்டும் மதுவிலக்கு?


முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்விக்கு பதில் விவரம் வருமாறு:

கேள்வி: டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே?

பதில்: டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்லமதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.

கேள்வி: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச்சொல்லி தொண்டர்களை உசுப்பி விட்டு அறிக்கை விடுவதோடு தன் பணி முடிந்து விட்டது என்றிருந்த ஜெயலலிதா, தற்போது மாதத்திற்கு ஓரிரு முறை தானே அவற்றில் கலந்து கொள்வதாக அறிவிப்பதும்சிறிய சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு போட்டோ தரிசனம் கொடுப்பதும் எதைக் காட்டுகிறது?

பதில்: தேர்தல் நெருங்கிவிட்டது என்பதைத்தான்!

கேள்வி: தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து ஜெயலலிதா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: தினபூமி பத்திரிகை ஆசிரியரின் கைது பற்றி பத்திரிக்கை செய்திகள் மூலமாக அறிந்ததும் நான் உடனடியாக காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுவிட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென்று கூறி அவர்களும் ஒரு சில மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டு விட்டனர். பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான ரவீந்தரதாஸ் அவர்களையும் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு நான் பேசினேன். அதைப் பற்றி அவரே எனக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையும் விடுத்துள்ளார்.

இது என்னுடைய நடைமுறை. ஆனால் பத்திரிகையாளர்களுக்காக வக்காலத்து வாங்கி அறிக்கை விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? இந்து பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் செய்தது எந்த ஆட்சியிலே? நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கி அதன் ஆசிரியர் கோபாலை கைது செய்து, அவரது குடும்பத்தினர் ஒருவரே சாகக் காரணமாக இருந்தது எந்த ஆட்சியிலே? பத்திரிகை பிதாமகன் என்று சொல்லத் தக்க அளவிற்கு மரியாதை பெற்ற ஆசிரியர் சாவி கைது செய்யப்பட்டது எந்த ஆட்சியிலே? ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் பாலு கைது செய்யப்பட்டது எப்போது? முரசொலியில் வெளி வந்த செய்தி ஒன்றுக்காக முரசொலி செல்வத்தை சட்டமன்ற வளாகத்திற்கே வரவழைத்து, சரித்திரத்திலேயே நடைபெறாத அளவிற்கு கூண்டிலே நிறுத்தியது எந்த ஆட்சியிலே? சாத்தான் வேதம் ஓதலாமா? என்று ஒரு பழமொழி கூட உண்டே!

கேள்வி: மார்க்சிஸ்ட்கள் தமிழக அரசைப் பற்றி எந்தவொரு பிரச்சினை என்றாலும் உடனே அதனைத் தாக்கி அறிக்கை விடுகிறார்களே; அவர்கள் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் என்ன நிலை என்பதை நினைத்தே பார்க்க மாட்டார்களா?

பதில்: அய்.நா.வின் சர்வதேச மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி, வறுமை ஒழிப்பு நடவடிக்கை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து, பல்நோக்கு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்கள்; ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளை விட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருக்கிறாரே?

பதில்: மத்திய அரசு மானியத்தில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், எல்லா மாநிலங்களிலுமே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கலாமே! மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கும் அரிசியைத் தான் நமது மாநிலத்திற்கும் அதே விலையில் வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் தான் இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

அது மாத்திரமல்ல; சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அத்தியாவசிய உணவுப் பொருள்களாகிய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றையும், மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசுதான் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக இந்த ஆண்டு மட்டும் 3,750 கோடி ரூபாயை தமிழக அரசுதான் தன் நிதியிலிருந்து அளித்து இத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்திதான். அந்தத் திட்டம் உலக வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்றுத்தான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி, நடத்தப்படுகின்ற திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்கான நடைமுறைச் செலவிலே தான் ஒரு பகுதியை மட்டும் மத்திய அரசு வழங்குகிறது.

கேள்வி: ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது அ.தி.மு.க.விற்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: ஆமாம், அவர் என்ன செய்து விடுவாரோ என்று பயந்து கொண்டுதான் அந்தப் பெயர் சூட்டப்பட்டது!

கேள்வி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை நீங்களாகவே சூட்டியபோதிலும், அது அ.தி.மு.க.விற்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: ஆமாம், பெருந்தலைவர் காமராஜர் மீது திடீரென்று அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம்! அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர் தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பேருந்து நிலையங்கள் எத்தனை தெரியுமா? சிரிப்பு தான் வருகிறது.

காமராஜர் பெயரை வைக்கக்கூடாது என்று கருதுகின்ற அரசா இது? கக்கன் சிலையை வைக்கத் தயங்குகின்ற ஆட்சியா இது? காமராஜர் பிறந்தநாளை தியாகிகள் தினமாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்து சட்டம் நிறைவேற்றிக் கொண்டாடுகின்ற அரசல்லவா இது?

காமராஜர் மறைந்த போது, அவரது உடலை அரசு மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்க வேண்டுமென்று சொன்னவனே நான் தானே? அவரது உடலை அடக்கம் செய்ய நள்ளிரவிலே நானும், அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ப.உ.சண்முகமும் இடம் தேடிச் சென்று ஏற்பாடு செய்ததைப் பற்றி, சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு பேசும் போது, காமராஜரின் சகோதரர் ஒருவர் உயிரோடு இருந்து அவர் உடலை அடக்கம் செய்திருந்தால் கூட இந்த அளவிற்கு செய்திருக்க மாட்டார் என்று கூறியது இன்றும் அவைக்குறிப்பிலே இடம் பெற்றுள்ளதே!

கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என்று இவர்கள் எல்லாம் கோரிக்கை வைத்த பிறகு, உண்ணாவிரதம் இருந்த பிறகா நான் பெயர் சூட்டினேன்?

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரையும், காமராஜரின் பெயரையும் வைக்க வேண்டுமென்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்து நிறைவேற்றிய போது ஜெயலலிதாவும் அவருடைய கட்சியினரும் எங்கே போயிருந்தார்கள்?

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்று குமரி அனந்தன் கோரிக்கை வைத்து, அந்த இடம் கடலுக்கு அருகிலே இருப்பதாகக் கூறி வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய அரசு ஏற்க மறுத்தபோதுஅதற்காக வாஜ்பாயிடம் வாதாடி விதிவிலக்கு பெற்று காமராஜர் மணிமண்டபத்தை எழுப்பக் காரணமாக இருந்தவன் நான் அல்லவா?

1961 ஆம் ஆண்டு பெரியார் பாலத்திற்கு அருகே பெருந்தலைவர் காமராஜருக்கு சிலை அமைத்து, மாநகராட்சிப் பொறுப்பில் தி.மு.கழகம் இருந்தபோதுதான் அன்றைய பிரதமர் பண்டித நேருவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது என்ற சரித்திரம் எல்லாம் அப்போது அரசியலுக்கே வராமல் குழந்தை நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க முடியாதுதான்!

தியாகி கக்கன் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலை ரூ.4.10 லட்சம் செலவிலே உருவாக்கப்பட்டு, மதுரையிலே நான் கலந்து கொண்டு 31_8_1997 அன்று திறந்து வைத்த போது இப்போது அறிக்கை விடும் ஜெயலலிதா எங்கே இருந்தார்?

மதுரை மாவட்டம், கக்கன் பிறந்த தும்பப்பட்டியில் தியாகி கக்கன் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டி முடித்து, அங்கே கக்கன் மார்பளவு சிலையும் 13_2_2001 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளதே! அன்று ஜெயலலிதா எங்கே போனார்?

1971 ஆம் ஆண்டிலேயே சென்னை மாம்பலம் சி.அய்.டி. நகரில் தியாகி கக்கனுக்கு அரசுக்குடியிருப்பு ஒன்றை ஒதுக்கீடு செய்து தந்ததே தி.மு. கழக அரசுதானே?

கக்கன் வாரிசுகளில் ஒருவரான அவரது மகன் க.பாக்யநாதனுக்கும், பேரன் கண்ணன் என்பவருக்கும் லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை அவர்கள் இருவரின் செலவுகளுக்கும் மாதந்தோறும் வழங்கிடவும், அவர்கள் இருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவியையும் செய்தது தி.மு.கழக ஆட்சி அல்லவா?

எனது பெரு முயற்சி காரணமாக 9_12_1999 அன்று மத்திய அரசின் மூலம் கக்கன் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டதே, அதை மறந்து விடலாமா; மறதிக்குடுக்கை!

இதையெல்லாம் மறைத்து விட்டு கக்கன் மீது ஜெயலலிதாவிற்கு திடீரென்று அக்கறை ஏற்பட்டு விட்டதா? கக்கன் வகுப்பைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவர் ஒரு நாள் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் பயணம் செய்திட ஏறி அமர்ந்த பிறகு, அவரை விமானத்திலிருந்து இறக்கி விட்ட முற்போக்குவாதி அல்லவா ஜெயலலிதா? என்று கூறியுள்ளார் முதல்வர் கலைஞர்.

சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : இள.புகழேந்தி வேண்டுகோள்


தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 4ஆம் நாள் புதன்கிழமை இளைஞர் அணி சார்பில் வாய்தா ராணியும் முதல்தர கிரிமினலுமான ஜெயலலிதா, மக்களை அவமதித்தும், நீதிமன்றங்களின் மீதான மரியாதையைக் குலைக்கும் வண்ணம் தினமும் அறிக்கைகளின் வாயிலாக பித்தலாட்ட அரசியல் செய்யும் பொய்மை வேடத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திடவுள்ளதை மாண்புமிகு துணை முதல்வர், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக கணக்கு வழக்கின்றி வருமான வரித்துறையை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாற்றப்பட்டு நீதிமன்றத்தில் தங்களை முழு விசாரணைக்குட்படுத்தி நிரபராதியாக விடுதலையானவர்கள் இந்தியாவில் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா அரசு போட்ட வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்வுடன் பொய்யாக புனையப்பட்டவை என்று நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டு கழகத்தவர்கள் விடுதலையாகி உள்ளனர்.

ஆனால் ஒரு ரூபாய் மாதச் சம்பளம் பெற்று 1991 முதல் 1996 வரை அய்ந்தாண்டில் ரூபாய் 66 கோடியே 65 லட்சத்திற்கு சொத்து ஜெயலலிதாவிற்கு வந்தது எப்படி? என்று சாதாரண கடைகோடி தமிழனும் கேட்ட கேள்விதான் தற்பொழுது பெங்களூருவில் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவால் இழுத்தடிக்கப்பட்டு வருகிற வழக்காகும். தன்னிடம் தவறு இல்லையென்றால் நீதிமன்றத்தில் தைரியமாக வழக்காடி தான் குற்றமற்றவர் என ஜெயலலிதா நிரூபித்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருந்தும் வழக்கை இழுத்தடிப்பது ஏன்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக துணைமுதல்வர் ஸ்டாலின் கேட்பது. தொடர்ந்து சாக்கு போக்கு சொல்லி வழக்கை தள்ளிப்போட்டு வாய்தா வாங்கிடும் ஒரே நபர் இந்தியாவிலேயே ஜெயலலிதாதான். தளபதி அறிவித்திருப்பது கவன ஈர்ப்பு போராட்டம். நீதிமன்ற கவனத்தை ஈர்ப்பது அறிவு நாணயம் உள்ளோர் செயல். தண்டனை வந்துவிடுமோ என்று பயந்து நூறு தடவைகளுக்கு மேல் வாய்தா வாங்குவதுதான் மானங்கெட்ட செயல்.

தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகராக திகழும் துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. மாணவர் அணியினர் ஆங்காங்கு போராட்டம் நடைபெறவுள்ள மாவட்டத் தலைநகரங்களில் இளைஞர் அணி நிருவாகிகளுடன் கலந்துபேசி பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று இள.புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இருப்பதையும் இழக்காமல் இடஒதுக்கீடு அமைந்திட...! - கலைஞர் கடிதம்


சமூக நீதிக் களத்தில் 90 ஆண்டுப் பின்னணி வரலாற்றைப் பெற்றுள்ள இயக்கம் நமது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீ அறிவாய்! திராவிட இயக்கத்தின் ஆணிவேர்க் கட்சியாம் நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில், 1921ஆம் ஆண்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள்முதல்; வாழையடிவாழையென வளர்ந்து கழகம் இமயமென உயர்ந்து நிற்கும் இன்றுவரை சமூகநீதி என்பதை நமது உயிர்மூச்சுக் கொள்கையாகப் போற்றிப் பேணி வருகிறோம். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள் கையை மறுஆய்வு செய்யும் பிரச்சினை பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டு வந்தாலும், முதல்முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 1969ஆம் ஆண்டில் திரு.ஏ.என்.சட்டநாதன் அவர்கள் தலைமையில் 13.11.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காகவும், அவர்தம் நிலையை மேம்படுத்தவும், அரசு அதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆராயவும், கல்வி வசதிகள், அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவம், சமுதாய நலவளர்ச்சி ஆகிய முனைகளில் அவர்களுடைய நிலையை மேம்படுத்த மாநில அரசு என்னென்ன நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்யவும், தமிழகத்தின் வரலாற்றில் முதன்முதலில் அமைக்கப்பட்ட குழு இதுதான். இந்தச் சட்டநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேதான் அதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம்; என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை மாற்றியமைத்து, 7.6.1971 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவிகிதம்; என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகுப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு உரிய பங்கினைப் பெறமுடிய வில்லை என்கிற உணர்வு மேலோங்கி, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு தனிஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வந்ததையொட்டி; பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாசு அவர்களை கலந்தாலோசித்து; பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிகிதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக் கியும்; நான் மூன்றாம் முறையாக முதலமைச் சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் 28.3.1989 அன்று ஆணையிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொகையைக் கருத்தில்கொண்டு, 1990ஆம் ஆண்டில் பொதுத் தொகுப்புக்கான ஒதுக்கீட்டிலிருந்து தனியே 1 விழுக்காடு பழங்குடியினருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் என 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் அய்ந்தாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரையினைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவிகித இடஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் களுக்கு என தனியே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதைப்போலவே, தாழ்த்தப்பட்டோருள் கடைக்கோடிப் பிரிவினராய் இருந்துவரும் அருந்ததியர்க்கு தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை ஏற்று, தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவரும் 18 சதவிகித இடஒதுக்கீட்டில் 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நான் இவ்வளவு விவரங்களையும் தொகுத்துச் சொல்வதற்குக் காரணம் இடஒதுக்கீட்டின் பரிணாம மாற்றங்களை நீ நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பிற்படுத்தப்பட்டோருக்கென வழங்கப்பட்டு வந்த 30 சதவிகித மொத்த இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதும்; பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியதும்; அருந்ததியர் களுக்கு 3 சதவிகித தனி உள்ஒதுக்கீடு வழங்கியதும்; பழங்குடியினர்க்கு ஒரு சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலேதான். எப்போதுமே கோரிக்கைகளிலே நியாயம் இருக்குமேயானால்; சட்டமும் காலமும் ஒத்துவருமானால்; அந்தக் கோரிக்கைகளை ஒத்திப்போடாமல் உடனடியாக ஏற்று, நிறைவேற்றி வருவது கழக ஆட்சி என்பதனை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள். அந்த அடிப்படையிலே தான் மிகப் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும், பழங்குடியினர்க்கும் தனித்தனியே இடஒதுக்கீடுகள் கழக ஆட்சியிலே வழங்கப்பட்டுள்ளன.

தற்போது டாக்டர் இராமதாசு அவர்கள், அருந்ததியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையிலே இருக்கும் அடிப்படை நியாயங்களைப்பற்றியெல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக் கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றத்திலே 1994ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்சநீதி மன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. அந்த இடைக்காலத் தீர்ப்பில், ‘‘It has been laid down that if a State wants to exceed 50 percent reservation, then it is required to base its decision on the quantifiable data’’, அதாவது, ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதனை நியாயப்படுத்து வதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளித்திடும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு நமக்கு ஜாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு (CasteBased Census) மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மாநிலத்தில் மட்டும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டுமென்றால், அதற்கு 400 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாமென்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நமக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதையெல்லாம் முடிவு செய்திட இயலும். அப்படிச் செய்தால்தான், சட்டப்படி அந்த முடிவுகள் எல்லாம் செல்லுபடியாகும். அப்படியில்லை என்றால் நாம் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகிவிடக்கூடும். எனவே, வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு என்ற பிரச்சினையில் நாம் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப்பிறகு தனி ஒதுக்கீடு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதுதான் சட்டப்படியான அணுகுமுறையாக அமைந்திடும். இதில் அவசரம் காட்டினால், பிரச்சினை திசை திரும்பிவிடக்கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்பதாலும் தொடர்புடைய அனைவரும் இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இணக்கமான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம்!

அன்புள்ள,
மு.க.

Thursday, July 29, 2010

மு.க.தமிழரசு மகள் பூங்குழலி திருமணம் கலைஞர் வாழ்த்துரை - 08.03.2009


முதல்-அமைச்சர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு-மோகனா மகள் பூங்குழலி, கோவை மத்திய ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ம.சி.பழனிச்சாமி-வசந்தி மகன் பிரேம் ஆனந்த் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் 08.03.2009 அன்று காலை நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி காலை 9.30 மணிக்கு சென்னை கோபால புரத்தில் இருந்து வேன் மூலம் அண்ணா அறிவாலயம் வந்தார். அதன்பின்பு வீல் சேர் மூலம் மேடைக்கு அழைத்து வந்தனர்.

திருமண விழாவிற்கு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமைதாங்கினார். அப்போது அவர் தாலியை எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தார். அதை அவர் மணமகன் பிரேம் ஆனந்திடம் கொடுக்க மணமகள் பூங்குழலி கழுத்தில் கட்டினார். திருமணம் முடிந்ததும் மணமக்களுடன் கருணாநிதியின் குடும்பத்தினர் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஏறத்தாழ நாற்பது நாட்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை இன்றைக்குப் பெற்றிருக்கிறேன். முதல்வர் வருவாரா, வருவாரா என்று இங்கே பேசிக் கொண்டதாக, நம்முடைய பேராசிரியர் காதர் மொய்தீன் சொன்னார்.

முதல்வர் வருவாரா என்று பேசிக் கொண்டார்களா, அல்லது முதல்வராக வருவாரா என்று பேசிக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது. எப்படியும் சுயமரியாதை மணம் வீசுகின்ற இடத்தில் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கருணாநிதி இருப்பான் என்பதற்கு இது சான்று. மணமக்கள் இன்று வாழ்க்கைத் துணை என்கிற நலம் பெற்று நம்முடைய வாழ்த்துக்களையெல்லாம் அடைந்திருக்கிறார்கள். இந்த வாழ்த்துகள் வீண் போகாது. காரணம் மணமகனும், மணமகளும் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

என்னுடைய இளையமகன், தமிழரசு - நீங்கள் எல்லாம் மிக அதிகமாக - அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாவிட்டாலும், கழகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அதிலும் குறிப்பாக அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெறுகின்ற போராட்டமானாலும் அல்லது மொழியைக் காப்பாற்றுகின்ற போராட்டமானாலும் அல்லது உரிமைகளைக் கோருகின்ற போர் முனைகள் ஆனாலும் அவைகளில் எல்லாம் கழகத்தினர் சிறை புகுந்தால், அந்த சிறைக்குள்ளே ஐம்பது பேர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், கழகச் சார்புடையவர்கள் இருப்பார்களானால், தமிழரசு சிறைச்சாலைக்கு வெளியே இருந்து உள்ளேயிருக்கின்ற கழகத் தோழர்களுக்கு என்னென்ன வசதி வாய்ப்புகள் வேண்டும் என்பதையெல்லாம் சட்டப் பூர்வமாக அறிந்து அவைகளை முறைப்படி தலைமைக் கழகத்திலே தெரிவித்து, அவற்றை அவர்களுக்கு வாங்கி உதவுகின்ற ஒரு பணியினை, அவர்கள் ஆறு மாத காலம் சிறையிலே இருந்தாலும் அந்த ஆறு மாத காலமும் சிறைச்சாலையைச் சுற்றிச் சுற்றி வருகின்ற ஒரு மகன் தான், என்னுடைய இளைய மகன் மு.க. தமிழரசாகும்.

பேராசிரியர் இங்கே குறிப்பிட்டார், உங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொன்னேன் என்று - மன்னிக்க வேண்டும், நான் அப்படிச் சொல்லவில்லை. உங்களுக்கு தமிழை தெரியாது என்று தான் சொன்னேன். ஏனென்றால் நான் இந்தத் திருமணத்திற்கு வரவில்லை யென்றால், தமிழின் கோபம் எந்த அளவிற்கு இருக்கும் என்று எனக்குத் தெரியும். யார் கோபித்தாலும் தாங்கிக் கொள்ளலாம், தமிழ் கோபித்தால் யாரும் தாங்கிக் கொள்ள முடியாது. வீட்டைப் பொறுத்து மாத்திரமல்ல, நாட்டைப் பொறுத்தும்தான் சொல்கிறேன். எனவே தான் தமிழுக்கு கோபத்தை உண்டாக்குகின்ற காரியத்தை யாரும் செய்யக் கூடாது என்பதை இந்தத் தமிழின் மூலமாக நான் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ரவிக்குமார் எம்.எல்.ஏ, பேசும்போது ஒன்றைச் சொன்னார். இங்கேயும் கோரிக்கை வைக்கிறேன் என்று சொல்லி விட்டு அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்திருக்கிறீர்கள், பெண்களும் அர்ச்சகராக ஆக வேண்டுமென்று சொன்னார். அவருக்கு ஏதோ சிறு சங்கடம் இருப்பதாக கருதுகிறேன். வீட்டிலே பெண்கள் அர்ச்சனை செய்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களை யெல்லாம் எப்படியாவது கோவிலுக்கு அனுப்பி விட வேண்டுமென்று ரவிக்குமார் அந்தக் கோரிக்கையை என்னிடம் வைத்துள்ளார். இதை நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. இன்று மகளிர் தினம். மார்ச் 8 - மகளிர் தினம். இந்த நாளில் நாம் ஓர் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங் அரசுக்கு அறிவுரை கூறுபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சொக்கத்தங்கம் சோனியா காந்திக்கு, இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது, நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்த நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகின்ற இந்தத் திருமண விழாவில் வேண்டுகோளாக விடுக்க விரும்புகின்றேன்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, பூங்குழலி என்ற இந்தப் பெயர் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலிலே வந்தது தனக்கு நினைவுக்கு வந்ததாகச் சொன்னார். நான் அவரை மறுப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது, மறுத்தாலும் குற்றம் இல்லை.

இது புராணீக, ஷேத்திரம் என்று சொல்லப்படுகிற, பாடல் பெற்ற ஸ்தலமான எங்கள் கிராமம் - திருக்குவளையிலே உள்ள அம்மனின் பெயர். அந்தக் காலத்திலேயே எவ்வளவு அழகான தமிழிலே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழ்ப் பெயர்களையே வட மொழிப் பெயர்களாக மாற்றுவதுதான் நாகரீகம் என்று கருதிக் கொண்டிருக்கின்ற ஒரு கேடு கெட்ட நிலை, தமிழகத்திலே வளர்ந்து வருகிறது. அதற்கு மாறாக நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் காலத்திலேயே, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களிலே ஒன்றுதான் திருக்குவளையிலே இருக்கின்ற கோளிலிநாதர் கோவில்.

நான் தமிழுக்கு பெண் குழந்தை பிறந்த போது, பெயர் வைக்கச் சொன்ன நேரத்தில், நான் எண்ணிப் பார்த்த போது, வண்டமரும் பூங்குழலி - என்ற அந்தப் பெயர் என் நினைவுக்கு வந்தது. அது தான் திருக்குவளையில் உள்ள அம்மன் பெயர். அது அம்மன் பெயர் என்பதற்காக அல்ல, அதிலே உள்ள தமிழ் பெயரைத்தான், இந்தப் பேத்திக்கு நான் வைத்தேன்.

அத்தகைய தமிழ் உணர்வு இன்றைக்குப் பட்டுப் போய் இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் எல்லோரும் தமிழர்களாக, தமிழ் மொழிக்கு சிறப்பு செய்பவர்களாக, தமிழ் மொழியை வளர்ப்பவர்களாக மாறுவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகளிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவமனையிலே நான் நாற்பது நாள் இருந்த போது - அதுவும் எனக்கொரு அனுபவம்தான். ஆனால் இந்த அனுபவம் வேறு யாருக்கும் வரக்கூடாது. முதுகுத் தண்டிலே உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவிற்கு ஒரு நோய், என்னைப் பிடித்தாட்டி, சில நாட்கள் அலட்சியமாக இருந்த காரணத்தினால், பின்னர் தகுந்த சிகிச்சையைத் தவிர இதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில், நம்முடைய போரூரிலே இருக்கின்ற ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் அவர் தான் அந்தத் துறைக்கு தலைவராகவும் இருக்கிறார், டாக்டர் மார்த்தாண்டம். அவருடைய தலைமையில் 14 பேர் கொண்ட ஒரு மருத்துவக் குழு எனக்கு சிகிச்சை செய்து, ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் - ஏன் சில நேரங்களில் மாலை, சில நேரங்களில் காலை என்று இப்படியெல்லாம், பொழுதுகள் மாறி மாறி வந்தாலும், அந்த நேரத்திலே நான் தாங்கிக் கொள்ள முடியாத வலியால் துடித்திருக்கிறேன், துவண்டிருக்கிறேன்.

ஒரு நாள் இரவு 2 மணிக்கு பயங்கரமான வலி ஏற்பட்டு, மருத்துவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, கண் கலங்கி நின்ற போது நான் புரிந்து கொண்டு, கட்சியின் தலைவருக்கெல்லாம் பேராசிரியர் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வரச் சொல்லுங்கள், அவர்களையெல்லாம் நான் கடைசியாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்ட பிறகு தான், வேறு வழி தெரியாமல் யோசித்து மார்த்தாண்டம், டாக்டர் தணிகாசலம் ஆகியோர் டெல்லியிலிருந்து அரவிந்த் ஜெய்ஸ்வால் என்ற ஒரு அருமையான எலும்பு சிகிச்சை மருத்துவரை அழைத்து வந்தார்கள். அவர் வந்து, எனக்கு சிகிச்சை அளித்து, சிகிச்சை முக்கியமல்ல - இந்தச் சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய ஓய்வு தான் முக்கியம் என்று ஏறத்தாழ மூன்று மாத காலமாவது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நானும் உங்களுடைய ஆதரவு இருக்குமென்ற எண்ணத்தோடு சம்மதித்திருக்கிறேன். இருந்தாலும் இடையிலே இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள வேண்டிய அவசியம் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை நான் உங்களிடத்தில் முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.


கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசும் போது,

’’தமிழ்நாட்டில் முதன்முதலாக 5 நாட்கள் நடந்த உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு இதுதான். இந்த மாநாடு எந்தவிதமான அரசியல் சார்பும் இல்லாமல் நடந்தது.

அதை சிறப்பாக நடத்திக் காட்டிய முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுகள். எங்கள் கட்சி சார்பில் 60 ஆண்டுகளாக மத நல்லிணக்க விருதுகள் வழங்கி வருகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4-ந் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று 3 பேருக்கு வழங்கி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்த 3 பேருக்கும் வழங்கும் விருதை, நமது முதல்வர் கருணாநிதிக்கே வழங்க உள்ளோம்.

அதாவது முதல்வருக்கு நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற விருது வழங்கி பாராட்ட உள்ளோம்’’என்று தெரிவித்தார்.


ஜெ. மீது வழக்கு தொடரப்படும்: திமுக எச்சரிக்கை


இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


திமுக இளைஞரணி சார்பில் வாய்தா ராணி ஜெயலலிதாவை கண்டித்து, நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள புலம்பல் அறிக்கையை கண்டனத்துக்குரியது.


ஜெயலலிதா ஆட்சியில் நீதிபதிகளையும், அவர்களது உறவினர்களையும் எந்த அளவுக்கு பழி வாங்கினார் என்பதை தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்த ஊழல்கள், வருமானத்துக்கு அதிகமாக குவிந்த சொத்துக்கள், டான்சி ஊழல், கொடைக்கானல் ஊழல், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு. அன்னிய செலாவணி மோசடி வழக்கு. வருமான வரி வழக்கு. ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசிய வழக்கு. நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மருமக
ன் மீது கஞ்சா வழக்கு போன்ற கணக்கிட முடியாத அளவிற்கு சட்டத்துக்கு புறம்பானவைகளை செய்தவர் ஜெயலலிதா.


ஜெயலலிதா சட்டத்தை பற்றியும், ஊழலை பற்றியும், நீதிமன்ற அவமதிப்பினை பற்றியும் அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும்.


ஜெயலலிதாவின் அறிக்கையை சாட்சியமாக வைத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திமுக சட்டத்துறை தயங்காது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

ஜெ.யை கண்டித்து ஆக.4ல் திமுக ஆர்ப்பாட்டம்


சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை அன்பகத்தில் புதன்கிழமை (28.07.2010) மாலை நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மீது எந்தெந்த வழக்குகளில் எத்தகைய தீர்ப்புகள் கூறப்பட்டிக்கின்றன என முதல்வர் கருணாநிதி பலமுறை சுட்டிக் காட்டியும், அதற்கு பதில் சொல்ல வழியில்லாமல் தன்னை ஊழலற்றவர் போல் காட்டிக் கொண்டு அன்றாடம் அறிக்கை விடுகிறார். சொத்து குவிப்பு வழக்கை 13 ஆண்டாக இழுத்தடிக்கும் ஜெயலலிதாவின் நடவடிக்கையை கண்டித்தும், மக்களை தொடர்ந்து அவமதித்து வரும் போக்கினை எதிர்த்தும், மக்கள் மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 4ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், திமுக முன்னணியினர், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்

முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதோடு, சாதனைகளை அச்சிட்டு வீடுகள்தோறும் வினியோகிக்க வேண்டும்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாவை இந்த ஆண்டும் எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஸ்டாலினிடம், இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? ஆர்ப்பாட்டத்தை கைவிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டம் அறிவித்தப்படி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவின் கருத்துக்கள் பற்றி எனக்கு கவலையில்லை என்றார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளில் இன்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு,


அது தவறான செய்தி என்றும், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Wednesday, July 28, 2010

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் 7 செம்மொழிகளுக்கு தனி ஆய்வு துறை


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ரூ.1.95 கோடி செலவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் உலக செம்மொழி உயராய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டி, மையத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும¢ என்ற 100 ஆண்டுகால நமது கோரிக்கை 2004ல் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘தமிழ் செம்மொழி அந்தஸ்துபெற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் காரணமாக இருந்தாலும், அது கிடைக்கப்பெற்றதில் உங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இக்கடிதத்தை நான் சாதாரணமாக நினைக்கவில்லை. எனது பேரன், பேத்திகள் பாதுகாத்து வைக்கவேண்டிய செப்பேடாக கருதுகிறேன். அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த புகழ்பெற்ற சின்னமாக அக்கடிதம் இருந்தது.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றவுடன், மைசூரில் உள்ள தமிழ் ஆய்வு மையத்தை சென்னைக்கு மாற்றக் கோரிக்கை வைத்தோம். அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது. உலக செம்மொழிகள் குறித்த ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். அதுவும் தற்போது நிறைவேற்றப்பட்டு 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொழி வாரியான பல்கலைக்கழகங்களில் அந்தந்த மொழிகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்மொழி மட்டும் அல்லாது செம்மொழி அந்தஸ்து பெற்ற வடமொழியான சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம், அரபு ஆகிய 7 மொழிகளுக்கும் சேர்த்து எந்த ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை. உலகிலேயே தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தான் உலக செம்மொழிகள் உயராய்வு மையம் முதன்முறையாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, உலக செம்மொழிகள்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். செம¢மொழிகள் கற்பித்தல், மொழி அமைப்புகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக செம்மொழிகளுக்குள் ஒப்பீடு, ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் குறித்தும் உலக செம்மொழி களஞ்சியங்கள், வரலாற்றுக் களஞ்சியம் ஆகியவை உருவாக்கப்படும். மேலும், செம்மொழிகளைக்கொண்ட பொன்மொழிக் களஞ்சியம், உலக செம்மொழி அகராதியும் உருவாக்கத் திட்டமிடப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர்கள் கோ.சி.மணி, பொன்முடி, துணைவேந்தர¢ ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜெ.வுக்கு பொன்முடி விட்ட எச்சரிக்கை


தஞ்சை திலகர் திடலில் இன்று மாலை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி,

இந்த நிகழ்ச்சியிலே கலைஞர் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று மாலை ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

துணை முதல்வர் ஸ்டாலின், 4ஆம் தேதி நடக்க இருக்கும் இளைஞரணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் ஒரு பட்டத்தை கொடுத்திருக்கிறார். 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறேன் என்று அறிவித்தவுடனேயே, அலறிக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார் ஜெயலலிதா.


அறிக்கை விடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, அரசியல் ரீதியாக இந்த கழகத்தைப் பற்றியோ, கலைஞரைப் பற்றியோ, தளபதி ஸ்டாலின் பற்றியோ விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.


ஆனால் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞருடைய குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். எனக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று பழக்கப்பட்டிருந்தாலும் கூட, அண்ணன் வெற்றிகொண்டான் பானியில் பதில் சொன்னால்தான் ஜெயலலிதாவுக்கு புரியும்.


வெற்றிக்கொண்டான் பானியில் சொல்ல வேண்டும் என்றால், பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா, தனக்கு எப்போதும் ஜால்ரா அடித்துக்கொண்டிருப்பவர்களை ஆட்டிப்படைத்து, அரசியல் செய்துகொண்டிக்கும் ஜெயலலிதா, இன்று நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை என்றவுடன், நமக்கு என்ன கதி என்று கதிகலங்கி இருக்கிறார்.


ஜெயலலிதா ஆட்சியில் அரிசி போட வக்குண்டா, வழியுண்டா, இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்கள் சொன்னார்களே ஜெயலலிதா ஆட்சியிலே எலி கறி திண்றார்கள் என்று. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா, கலைஞரை பார்த்து ஏகவசனத்தில் விமர்சனம் செய்யுகிற ஜெயலலிதாவே நாவை அடக்கி வை என்று எச்சரிக்கிறோம்.


வருகிறது. தீர்ப்பு காத்திருக்கிறது. பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. காத்திருக்கிறோம். ஜெயலலிதாவே முறையாக அறிக்கை விடு, பதில் சொல்லுகிறோம். வழக்குகளை நேர்மையாக சந்திகக திராணியில்லாத ஜெயலலிதாவே நாவை அடக்கு என்று பேசி முடித்தார்.


வாய்தா ராணி ஜெயலலிதா: ஸ்டாலின்



தஞ்சை திலகர் திடலில் இன்று மாலை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,

எனக்கு முன்னால் பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு செய்தியை குறிப்பிட்டுச் சொன்னார்கள். இன்று மாலை பத்திரிகைகளில் வந்திருக்கக் கூடிய ஒரு அறிக்கையை சுட்டிக்காட்டி, அதற்கு அவருக்கே உரிய பானியிலே பதில் வழங்கியிருக்கிறார்.

நான் ஒன்றை குறிப்பிட விரும்பிகிறேன். தலைமைக் கழகத்தின் அனுமதியை பெற்று, இளைஞரணி சார்பில் வரும் 4ஆம் தேதி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை, மாவட்ட தலைநகரங்களில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.


அந்த அறிவிப்பை பார்த்ததும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார், அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையிலே, அந்த அறிக்கையை பார்த்து ஆத்திரம் அடைந்து, சில செய்திகளையெல்லாம் அவர் தனது அறிக்கையிலே வெளியிட்டு காட்டியிருக்கிறார். அதற்கு பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.


நான் அறிவித்திருக்கும் போராட்டம் எதற்காக, நீதிமன்றத்தை ஏமாற்றக் கூடிய, நீதிமன்றத்தில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறக் கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களை, இனிமேல் எதிர்க்கட்சி தலைவர் அம்மையார் ஜெயலலிதா என்று சொல்வதைவிட, வாய்தா ராணி ஜெயலலிதா என்று எல்லோரும் குறிப்பிட வேண்டும். இதற்காகத்தான் அந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏதோ நீதிமன்றத்தை அவமதிப்பதாக, இளைஞரணியின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கை இருக்கின்றது என்று ஜெயலலிதா குறிப்பிடுகிறார். என்ன அவமரியாதையை அவர் கண்டிருக்கிறார்.


நீதிமன்ற வழக்கிலே எதையாவது சுட்டிக்காட்டிருக்கிறோமா? கிடையாது. நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கை விரைவாக நடத்திட வேண்டும். ஜெயலலிதா மீது உள்ள வழக்கு என்ன. சொத்து குவிப்பு வழக்கு. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சேர்த்திருக்கக் கூடிய சொத்து. வருமான வரித்துறையில் அவர் காட்டியுள்ள கணக்கு. அதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான், திமுக பொதுச்செயலாளர் சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தார். 1997ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா மீது இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


இந்த வழக்கில் இருந்த தன்னை காப்பாற்றிக் கொள்ள, தேவையற்ற நிலையில் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார். இது நியாயமா? பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.


ஜெயலலிதாவுக்கு உண்மையில் திராணியிருந்தால், வழக்கை சந்தக்க வேண்டுமே தவிர, ஏதோ வாய்தா வாங்கிக்கொண்டிருப்பது, அதை தட்டிக் கேட்டால், நீதிமன்றத்தை அவமதிப்பதாக அறிக்கை விடக் கூடாது என்று பேசினார்

திராவிட என்ற சொல்லை எட்டிக்காயாகக் கருதியவர்கள் இன்று அமுதமாகக் கருதி ஏற்றுக்கொள்கிறார்கள் தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் பெருமிதம்


தஞ்சாவூரில் நேற்று (27.7.2010) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

நாம் நடந்து வந்த பாதை கடுமையான புயல், வெள்ளம், சூறா வளி இவைகளையெல் லாம் தாண்டித் தான் இன்று செப்பனிடப்பட்ட பாதையிலே நடந்து கொண்டிருக்கின்றோம். இங்கே கட்டப்பட்டி ருக்கின்ற அண்ணா அறி வாலயம், என் பேரால் அமைந்துள்ள அறிவால யம் எதுவாக இருந்தா லும், இவைகளெல்லாம் உங்களுடைய எலும்பு களால் கட்டப்பட்டது, உங்க ளுடைய நரம்பு களால் கட்டப்பட்டது, உங்களுடைய இரத்தத் தைக் குழைத்து சேறாக்கி, கபால எலும்புகளை செங்கல்லாக ஆக்கி கட் டப்பட்ட மாளிகை தான் அண்ணா அறிவா லயம் ஆனாலும், ஆங் காங்கே உருவாகிற திரா விட முன்னேற்றக் கழகத் தின் மாளிகை யானா லும், அமைந்திருக்கின் றன.

எல்லோராலும் கடன் வாங்கப்படும் திராவிட என்கின்ற சொல்

இத்தகைய மாளிகை களை எழுப்புவதற்கு நாம் பட்ட சிரமங்கள் எத்தனை, இன்றைக்கு திராவிட என்கின்ற சொல் எல்லோராலும் கடன் வாங்கப்படுகின்ற ஒரு சொல்லாக மாறி இருக்கின்றது. யார் கட்சி ஆரம்பித்தாலும், ஒரு காலத்திலே திராவிட என்ற சொல்லையே வேப் பங்காய் போல் கருதிய வர்கள், எட்டிக்காய் போல் கருதியவர்கள் இன்றைக்கு தாங்கள் ஆரம்பிக்கின்ற கட்சிக்கு, திராவிட என்ற சொல் லைச் சேர்த்தால் தான், மார்க்கெட்டில் அது நிற்கும் என்ற அளவிற்கு திராவிட என்கின்ற சொல்லை சேர்க்கின்ற விந்தையை காணுகின் றோம். ஆனால் இவர்க ளெல்லாம் இந்தச் சொல்லை எதிர்த்தவர் கள், ஏற்றுக் கொள்ளாத வர்கள். தஞ்சை தரணி யில் அறிவார்ந்த பெரி யோர்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும், தெளிவு படைத்த நண்பர் களுக்கும் மிக நன்றாக தெரியும். திராவிட என்ற சொல்லை விஷமாக கருதியவர்கள் உண்டு. ஆனால் அந்தச் சொல், இன்றைய தினம் புதிய புதிய கட்சியை ஆரம்பிக் கின்றவர்களுக்கு அமுத மாக மாறியிருக்கின்றது. அதைச் சொல்லாமல் கட்சியை ஆரம்பித்தால், இது சந்தையில் விலை போகாது என்ற உண் மையை புரிந்து கொண்டு, திராவிட என்ற சொல்லை பயன்படுத்தியே திரா விட முன்னேற்றக் கழ கத்தை வீழ்த்த எண்ணு கிறார்கள். நான் அவர் களுக்கு சொல்லுவேன்,

ஒரு மரத்தை வீழ்த்த அந்த மரத்தை வெட்டி, அதிலே கோடரி செய்வ தைப்போல, திராவிட இனத்தை வீழ்த்த, திரா விட என்ற சொல்லை பயன்படுத்துகிற கோடரி களை, நாங்கள் அடை யாளம் காட்டியே தீரு வோம். திராவிட முன் னேற்றக் கழகத்தை வீழ்த்த, இன்றைக்கு நடைபெறு கின்ற முயற்சிகளை நீங் கள் எல்லோரும் நன் றாக அறிவீர்கள். அதற் குப் பிறகும் தஞ்சாவூ ரில், மாயவரத்தில், கும்ப கோணத்தில், திருவாரூ ரில், எங்கெங்கு காணி னும் அங்கெல்லாம் பல் லாயிரக்கணக்கில், லட் சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள் என்றால்; உலகத் தமிழ் மாநாட் டிற்கு உலகத்திலே உள்ள தமிழர்களெல்லாம் வந்து வாழ்த்து மழை பொழிகிறார்கள் என் றால், தமிழ் ஆய்வாளர்க ளெல்லாம் வந்து கலந்து கொள்கிறார்கள் என் றால், அதற்கு என்ன காரணம்?

திருவாரூரிலே இருந்து கருணாநிதி குடும்பத்தோடு திருட்டு ரயில் ஏறி வந்தான். அப்படி ஏறி வந்தவனை நான் அடையாளம் காட் டுகிறேன் என்று ஒரு அம்மையார் அடையா ளம் காட்டியிருக்கின் றார்கள். நான் அதற்காக கவலைப்படவில்லை, அதற்காக நம்முடைய பொன்முடி அவர்கள் ரொம்பவும் கவலைப் பட்டார். திருட்டு ரயில் ஏறி வந்தது எப்போது, எந்த காலத்தில், எந்த தேதியில் என்றெல்லாம் அந்த அம்மையார் சொல் லவில்லை. ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதைப் போல கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தான் குடும்பத்தோடு என்று சொல்லுகிறார்கள்.

நண்பர்களோடு இருந்தால்தான் என் பணிகள் வேகமாக நடக்கும்

எனக்கு ரயிலே ஒழுங் காக ஏறத் தெரியாது. அதைப்போலவே பஸ்சிலே ஏறுவதற்குக் கூட ஒருவருடைய துணை வேண்டும். நான் அப்படி பழக்கப்பட்டவன், எந்த பயணமானாலும் இரண்டு பேர் நண்பர் கள் என் கூட இருந் தால் தான் அந்த பயணத்திற்கு நான் ஒத்துக் கொள் வேன். இப்பொழுதுகூட அப்படித்தான். இப் பொழுது என்னுடைய கால் பலவீனமாக இருக் கின்றது, அதற்காக அல்ல, என்னுடைய உடல் வலி வாக இருந்த அந்த காலத் திலேயே நாலு நண்பர் களோடுதான் நான் இருப் பேன். அப்படி இருந் தால்தான் என்னுடைய மனம் விசாலமாக இருக் கும், என்னுடைய மூளை சுறுசுறுப்பாக இருக்கும், என்னுடைய பணிகள் வேகமாக நடக்கும், அப் படியே பழக்கப்பட்ட வன்.

அறிஞர் அண்ணா அவர்கள் என்னை இதே மேடையில் உங்களுக்கு அறிமுகப்படுத்தி சொன் னார். நீங்கள் பலபேர் அன்றைக்கு இல்லை. இந்த மேடையில் ஒரு மாணவர் மாநாடு, தம்பி இராஜமாணிக்கம் என்ற தோழர் முன்னின்று நடத் திய மாநாடு. அந்த மாநாட்டிற்கு நான் சற்று தாமதமாக வந்தேன். திருச்சி வந்து அங்கி ருந்து இங்கே வந்தேன். வரும் பொழுது அண்ணா அவர் கள் பேசிக் கொண்டிருந் தார்கள். அன்றைக்கு கல்லக்குடி போராட்டம் போன்ற போராட் டங் கள் பல்வேறு சிறைச் சாலைகளில் அடைபட்ட நிகழ்ச்சிகள் இவைகளுக் கெல்லாம் பிறகு நான் தஞ்சை மேடையில் அன் றைக்கு தோன்றிய காரணத் தால் எதிரிலே அமர்ந் திருந்த உங்களைப் போன் றவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கையொலி செய்து என்னுடைய பெயரைச் சொல்லி வாழ்த் திக் கூறி அமர்ந்தார்கள்.

எப்படிப்பட்ட மேடை இது?

அண்ணா திரும்பி பார்த்தார் வந்துவிட் டாயா, நீ தாமதமாக ஏன் வந்தாய்? என்று கேட்டார்கள். சொன் னேன் காரணத்தை. உடனே அண்ணா அவர்கள் மேடையில் இதுவரை யில் திராவிட முன் னேற் றக் கழகத்தினுடைய வரலாற்றின் ஒரு பகுதியை நான் எழுதி னேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுது வான் என்று சொல்லி விட்டு அமர்ந்தார்கள். அந்த மேடை தான் இந்த மேடை. இந்த மேடையை நான் தொட்டுக் கும்பிட விரும்புகிறேன்.

இங்குமாத்திரமல்ல மன்னார்குடியிலே நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலும் எனக்கு முன்பு அண்ணா பேசி விட்டு புதுக்கோட்டையோ, பட்டுக்கோட்டையோ போக வேண்டிய சூழ் நிலையில்; நான் திரா விட இயக்கத்தின் முற் பகுதியை பேசி விட்டுச் செல்கிறேன் - எனக்கு பிறகு தம்பி கருணாநிதி நான் எழுதிய திராவிட இயக்க வரலாற்றின் அடுத்த பகுதியை தொடருவான் என்று சொல்லிவிட்டு போனார்கள். அதைப் போல அவர்கள் விட்டு சென்ற அந்த பகுதியை - அந்தத் தொடரை நான் இப்பொழுது நிறைவு செய்து கொண்டிருக் கின்றேன், உங்களுடைய துணையோடு, உங்களு டைய ஒத்துழைப்போடு, நீங்கள் எனக்கு பக்க பல மாக இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் அதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஆனால் பொன்முடி போன்றவர்கள், தம்பி ஸ்டாலின் போன்ற வர் கள், மற்றவர்கள் யாரோ சொன்னார்கள் என்று கவலைப்பட வேண் டாம். திருட்டு ரயில் ஏறி வந்தார் என்று சொன் னார்கள் என்றால், நான் அவர்களுக்கு சொல்லு வேன். நான் ஒருமுறை ரயில் ஏறி போலீசாரால் தடுக்கப்பட்டது உண்மை. அது எப்போது தெரி யுமா? 13.9.1944 இல் என் னுடைய திருமணம் முடிந்து, என்னுடைய முதல் மனைவி சிதம்பரம் ஜெய ராமனுடைய தங்கை பத்மாவதி முதலிர வுக் காக சிதம்பரத்திலே காத் திருக்கிறார். நானும் என் னுடைய நண்பர் தென் னனும் திருவாரூரிலே இருந்து புறப்பட்டு அவர் தான் எனக்கு பாங்கன். பாங்கன் என்றால் மாப் பிள்ளை தோழன், அவரை அழைத்துக் கொண்டு முதலிரவு நிகழ்ச்சிக்காக சிதம்பரம் சென்று கொண்டிருக்கின்றேன். அப்போது இரயிலிலே போனேன். ரயிலிலே போனபோது இந்த அம்மையார் சொல்வ தைப் போல எந்த நிகழ்ச் சியும் நடைபெறவில்லை.

ஆனால் என்ன நடந் தது என்றால் சிதம்பரத் திலே போய் இறங்கிய தும் ஒரு அய்ந்து, ஆறு போலீசார் என்னை சுற்றி வளைத்துக் கொண்டு நீங் கள் ஊருக்குள்ளே போகக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன்? ஊரில் பிராமணர்கள் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் நீங்கள் ஏதாவது கலவரம் செய் யக்கூடும். ஆகவே உங் களை அனுமதிக்க முடி யாது. 144 தடையுத்தரவு எனக்கு மாத்திரம் என்றார் கள். காரணம் என்ன என்று கேட்டேன். அதற்கு பிறகு சொன்னார்கள். நான் எழுதிய முர சொலி துண்டறிக்கை - அதை எடுத்துக் காட்டி இப்படி எழுதி இருக் கிறீர்கள் நீங்கள் என்றார் கள். என்ன எழுதியிருந் தேன். தில்லையிலே! ஆம்! தீக்ஷதர் கோட் டையிலே, தீனதயாபரன் கான முழக்கத்துடன் காலைத் தூக்கி காளி யி டம் காலித்தனம் செய்த கைலைப் பதியிலே பூசுரக் கூட்டம் பூணூல் ஆட்சி நடத்தும் பூலோக கைலாசத்திலே புனிதர் மாநாடாம்! பூரி தட் சணையாம்! புண்ணியர் கூட்டமாம்! சாதியை வளர்க்கின்ற மாநாடாம், தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட் டவர்களை இழித்தும், பழித்தும் பேசுகின்ற மாநாடாம். அந்த மாநாடு நடக்கலாமா, தமிழர் களை இழிவுபடுத்து கின்ற மாநாட்டை அனுமதிக் கலாமா என்று கேட்டு வருணத்தின் கொடு மையை எடுத்து விளக்கி அந்த துண்டறிக்கை யிலே எழுதியிருந்தேன். ஆகவேதான் நீ உள்ளே நுழையக்கூடாது என் றார்கள். பக்கத்திலே உள்ள தென்னன் சொன்னார். அய்யா, அவருக்கு இன் றைக்கு முதல் இரவு. நீ ஊருக்குள்ளே நுழையக் கூடாது என்றால் என்ன செய்வது? என்று கேட் டார். அதெல்லாம் எங் களுக்கு கவலையில்லை திரும்ப ரயில் ஏறி போங் கள் என்று சொன்னார் கள். நான் தென்னனைப் பார்த்து இவர்களிடம் வம்பு வேண்டாம் வா ஊருக்கே போய் விட லாம் என்று இருவரும் ரயில் ஏறி திரும்ப திருவா ரூர் போனோம். திருவா ரூரிலே காலையிலே கேட் டார்கள் என்ன வந்து விட்டீர்கள், என்ன நடந் தது என்று கேட்டார் கள். நானும் நடந்ததைச் சொன்னேன் இவ்வளவு தான். இது திருட்டு ரயிலா? தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண் டும். சில பேர் வாய் துடுக்குள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். நான் அதற்கு பதிலுக்கு, பதில் பேச விரும்பாதவன். இவர் பேசினார். ஒரு நடிக ரைப் பார்த்து சட்ட சபைக்கு வரும்போ தெல்லாம் தள்ளாடிக் கொண்டு வருகிறார். குடித்து விட்டு வருகிறார் என்று சொல்ல, அந்த நடிகர் உடனடியாக இவ ரைத் திரும்பிப் பார்த்து ஆமாம் இவர்தான் ஊற் றிக்கொடுத்தார் என்று சொன்னாரே, அது போல நான் சொல்ல மாட் டேன். ஏனென்றால் அப்படிப் பட்ட பள்ளிக்கூடத்தில் நான் படிக்கவில்லை, அண்ணாவின் பள்ளிக் கூடம் அரசியல் நாகரி கத்தின் தொட்டில். அப் படியெல்லாம் நான் படிக்க விரும்பவும் இல்லை, படித்து பயிற்சி பெற்றதும் இல்லை. ஆனால் ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியில் கட்சி கள் நடத்துவதற்கு அர சியல் பேசி அந்த அரசி யலுக்கு மக்களை தயார் படுத்தி அவர்களுடைய ஆதரவைப் பெற்று திட் டங்களைத் தீட்டுவது தான் உண்மையான - வடமொழியிலே சொல் வார்களே ஷேமநல ஆட்சி என்று மக்கள் நல அரசு. அந்த மக்கள் நல அரசு நடத்தத்தான் நாம் விரும்புகின்றோம்.

அரசியல் நாகரிகத்தின் தொட்டில்!

அதை இழித்தும் பழித் தும் பேசுகின்றவர்கள் நிச்சயமாக மக்களிடத் திலே எடுபடக்கூடியவர் கள் அல்ல, வெகுவிரை வில் செல்லாக் காசு களாக ஆகி விடுவார் கள். ஆகவே, கவலைப் பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் உரை


திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைத்து முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை :

திருவாரூர் விழாக்கோலம் பூண்டிருக்-கின்றது. நடந்து முடிந்த தேரோட்டத் திருவிழாவிற்குப் பிறகு பெரும் விழாவாக இந்த விழா இன்றைக்கு அமைந்திருக்-கின்றது (27.7.2010). (கைதட்டல்)

திருவாரூரிலே இன்றைக்கு நான் காணுகின்ற காட்சி, உள்ளபடியே என்-னுடைய கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி மாத்திரமல்ல, கருத்துக்கு இனிப்பைத் தருகின்ற காட்சி. ஒரு காலத்தில் இந்தத் திரு-வாரூரில் பள்ளிச் சிறுவனாக, தெரு-விலே விளையாடுகின்ற விளையாட்டுப் பிள்ளையாக இருந்து, இங்கிருந்து வளர்ந்து திராவிட இயக்கக் கொள்கை-யிலே என்னை இணைத்துக் கொண்டு பெரியாரின் மாணவனாக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக நான் என்னை மாற்றிக்கொண்டு, அவர்கள் வழியிலே நடைபோட்டு, இன்றைய தினம் உங்-களுடைய அன்பால், ஆதரவால் நீங்கள் வழங்கிய கருணையினால், வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆதரவினால் தமி-ழகத்தை ஆளுகின்ற பொறுப்பை ஏற்றிருக்கிறேன் என்றால், அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். உங்களால் வழங்கப்பட்ட பொறுப்பு, உங்களால் தரப்பட்ட பதவி, உங்களால் இடப்பட்ட வேலை_- அதை நீங்கள் நிறைவடையத்தக்க வகையில், நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் செய்து முடிப்பதுதான் என்னைப் போன்றவர்களுடைய கடமையாக, வேலையாக இருக்க வேண்டும் என்-பதால்தான், அந்தப் பணிகளிலே ஒரு பகுதி-யாக திருவாரூர் மண்ணில் மருத்துவக் கல்லூரியும், மருத்துவத் துறை சார்ந்த பல்-வேறு பணிகளும் தொடங்கி அதனுடைய திறப்பு விழாக்கள் இன்றைக்கு நடை-பெற்றிருக்கின்றன.

ரூ.500 கோடிக்கான திட்டம்

தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துக்காட்-டியதைப்போல், ஏறத்தாழ அய்நூறு கோடி ரூபாய்க்கான பணிகள் இன்னும் நடைபெற இருக்கின்றன என்பது, இந்த வட்டாரத்-திலே உள்ள மக்களுடைய நலனுக்காக நடைபெற இருக்கின்றன என்பது மகிழ்ச்-சியூட்டக்கூடிய செய்தி. இது இந்த மண்-ணுக்கு மாத்திரமல்ல, இந்த மாவட்டத்திற்கு மாத்திரமல்ல. தமிழகம் முழுமைக்கும் பலகோடி ரூபாய் மக்கள் நலனுக்காக, மக்களுடைய பல்வேறு திட்டங்களுக்காக, அவர்களுடைய நல்வாழ்வுக்காக செல-வழிக்கப்படுகிறது. இந்த மருத்துவத்-துறையை மட்டும் கணக்கில் எடுத்துக்-கொண்டால் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன் _ மக்கள் நல்வாழ்வுத்-துறைக்கு அதாவது சுகாதாரத்-துறைக்கு_- முன்பெல்லாம் சுகாதாரத்துறை என்று அழைக்கப்பட்ட இந்தத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே மாற்றப்பட்டு, அந்தத் துறையினுடைய உண்மையான குறிக்கோள் என்ன, பொறுப்பு என்ன என்பதை அந்தப் பெயராலேயே விளக்குவதற்காக அந்தப் பெயரை அமைத்துக் கொண்டு ஆட்சி செய்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசில் ஒன்றை மாத்திரம் உங்-க-ளுக்-குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உயிர்காக்கும்
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

இந்தத் துறைக்காக - அதாவது சுகாதாரத்துறை என்று அழைக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று மாற்றப்பட்டுள்ள இந்தத் துறைக்கு 2005_2006 ஆம் ஆண்டு கடந்தகால (அ.தி.மு.க.) ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி 1,487 கோடி ரூபாய். இது கடந்த கால ஆட்சியில். ஆனால் 2006 இல் இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த ஆண்டுக்காண்டு நிதி-ஒதுக்கீட்டை அதிகரித்து - கடந்த ஆட்சியில் 1,487 கோடி ரூபாய் என்றிருந்த நிலையை மாற்றி - நடப்-பாண்டில் 3,889 கோடியே 41 லட்சம் ரூபாய் என்று உயர்த்தி ஒதுக்கீடு செய்து, (கைதட்டல்) இத்தகைய அரும்பணிகளை ஆற்றிவருகிறது. இப்படி ஆற்றி வருகின்ற அரும்பணி-களிலே ஒன்றாகத்தான், தமிழகத்தில் அனைவரும் கட்சி சார்பில்லாத முறையில், அனைவரும் பாராட்டுகின்ற வகையிலே மக்கள் நல்வாழ்வுத் திட்-டங்களாக, மக்களுடைய உடல் நிலைக்-காக, உடல் நிலையிலே ஏற்படுகின்ற கோளாறுகளைப் போக்குவதற்காக, அவர்களுடைய உயிரைக் காப்பாற்று-வதற்காக நாம் நிறைவேற்றி வருகின்ற திட்டங்கள் அனைத்திலும் சிகரம் வைத்தாற்போல் இருக்கின்ற திட்டம்-தான் உயிர்காக்கும் கலைஞர் காப்-பீட்-டுத் திட்டம். இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 அழைப்பு - இந்த இரண்-டை-யும் யாரும் மறக்க முடியாது. நம்மை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்ற கட்சிக்காரர்கள் ஆனா-லும்கூட, அவர்-களும் மனதுக்குள்-ளேயே பாராட்டிக்-கொண்டுதான் இதை விமர்சிக்க முடியும்.

நான் இங்கே ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இது ஓர் அரசு விழா, பொது விழா. இதிலே அரசியல் பேச முடியாது. ஆனால் அரசியல் இல்-லாமல் அரசு இல்லை. திரு-வள்ளுவர்_ அரசியல் என்கின்ற ஓர் அதிகாரத்தையே திருக்குறளில் சேர்த்-திருக்கிறார். வள்ளுவருக்கே குறள் எழுத அரசியல் பயன்பட்டது என்றால், வள்ளுவர் வழி நிற்கின்ற நமக்கு அரசியல் கூடாது என்ற பிடிவாதம் கூடாது என்பதால், அரசியலையும் நாம் தயவு செய்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதிலே அரசியல் கூடாது. அரசியல் இல்லை. இங்கே நாம் எல்-லோரும், எல்லாக் கட்சியைச் சேர்ந்த-வர்களும் ஒரே விஷயத்தைத்தான் இங்கே பேசுகிறோம். வெவ்வேறு விஷயங்களைப் பேசவில்லை. வெவ்வேறு கருத்துகளை, முரண்பட்ட கருத்துகளை, எதிர்வாதங்களை இங்கே நாம் செய்யவில்லை. நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும், எங்கள் தொகுதிக்கு_ நன்மை செய்யவேண்-டும், எங்கள் ஊருக்கு நன்மை செய்யவேண்டும் என்று ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் பேச சுதந்திரம் உண்டு. கருத்துகளைச் சொல்ல_- நாங்-கள் செய்வதில் என்னென்ன தவறு என்பதை இடித்துக்காட்ட எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சுதந்திரம் உண்டு, உரிமை உண்டு. அந்த உரி-மையை எடுத்துக்கொண்டு எங்களிடத்-திலே வாதிட்ட, வாதிடுகின்ற பல நண்-பர்களை நான் மிகமிக நன்றாக அறி-வேன்.

இங்கே இந்த விழாவில் நம்மு-டைய நண்பர் சிவபுண்ணியம் அவர்-கள் பேசும்பொழுது, தன்னுடைய வட்-டாரத்தில், தொகுதியில் என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும் என்பதை எடுத்து வலியுறுத்தினார். அதுமாத்திர-மல்ல; சிவபுண்ணியம் இந்த விழா-விலே கலந்துகொண்டதே பாராட்-டத்தக்க, வரவேற்கத்தக்க ஓர் அம்சமாகும். (கைதட்டல்) ஏனென்றால், தீண்டினால் திருநீலகண்டம்_- இவர்-களைப் பாராட்டவே கூடாது, பாராட்-டினால் கட்சியிலே மேலிடம் நட-வடிக்கை எடுக்கும் என்று கட்சியிலே ஒரு பிரிவு_- நான் இந்தப் பிரிவுக்-குள்ளே சொல்லவில்லை. இன்னொரு பிரிவில் அப்படிப்பட்ட தீர்மானங்-களைப் போட்டுக்கொண்டு, அவர்களை கட்சியை விட்டு விலக்குகின்ற நிலை இருக்கும்பொழுது - அப்படி விலக்கப்-பட்ட நிலை இருந்தாலும்கூட *நல்ல-தைச் சொல்ல நான் எங்கும் செல்-லுவேன். எங்கும் குரல் கொடுப்பேன் என்கின்ற (கைதட்டல்) அந்த தைரியத்-திலே உள்ளவர் நம்முடைய சிவபுண்-ணியம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.

திருவாரூரின் வளர்ச்சி

உடனே, ஏதோ கருணாநிதி சூழ்ச்சி செய்து சிவபுண்ணியத்தை மாட்டி-விடுகிறார் என்று அவரும் கருதமாட்-டார். என்னுடைய நல்ல உள்ளம் அவருக்குத் தெரியும். அவருடைய தூய உள்ளம் எனக்கும் புரியும். எனவே அத்தகைய கலவரத்திலே நான் இறங்க விரும்பவில்லை. எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு பொதுவான மக்கள் நலம், அதிலே கட்சி கிடையாது. ஒரு வாய்க்-காலை வெட்ட வேண்டும், ஓர் ஆற்-றுக்கு அணை கட்டவேண்டும், ஆற்-றின் குறுக்கே ஒரு பாலம் கட்டவேண்-டும் என்றால் அதிலே அரசியல் கிடை-யாது. எல்லோரும் சேர்ந்து, அந்த ஊர் மக்களெல்லாம் சேர்ந்து அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, செய்யவேண்டிய பொதுக்-காரியம்_- அப்படிப்பட்ட பொதுக்காரியங்-களை ஓர் அரசு செய்யும்போது அதிலே கலந்துகொள்வதுதான் அரசியல் கட்சி எதுவானாலும்_- தங்களுடைய கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்படுவது_ - அப்படி இணைந்து செயல்-பட்டால் இன்னும் பல காரியங்களை நாம் தமிழகத்திலே செய்ய முடியும். என்னைப் பொறுத்தவரையில் நான் யாரிடத்திலும் அதற்காக மனம் வருத்தப்படுபவன் அல்லன். என்னைக் குறை கூறினால்கூட, என்னைச் சுட்டிக்காட்டி, இந்தத் தவறு செய்கிறாய் என்று குற்றம் சாற்றினால்கூட, அது உண்-மையா என்பதை ஆராய்ந்து பார்த்து, தவறு என்றால் திருத்திக் கொள்கின்றவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை அறியாத-வர்-கள் அல்லர், எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையிலே நடைபெறு-கின்ற இந்த அரசு, மக்கள் நன்மைகளை மாத்திரம் மனதிலே பதியவைத்துக்கொண்டு ஆற்றுகின்ற பணிகளில் ஒன்றுதான்_ இன்றைக்கு ஆற்றியிருக்கின்ற இந்தப் பணி, இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்தத் திறப்பு விழாக்கள். நான் இங்கே வந்து அமர்ந்ததும், என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து, என்னப்பா, திருவா-ரூரே மாறிப்போய்விட்டதே! என்று வியப்-புடன் சொன்னேன். காரணம், இந்த விள-மல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவ-சமடைந்திருக்கின்ற அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்ததில்லை. இன்றைக்கு விளமல்_- நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக_ இத்தனை கட்டடங்களா? நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? இல்லை, தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்-தான் பார்க்கிறேனா? அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்-திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கி-றேனா? என்று அய்யப்படுகின்ற அள-வுக்கு_சந்தேகப்படுகின்ற அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றி-னால் கட்டடங்களாக_- வரிசையாகத் தென்-படுகின்ற அந்தக் காட்சியை நாம் காணுகின்றோம். இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்-சாவூ-ரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல், எல்லா ஊரி-லும் இத்தகைய கட்டடங்கள், இத்த-கைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்-டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும். நான் இருந்து காணா விட்டாலும், தமிழகத்திலே_ திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், திரா-விட இயக்கத்தின் குறிக்கோளை தங்களு-டைய உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்-டிருப்பவர்கள் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்-கூடிய நல்ல உள்ளம் படைத்தவர்கள்தான் என் எதிரிலே அமர்ந்திருக்கின்றீர்கள் என்-பதை நான் மன மகிழ்ச்சியோடு எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே உங்களோடு கலந்துகொள்கின்ற வாய்ப்புப் பெற்றமைக்-காக நன்றியைத் தெரிவித்து விடைபெறு-கின்றேன். _இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றினார்.