கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

கொள்கையை, இலட்சியத்தை விட்டு விட்டு ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று கருதுபவர்கள் அல்லர் தி.மு.க.வினர் - தி.மு.க. தலைவர் கலைஞர் பேச்சு


கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் 22.10.2010 அன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதிஇளம்வழுதி, சற்குண பாண்டியன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பி.வி. கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் கோவை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் எம்பி மு.ராமநாதன் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கட்சி வளர்ச்சி, கட்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் 3 மணி நேரம் விவாதிக்கப்பட்டது

கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

இன்றைக்கு கோவை மாவட்டத்தினுடைய செயல்வீரர்கள், நிர்வாகிகள், முன்னணியினர் ஆகியோருடைய இந்தக் கூட்டம் காலையிலேயிருந்து நடைபெற்று நான் ஆச்சரியப்படத்தக்க முறையில் மிக அமைதியாக இனிதே முடிவுற்றிருக்கின்றது.

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியது நற்பெயரை ஈட்டித் தந்ததோடு; தி.மு.கழகத்தின் செல்வாக்கையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும்; கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் கழகத்திற்குத் தற்போது சுமார் 30 முதல் 38 சதவிகித வாக்குகள் உள்ள நிலையில், இஸ்லாமியருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடும் வழங்கியதும், அந்தச் சமூக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

கூட்டணிக் கட்சியினரோடும் இணக்கமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க. நிருவாகிகளிடையே நிலவும் சிறு கருத்து வேறுபாடுகளை முழுமையாகக் களைவதன்மூலம், தொகுதி களுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி வாய்ப்பு உள்ளது என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த 9 என்பது, 10 ஆகவும் உயரலாம் நான் கோவை மாவட்டத்தைப் பற்றி எனக்குக் கிடைத்த நம்பகமான, நடுநிலையான தகவலைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால், அந்தத் தகவல் எனக்கும் உங்களுக்கும் எதை அறிவுறுத்துகிறது என்றால், நான் சொல்லப் போகின்ற சில விஷயங்களைப் பற்றி இந்தக் கூட்டத்திலே இருக்கின் றவர்களுடைய உள்ளத்தைப் பாதிக் கக்கூடியதாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், கழகத்தினுடைய தலைவர் இங்கே சில விஷயங்களைச் சொல்லி, என்னைப் புண் படுத்தி விட்டாரே? என்று எண்ணாமல்; அறுவை சிகிச் சை நேரத்திலே புண்படுத் தாமல் எந்த டாக்டரும் சிகிச்சை செய்ய முடியாது என்பதால், அப்படி நீங்கள் இதனைக் கருதிக் கொள்ள வேண்டுமென்று அதைச் சொல்ல விரும்புகிறேன். நான் அறிந்த தகவல்களை இங்கே பெரிதுபடுத்தி, ஒரு விசாரணை மன்றம் அமைத்து, இது உண்மையா அல்லது பொய்யா அல்லது உண்மைக்கு மாறானதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. தவறே இருந்தாலும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தவறினாலும், அவற்றையெல்லாம் திருத்திக் கொண்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் ஒன்றுபட்டுப் போரிட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டத்தான் இந்தக் கூட்டம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு கழக உறுப்பினரும் மறந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

லட்சியம் முக்கியம்

தந்தை பெரியாரும், அவர் வழியில் வந்த அண்ணாவும், இந்த இயக்கத்தை உருவாக்கி, அதை வளர்த்து, எங்கள் கையிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுக்களைப் பெற்று, இந்தக் கழகத்தை ஆட்சியிலே அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியினுடைய கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு, ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று எண்ணுகின்ற யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கத் தகுதி உள்ளவர்கள் அல்லர். அது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிப்பட, நம்முடைய கொள்கைகள் வெற்றி பெற நாடு பலன் பெற இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஒருவேளை, ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம். தி.மு.க.வின் வெற்றிக்காகப் போராடு வோம் என்றால், திராவிட இயக்கத்தினுடைய கொள்கை களுக்காக கடைசி வரையிலே போராடக் கூடிய சுபாவமும், அந்த உறுதியும் நமக்கு என்றென்றும் உண்டு. அந்த உறுதியோடுதான் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இதற்கிடையிலே, கொள்கை மாற்றங்களால், லட்சியங் களால் மாறுபடாமல்; நிருவாக ரீதியாக வேறுபட்டு, இந்த இயக்கத்தை ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற பகுதி கழகத்தை, கிளைக் கழகத்தை, மன்றங்களை அது மகளிர் மன்றமானாலும் அந்த மன்றத்தை, தொழிலாளர் இயக்கமா னாலும், அந்த இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதிலே வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வருகிற தேர்தலிலே வெற்றி பெற முடியாது. வெற்றி பெறாவிட்டால், நான் எனக்குச் சொல்வதாகக் கருதக்கூடாது. திராவிட இயக்க கொள்கை வெற்றி

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. அதை மறந்து விடக்கூடாது பெரியாருடைய கொள்கை இருக் கிறது அண்ணாவினுடைய லட்சியம் இருக்கிறது. அந்த இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்தால்தான் நிலைக்கும்; அவைகளைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும். நாளைக்கு நம்முடைய ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி பார்ப்பனியத்தைப் பாதுகாக்கிற ஆட்சி பக்கபல மாக இருக்கின்ற ஆட்சி இந்தத் தமிழகத்திலே வருமேயானால் என்ன ஆகும்? நான் இங்கே சொன்னேனே, நண்பர்கள் பேசும்போது, நம்முடைய தம்பி கண்ணப்பன் பேசும்போது கூடக் குறிப்பிட்டு, இந்த அண்ணா என்ற பதத்தைப் பயன்படுத் தாதீர்கள் என்று சொன்னேனே, ஏன்? அண்ணா தி.மு.க. என்று சொல்லாதீர்கள் என்றேன். அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அந்தப் பெயரை வைத்த போது, அவர் அந்தப் பெயரை வைக்கத் தகுதி படைத்தவர் என்றுகூட நான் கருதியதுண்டு. அப்படிக் கருதியதால் தான், அதைப்பற்றிய அபிப்பிராயத்தை இன்றைக்கும் நான் அறுதியிட்டுச் சொல்லக்கூடிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கின்றேன். ஆரிய அம்மையார்

ஆண்டாண்டுதோறும் விஜயதசமி கொண்டாடுகின்ற அம்மையாருடைய ஆட்சியிலே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது? எந்தக் காரியமானாலும், அதற்கொரு யாகம் நடத்தி, பூஜை நடத்தி, அந்தப் பூஜைக்குப் பிறகுதான், அந்தக் காரியத்திலேபோய் இறங்குவது என்று எண்ணுகின்ற ஓர் ஆரிய அம்மையார் ஆட்சியில் அண்ணாவுக்கு என்ன வேலையிருக்கிறது? இந்த ஆட்சி போனால் நீங்கள் ஞாபகத் திலே வைத்துக் கொள்ளுங்கள் போகப் போவதுமில்லை; அது நடக்கப் போவதுமில்லை.

இருந்தாலும், நீங்கள் ஒரு யூகமாக எண்ணிப் பார்த்தால், நம்முடைய ஆட்சி போய்விட்டால், வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி அம்மையாருடைய ஆட்சியாக இருக்கு மேயானால், அங்கே அண்ணாவினுடைய கொள்கைகளுக்கு இடமில்லை; பெரியாருடைய கொள்கைகளுக்கு இடமில்லை; ஜாதி மறுப்புக்கு இடமில்லை; மூட நம்பிக்கை மறுப்புக்கு இடமில்லை. அப்படிப்பட்ட மௌடீகம், மூட நம்பிக்கை படர்ந்து, காடாக ஆகியிருக்கின்ற ஒரு நாட்டைத்தான் தமிழகத்திலே நாம் காண நேரிடும்.

முக்கியமாக, நாம் வெற்றி பெற வேண்டுமென்று நானோ, இந்த மேடையிலே அமர்ந்திருக்கின்ற நம்முடைய கழகத் தலைவர்களோ எண்ணுவதற்குக் காரணம், எழுதுவதற்குக் காரணம், உங்களையெல்லாம் அழைத்துப் பேசுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டு மென்பதற்காக அல்ல; அல்லவே அல்ல; முக்காலும் இல்லை; நிச்சயமாக இல்லை. பெரியார் - அண்ணா தந்த பொறுப்பு

எங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, நாம் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு, உங்களை அழைக்கிறோம் என்று இந்த நாட்டு மக்கள் தந்துள்ள பொறுப்பு, பெரியார் வழங்கிய பொறுப்பு, அண்ணா தந்துள்ள பொறுப்பு, இவைகளைக் காப்பாற்றமுடியாமல் போய் விடுமோ என்ற ஏக்கமே தவிர; இந்த இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்த முடியாமல் போய்விட்டதே என்ற கவலை அல்ல. அந்தக் கவலை ஏற்படாது. அந்தக் கவலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்தியாவிலே இல்லாத அளவிற்கு ஒரு பெரிய நூலகத்தை ஏற்படுத்துகிறோம் என்றால், ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால், இவைகளெல்லாம் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒருவேளை நடக்காது நடக்கக்கூடாது. நாம் மாற்றப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்துத் தள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அதை நாம் காணப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு ஏற்பட வேண்டும் தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா? தஞ்சையிலே ராஜராஜனுக்கு விழா எடுத்தோம் என்றால், கோவையிலே செம்மொழி மாநாடு நடத்தினோம் என்றால், அங்கெல்லாம் நம்முடைய இலக்கியத்தை, காவியங்களை, நூல்களை நாம் பெற்றிருந்த கலைகளை, சரித்திர ஆதாரங்களையெல்லாம் நினைவூட்டக்கூடிய சொற்பொழிவு கள், நாடகங்கள், கூத்துக்கள் இத்தனையும் அங்கே நடை பெற்றன என்றால் அதற்கு என்ன காரணம்? நம்முடைய இயக்கத்தினுடைய ஆட்சி நடை பெறுவதுதான் காரணம். இதற்கு ஓர் இம்மியளவு ஊனம் வந்தாலும், இந்த ஆட்சி போய்விட்டால் இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சய மாக அண்ணா கனவாகிவிடுவார். எல்லோரும் திராவிடர்கள்

பெரியார் கடந்த காலமாகிவிடுவார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆகவே, நாம் எல்லோரும் தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் எல்லோரும் சுயமரியாதைக் காரர்கள் எல்லோரும் பெரியாரின் பிள்ளைகள் எல்லோரும் அண்ணாவின் தம்பிகள் என்ற அந்த உணர்வோடு நாம் ஒன்றுபடுவோம்; தொடர்ந்து நமது அணியை நடத்திச் செல்வோம். இவ்வாறு கலைஞர் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் கோவை மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, முதலமைச்சர் கலைஞர் ஒவ்வொரு ஒன்றியம், நகரம் வாரியாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார் என்றும் இந்த கூட்டத்தின் மூலமாக மிகவும் மன நிறைவோடு நாங்கள் வெளியே வந்துள்ளோம் என்றும் எனவே வெற்றி நிச்சயம் என்றார்.

இதைதொடர்ந்து கலந்துரையாடல் கூட்டம் வருகிற 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டத்துக்கும், மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கும், நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தென் சென்னை மாவட்டத்திற்கும் நடை பெறுகிறது. மற்ற மாவட்டத்திற்காக கலந்துரையாடல் கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment