கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, October 6, 2010

பறக்கும் படை மூலமாக மின்சாரத் திருட்டுகளைத் தடுக்க வேண்டும்: கலைஞர் உத்தரவு


தமிழகத்தில் தற்போதைய மின் விநியோகம் மற்றும் புதிய மின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மின் வாரிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் கருணாநிதி ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி, தலைமைச் செயலாளர் சு. மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க. சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பி.டபிள்யு.சி. டேவிதார், மின் வாரியத் தலைவர் சி.பி. சிங் மற்றும் மின் வாரிய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’முதலமைச்சர் கருணாநிதி நேற்று (5-10-2010) புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழகத்தில் மின்சார விநியோகத்தின் தற்போதைய நிலை, உருவாக்கப்பட்டு வரும் புதிய மின் திட்டங்களின் முன்னேற்ற நிலை ஆகியவை குறித்து மின்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.


முதலில், மின் விநியோகத்தில் இழப்பைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பல்புகளுக்குப் பதிலாக குழல் விளக்குகளை உபயோகப்படுத்துவதன் மூலம் மின்சார சேமிப்பு ஏற்படுத்தும் திட்டம் தற்போது கடலூர் மாவட்டத்தில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டு வருவதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும்;

பறக்கும் படை மூலமாக மின்சாரத் திருட்டுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதலமைச்சர் கருணாநிதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட் வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும்; தரமான பம்ப் செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

பம்ப் செட்டுகளில் மீட்டர்கள் பொருத்துவது மின்சாரக் கட்டணம் வசூலிப்பதற்கு என சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும், இதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும், மீட்டர் பொருத்துவது என்பது, புதிதாக பொருத்தப்படவிருக்கும் பம்ப் செட்டுகளினால் எந்த அளவிற்கு மின்சாரம் சேமிக்கப்படும் என்பதைக் கண்டறிவதற்காக மட்டுமே என்றும்,

தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்தவொரு மாற்றமுமில்லை என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் மீண்டும் தெளிவுபடுத்துமாறு முதலமைச்சர் கருணாநிதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 600 மெகாவாட் மின்சாரத்தினை வெளிச் சந்தையிலிருந்து தொடர்ந்து வாங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வல்லூர், நெய்வேலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மின் திட்டங்களின் மூலமாக, 2011 மார்ச் மாதத்திற்குள் 800 மெகாவாட் மின்சாரமும், 2011-2012-ல் வடசென்னை, மேட்டூர், வல்லூர்-2 ஆகியவற்றின் மூலமாகவும், மற்ற புனல் மின் திட்டங்களின் மூலமாகவும் 2500 மெகாவாட் மின்சாரமும் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

தற்சமயம் நடைமுறையில் உள்ள மின் விநியோகத்தில் எவ்விதக் குறைபாடுமின்றி மின் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறும், மேலும் மின் உபயோகிப்பாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.




No comments:

Post a Comment