கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

ஜெயலலிதா ஆட்சியில் என்னுடைய வேட்டியை உருவினார்கள்: அமைச்சர் பரிதி இளம்வழுதி


சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பரிதி இளம்வழுதி,


ஒரு பள்ளி மாணவன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அதற்குப் பிறகு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அலுவலகத்திலே உயர் அலுவலகத்திலே பணியாற்றுகின்ற பொழுது, அவரை அழைத்து அவர் படித்த பள்ளியில் பாராட்டுகின்ற பொழுது சிறப்பு செய்யப்படுகின்ற பொழுது அவருக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியான நிலையில்தான் அதே போன்ற மேடையில்தான் நான் இன்றைக்கு நிற்கின்றேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூட இங்கே சொன்னார்கள். நான் எங்கு சென்றாலும், நான் பெரியாருடைய ப்ராடக்ட் என்பதை மறவாமல் பெருமையாக சொல்லுகிறேன் என்று சொன்னார். அம்மையார் ஆட்சியிலே சட்டமன்றத்திலே நடைபெற்ற அராஜகத்தில் நான் ஒருவனாக தனி ஒரு சட்டமன்ற உறுப்பினராக சமாளித்ததை இங்கே எடுத்துச் சொன்னார்.


அந்த அராஜக கொடூரதனத்தை சமாளிப்பதற்கு எனக்கு எங்கேயிருந்து துணிவு கிடைத்தது என்று சொன்னால், அந்த தைரியம், துணிவு, பகுத்தறிவு இங்கேயிருந்துதான் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து ஒருவர் தயாராகிவிட்டால், அவர் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாகப் பணியாற்றுவார்.


நான் பேண்ட் போட்டிருப்பதைப்பற்றிச் சொன்னார்கள். பேண்ட் போட்டிருப்பது ஒன்றும் புதுமையில்லை. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவிக் கொண்டு விட்டார்கள். பார்த்தேன், அதற்குப் பிறகு சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன். இதுதான் காரணம், வேறு ஒன்றும் இல்லை.


புராணக்கதைப்படி மகாபாரதத்தில் பாஞ்சாலையின் சேலையை உருவிய பொழுது, கண்ணன் சேலையைக் கொடுத்தான். எனது வேட்டியை உருவும்பொழுது வேட்டியைக் கொடுக்க வேறு எந்த அண்ணனும் இல்லை.


பெரியார் நூலக வாசகர் வட்டம் 1800ஆம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி நிறைவு செய்வதைப் பார்க்கும்பொழுது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இதுதான் மிகப்பெரிய சாதனை. இந்தப் பெரியார் திடலில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்களிலும், பெரியார் நூலக வாசகர் வட்டங்களில் நல்ல பல எத்தனையோ நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கின்றேன்.


சிலர் நன்றாக எழுதுவார்கள்; ஆனால் அவர்களுக்குப் பேச வராது. ஆனால், நல்ல கருத்தாழம் மிக்கவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் மேடையில் ஏற்றி பல பேச்சாளர்களை உருவாக்கிய இடம் இந்த இடம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர்கள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள்.


சட்டமன்றத்திலே என்னைப் பார்த்து ஒருவர் கேள்வி கேட்டார், ‘‘உங்களுக்குப் பேயைப்பற்றி பயமில்லையா?’’ என்று கேட்டார்.

‘‘இல்லை’’ என்று சொன்னேன்.

‘‘எப்படி?’’ என்று கேட்டார்.

காரணம், ‘‘நான் பேயோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்’’ என்று சொன்னேன்.

சாவைப்பற்றி பயமில்லையா?

‘‘உங்களுக்கு கடவுளைப்பற்றி பயமில்லையா?’’ என்று கேட்டார்.

‘‘பயமில்லை’’ என்று சொன்னேன்.

‘‘எப்படி பயமில்லை’’ என்று சொல்லுகிறீர்கள் என்றார்.

காரணம், ‘‘இதுவரை நான் கடவுளைப் பார்த்ததில்லை’’ என்று சொன்னேன்.

சரி, ‘‘சாவுக்காவது பயம் உண்டா? இல்லையா?’’ என்று கேட்டார்.

‘‘சாவுக்கும் பயமில்லை’’ என்று சொன்னேன்.

‘‘எப்படி இப்படிச் சொல்லுகிறீர்கள், என்ன காரணம்?’’ என்று கேட்டார்.

காரணம், ‘‘நான் உயிரோடு இருக்கும்வரை சாவு வராது. நான் செத்த பிறகு அது என்னை வந்து பார்த்து என்ன செய்யும்? நான் உயிரோடு அப்பொழுது இருக்கமாட்டேன் என்று சொன்னேன்.


பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி, மனிதன் மனிதனாக இருக்க முடியாது; மனிதன் மனிதனாக வாழ முடியாது; நாம் மனிதர்கள் என்ற உரிமையைப் பெற்றிருக்க முடியாது. அதற்குக் காரணமாக இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் இவர்கள்தான் என்றார்.


No comments:

Post a Comment